ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இம்மானுவேல் சேகரன் (1924: -1957)-I
Thursday, July 17, 2008
இம்மானுவேல் சேகரன் (1924: -1957)-I
தேவேந்திரர் மக்களை சாதிய அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேண்டும். அவர்களையும் மனிதர்களாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவர் சிந்தித்தார். சாதிய அடிமைத்தனத்தை அழித்தொழிக்கும் துணிவுமிக்கப் போராட்டத்தில் தனக்கு எந்தநேரமும் மரணம் நேரலாம்/ ஆதிக்க சாதிவெறியர்களால்தான் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலையிலும் துணிவுமிக்கப் போராட்டத்தை முன்னெடுத்த சாதியொழிப்பு போராளிகளில் முதன்மையானவர் இம்மானுவேல் சேகரன்.இளமையும் கல்வியும் :இராமநாதபுரம் மாவட்டம்/ முதுகுளத்தூர் தாலுகா செல்லூர் கிராமத்தில் (பரமக்குடியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ளது) 1924ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் நாள் சேது என்ற வேதநாயகம் - ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அக்காலத்திலேயே ஆங்கிலக் கல்வி கற்றவர். இவரது தந்தை வேதநாயகம் ஆசிரியராகவும்/ வழக்கறிஞராகவும் பணியாற்றினார். களையூர் முதற்கொண்டு பல கிராமங்களில் தனியாகப் பள்ளிகளை நடத்தி வந்தார். ஆங்கிலத்தையும்/ கணிதத்தையும் திறமையாகக் கற்பிப்பதில் புகழ் பெற்றிருந்தார். பரமக்குடியில் புகழ்பெற்ற நாட்டு வக்கீல்களில் (பர்ன்ற்)) ஒருவராக திகழ்ந்தார். இளமையிலேயே தனது தந்தையின் சமூகப்பணியால் ஈர்க்கப்பட்டார் இம்மானுவேல். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். ((இட்ன்ழ்ஸ்ரீட் ர்ச் நஜ்ங்க்ங்ய் ஙண்ள்ள்ண்ர்ய்)பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். அவர் படிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தைப்போலவே/ விளையாட்டிலும் திறமையாக இருந்தார். கால்பந்து விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார்1.இராணுவத்தில் பணிசுவார்ட்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பலமொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம்/ உருது/ இந்தி/ ரோமன் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்2.இராணுவ வாழ்க்கையில் அவர் அனுபவித்த சமத்துவம்/ மரியாதை போன்றவற்றைத் தனது சமுதாய மக்கள் அனுபவிக்க முடியவில்லையே என வேதனைப்பட்டார். என் தாய் நாட்டையும்/ மக்களையும் அன்னியர்களிடமிருந்து/ இன்னுயிரைத் தந்து காக்க நான் தயாராக இருக்கும் போது/ என் சமூக மக்களை இந்த இழிநிலையிலிருந்து மீட்க ஒருவரும் இல்லையே என வேதனையடைந்தார். 'என் நாட்டைக் காக்க ஏராளமான இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள் ஆனால்/ என் சமூகத்தினரைக்காக்க எந்தத் தலைவன் இருக்கிறான்? இந்தக் கேள்வியினால் என் நாட்டைக் காப்பதை விட என் சமூக மக்களைக் காப்பதே என் முதல் கடமை' எனக் கூறி அவில்தார்ப் பணியை உதறித் தள்ளினார்.திருமணமும் இல்வாழ்வும்:1946ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைய்த் தனது இலட்சிய வாழ்க்கையின் துணையாக ஏற்றார்.சமூக விடுதலைப் பணிக்குத் திருமண வாழ்க்கைத் தடையில்லைள என்பதையுணர்ந்த தியாக உள்ளத்தோடு குடும்பச் சுமையை/ தனது ஆசிரியப் பணியோடு சேர்த்து சுமந்தார் அமிர்தம் கிரேஸ்.