ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!






நேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது ஏவப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதால் ஆத்திரம் தலைக்கேறிப் போய், தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச்சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்துவிட்டாரெனக்கூறி அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.
1995 இல் (ஜெ ஆட்சியில்) மதுரை மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொண்டு வந்தபோதுதான் உமாசங்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜெயலலிதா ஆட்சியின் ஊழலைச் சொல்லி, 1996 இல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, ஊழல் கண்காணிப்புத் துறையின் கூடுதல் ஆணையராக உமாசங்கரை நியமித்தார். ஜெ, அவரது அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்களை உமாசங்கர் வெளிக்கொணர்ந்த போதிலும், செல்வாக்குள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது கருணாநிதி அரசு. வெறுப்புற்ற உமாசங்கர், தன்னை இப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரியவுடனே, அவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
மே 2006 இல் எல்காட் என்ற அரசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதும், அதுவரை மைக்ரோசாப்ட் மென்பொருட்களைச் சார்ந்திருந்த அரசுத்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பில்கேட்ஸை வெளியேற்றி விட்டு, 2007 ஆம் ஆண்டு முதல் ‘லினக்ஸ்’ என்ற ஓபன் சோர்ஸ் (இலவச) மென்பொருளை அறிமுகப் படுத்தினார் உமாசங்கர்.
“மைக்ரோசாப்ட் ஆத்திரம் கொண்டால் நம் நாட்டின் மென்பொருள் துறையே தேங்கிவிடும் என்று கருதுவது அபத்தமானது… மைக்ரோசாப்ட் இல்லாமல் இந்தியா வாழ முடியும். முன்னேறவும் முடியும். இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை இழப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குத்தான் பேரிழப்பு. மைக்ரோசாப்டிலிருந்து வெளியேறியதன் விளைவாக தமிழ்நாடு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி வரை மிச்சமாக்க முடியும்” என டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகைக்கு அப்போது அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் உமாசங்கர். மைக்ரோசாப்டின் உயர் அதிகாரி ஒருவர் தமது மென்பொருள் தொகுப்பை 7000 ரூபாய்க்குத் தருவதாக பேரம் பேசினாரென்றும், ஓபன் சோர்ஸில் செலவே இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய மென்பொருளுக்கு நாங்கள் எதற்காக 7000 ரூபாய் செலவழிக்கவேண்டும் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியதாகவும் அப்பேட்டியில் கூறுகிறார் உமாசங்கர்.
எல்காட்டின் பொறுப்புக்கு உமாசங்கர் வருவதற்கு சில ஆண்டுகள் முன்னர், தியாகராச -செட்டியார் என்பவருக்குச் சொந்தமான ‘நியூ எரா டெக்னாலஜீஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம், ‘எல்நெட்’ என்றொரு கூட்டுப்பங்கு நிறுவனத்தை உருவாக்கியிருந்தது. 24% பங்குகள் தியாகராச செட்டியாரிடமும், 26% பங்குகள் எல்காட்டிடமும், மீதமுள்ள 50% பங்குகள் பொதுமக்களிடமும் இருந்த இந்நிறுவனம், 2004 ஆம் ஆண்டில், ‘இ.டி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்’ என்ற கட்டுமான நிறுவனத்தைத் தனது துணை நிறுவனமாக உருவாக்கியிருந்தது. சென்னையில் 18 இலட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.700 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (கட்டிடம்) ஒன்றை இந்நிறுவனம் உருவாக்கியிருந்தது. தமிழக அரசின் 26% பங்குகளையும் பொதுமக்களின் 50% பங்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனமும், அதன் 700 கோடி சொத்தும், 24% பங்குளை மட்டுமே வைத்திருந்த தியாகராச செட்டியாருக்கு மர்மமான முறையில் கைமாறியிருப்பதை உமாசங்கர் கண்டுபிடித்தார். “2008, ஜூலை 8 ஆம் தேதியன்று தரமணியில் உள்ள எல்நெட் நிறுவனத்தில் இவை தொடர்பான ஆவணங்களை நானே நேரடியாகத் தேடிக்கொண்டிருந்த போது, என்னுடைய பதவி பறிக்கப்பட்ட தகவல் வந்து சேர்ந்தது” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் உமாசங்கர்.
அடுத்து, சன் டிவி – கருணாநிதி மோதலின் தொடர்ச்சியாக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனின் நிர்வாக இயக்குநர் பதவியில் அக்டோபர் 2008 இல் நியமிக்கப்பட்டார் உமாசங்கர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை மிரட்டியதுடன், ரவுடிகளை வைத்து வயர்களையும் அறுத்தெறிந்தனர் மாறன் சகோதரர்கள். இவர்களுக்குத் துணை நின்றவர் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. இது குறித்து பல புகார்கள் கொடுத்தும் போலீசு நடவடிக்கை எடுக்காததால், இவர்களைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கவேண்டும் என்றும், சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும் உமாசங்கர் அரசுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். உடனே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏவப்படுகிறது. அந்த ஒழுங்கு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்ததனால், 2009, சனவரி 23 ஆம் தேதியன்று சிறுசேமிப்புத்துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டார் உமாசங்கர். இவற்றின் தொடர்ச்சியாக இப்போது வந்திருப்பதுதான் ஊழல் வழக்கும் தற்காலிகப் பணிநீக்கமும்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் விதிமுறைகள்குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்துக்கும் விரோதமாக, திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டிருப்பதை அம்பலமாக்கியிருக்கிறார் உமாசங்கர்.
“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போன்றோர் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடரவேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை” என்று கூறும் இவ்விதிமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே கேள்விக்குள்ளாக்குவதோடு, ஊழல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் பயன்படுகிறது என்கிறார் உமாசங்கர். அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளைத் தப்பவைப்பதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது என்பதையும் ஆதாரங்களுடன் திரைகிழித்திருக்கிறார் உமாசங்கர்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குநராக 1996 முதல் தான் பணியாற்றிய காலத்தில், கல் குவாரி ஊழல் (1000 கோடி ரூபாய்), சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேசன் தனியார்மயமாக்கல் ஊழல் (200 கோடி ரூபாய்), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழல் (சென்னையின் மையப்பகுதியில் அமைந்த 300 வீடுகள்) போன்ற பல ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் மீது வழக்கே தொடர முடியாததற்குக் காரணம் முதல்வர் தலைமையிலான குழுவின் அனுமதி கிடைக்காததுதான். அதுமட்டுமல்ல, பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, மேற்படி முதல்வர் குழுவின் அனுமதி கிடைக்காததால் தண்டனையிலிருந்து தப்பிவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலதி என்பவர்தான் தற்போது ஊழல் தடுப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்ற கேலிக்கூத்தையும் போட்டுடைத்திருக்கிறார் உமாசங்கர்.
அவருடைய அனுபவத்தைப் படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் இந்தக் காலத்தில், அதிகாரவர்க்கக் கோட்டையையும் ஆட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார் உமாசங்கர். அவ்வகையில் அவரது அனுபவம் ஒரு நேர்மறை எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் புரிந்து கொள்வதற்கு, உமாசங்கரின் அனுபவம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு.
___________________________________________________________

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.
மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான், பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக் கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான், இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார். அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!
இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.
சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.
“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.
தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.
“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.
“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.
பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும் ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

காங்கிரஸில் இம்மானுவேல்

Thursday, July 17, 2008 இம்மானுவேல் சேகரன் (1924: -1957) -II காங்கிரஸில் இம்மானுவேல்:தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அக்காலத்தில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. இப்பணியில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்ட பார்ப்பனர் 'அரிசனத் தந்தை' என அழைக்கப்பட்ட திரு. வைத்தியநாத அய்யர். இவர் இந்தப் பணியை மதுரை மாவட்டத்தை மையமாக வைத்துச் செய்தார்.காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த திரு. கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலியைச் சார்ந்த திரு. வைகுண்டம் எம்.எல்.ஏ அவர்களோடும் இப்பணிக்காக பல கிராமங்களுக்குச் சென்று வந்தார். வீராம்பல்/ கருமல்/ பேரையூர்/ மருதகம்/ பெரியஇலை/ காக்கூர் சிக்கல் முதலிய கிராமங்களில் இம்மானுவேல் பல கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்த ஊர்களுக்கு இவர் சென்று விட்டாலே மக்கள் திரண்டு வருவார்கள். ஊரின் பொது இடத்திலோ/ மரத்தடியிலோ அல்லது வீட்டுத் திண்ணையிலோ கூட்டங்கள் நடத்தினர். அரிக்கேன் விளக்கு/ பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில்தான் கூட்டங்கள் நடந்தன.'இந்தநாடு சுதந்திரம் அடைந்து விட்டது. ஆங்கிலேயரின் ஆட்சியை காங்கிரஸ் பேரியக்கம் விரட்டிவிட்டது. இனியும் நாம் பிறருக்கு பயந்து கொண்டு அடிமைகள் போல வாழவேண்டியதில்லை. சட்டமும்/ அரசும் நமக்கு ஆதரவாக இருக்கின்றன; இனி நாம் ஆதிக்க சாதியினருக்கு தலை வணங்கும் ஈனப்பிறவிகளாக இருக்க வேண்டியதில்லை/ நம்மை இழிவுபடுத்தும் கொடுமைகள் அனைத்திற்கும் சாவுமணி அடிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற எழுச்சிமிகு பேச்சுக்கள் இளைஞர்கள் மனதில் ஆவேசமான விடுதலை உணர்ச்சியைத் தூண்டிவிட்டு போராட்ட நெருப்பைப் பற்றி எரிய வைத்தது.காங்கிரஸ் கட்சியின் மூலம் காமராஜ்/ கக்கன் ஆகியோரோடும் இவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.இராமநாதபுரம் மாவட்டத்தின் காங்கிரஸ் கூட்டங்களை எல்லாம் 'தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களாக' மாற்றிய பெருமை இம்மானுவேலைச் சாரும். மாவீரன் இம்மானுவேல் மேடைகளில் பேசினால் அனல்பறக்கும். கேட்பவர் இரத்தம் கொதிக்கும்; அந்த அளவிற்கு மேடைப் பேச்சிலேயே வீரஉணர்வூட்டுவார்.'நாய்கள் கூட குளத்தில் சுதந்திரமாக தண்ணீர் குடிக்கிறது. ஆனால்/ தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் குடிக்க முடிவதில்லை. இந்த இழிநிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது' என்று வீரமுழக்கமிட்டார்.அவர் காலத்தில் இருந்த அரசியல்வாதிகளைப் போல வார்த்தைஜாலங்களாலும் வெற்று ஆரவாரத்தாலும் பாமர மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடவில்லை. எதையும் நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுகின்ற நெஞ்சுறுதி அவரிடம் இருந்தது. அதே நேரத்தில் பிறரை அநாகரீகமாகவோ/ தரக்குறைவாகவோ பேசியதுமில்லை.இவருடன் எப்போதும் இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்; கிராமங்களில் கூட்டம் நடத்தும் போது அவருடன் பல கிராமங்களுக்குச் சென்று வருவார்கள். குறிப்பாக அவருடன் பல ஊர்களில் மக்கள் பணி செய்தவர்கள்.கமுதி : திரு. முத்துமாணிக்கம்கருமல் : திரு. ஜெயராஜ்கன்னிச்சேரி திரு. சந்தானம்கூரியூர் : திரு. எஸ்.கே. வேலுபரமக்குடி : திரு. பாலச்சந்திரன்சித்தூர் : திரு. காளியப்பன்.காங்கிரஸில் உறுப்பினராய்ச் சேர்ந்த நாளில் இருந்து சாகும்வரை தூய வெள்ளை கதராடையே உடுத்தி வாழ்ந்து வந்தார்வெங்கட்டான் குறிச்சி கொலை முயற்சி:இம்மானுவேல் காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரத் தோற்றமுடையவர். எளிமையான வாழ்க்கையும்/ இனிய சுபாவமும் அவரை மக்களுடன் நெருக்கமாக பிணைத்தது. கணீரென்று சத்தமாகத்தான் எப்போதும் பேசுவார். எதற்கும் அஞ்சாதவர்/ பிரச்சனைகளை துணிச்சலுடன் அணுகும் மனோதிடம் அவரிடம் இயல்பிலேயே இருந்தது. குற்றமிழைத்தவர்கள் யாரானாலும் நேருக்கு நேர் சந்தித்து தவறை சுட்டிக் காட்டும் அஞ்சாநெஞ்சமுள்ளவர்.அதே நேரத்தில் கட்சித்தலைவர்களிடமும் பெரியோரிடமும் மரியாதையுடன் பழகுவார். தனது குடும்பத்தையும் சொந்த நலனையும் விட சமுதாயத்தையே பெரிதாக நேசித்தார். இசையில் ஈடுபாடு உள்ளவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்/ நாமக்கல் கவிஞர் ஆகியோரது பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. ஏ. எம். ராஜா பாடல்களை விரும்பிப்பாடுவார். சிலம்பாட்டத்தில் முழுமையான தேர்ச்சி பெறாவிட்டாலும் கூட அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.பிறப்பினால் கிறித்தவராக இருந்தாலும் இம்மானுவேல் தாழ்த்தப்பட்ட இந்துக்களிடையே எள்ளளவும் பாரபட்சமின்றி பழகி வந்தார். இம்மானுவேல் ஒரு கிறித்தவன்/ அவனை எப்படித் தலைவனாக ஏற்றுக் கொண்டீர்கள்? என்ற சாதி -இந்துத் தலைவர்களின் பிரச்சாரத்தை முறியடிக்க எண்ணிய திரு.கக்கன் இம்மானுவேலின் பெயரை 'இம்மானுவேல் சேகரன்' என மாற்றினார்.செல்லூர் - வீட்டை காலிசெய்து வெங்கட்டான் குறிச்சிக்கு தட்டு/ முட்டு/ சாமான்களை வண்டியில் ஏற்றி வந்த அலுப்பில் இம்மானுவேல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால்/ சாதி வெறியர்கள் இமைப்பொழுதும் தூங்காது அவரைக் கொல்லத் தருணம் தேடி அலைந்தனர். அன்றிரவு வீட்டின் கூரைமீதேறி ஓட்டைப் பிரித்து எடுத்தனர். திருடர்கள் போல அனைவரும் தூங்கிவிட்டனரா இல்லையா? என்பதை அறிய/ ஒரு கல்லை வீட்டிற்குள் போட்டனர். அக்கல் மூத்த குழந்தை தலையருகில் விழவே விழித்துக் கொண்டது. குழந்தை இம்மானுவேலை எழுப்ப கட்டிலில் படுத்திருந்தவர் விழித்துப் பார்த்ததும் திடுக்கிட்டார். வரிசையாக கூரையில் ஓடுகளே இல்லை.'யார்ரா அது எவன் ஓட்டைப் பிறிச்சவன்?' என்று சத்தம் போட்டுக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தார். கூரையிலிருந்து குதித்து பத்துக்கும் குறையாத கும்பல் தலைதெரிக்க ஓடிக் கொண்டிருந்தது. மனைவி சொல்லியும் கேளாது கூட்டத்தினரைத் தான் ஒருவராகவே துரத்தியடித்தார். இம்மானுவேல் குரலை கேட்டதும்/ குலைநடுங்கி வயற் காட்டிற்குள் கூட்டம் ஓடி ஒளிந்தது

வன்கொடுமைக்கு வன்கொடுமை


