ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 22 ஜூன், 2012

பரமக்குடி சம்பவம்! ராமநாதபுரத்தில் கண்டன ஊர்வலம்! ஜான் பாண்டியன் எச்சரிக்கை!





பரமக்குடி கலவரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் ராமநாதபுரத்தில் பெரிய அளவில் கண்டன ஊர்வலம் நடத்துவேன் என்றார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய ஜான்பாண்டியன், தென்மண்டல ஐஜி ராஜேஸ் தாஸ், அப்போதைய ஐஜி சந்தீப் மிட்டல் உள்ளிட்ட பல்வேறு காவல் துறை உயரதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் காவல் உயரதிகாரிகளை அரசு காப்பாற்றுகிறது என்று கூறிய அவர், சிபிஐ விசாரணையில் நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறு சிபிஐ பாரபட்சம் காட்டினால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரமாண்டமாக கண்டன ஊர்வலம் நடத்துவேன்; தமிழக அரசு இமானுவேல் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்; பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை, விரைவில் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

கோவையில் தியேட்டர் திரை கிழிப்பு

கோவை: கோவை திரையரங்கம் ஒன்றில் திரைப்படத்தின் வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் திரையை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தியேட்டர் ஒன்றில், முரட்டுக்காளை என்ற படம் திரையிடப்பட்டது. அத்திரைப்படத்தில் வரும் சில வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் திடீரென திரையை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா வசனத்திற்கு எதிர்ப்பு:தியேட்டர் சூரை

நெல்லை : நெல்லை ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள தியேட்டரில் நடிகரும், தயாரிப்பாளருமான சுந்தர்.சி நடித்த முரட்டுக்காளை சினிமா திரையிடப்பட்டுள்ளது. இதில் தமிழக மக்கள் கட்சி தலைவர் ஜான் பாண்டியனை கேலி செய்யும் விதமாக வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் கட்சியினர் சிலர் நேற்று இரவு தியேட்டரை அடித்து நொருக்கி உள்ளனர். இது தொடர்பாக நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை தேடி வருகின்றனர்.

20-02-2012(புதன் கிழமை) மதியம் 2:30 மணி - ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம்


மள்ளர்குல சொந்தங்களே...., வருகிற 20-02-2012(புதன் கிழமை) மதியம் 2:30 மணியளவில் சென்னை எழிலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளது. இதற்குமுன் நடத்திய கூட்டத்திற்கு 50- இக்கும் மேற்ப்பட்ட பறையர் அமைப்புகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்து, நம்மில் நீதிபதி கலியபெருமாள் அவர்களை மட்டும் அழைத்து அவரையும் அக்கூட்டத்தில் அவமானப்படுத்தி உள்ளனர். இப்பொழுதும் அதேபோல பறையர்களை மட்டும் அழைத்து ஆதிதிராவிடர் என்ற ஆணையத்தின் பெயர் தொடரலாம் என அறிக்கை கொடுக்க சதித் திட்டம் தீட்டி உள்ளனர். வருகிற 26- ஆம் தேதிக்குள் பெயரை மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இக்கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை விட்டால் மேலும் பல வருடங்கள் ஆரம்பத்தில் இருந்து போராட வேண்டியிருக்கும். எனவே அனைத்து மள்ளர்களும் பணிக்கு விடுப்பு எடுத்து இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென உரிமையோடு அழைக்கிறோம் .இன்று இதை நாம் செய்யாவிடில் இத்தலைமுறையில் இனிமேல் இப்பெயரை மாற்றும் வாய்ப்பு நம்மால் கிடைக்கப் போவது இல்லை... வாரீர் மள்ளர்களே...!! உரிமை வெல்வோம் ...!! இனம் காப்போம்...!!
சேலம் வழக்கறிஞர் திரு. கலிய பெருமாள் அவர்களின் அழைப்பின் பேரில் அண்ணன் மாவீரன் ஜான் பாண்டியன் அவர்கள் இந்த பெயர் மாற்று கருத்தரங்கிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார்கள். சென்னையில் உள்ள தேவேந்திரர்கள் அவர்கள் இருவருடனும் சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். பெயர் மாறுதலில் நம் பங்கும் இருக்க வேண்டும் என்று தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பின் சார்பாக அழைக்கிறோம்.
நாம் அனைவரும் இந்த நேரத்தில் ஒன்று கூடி நமது அதிருப்தியை தெரிவித்து ஆதி திராவிடர் என்ற பெயரை நீக்க வேண்டும். அதற்க்கு, சென்னை மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள நமது அணைத்து இயக்கங்களும் கட்டாயம் சென்னைக்கு வரவேண்டும். சென்னையில் உள்ள திரிசூலம் மற்றும் நம் மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் தயவு செய்து மக்களை திரட்ட வேண்டும். நம்மில் உள்ள மட்டற்ற இயக்கங்களை ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வியையும் அவர்களிடம் கேட்க வேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட, நம் மக்கள் அதிகமாக வாழும் தென் மாவட்டத்தில் ஏன் இந்த கூட்டம் நடத்தப்படவில்லை எனவும் கேட்கவேண்டும்.இந்த நேரத்தில் தான் நாம் ஒட்ட்ருமையுடன் செயல்படவேண்டும். நான் சென்னையில் உள்ள DYWA , இயக்கம் சார்ந்த நண்பர்களுக்கு எனது நன்றியை இந்த நேரத்தில் கூறிகொள்கின்றேன். ஏனெனில், அவர்கள் மற்ற இயக்கங்களையும் ஒன்று சேர்த்து போராடுவதற்கு பாடுபடுவதாக கேள்விப்பட்டேன்.நாங்களும், கோயம்புத்தூர் மற்றும் பல ஊர்களிலும் இருந்து வரவுள்ளோம்.ஆனால் பெருவாரியாக உள்ள தென் மாவட்டங்களில் நிலைபாடு என்ன என்று தெரியவில்லை. ஏனெனில், இதுவரைக்கும் எந்த இயக்கமும் ஈமெயில் மூலமாகவோ அல்லாது முகநூழிலோ இதைப்பற்றிய செய்திகள் வெளிவிடவில்லை.