அம்மையார் அவர்கள் வீராம்பல் எனும் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு சாமுவேல்/ மரியம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். இராமநாதபுரம் ஆண்ட்ரூஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பை 1938 ஏப்ரல் மாதம் முடித்தவுடன் ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியையானார்.இந்த இலட்சிய தம்பதிகளுக்கு மேரிவசந்த ராணி/ பாப்பின் விஜய ராணி/ சூரிய சுந்தரி பிரபா ராணி/ மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.தனது இலட்சிய வாழ்விற்கு உறுதுணையாக இருந்தார். தியாக உள்ளத்துடன் ஆசிரியப்பணியையும்/ குடும்பப் பொறுப்புகளையும் மனநிறைவுடன் கவனித்துக் கொண்டார்.திருமணத்திற்கு பிறகு கொஞ்சமும் தளர்வோ சோர்வோ இன்றி தீரமுடன் இம்மானுவேல் 'மக்கள் விடுதலைப்பணியில்' ஈடுபட்டதற்கு அமிர்தம் அம்மையாரின் தியாகமும்/ அற்ப்பணிப்புமே காரணம் எனலாம்..இளமையிலேயே கணவனை இழந்த போதிலும் அதே தியாக/ அற்பணிப்புடன் அம்மையார் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். இறுதிவரை கணவரின் இலட்சியத்திற்கு உறுதுணையாக இருந்த அம்மையார் 1985ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் காலமானார்.
சுந்தரலிங்கத் தேவேந்திரர்.
தமிழர் வரலாறு பற்பல ரூபங்கள் காட்டும் மாயக்கண்ணாடியாக இருக்கிறது. ஓர் உண்மையின் மேல் விழுந்து பல பொய்கள் மறைகின்றன. ஆதாரங்கள், தகவல்கள் கிடைக்காமை காரணமாக வரலாறு புலப்படவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிடைத்திருக்கிற வரலாறுகூட சாதிக்கழிப்புகள், சாதி மேலாண்மை காரணமாக அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போகும் நிலைமை இன்றும் நீடிக்கிற அவலமாகத் தொடர்கிறது. ஆங்கிலேயக் கும்பனி ஆட்சியைந் எதிர்த்த தொடக்க காலப் போராட்ட வரலாற்றில் மேலெழுந்து வருகிற சில தலைவர்கள் புலித் தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்றவர்களுடன் அவர்க-ளுக்கு நிகராகத் தகத்தகாயத் தியாகங்கள் செய்து தம் உயிரையும் ஈந்து, போதிய வெளிச்சமற்றுப்போன மாபெரும் தியாக வீரர்கள் இருக்கவே செய்கிறார்கள்.அவர்களில் முதலில் வருகிறவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கரின் தளபதியாக வாழ்ந்தவர் அவர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் கட்டபொம்முவும் கும்பனி ராணுவத்தால் அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களைக் காத்து அம் முயற்சியில் தம் உயிரைத் தந்தவர் சுந்தரலிங்கம். ஆதிக்க ஆங்கிலேயரை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்ட முயற்சிகள், எழுச்சிகளாகவும், புரட்சியாகவும் முளைத்தது தமிழகத்தில்தான் என்பேதே உண்மையான வரலாறு.‘சிப்பாய் புரட்சி’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவின் வட மாநிலங்களில் நிகழ்ந்த 1857 போரே , இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று வரலாறு தெரியாதவர்கள் (சாவர்க்கர் எழுதியதையும் சேர்த்தே சொல்கிறேன்) எழுதிய தவறுகளுக்கு மாறாக, பிரிட்டிஷ் கும்பனியை எதிர்த்த ஆதிப் போராட்டங்கள், போர்கள் தமிழ் மண்ணிலேயே நடந்துள்ளன. இந்தியாவின் ஆதிச் சுதந்திரப் போராளிகளில் ஒருவரே சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சுவர்னகிரியில் பிறந்தவர் சுந்தரலிங்கம். தந்தை கட்டக் கருப்பணத் தேவேந்திரர். தாயார் முத்தம்மாள். சுந்தரலிங்கம் பிறந்த ஆண்டு ஏறக்குறைய 1771 என்று நம்பப்படுகிறது. மனைவி சண்முகவடிவு. தம்பதிகளுக்கு இரு மகன்கள் உண்டு. ஒரு ‘நதி