தீண்டாமை ஒரு பாவச்செயல்!தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்றச் செயல்!ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும் இதைச் சொல்லித்தான் கல்வியை ஆரம்பிக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின் 1950ல் சட்டப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ஏதோ ஒரு சட்டப்படி அதே கொடுமை இன்று வரை ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது அரசாங்கத்தால் திணிக்கப்பட்டு தொடர்கிறது என்பதே கசப்பான உண்மை.தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணை கிராமம். இஸ்லாமியர், தேவர் மற்றும் பள்ளர் வாழ்ந்து வருகின்றனர். வல்லநாடு முதல் திருவைகுண்டம் வரை அனந்தனம்பிகுரிச்சி, மணக்கரை, தோழப்பந்பண்ணை என தேவர் மட்டுமே உள்ள கிராமங்கள் அருகிலுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஆறாம்பண்ணை கிராமத்தின் கருப்பசாமி(தேவர்) என்பவர் தற்கொலை செய்து கொள்கின்றார். இதற்கு காரணம்கருப்பசாமி வீட்டில் வேலை செய்து வந்த மாரியப்பன்(பள்ளர்) தான் காரணம் என்ற குற்றச்சாட்டினை அவ்வூரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மூக்காண்டி(தேவர்) மற்றும் பலர் கூறுகின்றனர். அதுவும் ஆதிக்க சக்திகள் நிறைந்த அந்த ஊரில் மாரியப்பன் கருப்பசாமியின் மனைவியுடன் தொடர்பு வைத்துதான்?? காரணம் என்றனர். (மாரியப்பன் பார்க்கவே பரிதாபமாக உள்ளார்) அத்தோடு மாரியப்பனின்வீட்டைப் பூட்டி சாவியை வைத்துக் கொண்டனர். மாரியப்பன் ஊரைக் காலி செய்து விடுகின்றார். விடவில்லை ஆதிக்க சக்திகள் மாரியப்பனின் உறவினர்களை ஆறாம்பண்ணையினை விட்டு காலி செய்து அருகிலுள்ள அராபத்நகர் என்ற காலனியில் குடியேற வைத்துள்ளனர். மாரியப்பனின் விவசாய நிலங்களை சகோதரர்கள் ராமர்(பள்ளர்), கண்ணன்(பள்ளர்) ஆகியோர் விவசாயம் செய்துள்ளனர். வீட்டைப் பிடுங்கியகும்பல் விவசாய நிலத்தினையும் கேட்டு அடித்து மிரட்டி, வீட்டின் ஓடுகளை உடைக்க, ராமர்(பள்ளர்) புகாரின் பேரில் மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்) ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். 2004 ல் கொடுத்த புகாருக்கு 2008 ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்) இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய்ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜாமீனில் வெளி வந்த மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்), ராஜா(தேவர்), முருகன்(தேவர்), பெருமாள்(தேவர்), ராமசாமி(தேவர்) ஆகியோர் சேர்ந்து கடந்த 15 தேதி செவ்வாய்கிழைமை மாலை 3.30 மணியளவில் ஆறாம்பண்ணையிலிருந்து எல்.கே.ஜி. படிக்கும் தனது மூண்றரை வயது மகனை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது கண்ணன் (பள்ளர்)(வயது 34 த/பெ சுப்பிரமணியன் )என்ற முக்கிய சாட்சியினை ' எங்களுக்கு எதிரா கம்ளைன்ட் கொடுக்க துணிஞ்சிட்டிங்கலடா ' என்று அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். வெட்டுப்பட்ட கண்ணன் உடலை? காவல்துறை கைப்பற்றி முறப்பநாடு காவல்நிலையத்தில் இரவு 11 மணி வரை வைத்துவிட்டு பின்னர் அவசர, அவசரமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குகொண்டு சென்றுள்ளனர். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு ஒரே விடிவு சட்டம் என்று இருந்தவர்களுக்கு இந்த 'ஆதிக்க சக்திகளின் சட்டம்' கொடுத்த பதிலடி "கொலை".. இருந்த பத்து வீட்டினையும் காலி செய்து உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர் மக்கள். இஸ்லாமிய சகோதரர்கள் ஆதரவுடன்தான் கண்ணன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.. கண்ணன் செய்த தவறு நீதிமன்றத்தில் உண்மையைச் சொன்னதுமட்டும்தான். மும்பை குண்டு வெடிப்பில் பலியான 200 இந்தியர்களுக்குக்காக இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க தயாராகின்றது. இலங்கையில் இனமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு தமிழகம் ஒருசேர குரல் கொடுக்கின்றது. ஆனால், சாதியின் பெயரால் ஆதிக்க சக்திகளால் அன்றாடம் கொள்ளப்படும் இவர்களும் தமிழர்கள்தானே?..... இந்தியர்கள்தானே?...... மனிதர்கள்தானே?...... வன்கொடுமை மற்றும் தீண்டாமை தடுப்புச் சட்டம் பதிவு செய்வது அரிது, தண்டனை கொடுப்பது அதனினும் அரிது, தண்டித்தால் உயிர் பறிக்கும் கொடூரம். அப்படியெனில் அடித்தால் அடிபட வேண்டுமா?.. மானமும், மாண்பும் யாருக்கு?. ..(குறிப்பு : காவல்துறை மூக்காண்டி, ராஜா, ராமசாமி ஆகியோர் மீது மட்டும் வழக்கு பதிந்துள்ளது. இக்கிராம மக்களின் கோரிக்கைகள் 1. இறந்தவரின் குடும்பத்திற்கு சட்டத்தின் படி ரூபாய் ஐந்து லட்சமும், அரசு வேலையும் உடனே வழங்க வேண்டும். 2. போலீஸ் பாதுகாப்பு வேண்டும். 3. குறிப்பிட்ட சாதியினைச் சேர்ந்த காவலர்கள் அதிகம் உள்ள முறப்பநாடு காவல் நிலையத்தில் பணி மாற்றம் நடைபெற வீண்டும். 4. கருங்குளம் - செய்துங்கநல்லூர் பாலம் கடடித்தந்தால் பாதுகாப்பாக வெளியூர் செல்லமுடியும். )............ ......... ......... ......... ......... ......... ......... ......... .ஜெ.இ.பிரபாகரன், 09486251948குடிமக்கள் சனநாயகம், தூத்துக்குடி.இணைப்பு: 1 & 2 : டிசம்பர் 17 காலை மக்கள் உரிமை குழு வழக்கறிஞர் அதிசயகுமார், பெரியார் திராவிடர் கழகம் பால்பிரபாகரன், மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன் ஆகியோர் கிராம மக்களோடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதுகாப்பு மற்றும் நீதி கேட்டபோது எடுத்த படங்கள். 3 : மக்கள் உரிமை குழு வழக்கறிஞர் அதிசயகுமார், மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன் ஆகியோர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல் கண்காணிப்பாளரோடு கோரிக்கை குறித்து பேசிய காட்சி. பத்திரிக்கை செய்திகள் பார்க்க:http://district. dinamalar. com/districtnews _main.asp? ncat=Thoothukudi &ncat_ta=தூத்துக்குடி#117549More information please contact:Inspector of police, Murappanadu police station : 04630 261229Deputy superident of police(Mr.Natarajam oorthy), Srvaikundam : 04630 255236, 9442964222Superident of police (Mr. Deepak.M.Daamor) : 0461 2340200, 9442154900District collector (Mr. Palaniyandi) : 0461 2340600, 9443987802, 944418000, 9443342544DIG Thirunelveli : 0462 2568031Chief minister and Police minister : 044 28111101, 9940300087

சட்டக் கல்லூரி கலவரம்

!
“சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதல்” என்ற தலைப்பில் இன்றைய காலைத் தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட அல்லாத மாணவர்களுக்கும் இடையிலான மோதல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு தனது செய்தியில் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. தலித் அல்லாத மாணவர்களின் சாதி என்ன என்பது பற்றி மட்டும் வாசகரின் ஊகத்துக்கு விட்டுவிட்டது.“ஒரு மாணவன் பிணம் போலக் கிடக்க வேறு சில மாணவர்கள் அவனை ஆத்திரம் தீர கட்டையால் அடிக்கும் காட்சியை” சன் செய்தி திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. காணும் எவரையும் பதைக்கச் செய்கிறது அந்தக் காட்சி. இந்தக் காட்சியின்படி “ஈவிரக்கமில்லாமல் அடிக்கும் அந்த மாணவர்கள்தான் குற்றவாளிகள்” என்ற முடிவுக்கே பார்வையாளர்கள் வரமுடியும். அடிக்கும் மாணவர்கள் எந்தச் சாதி, அடிபடும் மாணவர்கள் என்ன சாதி என்பது பற்றி பத்திரிகைகளோ தொலைக்காட்சியோ எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்நேரம் மாணவர் உலகத்துக்கும் சாதிச்சங்கத் தலைவர்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மாணவர்களின் “சாதி அடையாளம்” பற்றிய தகவல் போய்ச் சேர்ந்திருக்கும். யார் நம்மாளு என்பதைத் தெரிந்து கொண்டபின் மேற்கூறிய புகைப்படங்களும் காட்சிகளும் புது வீரியம் பெற்றுத் தமிழ் நாட்டை எரிக்கத் தொடங்கும். ஏற்கெனவே சென்னை எருக்கஞ்சேரியில் ஒரு அரசுப்பேருந்து எரிக்கப்பட்டுவிட்டது. இப்படங்களினால் வர இருக்கும் நாட்களில் 1998 இல் தென் மாவட்டங்களில் நடந்தது போன்ற ஒரு சாதிக் கலவரம் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்தால் அது அதிசயம்.அந்த அதிசயம் நடக்கவேண்டும் என்பதே எமது விருப்பம்.இனி சம்பவத்திற்கு வருவோம்.சமீபத்தில் பசும்பொன் தேவர் ஜெயந்தியைக் கொண்டாடிய, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த தேவர் சாதி மாணவர்கள், அதற்காக வெளியிட்ட சுவரொட்டியில் சட்டக் கல்லூரியின் பெயரில் இருந்த “அம்பேத்கர்” என்ற சொல்லைக் கவனமாகத் தவிர்த்து விட்டு வெறுமனே சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று வெளியிட்டதாகவும், இதனால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கோபம் கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து சிறு சிறு பூசல்களாக உருவாகிப் புகைந்து கொண்டிருந்த முரண்பாடு நேற்றைய மோதலில் வெடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த விவரம் பற்றிய முழு உண்மை அல்லது மேலும் பல புதிய தகவல்கள் இனி வெளிவரலாம்.ஆனால் நடைபெற்றுள்ள இந்த துயரச் சம்பவத்தை விளங்கிக் கொள்ள இப்படிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை. தேவர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமையும் தமிழகம் அறிந்ததுதான். அதன் வடிவங்கள் வேறாக இருக்கலாம், சம்பவங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் அதன் சாரம் இதுதான். தென்மாவட்டங்களில் நடைபெறும் பல கலவரங்களுக்கு சிலை உடைப்புகள்தான் துவக்கப் புள்ளிகளாக இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அவை வெறும் கற்சிலைகள் பற்றிய பிரச்சினைகள் அல்ல.அம்பேத்கரை சட்டமேதை என்று இந்தியா மேலுக்குக் கொண்டாடினாலும், அவருக்கு பாரத் ரத்னா விருது கொடுத்து கவுரவித்திருந்தாலும், அவரது பிறந்த நாளில் சர்வ கட்சித் தலைவர்களும் சிலைக்கு மாலை மரியாதை செய்தாலும், அவை எல்லாம் தேர்தலுக்காக பாரதிய ஜனதா தலைவர்கள் “ரம்ஜான் கஞ்சி” குடிப்பதைப் போன்ற நிகழ்வுகள்தான்.மராத்வாடாவின் மராத்தா சாதியினரிலிருந்து தமிழகத்தின் தேவர் சாதியினர் வரை எல்லா ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் அம்பேத்காரின் பெயர் வேப்பங்காயாக கசக்கிறது என்பதே உண்மை. எனவே தேவர் ஜெயந்திக்கு போடும் சுவரொட்டியில் “அம்பேத்கர் பெயர் இடம் பெறக்கூடாது” என்று சாதி கௌரவம் அந்த மாணவர்களைத் தடுத்திருக்கும். இதனை புலனாய்வு செய்தெல்லாம் கண்டுபிடிக்கத் தேவையில்லை. இது உள்ளங்கை நெல்லிக்கனி.தங்களைத் தீண்டத்தகாதவனாக நடத்தும் ஆதிக்க சாதியினர் தங்கள் தலைவரையும் அவ்வாறே நடத்துவதை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. தட்டிக் கேட்டிருக்கிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக இரு பிரிவு மாணவர்களுக்கும் உரசலும், மோதலும் நடந்திருக்கிறது. இந்த உரசல் அடுத்தடுத்து சிறு சிறு சம்பவங்களால் தீப்பிடித்திருக்கலாம். அத்தகைய ஒவ்வொரு சம்பவத்திலும் தேவர் சாதி மாணவர்கள்தான் தவறு செய்திருப்பார்கள், தலித் மாணவர்கள் தவறே செய்திருக்க மாட்டார்கள் என்று நாம் ஊகிக்க வேண்டியதில்ல்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்களும் தவறிழைத்திருக்கலாம். ஆனால் இந்த மோதலின் அடிப்படை அத்தகைய சிறு சம்பவங்களிலிருந்து வரவில்லை என்பதே முக்கியம். சொல்லப்போனால், “சுவரொட்டியில் அம்பேத்கர் பெயர் இல்லை” என்ற காரணம் கூட இந்த மோதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணம் அல்ல. மோதலின் அடிப்படை என்பது தம் அன்றாட வாழ்க்கையில் தாழ்த்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் அனுபவிக்கும் சாதிக் கொடுமையில் இருக்கிறது; புதிய தலைமுறை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அதை எதிர்ப்பதால், ஆதிக்க சாதியினருக்கு வரும் கோபத்தில் இருக்கிறது இந்த மோதலின் அடிப்படை.புகைப்படங்களின் பிந்தைய பிரேம்களில் கட்டையால் அடிவாங்கும் மாணவன், சற்று நேரத்துக்கு முன் கையில் ஒரு அடி நீளக் கத்தியுடன் பாய்ந்து வருவதையும் பார்க்கிறோம். இந்தக் கத்தி ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனைப் பதம் பார்த்திருக்கிறது. விளைவு நாம் தொலைக்காட்சிகளில் கண்ட அந்தக் காட்சி.சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் விடுதியில் தங்கிப் படிக்கும் பெரும்பாலானோரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச சேர்ந்தவர்கள். டே ஸ்காலர்ஸ் மாணவர்களில் சாதி இந்துக்கள் அதிகம். மற்ற கல்லூரிப் பட்டங்களை படிப்பதற்கும் வழக்கறிஞர் கல்விப் படிப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. பொறியியல், மருத்துவம் போன்ற வசதியான படிப்புகளைப் படிக்க வைக்க வாய்ப்பில்லாத ஏழை நடுத்தர வர்க்கத்தினர்தான் தம் பிள்ளைகளை சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார்கள். பி.ஏ, பி.எஸ்.ஸி படிப்பதை விட இது பரவாயில்லை என்று வருபவர்களும் அதிகம். நிச்சயமற்ற வருவாய், நிச்சயமற்ற வாழ்க்கை என்பதை மட்டுமே வழங்கும் வழக்குரைஞர் தொழிலை கொஞ்சம் வசதி படைத்தோர் யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த வகையில் சென்னை கல்லூரியில் மோதிக்கொள்ளும் இரு தரப்பு மாணவர்களும் சாதாரண வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.வசதி இல்லை என்பதால் சாதி உணர்வு குறைந்து விடுவதில்லையே. ஆதிக்க சாதி மாணவர்கள் என்னென்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்று நமக்குத் துல்லியமாகத் தெரியாது. இந்தப் பிரச்சினையில் தேவர் ஜெயந்தி சம்பந்தப்பட்டிருப்பதால் தேவர் சாதி மாணவர்களின் பாத்திரம் முக்கியமானது என்று ஊகிக்க முடிகிறது. தேவர் சாதியினர், சாதிய ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னிலை வகிப்பதால் பிறரைக் காட்டிலும் இவர்களிடம் ஆதிக்க மனோபாவம் தூக்கலாகவே இருப்பதைக் காண்கிறோம்.தாழ்த்தப்பட்ட மாணவர்களோ மற்ற படிப்பு படிப்பதற்கு வசதியில்லாதவர்கள். இதையாவது படித்து முன்னுக்கு வரவேண்டுமென ஆர்வம் கொண்டவர்கள். சென்னை விமான நிலையத்திற்கு எதிரே இருக்கும் திரிசூலம் மலையில் கல்லுடைக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திர தொழிலாளிகளின் குடும்பங்கள் வசிக்கின்றனர். எந்த வசதியுமில்லாமல் படிக்க வரும் பல மாணவர்களை இக்குடும்பங்கள் ஆதரிப்பது வழக்கம். ஏழ்மை விதிக்கப்பட்டிருக்கும் தம் சமூகத்தில் இந்தப் பையன்களாவது படித்து முன்னுக்கு வரட்டுமே என்று அம்மக்கள் இவர்களை ஒரு லட்சியத்துடன் பராமரிப்பதை இன்றும் பார்க்கலாம்.தென்மாவட்டங்களில் இருக்கும் எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் சாதி இந்துக்களுக்குச் சொந்தமானவை என்பதால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இங்கே நவீன அடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். “கோட்டா மாணவர்கள், சத்துணவு கோஷ்டி”, என்று பலவிதங்களில் அங்கே தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கேலி செய்யப்படுவது வழக்கம். வகுப்பறைக்குள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் சுற்றறிக்கை வந்தாலே மேல்சாதி மாணவர்கள் ஏளனப்பார்வையுடன் சிரிப்பது வழக்கம். இப்படி பல்வேறு வகைகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அநீதியாக நடத்தப்படுவதால் மாணவர்கூட்டம் தெளிவாக சாதிய ரீதியாக பிரிந்திருப்பதும் அவர்களுக்குள் பல சர்ச்சைகள், சண்டைகள் வருவதும் வழக்கம். தென் மாவட்டங்களைப் போல வெளிப்படையாக இல்லையென்றாலும், சென்னைக் கல்லூரியிலும் சாதி உணர்வு நீறு பூத்த நெருப்பாகவே இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.90களின் இறுதியில் நடந்த தென்மாவட்டக் கலவரத்தில் வாழ்க்கை இழந்த ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனின் கதை இது. பதினெட்டு வயது கூட நிரம்பாத அந்த தாழ்த்தப்பட்ட மாணவன் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டான். பிறகு குண்டர் சட்டத்தில் சிறைவாசம் தொடர்ந்தது. பாளையங்கோட்டை சிறையில் தேவர் சாதி கைதிகள் அவனைப் பழி வாங்குவதற்குத் திட்டம் தீட்டியிருக்கின்றனர். இதை அறிந்த அந்த மாணவன் முந்திக் கொண்டான். சாப்பிடும் அலுமினியத் தட்டை உடைத்துக் கத்தியாக்கி தேவர் சாதிக் கைதி ஒருவரைக் குத்தி விட்டான். இப்போது அந்த மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? அவனைப் படிக்க வைக்க விரும்பிய பெற்றோரின் கனவு என்னவாக இருக்கும்?கொடியன் குளம் கலவரத்தை ஒட்டி பல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை விட்டு நீக்கம் செய்யப்பட்டார்கள். இதனாலேயே பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி பறிபோனது. இன்றைக்கும் அவர்கள் கலவர வாய்தாவுக்காக நீதிமன்றத்திற்கு அலைந்தவாறு வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். சாதி இந்துக்களுக்குச் சொந்தமான தனியார் கல்லூரிகள் மட்டும்தான் இப்படி அவர்களை நடத்துகின்றன என்பதில்லை. சென்னையில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் அனைத்திற்கும் நீங்கள் சென்று பார்த்தால் இந்த அரசு தாழ்த்தப்பட்ட மாணவர்களை எப்படி தொழுவத்தில் இருக்கும் மாடுகளைவிட கேவலமாக நடத்தி வருகிறது என்பதைப் பார்க்கலாம். இப்படி சமூக ரீதியிலும், அரசாங்க ரீதியிலும் பல்வேறு தடைகளை தாண்டித்தான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தலையெடுக்க போராடி வருகிறார்கள்.இப்போது மீண்டும் சட்டக்கல்லூரிக்குத் திரும்புவோம்.ஒரு விபரீதத்தை விதைக்கிறோம் என்று தெரிந்தே ஊடகங்கள் சட்டக்கல்லூரிக் காட்சிகளை விலாவரியாகப் பதிவு செய்திருக்கின்றன. “போலீசு கைகட்டி வேடிக்கை பார்த்தது” “கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று ஏதேனும் ஒன்றை நிரூபிப்பதே தங்கள் நோக்கம் என்று அவர்கள் கூறிக்கொள்ளலாம். சில போலீசார் பணிநீக்கம், மாற்றல், ஒரு சட்டசபை வெளிநடப்பு என்பதற்கு மேல் இவர்கள் யாருக்கும் எதுவும் நடக்கப் போவதில்லை.தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த கல்பாக்கத்தைச் சேர்ந்த கோபால் நம்மிடம், “அந்தக் கொடூரத்தை நினைத்தாலே மனம் பதறுகிறது. என் கண்முன்னால் சிவப்பு கலர் டி-ஷர்ட் போட்ட ஒரு மாணவர், இன்னொருவரோடு பைக்கில் வருகிறார். அவர்களுக்கு செல்போனில் எங்கிருந்தோ உத்தரவுகள் வருகிறது. `நான் ஃபீல்டுலதான் இருக்கேன். ஒருத்தனையாவது போட்டுட்டு வந்துர்றேன்’ என்றபடியே காம்பவுண்ட் சுவரில் கத்தியைத் தீட்டுகிறார். அந்த இரண்டு பேரும் கத்தியோடு சுவர் ஏறிக் குதிக்கின்றனர். கேட்டின் உள்புறம் சில மாணவர்கள் கட்டைகளோடு நிற்கின்றனர். இந்த இரண்டு பேரும் கத்தியோடு உள்ளே பாய, அந்த மாணவர்கள் கட்டையால் விளாச ஆரம்பித்துவிட்டனர். கடைசியில் கத்தி கொண்டு போன மாணவர்களை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு போனார்கள். (- குமுதம் ரிப்போர்ட்டர் - 20.10.08)ஆனால் தமிழகத்துக்கு என்ன நடக்கப் போகிறது? மீண்டும் பல கொடியன்குளங்கள் துவங்கலாம். தமிழகமெங்கும் அடுத்த சுற்று கலவரத்தை இச்சம்பவம் ஆரம்பித்து வைக்கலாம். மீண்டும் பல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கள் வாழ்க்கையினை இழந்து ஆயுள் கைதியாக சிறைக்குள் செல்லலாம். கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் சாதி கௌரவத்தை விட முடியாத ஆதிக்க சாதி மாணவர்களும் தங்கள் வாழ்க்கையினைச் சிறைக்குள் தொலைக்க நேரிடலாம். பிறகு அவர்கள் தாதாக்களாகவோ, சாதிச் சங்கத் தலைவர்களாகவோ பதவி உயர்வு பெற்று தமிழக்தைத் தொடர்ந்து சாதிவெறியின் பிடியில் இருத்தி வைக்கலாம்.உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சாதி ரீதியாக பிரித்து பயிற்றுவித்திருக்கும் பார்ப்பனியத்தின் விளைவாக நடக்கும் இந்தக் கொடுமைகளுக்கு இதுவரை விடிவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு அடுத்து வர இருக்கும் கலவரச் செய்திகளுக்காக அச்சத்துடன் காத்திருக்க வேண்டும். அல்லது இந்த வெறித்தனத்தைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி நம்மால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும்.

தாமிரபரணிபடுகொலை -கருணாநிதி அரசு சாதனை

-கருணாநிதி அரசு சாதனை ஆதிக்க சாதிச் சமூகம் எல்லோர் கண் முன்னிலையிலும் நிகழ்த்திய படுகொலை கூடுதல் கூலியையும் மனித உரிமைகளையும் கேட்டுப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி தாமிரபரணி நதிக்கரையில் நடந்த பல கட்சி, பல சமூக மக்களின் போராட்டம் படுகொலைக் களமாக மாறி பத்து ஆண்டுகளாகின்றன. 1999 ஜூலை 23ந் தேதி நண்பகலில் போராட்டக்காரர்கள் மீது ஜாலியன்வாலாபாக்கிற்கு நிகரான படு கொலை நிகழ்த்தப்பட்டது.திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் பிரிக்கும் ஆற்றுப் பாலத்திற்கு அருகே கொக்கிர குளம் கலெக்டர் அலுவலகம். சுமார் 15 அடி பள்ளத்தில் இருக்கும் அகன்று விரிந்த தாமிரபரணி ஆற்றின் நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 1,000பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் தாக்கத் தொடங்கியபோது போராட்டக்காரர்கள் தப்பிக்க செங்குத்தான ஆற்றுப் பள்ளத்தில் குதிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆற்றுக்குள்ளும் தாக்குதல் தொடர்கிறது. தப்பிக்க தண்ணிக்குள் குதித்தவர்களும் தப்பவில்லை. உயரமான ஆற்றின் கரைப் பகுதியிலிருந்த காவல் துறையினர் விட்ட கற்கள் அவர்கள் தலைகளைப் பதம் பார்த்தன. சற்று நேரத்திற்குள் கொலைவெறி ஆவேசத்துடன் காவல் படைகள் ஆற்றுக்குள் இறங்குகின்றன. படையின் ஒரு பிரிவு ஆற்றின் மறுகரைக்குச் சென்று தப்பித்தலை அசாத்தியமாக்குகிறது. ஒரு புகைப்படம் அன்று என் நெஞ்சை உறைய வைத்தது. ஒரு பெண் ஆற்றுத் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார். ஒரு போலீஸின் லத்தி அவர் தலையைப் பதம் பார்க்கிறது.17 பேர் அந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்தார்கள். அவர்கள் நீச்சல் தெரியாததால்தான் இறந்தார்கள் என்று சொன்னால் அதை ஒரு குழந்தைகூட நம்பாது. போலீஸின் அடியிலிருந்து தப்ப, தண்ணீரில் குதித்தவர்களின் தலை நீர்மட்டத்திற்கு மேலே எழுந்த போதெல்லாம் ஒரு லத்தி அவர்களின் தலையைப் பதம் பார்த்தது. அல்லது காவல் துறையினர் வீசிய கல் அவர்களை சுய நினைவிழக்கச் செய்தது. தப்பிக்க வழியற்று சுவரில் ஏறிய, கிணற்றுக்குள் குதித்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடந்த ஜாலியன்வாலாபாக் சம்பவம் தேவேந்திரர்களின் எழுச்சியை விரும்பாத உயர் சாதி மனோபாவம் கொண்டவர்களுக்கும் இன்று நினைவுக்கு வராததில் ஆச்சரியமில்லை. தேவேந்திரர்களின் எழுச்சி பரம்பரை உயர் சாதிகளான பிள்ளைகளுக்கும் புதிய உயர் ஜாதியினரான நாடார்களுக்கும் பிறருக்கும் கண்ணை உறுத்தியது. அதே ஜாதிவெறியில் ஊறிய தங்கள் ரத்தத்தின் ரத்தங்களான காக்கிகள் தாங்கள் செய்ய நினைத்ததைச் செய்த பிறகு முதலில் அதற்கான பாராட்டு குவிந்தது. அதனால் தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக்கை நிகழ்த்தியவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் காரியங்களும் முழு வீச்சில் நடத்தப்பட்டன. தாமிரபரணிப் படுகொலையை விசாரித்த நீதிபதி மோகன் ரொம்ப அழகாகச் சொன்னார்: போராட்டக்காரர்கள் பெண் போலீசாரிடம் தவறாக நடந்துகொண்டதால், வன் முறையில் இறங்கியதால் காவல்துறை தடியடி நடத்த வேண்டியதானது. அதற்காக தேனியைச் சேர்ந்த ஒரு பெண் காவலரின் புகாரும் பெறப்பட்டது. அவர் அரசின் ஒரு பகுதிதானே? அவர் பொய் சொல்ல வைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? அந்தக் கேள்விக்கு மோகன் இவ்வாறு பதில் அளித்தாராம்: அவங்க டீசண்ட்டானவங்க, பொய் சொல்ல மாட்டாங்க. அப்படின்னா போராட்டம் நடத்திய பெண்கள் டீசண்ட் கிடையாதா என்று எழுப்பும் கேள்வி முக்கியமானது. ஏனெனில் தாமிரபரணிப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் உண்டு. இறந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும்கூட அடக்கம். பரிசல் பயண சாதி மோதல்களால் ரத்தம் சிந்தப்படுவதைத் தடுக்க உருவான சுலோச்சனா முதலியார் பாலம் சாதிய அரசியலால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு மோதலுக்கான மௌன சாட்சியானது. தாமிரத் தண்ணீரில் மற்றுமொரு முறை ரத்தம் கலக்கக் கண்ட பொருநை நதி அதன் நினைவுகள் இன்றளவிலும் சுமந்து வருகிறது.