எனவே, நாம் வீராதி வீரன், சூராதி சூரன் என்று மற்ற வேளைகளில் பெருமை பேசி ஒரு பிரயோசனமும் இல்லை. பெரும்பாலும், நமது முகநூல்கள் வீரதேவேந்திரன், வீரமள்ளர்கள், என்று பெயரில் நிறையாபேர் உள்ளனர். அந்த மக்கள் இந்த சமயத்தில் விழிப்புடன் செயல்பட்டால், நாம் வெறுமனே பேசியதோடு மட்டும் இல்லாமல் செயல்பாட்டிலும் பங்கெடுத்த மாதிரி இருக்கும்.

ஓட்டப்பிடாரத்தில் ஆய்வுக் கூட்டம்







ஓட்டப்பிடாரம், ஜூன் 21: ஓட்டப்பிடாரத்தில், கிராம நிர்வாக அலுவலர்களின் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, பொதுமக்களிடம் குறைதீர்க் கூட்டம் நடத்தி மனுக்கள் பெற்றுள்ளார். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி வட்ட அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டதாம்.  பின்னர் அந்த மனுக்கள், அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் பரிசீலனைக்காக அளிக்கப்பட்டதாம். இருப்பினும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது.  இத்தகைய போக்கை கண்டித்து ஜூலை 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளதாக கிருஷண்சாமி எம்எல்ஏ அறிவித்தார்.  இதற்கிடையே, அந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.அமிர்தஜோதி தலைமை வகித்தார்.  வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் காளிமுத்து உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் தகுதி வாய்ந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை ஜூலை 31-ம் தேதிக்குள் எடுத்து புள்ளி விவரத்துடன் வழங்க வேண்டுமென கூட்டத்தின்போது உத்தரவிடப்பட்டது.

ஜூலை 9-ல் முற்றுகை போராட்டம்: கிருஷ்ணசாமி

  தூத்துக்குடி, ஜூன் 20: மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 9-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவரும், ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கே.கிருஷ்ணசாமி கூறினார்.  தூத்துக்குடியில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:  தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணியில் பெரும்பான்மையான மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிலப்பட்டா மாற்றத்தை, வீட்டுமனை பட்டா வழங்குவதுபோல் கணக்கு காட்டப்படுகிறது. இதுபோல் முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் அரசின் உதவித்தொகை கேட்டு மனு அளித்து வருகின்றனர். ஆனால், அவர்களது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த மே 20, 21 தேதிகளில் நடைபெற்ற மனுநீதி நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை, மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினேன். இதுவரை அந்த மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் செயலிழந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 10, 15 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் கிடைக்கிறது. எனவே இதைக் கண்டித்து ஜூலை 9-ம் தேதி எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.

செவ்வாய், 12 ஜூன், 2012

பார்பான் சூழ்ச்சியே, தமிழர் வீழ்ச்சி!...பெரியாருக்கு எதிராக புழுதி வீசும்..நாம் சாதி தமிழர். சீமான்.

தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டுமென்பதே நமது இறுதி குறிக்கோளாக இருப்பினும், தற்போதுள்ள போலி சனநாயக அரசியல் களத்தின் மூலமாக கடந்த 60 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி நமது பல்வேறு இயற்கை வளங்களைச் சுரண்டி கொழுத்தும், நமது உரிமைகளைப் பறித்தும், நமது அண்டை சகோதர தேசமான ஈழத்தில் பல இலக்கக்கணக்கான தமிழ் சொந்தங்களை கொன்றழிக்க பணம், ஆயுதம், படை வீரர்கள், உணவு, சேதிகள் போன்றவற்றை கொடுத்து பேருதவி புரிந்த பேராயக் கட்சியை இத் தமிழ் மண்ணிலிருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் கருவறுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.
அவ்வாறு வேரறுப்பதில் இரண்டு விதம் ஒன்று நிரந்தரம். மற்றொன்று தற்காலிகம், நிரந்தரமென்பது மக்கள் திரள் புரட்சியின் மூலமாக தமிழ்த் தேசியமைப்பின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
மற்றது குறைந்தபட்சம் தற்காலிகமானது. அதாவது இந்த போலி சனநாயக அரசியல் தேர்தல் மூலம் அதாவது அந்த எதிரியை வீழ்த்த இன்னொரு துரோகியை ஆதரவளித்து தேர்தலில் தோற்கடிப்பது.
இரண்டாவது உள்ள நோக்கத்தை நம்மைப் போன்ற புரட்சிகர இயக்கங்கள் புறக்கணித்து விட்டு நிரந்தர தீர்வுக்கான வழிகளை செயலூக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும் வேளையில் இனம் தேசியம் பேசும் இயக்கங்கள் இரண்டாவது முறையைக் கையிலெடுத் துக் கொண்டு தற்போது தேர்தல் களத்தில் பரப்பல் வேலை செய்துக் கொண்டுள்ளன. அவற்றில் முதன்மையான அமைப்பாக திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கமாகும்.
எந்தவொரு தேசிய இயக்கம் கட்டமைக்க வேண்டுமென்றால் மேலை நாடுகளில் வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவும், தமிழ்த் தேசியத்தில் வர்க்கம் மற்றும் சாதியொழிப்பின் மூலமாகவும் மட்டுமே சாத்தியமாகும். இதை தோழர் தமிழரசன் தனது மீன்சுருட்டி அறிக்கையில் மிகத் தெளிவாக உறுதிப்பட கூறியுள்ளார்.
மேலும் அவர் சாதியச் சங்கங்களைப் பற்றிக் கூறும்போது சாதிச் சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒழிக்கப்படும் போது முதலில் ஆண்டைகளின் சாதிச் சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அது ஏன் அவ்வாறு எனக் கூறும்போது ஆண்டைகளின் சாதிச் சங்கமென்பது வர்ணாசிரம படிநிலைகளை நிலை நிறுத்தி ஆண்டைகள் ஆண்டைகளாகவும், அடிமைகள் அடிமைகளாகவும் இருப்பதற்கு பாடுபடுவன. ஆனால் ஒடுக்கப்பட்டோரின் சாதிச் சங்கம் அவர்கள் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் களமாடுவதற்கானது என விவரிக்கிறார்.
இது தலைவர்களின் சிலைகளுக்கும், கூட்டப்படும் பெயர்களுக்கும் பொது நிகழ்ச்சிகளில் நினைவுக் கூறத்தக்க பெயர்களுக்கும் பொருந்தும். ஏனெனில் ஆண்டைகளின் தலைவனின் பெயரைக் கூறும்போதோ, சிலைகளைக் காணும்போதோ அங்கு அடிமைச் சமூகத்தை நினைவுபடுத்தி தகர்ந்த தனது கட்டமைப்பை மீண்டும் நிலைநிறுத்த முயற்சி செய்ய வைக்கும். அதேவேளையில் அடிமைகளில் அல்லது சாதிமறுப்பு சமத்துவ புரட்சியாளர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதோ, சிலைகளைக் காணும்போதோ மீண்டும் மீண்டும் மீண்டும் புரட்சியை முன்னெடுத்துச் செல்லத் தூண்டும்.
இது இவ்வாறிருக்க தற்போது நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் பேராயக் கட்சியைக் கறுவறுப்போம் எனும் முழக்கத்தோடு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரித்து வரும் தமிழீழ ஆதரவாளர், நாம் எல்லாம் தமிழர்களாக ஒன்று கூடுவோம் என்று மேடைதோறும் வெற்று முழக்கமிட்டு வரும் திரைப்பட இயக்குனர் சீமான் அவர்கள் கடந்த 9.4.11 அன்று வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரித்து தனது தொடக்கவுரையில் பேராயக் கட்சியை நாம் அழிக்கத் தேவையில் யார் யார் செயல்களும், சொல்களும் அழிக்கும் எனச் சில பெயர்களைப் பட்டியலிட்டார்.
அவை: 1. பெரியார், 2. இன்றைய நவீன பார்ப்பனர்கள் உட்பட அன்றைய ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் தனது வாழ்நாளை சுருக்கிக் கொண்ட புரட்சியாளர் அம்பேத்கார், 3. இல்லாத இந்திய தேசியப் படைக்க கட்டிய சுபாசு சந்திர போசு, 4. சேரிகளின் சிம்மக்குரல் தாத்தா இரட்டைமலை சீனிவாசன். 5. வெள்ளை ஏகாதிபத்தியத்தில் கைக்கூலி காந்தி, 6. இந்திய அடிமையாக இருந்து தமிழ் மண்ணை விட்டுக் கொடுத்த காமராசு, 7. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகப் பெரிய சாதிய சனாதனவாதியாகவும் போக்கிரியாகவும் திகழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கம் ஆகியப் பெயர்களாகும்.
இதில் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் தவிர அனைவருமே பேராயக் கட்சியின் அடிவருடிகளாவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவரவருக்கு சில கசப்பான நிகழ்வுகள் நடந்தபோது அதற்கு எதிராக வெளியே வந்து பேசியவர்கள்.
