ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ...!!!

தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ...!!!
தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணியில் வெள்ள நீரை வெளியேற்றுவதில் சுணக்கம் காட்டும் மாவட்ட நிர்வாம் போர்கால அடிப்டையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ள நிவாரண பணியை மேற்பார்வையிட நீதி மன்ற மேற்பார்வையில் குழூ அமைத்திட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம் .டி .எம் .எல் .ஏ .,அவர்கள் வழக்கு தொடந்துள்ளார். இன்று மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

தத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…

தத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…….
தமிழகத்தில் கனமழை கடந்த ஒரு மாத காலமாக பெய்து வருகிறது. இம்மழையில் பெரும் பாதிப்புக்குள்ளான கடலூா் மாவட்டம், சென்னை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் போன்றவை ஆகும். கடலூா் மாவட்டத்திலும் சென்னை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை பல அரசியல் கட்சி தலைவா்கள், பிரமுகா்கள் சென்று ஆறுதல் கூறியும், உணவு உடை வழங்கியும் போட்டோவுக்கு போஸ்ஸீம் கொடுத்தனா். சிலா் தனது கட்சிக் கொடியை அறிமுக படுத்திக்கொண்டே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனா். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவா்களுக்கும், பிரமுகா்களுக்கும் சென்னை மற்றும் கடலூா் போன்ற மாவட்டங்கள் கண்ணுக்கு தெரிந்ததே தவிர, தென்தமிழகத்தின் முத்து நகரமான தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதே வருத்தப்படக்கூடியது. ஆனால் ஒரே ஒரு அரசியல் கட்சி தலைவா், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்கள் மட்டும் தான் இன்றைய நாள் வரை தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து வருகிறார்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடியில் முகாமிட்டு தனது தொகுதிக்கு உட்பட்ட ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கு சென்று வெள்ளநீா் பாதித்த இடங்களை பார்வையிட்டு, மக்களுக்கு உணவு, உடை, அரிசி ஆகியவைகளை வழங்கிட தனது கட்சியின் பொறுப்பாளா்களுக்கு உத்திரவிட்டா். மேலும் அனைத்து சமுதாய மக்களின் குறைகளை கேட்டு அவா்கள் வெள்ளத்தால் எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளார்கள் என்பதை வீடு வீடாக சென்று மதிப்பீடு செய்யவும் தனது கட்சிகாரா்களுக்கு உத்தரவு பிறபித்தார். மேலும் டாக்டா் அய்யா அவா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனே தொடா்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். ஒரு தாலுகாவில் வெள்ளநீரை சமாளிக்க முடியாத மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று அறிக்கையும் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம குறிஞ்சி நகரில் தேங்கி இருந்த வெள்ளநீரை அதிகாரிகள் வெளியேற்றும் வரை தா்ணா போராட்டம் மேற்க்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளம், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் விவசாய நிலங்களை பைக்கில் சென்று பயணம் செய்து பார்வையிட்டார். தனிநபா் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க உடனடி நடவடிக்கை மேற்க்கொண்டார். தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு எந்த ஒரு உதவியும் செய்யாதததை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டார். பல இடங்களில் பொதுமக்களும் வெள்ளநீரை வெளியேற்றாததைக் கண்டித்து சாலை மறியல் செய்தனா்.
டாக்டா் அய்யா அவா்கள் தனது தொகுதி மட்டும் அல்லாமல் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை இரவு, பகல் என்று பாராமலும் உணவு வேளை என்றும் பாராமலும் தூத்துக்குடி மக்களை கவனித்து வந்தார். தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்கிட பல அறிக்கை விட்டும், ”செவிடன் காதில் சங்கு ஊதினார் போல” தமிழக அரசு கண்டு கொள்ள வில்லை. ஆதலால் டாக்டா் அய்யா அவா்கள் இன்று மதுரை உயா்நீதி மன்றத்தில் - தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப்பணியில் வெள்ளநீரை வெளியேற்றுவதில் சுணக்கம் காட்டும் மாவட்டநிர்வாகம் போர்கால அடிப்டையில் நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தியும், வெள்ள நிவாரண பணியை மேற்பார்வையிட நீதி மன்ற மேற்பார்வையில் குழு அமைத்திட உத்திரவிட கோரியும் வழக்கு தொடரபட்டுள்ளது. இந்த வழக்கில் டாக்டா் அய்யா அவா்களே நேரடியாக வாதிட்டார்கள். மதுரை உயா்நீதி மன்றமும் உடனடியாக வெள்ள நீர் அகற்ற அரசு நடவடிக்கை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவு பிறபித்துள்ளது. இவ்வழக்கில் புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞா்களான திரு. பாஸ்கா் மதுரம், திரு. கனகராஜ், திரு.பவுன்ராஜ், திரு.குமார், திரு.கார்மேகம், திரு.வீரபாண்டி ஆகியோர் டாக்டா் அய்யாவுடன் உடன் இருந்தனா்.
தமிழகத்தில் நிகழ்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சணையை உயா்நீதி மன்றம் வரை சென்று மக்களின் துன்பங்களை துடைத்த புதிய தமிழகம் டாக்டா் அய்யா அவா்களை போன்று தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவா்களை எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து நான் கண்டது இல்லை.
எனவே தத்தெளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா் – டாக்டா் அய்யா அவா்களை சாரும் என்பதில் சொல்வதில் இன்றியமையாதது.
நன்றி.
------------- என்றும் டாக்டா் அய்யா அவா்களின் வழியில் 