தாமிரபரணி சம்பவத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் மோகன் சொல்லாததை எல்லாம் சொல்கின்றன. ஆற்றின் மீதிருந்து போலீசார் கல்லெறிவது, தண்ணீரில் தத்தளிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற ஆவணங்கள் அச்சுறுத்தியதால்தான் காஞ்சனை சீனிவாசனின் ஒரு நதியின் மரணம் திரையிடல் தடுக்கப்பட்டது. ஆனால் சாதி ஆதிக்க மனோபாவமும் தேவேந்திர விரோத அல்லது அவர்களின் எழுச்சியை சகிக்க முடியாத மனோபாவமும் நமது சமூகத்தின் அத்தனை தளங்களிலும் வேரூன்றியிருந்ததால் இவ்வளவு பெரிய படுகொலையை மிகவும் எளிதாகப் பூசி மெழுகிவிட்டார்கள். இத்தனைக்கும் அந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரர்கள் மட்டும் அல்லர். அந்தப் போராட்டமே புதிய தமிழகம், அன்று புதிய தமிழகத்துடன் கூட்டணி வைத்திருந்த த.மா.கா, கம்யூனிஸ்டுகளின் கூட்டணியில் நடந்ததுதான். சோ.பாலகிருஷ்ணன், வேல்துரை, ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட த.மா.காவின் நான்கு எம்.எல்.ஏக்கள் அந்தப் போராட்டத்தில் முன்னின்றார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றி தேவேந்திரர்கள் எழுச்சிக்கு வித்திடும் அல்லது கிருஷ்ணசாமியின் எழுச்சிக்கு வித்திடும் என்பதால் அவர்களின் கோரிக்கை மனுவைப் பெறக்கூட கலெக்டருக்கு மேலிடதிலிருந்து அனுமதி வரவில்லை என்று கூறப்பட்டது.மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட விவகாரத்தில் முந்தைய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 652 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான கோரிக்கை. தாமிரபரணி சம்பவம் நடக்கும் வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களை விடுவிக்குமாறு தரப்பட்ட மனுவைக்கூடப் பெற முயற்சிக்கவில்லை. ஆனால் தாமிரபரணி சம்பவம் நடந்த மறு நாளே அத்தனை பேரையும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ஆட்டம் போட்டா அடிக்கத்தானே செய்வாங்க என்பது பொதுப் புத்தியில் அதை நியாயம் செய்வதற்காகக் கட்டமைக்கப்படும் வாதம். ஆனால் தமிழ்ச்செல்வன் கேள்விக்குட்படுத்துவது போல் ஆடம்பரக் கூட்டங்களும் தொண்டர்களின் ஆட்டம் பாட்டமும் ரகளைகளும் அத்தனை திராவிடக் கட்சிகளின் போராட்டங்களிலும் பார்க்கக்கூடியதுதானே. அங்கெல்லாம் இதுபோன்ற படுகொலைகள் நடக்கின்றனவா?தாமிரபரணிப் படுகொலை விவகாரத்தில் இன்றளவிலும் வெகுஜன ஊடகங்களில் வந்த காட்டமான எதிர்வினை என்று பார்த்தால் பிரண்ட்லைனில் Tirunelveli Massacre என்ற பெயரில் வெளியான கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது. ஆனால் எந்த வெகுஜன ஊடகத்திலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்கான எந்தப் பதிவும் கண்ணில் படவில்லைகண் முன்னிலையிலும் நிகழ்த்திய படுகொலை கூடுதல் கூலியையும் மனித உரிமைகளையும் கேட்டுப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி தாமிரபரணி நதிக்கரையில் நடந்த பல கட்சி, பல சமூக மக்களின் போராட்டம் படுகொலைக் களமாக மாறி பத்து ஆண்டுகளாகின்றன. 1999 ஜூலை 23ந் தேதி நண்பகலில் போராட்டக்காரர்கள் மீது ஜாலியன்வாலாபாக்கிற்கு நிகரான படு கொலை நிகழ்த்தப்பட்டது.திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் பிரிக்கும் ஆற்றுப் பாலத்திற்கு அருகே கொக்கிர குளம் கலெக்டர் அலுவலகம். சுமார் 15 அடி பள்ளத்தில் இருக்கும் அகன்று விரிந்த தாமிரபரணி ஆற்றின் நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 1,000பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் தாக்கத் தொடங்கியபோது போராட்டக்காரர்கள் தப்பிக்க செங்குத்தான ஆற்றுப் பள்ளத்தில் குதிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆற்றுக்குள்ளும் தாக்குதல் தொடர்கிறது. தப்பிக்க தண்ணிக்குள் குதித்தவர்களும் தப்பவில்லை. உயரமான ஆற்றின் கரைப் பகுதியிலிருந்த காவல் துறையினர் விட்ட கற்கள் அவர்கள் தலைகளைப் பதம் பார்த்தன. சற்று நேரத்திற்குள் கொலைவெறி ஆவேசத்துடன் காவல் படைகள் ஆற்றுக்குள் இறங்குகின்றன. படையின் ஒரு பிரிவு ஆற்றின் மறுகரைக்குச் சென்று தப்பித்தலை அசாத்தியமாக்குகிறது. ஒரு புகைப்படம் அன்று என் நெஞ்சை உறைய வைத்தது. ஒரு பெண் ஆற்றுத் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார். ஒரு போலீஸின் லத்தி அவர் தலையைப் பதம் பார்க்கிறது.17 பேர் அந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்தார்கள். அவர்கள் நீச்சல் தெரியாததால்தான் இறந்தார்கள் என்று சொன்னால் அதை ஒரு குழந்தைகூட நம்பாது. போலீஸின் அடியிலிருந்து தப்ப, தண்ணீரில் குதித்தவர்களின் தலை நீர்மட்டத்திற்கு மேலே எழுந்த போதெல்லாம் ஒரு லத்தி அவர்களின் தலையைப் பதம் பார்த்தது. அல்லது காவல் துறையினர் வீசிய கல் அவர்களை சுய நினைவிழக்கச் செய்தது. தப்பிக்க வழியற்று சுவரில் ஏறிய, கிணற்றுக்குள் குதித்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடந்த ஜாலியன்வாலாபாக் சம்பவம் தேவேந்திரர்களின் எழுச்சியை விரும்பாத உயர் சாதி மனோபாவம் கொண்டவர்களுக்கும் இன்று நினைவுக்கு வராததில் ஆச்சரியமில்லை. தேவேந்திரர்களின் எழுச்சி பரம்பரை உயர் சாதிகளான பிள்ளைகளுக்கும் புதிய உயர் ஜாதியினரான நாடார்களுக்கும் பிறருக்கும் கண்ணை உறுத்தியது. அதே ஜாதிவெறியில் ஊறிய தங்கள் ரத்தத்தின் ரத்தங்களான காக்கிகள் தாங்கள் செய்ய நினைத்ததைச் செய்த பிறகு முதலில் அதற்கான பாராட்டு குவிந்தது. அதனால் தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக்கை நிகழ்த்தியவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் காரியங்களும் முழு வீச்சில் நடத்தப்பட்டன. தாமிரபரணிப் படுகொலையை விசாரித்த நீதிபதி மோகன் ரொம்ப அழகாகச் சொன்னார்: போராட்டக்காரர்கள் பெண் போலீசாரிடம் தவறாக நடந்துகொண்டதால், வன் முறையில் இறங்கியதால் காவல்துறை தடியடி நடத்த வேண்டியதானது. அதற்காக தேனியைச் சேர்ந்த ஒரு பெண் காவலரின் புகாரும் பெறப்பட்டது. அவர் அரசின் ஒரு பகுதிதானே? அவர் பொய் சொல்ல வைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? அந்தக் கேள்விக்கு மோகன் இவ்வாறு பதில் அளித்தாராம்: அவங்க டீசண்ட்டானவங்க, பொய் சொல்ல மாட்டாங்க. அப்படின்னா போராட்டம் நடத்திய பெண்கள் டீசண்ட் கிடையாதா என்று எழுப்பும் கேள்வி முக்கியமானது. ஏனெனில் தாமிரபரணிப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் உண்டு. இறந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும்கூட அடக்கம். பரிசல் பயண சாதி மோதல்களால் ரத்தம் சிந்தப்படுவதைத் தடுக்க உருவான சுலோச்சனா முதலியார் பாலம் சாதிய அரசியலால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு மோதலுக்கான மௌன சாட்சியானது. தாமிரத் தண்ணீரில் மற்றுமொரு முறை ரத்தம் கலக்கக் கண்ட பொருநை நதி அதன் நினைவுகள் இன்றளவிலும் சுமந்து வருகிறது.