காந்தி கொஞ்சம் மாறுபட்டு இந்திய அதிகாரப் பரிமாற்றம் நிகழ்ந்த பின்பு இந்த போலி சனநாயகத் தேர்தல் முறையில் தான் முன்பு செலுத்திய அதே ஆளுமையைத் தொடர்ந்து செலுத்த முடியாது என்று சிந்தித்துக் கட்சியைக் கலைக்கச் சொன்னவர். ஆனால் அப்போது அவரது பேச்சு எடுபடவில்லை என்பதும் அவ்வாறு கலைக்க யாரும் விரும்பவில்லை என்பதும் தெளிவு.
காமராசரோ தமிழ் நிலம் கேரளாவில், கருநாடகாவில், ஆந்திராவில் இருந்தாலென்ன, தமிழகத்தில் இருந்தாலென்ன எல்லாம் இந்தியாவில் தானே உள்ளது எனக் கூறித் தமிழ் மண்ணை மேற்படி நாட்டிற்கெல்லாம் தாரை வார்த்து இன்றைய தண்ணீர் உட்பட தமிழகத்தின் சிக்கல்களுக்கும், அழிவிற்கும் வித்திட்டவர்.
பசும்பொன் முத்துராமலிங்கமோ தென்மாவட்டங்களில் தனது சாதி வெறித்தனத்தால் பல கைக்கூலிகளின் மூலமாக தன்னை எதிர்த்தோ கேள்விக் கேட்கவோ, நேர் நிற்கவோ, தனக்கு எதிராக செயல்படுகிறார் என்று தெரிந்தாலோ, ஊனப்படுத்துவது, கொலை செய்வது போன்ற செயல்களின் மூலமாகவும், தான் பேசும் மேடைகளில் சுபாசு சந்திர போசுக்கு தான் எல்லாமும் என்றும் தன்னிடம் அணுகுண்டு உள்ளது என்று அழித்து விடுவேன் என்றும் இறந்து போன சுபாசு சந்திர போசு உயிருடன் வருவார். என்னிடம் பேசினார் என்று உண்மைக்கு முரணாக புழுகி எல்லோரையும் முட்டாளாக்கி தனது சாதி சண்டித்தனத்தை அரங்கேற்றி வந்தார். இவரின் யோக்கியதையை தெரிந்து கொள்ள அவரின் சொந்த சாதிக்காரரும் அதே சமயம் நடுநிலைவாதியுமான பத்திரிகை ஆசிரியர் திரு. தினகரன் அவர்கள் எழுதிய முதுகுளத்தூர் கலவரம், திரு.டி.எசு. சொக்கலிங்கம் எழுதிய முதுகுளத்தூர் பயங்கரம் மற்றும் சாதி மறுப்பு போராளி திரு. இமானுவேல் சேகரன் வாழ்க்கை வரலாறு போன்ற நூல்களை வாசித்தால் புரியும்.
இது இவ்வாறிருக்க இதற்கு நேர்மாறாக இந்திய அடிமைப் படையில் தன் வகித்த அவில்தார் பதவியைத் துச்சமெனத் தூக்கியெறிந்து விட்டு இராமநாதபுரம் கரிசல்காட்டு மண்ணில் பசும்பொன் முத்துராமலிங்கத்தால் கரைப்புரண்டோடிக் கொண்டிருந்த சாதிச் சண்டித்தனங்களுக்கு முடிவு கட்ட எண்ணி ஒடுக்கப்பட்ட இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு கராத்தே, சிலம்பம், வாள் வீச்சு, துப்பாக்கிச் சுடுதல் போன்ற தற்காப்பு கலைகளைக் கற்றுக் கொடுத்து உடலால் திடகாத்திரமானவர்களாகவும், மனதால் சாதி கடந்து சமதர்மத்திற்காக போராடக் கூடிய சாதி மறுப்பு போராளிகளாக உருவாக்கி இமானுவேல் சேகரன் சாதிக் கடந்த நாடார்களுக்காகவும், அகமுடையார்களுக்காகவும், இசுலாமியர்களுக்காகவும், மற்றும் பிற தமிழ்ச் சாதி சகோதரர்களுக்காகவும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் மூலமாக முத்துராமலிங்கம் படைக்கெதிராகச் சமர் புரிந்து வந்தார். மேலும் சாதி மறுப்பு திருமணங்களை அன்றைக்கு நடத்தி வைத்து அத்தம்பதிகளுக்குப் பாதுகாப்பாகவும் அரணாகவும் காத்து சாதி சனாதனத்தைத் தகர்த்தெரிந்தார். அதற்கோர் நல் எடுத்துக்காட்டு தனது சமூகப் பணிக்காக பல்வேறு உயரிய விருதுகளை பெற்று இன்றும் வாழ்ந்து வரும் செகநாதன் (மரணம்) கிருட்டிணம்மாள் தம்பதியர்களாவர்.
இவ்வாறு சாதிமறுப்பு போரின் மூலம் இராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் சாதி வெறிக் கோட்டையைத் தகர்த்து அனைத்து சாதி மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்று புகழின் உச்சத்திற்கு வந்த இமானுவேல் சேகரனை அன்றைய முதல்வர் காமராசு அவர்கள் காங்கிரசு முத்துராமலிங்கத்தை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த வேளையில் காணாது கண்ட முத்தாக தெரிந்த இமானுவேல் சேகரனை முத்துராமலிங்கத்தின் அக்கிரமங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு பேராயக் கட்சி துணை புரியும். அவரை எதிர்த்து களமாட அரசியல் பலம் மேலும் உதவும் என்று கூறி நயவஞ்சகமாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்திலிருந்து பேராயக் கட்சிக்கு அழைத்தார்.
அவரின் நயவஞ்சகத்தை அறியாத இமானுவேல் சேகரன் அவர்கள் அது தனது போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என்றெண்ணி எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் எவ்வித லாபமும் அடையாமல் சாதி மறுப்பு சமத்துவப் போராட்டத்திற்காக மட்டுமே காமராசுடன் இணைந்து செயல்பட்டார். அவர் எவ்வித பேராயக் கட்சியால் எவ்வித இலாபமும் அடையவில்லையென்பது நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தான் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் தான் நிற்காமல் தான் கைகாட்டுபவரை நிற்கச் செய்து வைத்து வெற்றிப் பெறச் செய்து முத்துராமலிங்கத்தின் கோட்டையைத் தகர்த்தார்.