நீர்ப் பங்கீட்டில்’தான் சுந்தரலிங்கத்தின் அரசியல் வரலாறு தொடங்கி இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான ஆற்றிலோடைக் கண்மாய் நீரை எட்டயபுரத்தைச் சேர்ந்த தருவைக்குளம் கண்மாய்க்குத் திருப்ப எட்டயபுரத்து அதிகாரம் ஆற்றிலோடைக் கண்மாயின் குறுக்கே கரை எழுப்பியபோது, அதைத் தடுத்து எட்டயபுரத்தார்களை விரட்டியடித்த வீரச் செயலால் புகழடைந்தார் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் செய்த முதல் தொண்டு அது. இதைத் தொடர்ந்து, சுந்தரலிங்கம், கட்டபொம்முவின் படைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் சேர்க்கப்பட்டுத் தன் அர்ப்பணிப்பு மிக்க வீரச் செயல்களால் தளபதி என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.மதுரையை மையமாகக் கொண்டு விசாலமான தமிழ்நாடு-திருவிதாங்கூர் உள்ளிட்ட பூமியை ஆண்ட விசுவநாத நாயக்கன் (1529-1564) நிர்வாக வசதிக்காக, தமிழ்நாட்டு நிலப்பரப்பை 72 பாளையங்களாகப் பிரித்தார். அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி பாளையம். இப்பாளையம் கட்டபொம்முவின், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு தோக்குலவார் பிரிவு, முன்னோர்களுக்குத் தரப்பட்டது. அந்த வழியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வருகிறார். இவர் காலத்தில் நிலவரி, வசூலிக்கும் பொறுப்பு ஆங்கிலக் கும்பனிக்கு வந்து சேர்ந்தது. பெரும்பாலான பாளையங்கள் ஒழுங்காகக் கப்பம் கட்டித் தம் விசுவாசத்தைக் கும்பனிக்குக் காட்டிய காலத்தில், கட்டபொம்மு கப்பப் பணம் தர மறுத்தார். மறுத்தமைக்கான காரணங்கள், ஆங்கிலேயரின் அணுகுமுறை. வரம்பு மீறிய அதிகாரக் கொடுங்கோல் முறையில் சுதேச மன்னர்கள் என்று மக்களால் கருதப்பட்ட பாளையக்காரர்கள் மேல் ஆங்கிலேயர் செலுத்திய அவமரியாதைப் போக்குகள். இரண்டாவது காரணம், ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து அரும்பிக் கொண்டிருந்த சுதந்திர உணர்வு.கும்பனிக்கு 1972 முதலே ஆறு ஆண்டுகளாகக் கட்டபொம்மு வரிகட்ட மறுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் திருநெல்வேலி, இராமநாதபுரத்தின் ஆட்சியராக 1797-ல் நியமிக்கப்பட்ட ஜாக்சன், 26.10.1797 அன்று,‘உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தூத்துக்குடியில் முகாம் இட்டிருந்த இராணுவ அதிகாரி டேவிட்சனுக்கு உணவுக்காக ஆடுகள் அனுப்ப வேண்டும்’ என்றும் கட்டபொம்மனுக்குத் தாக்கீது பிறப்பித்தான். கட்டபொம்மன், இதைப் புறக்கணித்தான். அடுத்து ஜாக்சன் எழுதிய, ‘பாளையம் பறிமுதல் செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்த இரண்டு கடிதத்தையும் கட்டபொம்மு கசக்கித் தூர எறிந்தான். இந்தக் காலத்தில், கும்பனிக்கு எதிராக இதர பாளையக்காரர் மனதில் சுதந்திர வேட்கை உருவாகிக் கொண்டிருந்தது. இறுதியில் கட்டபொம்மு ஜாக்சனைச் சந்திக்கப் புறப்படுகிறார். உடன் சுந்தரலிங்கமும், ஊமைத்துரையும் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள். பேட்டிக்கு வரச் சொன்ன ஜாக்சன், சுமார் 23 நாட்கள் 400 மைல்கள் அவர்களை அலையவிட்டு அவமானப்படுத்திக் கடைசியில் 10.9.1798 - அன்று மாலையில் சந்திக்கிறான். கட்டபொம்மனை நிற்க வைத்தே பல மணிநேரம் பேசி, அவரை மேலும் அவமானப்படுத்துகிறான். டர்ரென்று நாற்காலியை ஸ்டைலாக இழுத்துப் போட்டு சிவாஜி கணேசன் உட்காருவார். சிவாஜிதான் அமர்ந்தார். நிஜக் கட்டபொம்மு