தாமிரபரணி சம்பவத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் மோகன் சொல்லாததை எல்லாம் சொல்கின்றன. ஆற்றின் மீதிருந்து போலீசார் கல்லெறிவது, தண்ணீரில் தத்தளிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற ஆவணங்கள் அச்சுறுத்தியதால்தான் காஞ்சனை சீனிவாசனின் ஒரு நதியின் மரணம் திரையிடல் தடுக்கப்பட்டது. ஆனால் சாதி ஆதிக்க மனோபாவமும் தேவேந்திர விரோத அல்லது அவர்களின் எழுச்சியை சகிக்க முடியாத மனோபாவமும் நமது சமூகத்தின் அத்தனை தளங்களிலும் வேரூன்றியிருந்ததால் இவ்வளவு பெரிய படுகொலையை மிகவும் எளிதாகப் பூசி மெழுகிவிட்டார்கள். இத்தனைக்கும் அந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரர்கள் மட்டும் அல்லர். அந்தப் போராட்டமே புதிய தமிழகம், அன்று புதிய தமிழகத்துடன் கூட்டணி வைத்திருந்த த.மா.கா, கம்யூனிஸ்டுகளின் கூட்டணியில் நடந்ததுதான். சோ.பாலகிருஷ்ணன், வேல்துரை, ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட த.மா.காவின் நான்கு எம்.எல்.ஏக்கள் அந்தப் போராட்டத்தில் முன்னின்றார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றி தேவேந்திரர்கள் எழுச்சிக்கு வித்திடும் அல்லது கிருஷ்ணசாமியின் எழுச்சிக்கு வித்திடும் என்பதால் அவர்களின் கோரிக்கை மனுவைப் பெறக்கூட கலெக்டருக்கு மேலிடதிலிருந்து அனுமதி வரவில்லை என்று கூறப்பட்டது.மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட விவகாரத்தில் முந்தைய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 652 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான கோரிக்கை. தாமிரபரணி சம்பவம் நடக்கும் வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களை விடுவிக்குமாறு தரப்பட்ட மனுவைக்கூடப் பெற முயற்சிக்கவில்லை. ஆனால் தாமிரபரணி சம்பவம் நடந்த மறு நாளே அத்தனை பேரையும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ஆட்டம் போட்டா அடிக்கத்தானே செய்வாங்க என்பது பொதுப் புத்தியில் அதை நியாயம் செய்வதற்காகக் கட்டமைக்கப்படும் வாதம். ஆனால் தமிழ்ச்செல்வன் கேள்விக்குட்படுத்துவது போல் ஆடம்பரக் கூட்டங்களும் தொண்டர்களின் ஆட்டம் பாட்டமும் ரகளைகளும் அத்தனை திராவிடக் கட்சிகளின் போராட்டங்களிலும் பார்க்கக்கூடியதுதானே. அங்கெல்லாம் இதுபோன்ற படுகொலைகள் நடக்கின்றனவா?தாமிரபரணிப் படுகொலை விவகாரத்தில் இன்றளவிலும் வெகுஜன ஊடகங்களில் வந்த காட்டமான எதிர்வினை என்று பார்த்தால் பிரண்ட்லைனில் Tirunelveli Massacre என்ற பெயரில் வெளியான கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது. ஆனால் எந்த வெகுஜன ஊடகத்திலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்கான எந்தப் பதிவும் கண்ணில் படவில்லை

மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு

Saturday, January 23, 2010 மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு! ‘தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும். மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள். காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்யமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள். வயல் நண்டுகள், ஆமைகள், ஆடுகள், மான்கள் அவர்களின் உணவாயின. நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள். ‘மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள். ‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது. இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள். ‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள். நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்? யார் இந்த தேவேந்திரன்? ஆரியர்களின் ஆதிக் கடவுள் இந்திரன். அவர்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் முப்பது சதவிகிதம் இந்திரன் பற்றிய பாடல்களே ஆகும். ‘எங்களுக்குச் சோறு கொடு, சுராபானம் (சாராயம்) கொடு, எங்கள் எதிரிகளை அழி என்று கேட்டுக்கொள்ளும் பாடல்கள் அவை. இந்திரன், புராணங்களின் படி தேவர்களின் கடவுள். காசிப முனிவரும், அதிதி தேவியும் அவன் பெற்றோர். அவன் மனைவி இந்திராணி. ஆயுதம் வச்சிரம். இந்திரன் பற்றிய வேறு நல்ல தகவல்கள் புராணங்களில் இல்லை. ஆனால், ஆரியர்களின் ஆதி இலக்கியங்களில் அவன் ஒப்பற்ற கடவுளாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அவன் மழை, இடி, மின்னல் ஆகியவைகளின் கடவுளாக இருக்கிறான். ஆக, ஆரியர்களின் மழைக் கடவுள் இந்திரனே ஆவார். உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது. ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள். வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘போகி’ என்ற பெயர் இந்திரனுக்கு உண்டு. தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி. மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது. சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை. ‘மள்ளரியம்’ எனும் பண்பாட்டுச் சொல்லை உருவாக்கிய அறிஞர் முனைவர் தே.ஞானசேகரன், இதுபற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அவைகளில் இருந்து சில குறிப்புகள் தருகிறேன். நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள். நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும். பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது. சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-? சரித்திரம் தொடர்கிறது