முதுகுளத்தூர் பயங்கரம்...!!!

முதுகுளத்தூர் பயங்கரம்...!!!
ஆசிரியர்: டி. எஸ். சொக்கலிங்கம்
பதிப்பாசிரியர்: அ. ஜெகநாதன்
முதல் பதிப்பு: நவம்பர் 1957
இரண்டாம் பதிப்பு:
பிப்ரவரி 2008
பக். 158
விலை ரூ. 100
கவின் நண்பர்கள் வெளியீடு
ஆர்சி. நடுத்தெரு,
வ. புதுப்பட்டி - 626116, விருதுநகர்.
1957 பொதுத்தேர்தல் அதற்கடுத்த இடைத்தேர்தல் ஆகியவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இரு சாதிகளுக்கிடையில் கொந்தளிப்பு எழுந்தது. அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுசெய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் இம்மானுவேல் சேகரன் அம்மக்கள் சார்பாகக் கலந்துகொண்டார். மறவர்கள் சார்பில் உ. முத்தராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேலின் தலைமைத் தகுதி குறித்து விவாதம் எழுந்தது. இருவரும் சேர்ந்து கையெழுத்திடும் கூட்டறிக்கைக்கு முத்துராமலிங்கத் தேவர் ஒப்புக்கொள்ளாத நிலையில், ஒரே வாசகம் உள்ள தனித்தனி அறிக்கைகள் வெளியிடும் ஆட்சியரின் முயற்சியில் உருவான சமாதானத் திட்டத்தோடு கூட்டம் முடிந்தது. மறுநாள் செப்டம்பர் 11இல் இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இரு சமூகத்தினரிடையே எழுந்த மோதல் பல உயிர்களையும் பலிகொண்டது. சேதமான சொத்துகள் இருதரப்பிலும் இருந்தன. ஒரு மாதத்திற்கும் மேலாக இம்மோதல் நீடித்தது. வரலாற்றின் குருதி எழுதிய வரைபடமாகத் தமிழக வரலாற்றில் முதுகுளத்தூர் பதிவானது. அடங்க மறுத்ததும் திமிறி எழுந்ததுமான செயல்பாடுகளால் பள்ளர்கள் எழுச்சி பெற்றது உண்மை.
1957இல் முதுகுளத்தூரில் நேர்ந்த தேவேந்திரர் எழுச்சியைக் குறித்து அந்தக் காலகட்டத்தில் இரு நூல்கள் வெளிவந்துள்ளன. இதைக் கலவரமாகச் சித்திரித்து தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் (1958), பயங்கரமாக அதை வர்ணித்து டி.எஸ். சொக்கலிங்கம் எழுதிய முதுகுளத்தூர் பயங்கரம் (1957). 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவ்விரண்டு நூல்களும் அடுத்தடுத்து மறுபதிப்புக் கண்டுள்ளன.
முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான காங்கிரஸின் ஆதரவு நூல்களேயானாலும் இவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. ஒடுக்கப்பட்ட சாதி, ஆதிக்கச் சாதிக்கு எதிராக மேல் எழும் ஒரு நிகழ்வைக் கலவரமாகப் பார்ப்பதற்கும் பயங்கரமாகப் பார்ப்பதற்குமான வித்தியாசமே அது.
தினகரன் சுயசாதி அபிமானத்தையும் கடந்து பள்ளர்கள் ஆதரவு நிலைப்பாடெடுத்து எழுதினார். விளைவாகச் சொந்தச் சாதியினரால் கொல்லவும்பட்டார். சொக்கலிங்கத்தின் நூலிலும் பள்ளர்கள் ஆதரவு இழையோடுகிறது. அது காங்கிரஸ், குறிப்பாகக் காமராஜ் என்ற தறியிலிருந்து புறப்பட்ட இழையாகும்.