நின்றுகொண்டிருந்தார். தன்னைக் கைது செய்யும் சூழல் உருவாவதை கட்டபொம்மு உணர்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகக் கீழே வருகிறார். ஆங்கிலச் சிப்பாய்கள் அவரை மடியைப் பிடித்து இழுக்கிறார்கள். சில சிப்பாய்கள் கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் நோக்கிச் சுடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே நின்றிருந்த சுந்தரலிங்கம், தன் வீரர்களுடன் கட்டபொம்மனைப் பாதுகாக்க வருகிறார். அப்போது ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கட்டபொம்மனைக் கொல்ல பாய்ந்து வருவதைக் கண்ட சுந்தரலிங்கம், தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்தார்.கட்டபொம்மு அப்போது தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். ஓரளவு அமைதி திரும்பும் சூழ்நிலையில், எட்டையபுர நாயக்கர் கட்டபொம்மு மீது, கும்பனிக்குப் புகார்க் கடிதம் அனுப்புகிறார். கட்டபொம்முவுக்கும், எட்டப்ப நாயக்கருக்கும் முன்னரே இருந்த எல்லைத் தகராறும், எட்டப்பரின் கும்பனி விசுவாசமும் இப்படிப்பட்ட பல புகார்களைக் கொடுக்க வைத்தன. அதே காலத்தில் ஊத்துமலை பாளையக்காரர், சிவகிரிப் பாளையக்காரர் முதலான பலரும், கட்டபொம்மனின் மேல் கும்பனிக்குப் புகார் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். மற்றொரு பாளையத்தில் பிரவேசிப்பது, அழிம்பு செய்வது, பயிர்களை நாசமாக்குவது அல்லது களவாடுவது, மாடு பிடிப்பது போன்ற சின்னச் சின்ன வரம்பு மீறுதலை எல்லோருமே எல்லா பாளையக்காரர்களுமே செய்தவர்கள்தான். கட்டபொம்முவும் செய்தார். எரிச்சலடைந்த கும்பனி ஆட்சி, பாஞ்சாலங்குறிச்சியின் மேல் படையெடுத்தது.இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றை எழுதியவர்களில், சுந்தரலிங்கத் தேவேந்திரரின் பங்களிப்பைத் தனியாகப் பிரித்து எழுதி, அவருக்குரிய மரியாதையை ஏற்படுத்திய வரலாற்று ஆசிரியர் தமிழவேள் அவர்களைப் பாராட்ட வேண்டும். ‘பாஞ்சாலங்குறிச்சி படைத் தளபதி சுந்தரலிங்கத் தேவேந்திரர்’ என்னும் பெயர் கொண்ட அவரது ஆய்வு நூல், மிகுந்த முக்கியத்துவம் உடையது. இந்த நூல் மூலம் பல மறைக்கப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று, பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கட்டபொம்மனின் தோளுடன் தோளாக நின்று, கடைசிவரை அவருடன் சேர்ந்து போராடித் தம் உயிரைத் தந்தவர்கள் தேவேந்திரர்களும் பகடைகளுமே ஆவர். காலாடிகளையும், பகடைகளையும் தம் பிள்ளைகள் போலக் கருதிக் கட்டபொம்மு வளர்த்தான் என்கிற முக்கியச் செய்தியைத் தமிழவேள் பல ஆதாரங்கள் மூலம் தந்துள்ளனர். இந்தக் கட்டுரையில் பல முடிவுகளை அந் நூலில் இருந்தே நான் எடுத்துக் கொண்டேன். 5.9.1799 -ம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை இடப்பட்டு அன்றே தாக்கப்பட்டது. சுந்தரலிங்கத் தேவேந்திரர் தலைமையில் காலாடிக் கருப்பத் தேவேந்திரர், வீரமல்லு நாயக்கர், கந்தன் பகடை, பொட்டிப் பகடை முதலான துணைத் தளபதிகளின் வழிகாட்டுதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கும்பனிப்படை வீரர்களுடன் மோதினார்கள். மிகவும் உக்கிரமாக நடைபெற்ற முதல் நாள் போரில் ஐந்து முக்கிய ஆங்கிலத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பகுதிக்குப் பெரும் சேதம் விளைந்தது.