இதிலிருந்தே அவர் பேராயக் கட்சியின் சார்பாளராக மட்டுமே இருந்து எவ்வளவு உயரிய நோக்கமாகச் செயல்பட்டார் என்பது தெரியும். இதன் விளைவாக அந்த சாதி மறுப்புப் போராளி சாதி சனாதனவாதி பசும்பொன் முத்துராமலிங்கத்தின் கைகூலிகளால் படுகொலைச் செய்யப்பட்டார். அவர் மட்டும் தேர்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஓர் சட்டமன்றம் (அ) நாடாளுமன்ற உறுப்பினராக தன்னலத்தோடு ஆகியிருந்தால் அவர் கொல்லப் பட்டிருப்பாரா? கொல்லப்பட்டிருக்க முடியுமா?
மேலும் இமானுவேல் சேகரன் சாதிமறுப்பு போராளி என்பதற்கும், பசும்பொன் முத்துராமலிங்கம் சாதிய சனாதனவாதி என்பதற்கும் அவரின் படுகொலைக்குப் பிறகு தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்களை கண்ணுற்றால் குறிப்பாக சாமி சகசானந்தா அவர்களின் பேச்சு கேள்வியும் கேள்விகளுக்கு பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர்களின் மழுப்பலான பதிலும் கண்ணுற்றால் தெளிவாகப் புரியும்.
வரலாறு இவ்வாறிருக்க தோழர் திரைப்பட இயக்குனர் சீமான் அவர்கள் வேலூர் தேர்தல் பரப்புரையில் தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்கத் தேவர் என்று மிகவும் புளகாகிதத்தோடு முழங்குகிறார். ஆனால் முத்துராமலிங்கம் எந்த தேசியம் தனது இரு கண்கள் என்றார். இன்று தமிழர்களைக் கொன்று குவித்த, அடிமைப்படுத்தி ஆளுகின்ற இல்லாத இந்தியத் தேசியத்தை, அப்படியென்றால் சீமான் தமிழர், தமிழர், தமிழ்நாடு, ஈழம் என்று முழங்கும் சீமான் அவர்கள் இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்கிறாரா என்று வினவ வேண்டும். நாவிற்கு எலும்பில்லை என்பதற்காக சினிமாவில் முழங்கியது போன்று இரட்டை வேடம் பூண்டு முழங்கக் கூடாது.
இவ்வாறு வரலாறுக்கு மாறாக அதுவும் முத்துராமலிங்கத்தின் சாதி வாக்கோ, சாதியோ கொஞ்சமும் இல்லாத வேலூரில் முழங்கிய சீமான் மறந்தும் சாதி மறுப்பு போராளி இமானுவேல் சேகரனைக் குறிப்பிடவில்லை. அவர் இறக்கும்போது பேராயக் கட்சிக்காரராகத்தான் இறந்தார் என்று சப்பக்கட்டு கட்டலாம். அவரது சாவிற்கு அவரது கொள்கைக்கோ, குடும்பத்திற்கோ சமூகத்திற்கோ அல்லது அவருக்குப் பின்னால் படை திரண்டு நின்றிருந்த இளைஞர் சாதி மறுப்புப் போரில் உயிர் நீத்த, வழக்கெடுத்தவர்களுக்கோ எவ்வித கைமாறும் செய்யவில்லை. அதனால் அவரது நினைவலைகளை பேராயக் கட்சியை அழிக்குமென்றுக் கூறலாமே. ஆனால் கடைசி வரை பேராயக் கட்சியில் இருந்து இந்தியத்தைக் காத்து தமிழர் நலனை காவுக் கொடுத்த காமராசரை நினைவு கூரத் தவறவில்லையே.
இவ்வாறு வேலூரில் பேசிய சீமான் முத்துராமலிங்கத்தின் சாதி வாக்கு செறிவு மிகுந்த தென் மாவட்டத்தில் பேசியிருப்பார் என்று எண்ணுவோமானால் நாம் முட்டாள். ஏனெனில் அங்கு இவ்வாறு இம்மானுவேல் சேகரனைப் புறக்கணித்து விட்டு, முத்துராமலிங்கத்தைப் புகழுவாரேயானால், அது அவரின் இரட்டை வேட தேர்தல் பரப்பில் தோல்வியில் போய் முடிந்தும், சீமானின் நாம் தமிழர் இயக்கம் சுவடு தெரியாமல் அழிந்தே போகும்.
அதனால் வியாபார புத்தி கொண்ட திரைப்பட இயக்குநர் சீமான் அவர்கள் கண்டிப்பாக அவ்வாறு பேசி தனது வியாபாரத்தில் மண்ணை அள்ளிப் போட்டிருக்க மாட்டார் என்பதே நமது தின்னம். ஏனெனில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பேசும் போதும் சரி, தூத்துக்குடியில் பேசும்போதும் சரி, என் தாத்தா கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பூலித்தேவன் என்ற பெயர்களை உச்சரித்தே முழங்கினார். மறந்தும் பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரையோ, இமானுவேல் பெயரையோ உச்சரிக்கவில்லை.
இதிலிருந்து என்ன தெரிந்தது என்றால் சாதிமறுப்பு போராளியையும், சாதி ஆண்டையையும் ஒரே தட்டில் சரி நிகராக பார்க்கிறார் என்பதும், இவரின் கட்சிப் பெயரில் வேண்டுமானால் நாம் தமிழர் என்றிருக்கலாம். ஆனால் எப்போதும் தமிழர்கள் என்று கூறி தோழர் தமிழரசன் எண்ணப்படி சாதிக் கூட்டமைப்பை தகர்த்தெறிந்து எல்லோரும் நாம் தமிழர்களாக ஆக முடியாது என்பதும் முத்துராமலிங்கம் போன்று சாதி கட்டமைப்பை பாதுகாப்பவர் என்பதும் அவர் கடந்த இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு சென்றதும், முத்துராமலிங்கத்தின் நினைவு நாளுக்கு சென்றதும் நினைவூட்டியது. இவரைத் தவிர வேறு எந்த தமிழ் தேசிய அமைப்பு முத்துராமலிங்கம் நினைவு நாளுக்கு செல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் மற்றவர்கள் தெளிவாக அது ஆண்டை தனத்த நிலைநிறுத்தும் நினைவு நாள் என்பதைத் தெளிவாகத் தெரிந்ததினால், அப்போது இவருக்குத் தெரியாதா இல்லை தெரிந்தே சென்றார் என்பதே நம் எண்ணம். ஏனெனில் இவர் ஆண்டைத் தனத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறார் என்பதே திண்ணம். அது இவரது வேலூர் பேச்சிலிருந்து தெரிய வருகிறது. எவ்வாறெனில் ஆண்டை முத்துராமலிங்கத்தையும், காமராசரையும், புகழ்ந்து சாதி மறுப்பு போராளி இம்மானுவேல் சேகரனைப் புறக்கணித்தது. அதிலிருந்து ஒன்று தெளிவாக இதுவரைக் கூறியதிலிருந்து விளங்கும். அது எதுவென்றால் முத்துராமலிங்கத்தை ஒரு தேசியத் தலைவராக முன்னிறத்த நடந்த முயற்சியே அன்று அது வேறெதுவுமில்லை.