சம்பவக் காலத்தில் டி.எஸ். சொக்கலிங்கம் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளைப் பத்திரிகையாளர் மயிலைநாதன் தொகுத்து முதுகுளத்தூர் பயங்கரம் என்னும் பெயரில் இந்நூலாக்கினார். முதுகுளத்தூர் சம்பவம், அரசியல் நிகழ்வல்ல, வகுப்புகளுக்கிடையிலான போராட்டமே என்பதை நிறுவிக்காட்டுவதே ஆசிரியரின் நோக்கம். குறிப்பிட்ட நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்த சம்பவங்கள், அவற்றைக் குறித்த பத்திரிகைச் செய்திகளில் படிந்துள்ள அரசியல் சாயம், அறியாமையின் தூசு, சதியின் பகுதி ஆகியவற்றை விளக்குவன நூலின் முதல் இரண்டு பகுதிகள். முதுகுளத்தூர் பகுதி நிலவரிகூட வசூலிக்க முடியாதபடி அராஜகப் பிடியில் இருந்தது பற்றிய விவரம் மூன்றாம் பகுதி. தலைவிரித்தாடிய அராஜகமும் அப்பகுதியைப் பார்வையிட வந்த மத்திய உள்துறை அமைச்சர் தத்தாரின் வருகையைப் பற்றிய விவரணையும் தொடரும் பகுதிகள். பள்ளர்களின் துயர வரலாறும் சட்ட சபையில் காங்கிரஸ் கட்சிமீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் அரசின் நடவடிக்கைகள் பற்றியதும் இறுதிப் பகுதிகள். இந்நூலின் முன் இணைப்பாக 'மதுரைக் கோயில் நுழைவு',
'உ. முத்துராமலிங்கம் பொய்மையால் வேயப்பட்ட காகித ஓடம்' என்னும் பதிப்பாசிரியரின் இரு கட்டுரைகளும்,
டி. எஸ். சொக்கலிங்கம் பற்றிய பொன். தனசேகரனின் அறிமுகக் கட்டுரையும் உள்ளன. பின்னிணைப்பாகத் பி. மருதையாவின் அறிக்கையும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது சகஜானந்தரின் சட்டசபைப் பேச்சும் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பவ காலத்தில் எழுதப்பட்ட இப் பிரதிகளை, நிகழ்ச்சிகளை வரலாற்றில் வைத்துப்பார்க்கும் அரிய வாய்ப்பை மறுபதிப்பு செய்திருக்கும் பதிப்பாசிரியருக்குக் காலம் அளித்திருக்கிறது. அதனால் நிகழ்வுகளை அலசிக் கொள்கைரீதியான தர்க்கங்களோடு
அ. ஜெகநாதன் முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் சூழலை விளக்கும் இன்னும் பல அம்சங்கள் தேவைப்படினும் பயனுள்ள முன்னுரை.
சொக்கலிங்கத்தின் நூல் சந்தேகமில்லாமல் காங்கிரஸ் சார்பு எழுத்துகள்தாம். அவை முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக இருப்பதால் பள்ளர்கள் ஆதரவு எழுத்துகளாகத் தோற்றம் தருகின்றன. தன் தொகுதிவாழ் மக்களின் சாதிகளைத் தம் கைப்பட எழுதிவைத்திருந்த காமராஜரின் சுயசாதி ஆதரவு நிலைப்பாட்டை, அவர் பள்ளர்களை ஆதரிப்பதால் நாம் புறக்கணித்துவிட முடியாது. கட்சி அரசியலில் சாதிகளின் செல்வாக்கை மறுக்க முடியாத மோசமான நிலையை ஒப்புக்கொண்டு சொக்கலிங்கமும் வருந்துகிறார் என்பது தான் நிலைமை.
அது அரசியல் கலவரமல்ல, வகுப்பு மோதல், அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தம் ஆதிக்கத்திலேயே இன்னொரு சாதியினரை வைத்திருக்க விரும்பி அதன் பொருட்டு வன்முறையில் ஈடுபட்டதன் விளைவே முதுகுளத்தூர் பயங்கரம் என்பதாக இந்நூல் பேசுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் தற்காத்துக்கொள்ள மேற்கொண்ட எதிர்ப்பு தன்னெழுச்சியாக நேர்ந்ததாகச் சொக்கலிங்கம் நூல் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாகக் காங்கிரஸ் சேவையின் விளைவு அது என்பதாகப் பீற்றிக்கொள்கிறது. அது காங்கிரஸ் சேவையின் விளைவென்றால் காங்கிரஸ்காரர் அனைவருக்கும் அதில் பங்கு உண்டுதானே.
