செவ்வாய், 19 மார்ச், 2013
ஐ.நா முன்பு ஆர்ப்பாட்டம்! டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னையில் உள்ள ஐ.நா.
துணை அலுவலகம் முன்பு வருகிற 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று
டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்து உள்ளார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில்
போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அங்கு இன அழிப்பு
தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ் மக்கள் பூர்வீகமாக
குடியிருந்து வரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியில்
ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்து உள்ளது.
அதில்
ராணுவமே விவசாயம் செய்து அந்த பொருட்களை யாழ்ப்பாணம் பகுதியில் குறைந்த
விலைக்கு விற்பனை செய்து, தமிழர்கள் செய்து வரும் சிறு வணிகத்தையும்
அழித்து வருகிறது. அத்துடன் தமிழ் மீனவர்களுக்கு எவ்வித வசதியும் செய்து
கொடுக்காமல் சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடிக்க அதிநவீன கருவிகளை கொடுத்து
உள்ளது.
மேலும்
ஈழத்தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டங்கள்,
போராட்டங்கள் நடத்தினால் அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படுகிறார்கள்.
தொடர்ந்து அங்கு தமிழர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்கள்
சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் இலங்கை அரசு மீது கொண்டு
வரப்படும் தீர்மானம் வலுவானதாக இருக்க வேண்டும்.
அமெரிக்கா
கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம்
அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது.
இலங்கையில் 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு
உள்ளார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு இலங்கை மீது பன்னாட்டு
விசாரணை ஆணையம் அமைக்கும் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்.
இலங்கை
தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அமைதி முறையில்
போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் வெடிக்கும் முன் மத்திய
அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
மேலும்
இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தி வருகிற 20-ந்
தேதி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. துணை அலுவலகம் (யுனிசெப்) முன்பு
ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் கட்சி பேதமின்றி நிர்வாகிகள் மற்றும்
தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சனி, 16 மார்ச், 2013
மாணவர்களை சந்தித்தார் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள்
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடவும், ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரியும்,கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் காவல்துறையினர் அகற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்தார்கள்.
இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தி ஐ.நா. துணை அலுவலகம் முன்பு மார்ச் 20–ந் தேதி ஆர்ப்பாட்டம் - டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அங்கு இன அழிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ் மக்கள் பூர்வீகமாக குடியிருந்து வரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்து உள்ளது.
அதில் ராணுவமே விவசாயம் செய்து அந்த பொருட்களை யாழ்ப்பாணம் பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, தமிழர்கள் செய்து வரும் சிறு வணிகத்தையும் அழித்து வருகிறது. அத்துடன் தமிழ் மீனவர்களுக்கு எவ்வித வசதியும் செய்து கொடுக்காமல் சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடிக்க அதிநவீன கருவிகளை கொடுத்து உள்ளது.
மேலும் ஈழத்தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினால் அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து அங்கு தமிழர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் இலங்கை அரசு மீது கொண்டு வரப்படும் தீர்மானம் வலுவானதாக இருக்க வேண்டும்.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. இலங்கையில் 1½ லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கும் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அமைதி முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் வெடிக்கும் முன் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
மேலும் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தி வருகிற 20–ந் தேதி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. துணை அலுவலகம் (யுனிசெப்) முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் கட்சி பேதமின்றி நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு டாக்டர்.க. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள்தெரிவித்தார்சனி, 9 மார்ச், 2013
ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேச சுதந்திரமான விசாரணை ஆணையத்தை ஐ.நா சபை நிறுவிட வேண்டும்- ஜெனிவா மாநாடு.
லட்சக்கணக்கான தமிழ்
மக்களை கொன்று அழித்த ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேச சுதந்திரமான விசாரணை ஆணையத்தை
ஐ.நா சபை நிறுவிட வேண்டும் என்றும் இலங்கையில் நடைபெறுகின்ற ஈழத்தமிழர்களுக்கு
எதிரான இனப்படுகொலையையும்,போர் விதிமுறை மீறல்கள்,இன அழிப்பு நடவடிக்கைகளை
விசாரிக்கவும் வலியுறுத்தி அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மாநாடு,ஜெனிவா நகரில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தமிழகத்திலிருந்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவரும்,உலக பாதுகாப்பு செயலகத்தின் தலைவருமான சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி
அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன், ம.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, முன்னாள்
திட்டக்குழுதலைவர் நாகநாதன்,புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன், டாக்டர்.தாயப்பன் லண்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், அயர்லாந்து பிரதிநிதிகள், மலேசியா, இத்தாலி, பிரான்ஸ், கனடா பா.உ, தென்னாபிரிக்க அமைச்சர், நோர்வே பாராளுமன்ற
உறுப்பினர்கள், மொறிசியஸ் பிரதிநிதிகள், இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேந்திரன, சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன் மற்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னமபலம், செல்வராஜா கஜேந்திரன், மணிவண்ணன் உட்பட, குறிப்பாக தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இருந்து வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.