இப்போதுதான் இவர் தொடங்கியக் கட்சிப் பெயர் மீதும், நமக்கு சந்தேகம் தோன்றுகிறது. ஏனெனில் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தாங்கள் பெருஞ் செல்வந்தர்களாக ஆக வாய்ப்பிருந்தும் அதை உதறி விட்டு, எடுத்துக்காட்டாக ஒரு பத்து ரூபாய் இருந்திருந்தால் என் அன்பு மனைவியைக் காப்பாற்றியிருப்பேன் என்று வருந்திய போதிலும் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் வாழ்ந்து மடிந்து அய்யா தேவநேயப் பாவாணர் தொடங்கிய உலகத் தமிழர் கழகம் எனும் பெயரையோ, தமிழுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் போராடிய கி.ஆ.பெ. விசுவநாதம், மா.பொ.சி. ஆகியோரால் தொடங்கப்பட்ட தமிழரசு கழகம் என்றோ பெயர் சூட்டியிருக்கலாம்.
ஆனால் சீமான் அவர்களை பொருள் ஈட்டி தானும் தனது மரபினரும் இன்று கோடிகளில் கொழுத்து தமிழர் துயரங்களை இருட்டடிப்பு செய்து வெளியிடும் தினத்தந்தி நிறுவனர் திரு.சி.பி. ஆதித்தனார் (ஆதித்தனார் என்பது நாடாரில் ஒரு பிரிவு அதனால் நாடார் என்று பெயருக்குப் பின்னால் வராமல் ஆதித்தனார் என்று வரும்) அவர்கள் தொடங்கி அவரின் மாணவர்கள் என்றோ, தோழர்கள் என்றோ யாருமே இல்லாத ஆனால் பாவாணரின் மாணவர்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் இப்போது உ.த.க. புத்துயிர் பெறச் செய்து செயல்படுகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.
மேலும் தன் வாழ்நாளையெல்லாம் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் சிறையில் வருத்தி தனது குடும்பத்தை வருத்திய அய்யா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாவாணர் மறைவுக்குப் பின் தொடங்கிய உலகத் தமிழர் முன்னேற்றக் கழகம் என்று தொடங்கி செயல்பட்ட பெயரையே சூட்டியிருக்கலாம். இவரது மாணவர்கள் இன்றும் தமிழுக்காக எழுதியும் பேசியும் வருவோரில் பெரும்பாலானோர்கள் (அ) தோழர்கள் தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவும் ஆக இப் பெயரைச் சூட்டியிருக்கலாம். ஆனால் அதுவன்றி மேற்படிக் கூறிய சி.பா. ஆதித்தனர் தொடங்கி அவரோடு அழிந்து போன நாம் தமிழர் எனும் பெயரையே தான் புதிதாக தொடங்கிய அமைப்பிற்கு பெயராகச் சூட்டியுள்ளார். இவைகளிலிருந்து இவரின் சாதிப் பாசம் வெட்டவெளிச்சமாகிறது.
என்னத்தான் நீருக்குள் தார்ப்பாய் போட்டு மூடிக் கொண்டு காற்று அடித்தாலும், குமிழிகள் வெளிவந்து தானே ஆகும். அதுபோல் சீமானின் சாதிப் பாசமும், ஆண்டைத் தளமும் வேலூரில் வெளிப்பட்டது.
ஆக இவர் ஒரு சாதி மறுப்புப் போராளியாகவோ தமிழர் தலைவராகவோ ஆவதற்கு தகுதியற்றவர் என்பது இவரும் ஒரு வர்ணாசிரம சனாதனவாதிதான் என்பதும் இவரது பேச்சு செயல்கள் மூலம் நிரூபணமாகிறது. நாம் இப்படித்தான் பார்க்க முடியும். பார்க்க வேண்டும். நோக்க வேண்டும். இல்லையே ஒரு கருணாநிதியை, ஒரு முத்துராமலிங்கத்தை சீமான் உருவில் அனுபவிக்க வேண்டி வரும்.
ஏனெனில் பெரிய மக்கள் புரட்சியை தற்போதைய சூழலில் ஏற்படுத்த முடியாவிட்டாலும், தேர்தல் களத்திலிருந்தாவது பேராயக் கட்சியை விரட்டி தமிழர் விரோதப் போக்கிற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் எனும் எண்ணத்தோடு பல தமிழ்த் தேசிய அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் மாந்த நேய உணர்வாளர்களும் கடந்த இரண்டாண்டாக கடுமையான வறுமை, சிரத்தையின் ஊடே செயல் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவரின் இதுபோன்ற செயல்களால் அது பேராயக் கட்சிக்கு சாதகமாகத்தான் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.
இது கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் அ.தி.மு.க.வுக்கு வாக்கு கேட்டபோது நடைமுறை வாயிலாக தெரிந்து கொண்டோம். ஏனெனில், அதுவரை பேராயக் கட்சியின் எதிர்ப்பு பேசிய மக்கள் இவரது நிலைக்குப் பின் பேராயக் கட்சி பலத் தொகுதிகளில் வெற்றி பெறக் கூடிய சூழல் உருவாகியது.
ஆகவே பேராயக் கட்சியை வீழ்த்த வேண்டும், தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும் என்பது சீமான் ஒருவருடைய நோக்கம் மட்டுமல்ல, அக்களத்தில் இவர் பின்னால் வேண்டுமானால் மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதல் மக்கள் பலம் இருக்கலாம். அதற்காக இவர் சொல்லுவதையெல்லாம் சரியெனப் படாது. மாறாக அதுமறை முகமாக உதவியதாக ஆகிவிடும். மற்றவர்களின் உழைப்பை வீணாக்கி விடும்.
மீண்டும் ஒரு முறை தலைப்பை நினைவுப் படுத்துங்கள்.
அதுவே தமிழுக்கும் தமிழருக்கும் நல்லது.