சொக்கலிங்கத்துக்குத் தன் காங்கிரஸ் ஆதரவு வாதத்திற்கு வலுச் சேர்க்கப் பெரியாரின் நிலைப்பாட்டையும் பாராட்ட நேர்ந்துவிடுகிறது. முதுகுளத்தூர் சம்பவத்தில் பள்ளர்களின் பக்கம் பெரியார் சார்புநிலை எடுத்ததற்கு அரசியல் காரணம் கற்பிக்கும் பிந்தைய வரலாறுகளை முன் உணர்ந்தோ என்னவோ ஒடுக்கப்படும் பிரிவினர்மீது எப்போதும் கவனம் குவிக்கும் பெரியாரின் இயல்பே இந்த சார்பு நிலைக்குக் காரணம் எனச் சொக்கலிங்கம் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். பெரியார், திராவிடம் என்ற கருத்தாக்கங்கள்மீது எப்போதும் எதிர் நிலை எடுப்பவர் சொக்கலிங்கம் என்பது வரலாறு அறிந்த செய்தி. பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலும் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பது சொக்கலிங்கத்தின் புகழ்பெற்ற கிண்டல். திராவிடர் கழகங்களின் உயிர்மூச்சான இட ஒதுக்கீட்டையே கிண்டல் செய்த சொக்கலிங்கம் பெரியாரை வேறு வழியின்றிப் பாராட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
தேவேந்திரர்களின் தன்னெழுச்சியை, காங்கிரசின் ஆதரவு நிலைப்பாடுமீது சார்புணர்ச்சி எழுமாறு உருவாகிவிட்டது. அதற்கு உதவுவதுபோல் நூலின் முன் இணைப்புக் கட்டுரைகள் இரண்டும் காங்கிரஸ் கட்சி தேவேந்திரர் சமுகத்திற்கு உழைத்ததாகக் காங்கிரஸ் பலபடப் பேசும் வைத்தியநாத அய்யரையும் ராமேசுவரி நேருவையும் (நூல் நெடுக இவர் பெயர் ராஜேசுவரி நேரு என்று பதிவாகியுள்ளது. நூலில் காணலாகும் பல பிழையான பெயர்களுடன் இதுவும் சேர்த்தி) புகழ்ந்து தள்ளுகின்றன.
உணர்ச்சியின் பெருக்கில் கோபத்தின் திசைவழியில் இயங்கும் முன் இரு கட்டுரைகளின் மிகை அழுத்தம் காங்கிரஸ் சார்பு எழுத்தான இந்நூலைச் சொக்கலிங்கம் என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் சமத்துவ இந்தியா நோக்கிய கனவு பற்றிய எழுத்தாக நினைக்கவைத்துவிடுகின்றது.
ஒரு காலகட்டத்தில் ஒருவருக்கு எதிராக இருந்தவர்கள் இன்னொரு காலகட்டத்தில் அவருக்குச் சார்பான நிலை எடுப்பது நாடாளுமன்ற அரசியலில் தவிர்க்க இயலாதது. தேவரை எதிர்த்த தினகரனோடு தோள் சேர்ந்து நின்ற ஆறுமுகம் பின்னாளில் தேவரைப் பாராட்டிப் புத்தகம் எழுதினார். சொக்கலிங்கத்தின் நிலைப் பாட்டையே அவருக்குப் பிறகும் வாழ்ந்த மயிலைநாதன் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அது நடக்காதபோது அவரைக் குருத்துரோகி என்று சொல்வதும் மீண்டும் யோசிக்க வேண்டியவை. ஏ.கே. செட்டியார், மயிலைநாதன், தி.வ. மெய்கண்டார், அன்பு பொன்னோவியம் போன்றோர் வரலாற்றின் தொடர்ச்சிக்கு அளிக்கும் ஆவணச் சேகரிப்புப் பங்களிப்பை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. நமது விமர்சனங்கள் வரலாற்றுக்குதவும் அவர்களின் இருப்பைக் காலிசெய்துவிடக் கூடாது. அதேசமயம் சந்தர்ப்பவாதப் புத்தக வியாபாரிகளைச் சாடுவதை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.
முதுகுளத்தூர் சம்பவத்தைப் பள்ளர்களின் விடுதலைப் போராட்டமாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த பட்டியலின மக்களின் எழுச்சியாகப் பார்ப்பதும் உணர்வதும் தேவேந்திரர் எழுச்சிப் பயணத்தில் நல்ல ஆரம்பம் .

வரவேற்க்கிறேன் ....!!!,

வரவேற்க்கிறேன் ....!!!,..நேற்று 30.9.2015 தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பரமகுடியில் உள்ள ஐயா இமானுவேல் சேகரன் நினைவு இடத்திலும்,முதுகுளத்தூரில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..தேவேந்திரர்களின் நமக்கு நாமே ... திட்டம் ..... சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது . தமிழகத்தின் பிரதான கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உ ள்ளன ... திமுக தனது இருப்பை காட்டிக்கொள்ள திராவிட திருமகன் ஸ்டாலின் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சில நாடகங்களை நடத்தி வருகின்றார் .. தென் மாவட்டங்களில் சுற்று பயணம் செய்துவருகின்றார் .... நேரடி விவாதம் வேறு நடத்துகின்றார் ...தேவேந்திர குல மக்கள் என்ன செய்து கொண்டு இருகின்றீர்கள் ..?.... அவரை சந்தித்து திமுக ஆட்சி அமைந்தால் " தேவேந்திர குல வேளாளர் " என்று அறிவிக்கப்படுமா ..?.....திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பீர்களா ..?.... ஏன் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை ..?.. எத்தனை அமைச்சர் பதவி கொடுப்பீர்கள் ..?.... ............................போன்ற கேள்விகளை எழுப்பலாமே ..?.....நமக்கு உ ரிய அரசியல் அதிகாரம் , நமது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளுக்கு நமது வாக்குகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தலாமே ..?.... என்று எனது முகனூலில் பதிவு செய்து இருந்தேன்..அதற்க்கு பதில் சொல்லும் விதமாக மு.க .ஸ் டாலின் அவர்கள் பரமக்குடியில் அய்யா இம்மானுவேல் சேகரனுக்கும் , முதுகுளத்தூரில் தளபதி சுந்தரலிங்ககுடும்பனார் அவர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை மனதார வரவேற்கிறேன் ... இதே அணுகுமுறையை திமுகவில் தேவேந்திர குல சமுகத்திற்கு உ ரிய பிரதிநிதித்துவமும், எங்கள் மக்களின் கோரிக்கைகளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ...நன்றி ..!!!

சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் குற்றச்சாட்டு.

சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை:
டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் குற்றச்சாட்டு.
தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிப்பதாக கூறி புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் , அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரமில்லா நேரத்தின்போது தம்மை பேச அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கோரிக்கை வைத்தார். இதற்கு அனுமதி மறுத்ததால் அவர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார். அவையின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிப்பதாக கூறி அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை என்றார்

காலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து போராடும்..

காலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து போராடும் .....புதிய தமிழகம் கட்சி தலைவர். டாக்டர் .க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A அவர்கள் அறிக்கை: ......விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமுதாய மக்களின் அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுவே மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளாக கூறப்பட்டாலும் நடைமுறையில் செயலுக்கு வருவதில்லை.
தமிழ் சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் தற்போதும் "ன்' விகுதி வைத்து ஒருமையில் அழைக்கப்படுகின்றனர். பட்டியலின பிரிவில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதை அரசு நிறைவேற்றவில்லை.
பட்டியலின துறைக்கு சமூக நீதித்துறை அல்லது பட்டியலினத்துறை என பெயரிடுவது, உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடக்கவுள்ளது.முதற்கட்டமாக 20 முதல் 24ம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும். 20ம் தேதி திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர், 21ம் தேதி மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கடலூர், 22ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, நாகப்பட்டணம், விழுப்புரம், திருவாரூர், 23ம் தேதி ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், 24ம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இப்போராட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து வேண்டும்.

தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்

தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவேந்திரகுல வேளாளர் வகுப்பினருக்கு மத்திய மாநில அரசுகள் விவசாயத்தில் சிறப்பு நிதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 7ஆம்தேதி முதல் நவம்பர் 15 வரை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தபோவதாக தெரிவித்தார்.
மேலும் மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயரை வைக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.