திங்கள், 11 ஜூன், 2012

தமிழின வேர்களும் விழுதுகளும்



                                             Inline image 1
                                                                                தமிழர் வேந்தன்(ஐந்திரம் படைத்த இந்திரன்)

               இந்நில உலகில் மனித இனம் தோன்றியது முதல் முதன் முதலில் மொழி படைத்து குடும்பம்-சொத்து-அரசு போன்ற நிறுவனங்களைக் கட்டி சீரோடும் சிறப்போடும் உயர்ந்து வாழ்ந்து வந்தது தமிழினம்.உலகின் முதன் மொழி தமிழ் எனவும் தமிழர் பண்பாடே உலகின் முதல் நாகரிகம் எனவும் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் உலகிற்கு எடுத்தியம்பி தக்க தரவுகளோடு நிறுவியுள்ளார். அத்தகைய தமிழர் நிலமானது பண்டைய காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நன்கு வகைப்படும் என தொல்காப்பியம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
                    "மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
                     சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
                     வேந்தன் ( இந்திரன்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
                     வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்"
குறிஞ்சி நிலமக்கள் குறவன்-குறத்தி எனவும் முல்லை நில மக்கள் இடையர்-இடைச்சியர் எனவும் மருதநில மக்கள்
மள்ளர்-மள்ளத்தியர் எனவும் நெய்தல் நில மக்கள் பரதவர் எனவும் அழைக்கப்பட்டனர்.குறிஞ்சியும் முல்லையும் திரிந்து பாலை என்ற நிலம் தோன்றியதாகவும் அதன் மக்கள் கள்ளர், எயினர்-எயிற்றியர் எனவும் தொல்காப்பியத்திற்கு பின் தோன்றிய தமிழ் நூல்கள் கூறுகின்றன.உலகின் நாகரிகம் ஆற்றங்கரைச் சமவெளிகளிலேதான் தோன்றியதாக உலக வரலாறுகள் கூறுகின்றன. வயலும் வயல் சார்ந்த ஆற்றங்கரைச் சமவெளிகளுமே மருதநிலம் என அழைக்கப்படுகிறது.அவ்வாறான மருத நிலம் பற்றியும் அந்நிலத்தின் தமிழர் வாழ்வியல் பற்றியும் இங்கு காண்போம்.

மருத நிலமும் தமிழர் வாழ்வும்
          மருதநிலத் தலைவனாக தமிழர் வேந்தனும் அதன் மக்களாக மள்ளர்களும் குறிப்பிடப்படுகிறார்கள்.மருதநில மக்களின் முதன்மைத்தொழில் வேளாண்மை ஆகும். மேற்கண்ட தொல்காப்பியக் குறிப்பினை எடுத்துக்காட்டுவதைப்போல மருதநிலத் தலைவனான இந்திரனைத் தொழுது மள்ளர்கள் காவிரி நாடு (சோழ நாடு) முழுவதும் நாற்று நடவைத் தொடர்வதாக சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார்.அப்பாடலானது,
                 " உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு 
          இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் 
          தொழுது நாறு நடுவார் தொகுதியே 
          பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம். " என வணங்குகிறது.
மேலும், மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களின் குல முதல்வனாம் தேவேந்திரனைத் தொழுது நாற்றங்கால் பாவுவதை "வயலில் உழுது சேற்றைப் பரம்படித்துச் சமன்செய்து குற்றமில்லா மள்ளற்குலத்தினர் தம்குல முன்னோரான தேவேந்திரனைத்(வலாரி)  தொழுது வெண்முளை கட்டிய நெல்மணிகளை நாற்றங்காலில் தெளித்தனர்.பின்பு நாற்றங்காலில் உள்ள நீரை முறையாக வடித்தனர் " என விநாயகப் புராணம் விளக்குகிறது.அப்பாடலானது,
           "உழுத சேற்றினை யாடியி நோத்திடப் 
             பழுதின் மள்ளர் பயிற்றி வலாரியைத் 
             தொழுது வெண்முளை தூவித் தெளித்தபின் 
              முழுது நீரைக் கவிழ்ப்பர் முறைமையால்."(பா-103) எனக் குறிப்பிடுகிறது.
பறவைகள்,விலங்குகள் போன்ற உலகின் பல்வேறுபட்ட உயிரினங்களுக்கும் தமது வேளாண் தொழிலால் மள்ளர்கள் உணவளிப்பதை பேரூர்ப் புராணம் குறிப்பிடுகிறது.இதன் மூலம் தமிழர்களின் வேளாண்மையோடு பண்டைய அறம் சார்ந்த பண்பாடுகளையும் அறிய முடிகிறது.அப்பாடலானது,
                   "பறவையும் விலங்கும் பல்வே றுறவியும் பசியிற் றிர
                    அறவினை நாளும் ஆற்றும் அகன்பணை விளைவு நோக்கி
                     நறவுணு மகிழ்ச்சி துள்ள நலத்தகு நாளான் மள்ளர்
                     மறவினைக் குயங்கை யேந்தி வளாவினர் வினையின் மூண்டார்.எனப் போற்றுகிறது.
 
            ஏறும் போரும் இணைபிரியாது என்ற பழமொழிக்கு ஏற்ப மள்ளர்கள் உழவர்களாக மட்டுமின்றி போர்க்குடிகளாகவும் இருந்து பேரரசுகளைக் கட்டி தமிழினத்தைக் காத்துநின்றமையை சங்க இலக்கியங்கள்  போற்றுகின்றன. திருவிளையாடற்புராணம்மள்ளர்களின் போர்த்திறனை வேளாண்திறனோடு சேர்த்து "பலநிற மணிகளையும் கோர்த்துச் செய்த மாணிக்கமாலை போன்று பலநிறக் காளைகளையும் ஏரில்பூட்டி கலப்பையில் உள்ள இரும்பினால்செய்த கொழுவு தேய , வாள்வீசிச் சண்டையிடும் போர்த்தொழிலில் வல்ல கரிய கால்களையுடைய மள்ளர்கள், நிலமகளின் உடல்போன்ற நிலத்தை உழுதனர். உழுத ஏர்த்தடங்களில் குருதி போன்ற சிவந்த சேற்றிடத்தில் சிவந்த மாணிக்கம் போன்ற தானிய மணிகள் ஒளிவீசின " எனப் பாடுகிறது.அப்பாடலானது,
                  "பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
                   அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
                   நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
                   சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு மன்னோ" (செ-19) என சுட்டுகிறது.
கம்பர் தமது இராமாயணத்தில் மள்ளர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்துவதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு கீழ்க்கண்டவாறு ஒப்பிட்டு கூறுவார்.அப்பாடலானது,
                   "நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
                     உதிர நீர் நிறைந்த காப்பின்
                     கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
                     இன மள்ளர் பரந்த கையில்
                     கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
                     பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
                     தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
                     எனப் பொலியும் தகையும் காண்மின்”  - கம்பராமாயணம்.
இதிலிருந்து மருதநிலத் தமிழர்களான மள்ளர்கள் உழவர்களாக மட்டுமின்றி போர்ப்படையாகவும் இருத்தமை தெளிவாகும்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட, தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கும் நிகண்டுகள் மள்ளர்களை மருத நில வேளாண்குடிகளாகவும் போர்வீரார்களாகவும் விளக்கம் கண்டுள்ளது உற்றுநோக்கத்தக்கது.
                  "செருமலை வீரரும் திண்ணியோரும்
                   மருத நில மக்களும் மள்ளர் என்ப" - பிங்கல நிகண்டு.
                   "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
                    வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" - திவாகர நிகண்டு.
        தி.பி 15,16 -ஆம் நூற்றாண்டுகளில் பாண்டிய, சோழ, பேரரசுகள் வடுக்கப் படையெடுப்புகளினால் முற்றாக அழித்தொழிக்கப் பட்டன.தமிழர் மண் சூறையாடப்பட்டு தமிழினம் தலைசாயத் தொடங்கியது.எந்தத் தமிழ் இலக்கியங்கள் தமிழினத்தைப் போற்றி வணங்கியதோ அதே தமிழ் இலக்கியங்களைக் கொண்டு மள்ளர்களை பள்ளர்கள் என ஏசி நூற்றுக்கணக்கான பள்ளு சிற்றிலக்கியங்களை எழுதிக்குவித்தனர் தமிழினப் பகைவர்கள்.ஓர் இனத்தை அழிக்கவேண்டுமெனில் அதன் பண்பாட்டை வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற உண்மையை மிகச்சரியாக உள்வாங்கி செயல்பட்டனர் தமிழினப் பகைவர்கள். பள்ளர் என யாரைக் குறிப்பிடுகிறோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க மள்ளர்களே பள்ளர்கள் எனப் பல இடங்களில் குறிப்பிட்டும் எழுதினர்.முக்கூடற்பள்ளு எனும் பள்ளு சிற்றிலக்கியமானது "மள்ளர்குலத்து பள்ளர்-பள்ளியர்" எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.அப்பாடலானது,
                    "மள்ளர் குளத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர் 
                     பள்ளக் கணவன் எனில் பாவனைவே றாகாதோ... " - (பா-13)
                     "செவ்வியர் மள்ளர்கள் தேவியர் பள்ளியர் ..." - (பா-20)
மேலும், மள்ளர்களே பள்ளர்கள் என்பதை செங்கோட்டுப்பள்ளு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது,
                    " வந்ததுமே திருக்கூட்டமாகவும்    
                      மள்ளரும் பள்ளி மார்களும் கூடியே... "  எனக் கூறுகிறது அப்பாடல்.
கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட பேரூர்ப்புராணம் சிவனை (பேரூர் பட்டீஸ்வரர் -கோயமுத்தூர்) பள்ளன் எனவும் மள்ளன் எனவும் மாறி மாறி அழைக்கிறது. அப்பாடலானது 
          " இந்திரன் பிரமனாரணன் முதலா மிமையவர் நுகமலை மேழி 
            வெந்திறள்  கொழுவார் கயிறுகோல் பகடு வித்துனா றனைத்துமா யங்கு 
            வந்தனர் பயில வன்கண நாத றேவல்செய் மள்ளய் விரவி 
           முந்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழிவழி வினைதொடங் கினரால்"-(செய்-28) எனப் போற்றுகிறது.
சிலர் மள்ளர்களை பொதுவாக உழவர் என பொத்தாம்பொதுவாக மூடிமறைப்பது தமிழின வரலாற்றைத் திரிக்கும் கொடுஞ்செயல் ஆகும்..அவ்வாறு மள்ளர் என்பதை உழவர் என்று பொருள்கொண்டால் போரிடும் வீரர்களையும் மள்ளர் என சங்க இலக்கியங்கள் கூறுவது ஏன்? ஆக மள்ளர் என்றால் மருத நில மக்களே என்பது இங்கு தெளிவாகிறது. காஞ்சிகாமச்சியம்மன் கோவில் செப்பேடு மள்ளர்களை கீழ்க்கண்டவாறு போற்றுகிறது.
          " தேவேந்திரப் பள்ளரில்' வெள்ளானன வேந்தன், மிக விருது பெற்றவன் சேத்துக்கால் சென்னன், சென்னல் முடி காவலன், தேவேந்திர வரபுத்திரன், மண்வெட்டி கொண்டு மலையைக் கடைந்த கண்ணன், வெள்ளானனக் கொடி படைத்தவன், வெள்ளைக்குடை, முத்துக்குடை, பவளக்குடை, பஞ்சவர்ணக்குடை, முகில் கொடி, புலிக்கொடி, அலகுக்கொடி படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் குருணிகுர 'தேவேந்திர பள்ளர் -(காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம்)

மேலும் மள்ளர்கள் குடும்பர்,காலாடி,பண்ணாடி,மூப்பன்,பலகான்,ஆற்றுக்காலாட்டியார்  ,நீராணிக்கர்,தேவேந்திரகுல வேளாளர்,இந்திரகுலத்தவர் எனப் பல பெயர்களில் இன்றும் பல்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகின்றனர்.மள்ளர்களின் இந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பொருள் உண்டு.இது போன்று  ஒவ்வொரு தமிழினக் குழுக்களுக்கும் ஒரு வரலாறு உண்டு.அவ்வரலாறுகளைத்  தொகுத்துப் பார்க்கையில் தமிழினத்திற்க்கிடையேயான உறவுகள் ஒரு மர விழுதுகள் என்பது புலனாகும்.
                     --- தமிழூரன்.