மறுநாள் 6-ம் தேதி இரவு கட்டபொம்மன், தன் தம்பி ஊமைத்துரையோடு கோட்டையைவிட்டு வெளியேறி, படை திரட்டும் பொருட்டுக் கோலார்பட்டிக்குச் செல்கிறார். மறுநாள் கோட்டை இடித்துத் தள்ளப்படுகிறது. அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.மன்னர்கள் காலத்திலே இருந்து பாளையக்காரர்கள் வரை, ஆங்கிலேயர்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் தோற்றமைக்குக் காரணம், தமிழ்நாட்டு வீரர்கள் அவர்கள் தமிழர்களோ, கம்பளத்தார்களோ யாராக இருந்தாலும் ஒழுங்கான படைப் பயிற்சியும் போதுமான ஆயுதங்கள் இல்லாமையும், ஆயுதங்கள் நவீனமானதாய் இல்லாமையும், எல்லாவற்றுக்கும் மேலே துரோகத்தாலும் வீழ்ந்தார்கள். ஆயிரக்கணக்கான தேவேந்திரர்கள், அதே அளவு அருந்ததியர்களின் வீரத்தில் பழுதில்லை. தாய் பூமிப் பற்று மற்றும் விசுவாசம் அல்லாமல் வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. கோலார்பட்டியில் இருந்து கொண்டு படைதிரட்டிக் கொண்டிருந்த கட்ட பொம்மனையும் ஊமைத் துரையையும் எட்டயபுரம் படையும், ஆங்கிலேயர் படையும் சுற்றிக்கொண்டது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தப்பித்து வெளியேறினர். தாளாபதிப்பிள்ளை கைது செய்யப்படுகிறார். சுந்தரலிங்கம் தலைமறைவாகிறார்.கட்டபொம்மனைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தமிழவேள் மிகுந்த ஆவண ஆதாரங்களுடன் இக்குறிப்புகளை எழுதுகிறார். ஒற்றர்கள் மூலம் கட்டபொம்முவும், ஊமைத்துரையும் புதுக்கோட்டையில் சந்திப்பதாகத் தகவல் அறிந்த பாளர்மேன், புதுக்கோட்டை தொண்டைமானுக்குத் தகவல் அனுப்பி, கட்டபொம்மன் குழுவினரைக் கைதுசெய்ய உதவும்படிக் கேட்டுக்கொள்கிறான். சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகில் கலியபுரம் எனும் இடத்தில் 23.9.1799 அன்று தொண்டைமான் ஆட்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர் மற்றும் மூன்று பேருடன், ஆக ஏழுபேரைக் கைது செய்கிறார்கள். 5.10.1799 அன்று அவர்கள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு 16.10.1799 வரை சிறையில் வைக்கப்படுகிறார்கள். 16.10.1799 அன்று காலை கட்டபொம்மு மீது விசாரணை நடத்தப்படுகிறது. தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்குகிறார் பாளர்மேன். ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். ‘ஏதேனும் கூற விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனிடம் கேட்கிறான் அவன். பாளர்மேனை அலட்சியப்படுத்துகிறார் கட்டபொம்மன். வேடிக்கை பார்க்க வந்த கும்பனி விசுவாசிகளான எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை மிக ஏளனத்துடன் பார்க்கிறார். தூக்குமேடைக்கு மிகுந்த வீரத்துடன் நடந்து செல்கிறார் கட்டபொம்மன். கயத்தாறு பழைய கோட்டைக்கு எதிரே உள்ள புளிய மரத்தில், கட்டபொம்மன் தன் உயிரைச் சுதந்திரத்துக்கு விலையாகக் கொடுத்தார்.பாஞ்சாலங்குறிச்சி போரின் அடுத்தகட்டம், ஊமைத்துரையோடு ஆரம்பமாகிறது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கதாநாயகன் சுந்தரலிங்கத் தேவேந்திரன்தான். பாளையங்கோட்டைச் சிறையில் அகப்பட்டு, தூக்குக்குக் காத்திருந்த ஊமைத்துரையையும் மற்றும் உள்ள பாஞ்சை வீரர்களையும் மிகப் பெரிய சாகசம் செய்து தப்பிக்கச் செய்தவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். அந்த வீரம் செறிந்த வரலாற்றை அடுத்துக் காண்போம்.பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், கும்பனிக்கு எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத்தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக. கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்-பட்டபோது (16.10.1799) ஊமைத்துரையும் அவருக்கு நெருக்கமான உறவும், சில வீரர்களும் ஆகப் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக விழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர். முன்னர், 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிதான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார்செய்து கொண்டிருந்த சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும் ஊமைத்துரைக்கும் சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர். பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்ய முன்வந்தார். (ஊமையன் என்ற சொல், அன்போடு பயில்கிறது, வரலாற்றில்) சிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்நாள் சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் காணப்பட்டார்கள். அவர்கள் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளை சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார். இதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழை இலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார். அதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்-செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யாதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்த’ வியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு, ஊமையன் குழுவினர் வெளியேறினர். புரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று கும்பனி அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது. ஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு (சுமார் 30 கல் தொலைவில் இருக்கிறது) வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் கட்ட வேண்டியதே முதல் பணியாக அவர்களுக்கு இருந்தது. ஆறு நாளில், கோட்டை உருவாயிற்று. சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம் 12 அடிகள். ஊமையனின் சிறையுடைப்பு கும்பனிக்கு மாபெரும் பின்னடைவு என்பதை அவர்கள் உணரவே செய்தார்கள். கயத்தாற்றை நோக்கி கும்பனிப் படைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கெரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது கும்பனி படை. இந்தக் கட்டத்திலும் ஊமைத் துரை, ஒரு கூட்டணிக்கு முயற்சி செய்தார். பாளையக்காரர்கள் பலருக்கும் தனக்கு உதவுமாறும், உதவவில்லை என்றாலும், கும்பனிக்கு உதவ வேண்டாம் என்றும் சுதந்திரத்தின் பெயரால் ஓலை அனுப்பினார். தஞ்சை, புதுக்கோட்டை, எட்டையபுரம், ஊத்துமலைப் பாளையங்கள் ஊமையன் கோரிக்கையை நிராகரித்தன. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் கும்பனிப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால் கும்பனி, வெற்றியை ஈட்டத் தொடங்கியது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத் துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டை சிதைந்தது. போரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம் ‘என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (குமாரசாமியாகிய ஊமைத்துரை) காப்பாற்றும்மா’ என்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார். உடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமையனுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, கும்பனி சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். இப்படியாக ஆதிச் சுதந்திரப் போராட்டம், பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது. வரலாற்றின் பக்கங்களை, வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, யாரும் அறிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. பல காலங்களுக்குப் பிறகு, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஓர் ஆய்வாளர், வரலாற்று நிகழ்ச்சிகளை, வரலாற்றை உருவாக்கிய மாமனிதர்களின் பங்கை, தன் அறிவையும் தன் சார்பையும் கொண்டு அளவிடுகிறார். போராட்டமே வரலாற்றை உருவாக்குகிறது என்கிற ஞானம் கைவரப்பெற்ற ஆய்வாளர், தன் வரலாற்றைப் போராளிகளைச் சார்ந்து உருவாக்குகிறார். கான்கிரீட் தரையிலும் மீன் பிடிக்க ஆசைப்படும் ஆய்வாளர், நிறுவனங்கள் தமக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கும் கருத்துகளோடு உடன்பட்டுப் பொய்யை விரிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப்படுகின்றன. 1847-ம் ஆண்டு, கும்பனி அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு இசையத் தம் பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். பாஞ்சாலங்குறிச்சி போர் இலக்கியத்தில் நிறைய புனைவுகள் புகுந்துள்ளன. இப்புனைவுகளில் இருந்து, உண்மையைத் தேடும் சில ஆய்வாளர்கள் அண்மைக் காலத்தில் உருவாகி இருக்கிறார்கள். மேற்சாதித் தலைவர்களோடு, சமகாலத்தில் சம அளவில் பங்குகொள்ளும் வீரர்கள், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால், வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்ட இழி நிலையை மாற்றும் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளில்தான் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுந்தரலிங்கத்தை வெளிக் கொணர்ந்த தமிழவேள். பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முக்கியமானவர்-களாக, கட்டபொம்மன், ஊமைத் துரை, சிவத்தையா, தானாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம், தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள் என்கிறார் தமிழவேள். தேவேந்திரன், பகடை, பறையர்கள் என்று எழுதவே ஆதிக்க சாதிப் பேனாக்கள் மறுக்கும் சூழ்நிலையே வரலாறு முழுதும் இருந்துள்ள காலகட்டத்தில் இவர்களின் தியாகம் மறைக்கப்பட்ட காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார் தமிழவேள். பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை. வரலாற்று ‘மேற்குல’ ஆசிரியர்களுக்கு அதை எழுதவே கை கூசுகிறது. ஆனால், மக்கள் தங்கள் வீரர்களை மறப்பதில்லை. கட்டக் கருப்பன் சுந்தரலிங்கம் மட்டிலா பேரும் கொடுத்தானடா ஆயிரம் கம்பளம் நூறு பரிவாரமவதற்கு நீயொரு வீரனடா-என்று வானமாமலை தொடுத்த கட்டபொம்மன் கதைப்பாடல் கூறுகிறது. .......பிரபஞ்சன்-சரித்திரம் தொடர்கிறது
குடும்பம் உருவான வரலாறு!
தொகுத்துத் (மள்ளர் சமூக வரலாறு) தந்திருக்கிறார். ஒரு கதை, தேவேந்திரனுக்கும் நீர் நிலையில் இருக்கும் தாமரையில் இருக்கும் திருமகளுக்கும் பிறந்த குழந்தையின் வழியினரே தேவேந்திரர்கள் என்கிறது. தேவேந்திரனின் வியர்வையில் பிறந்தவர்கள் அவர்கள் என்கிறது ஒரு கதை. இந்திரனின் பிள்ளை தேவேந்திரன் பள்ளிக்குச் செல்லாமல், குழிதோண்டி, தண்ணீர்ப் பாய்ச்சி உழவு செய்து விளையாடினான். இந்திரன் அதைக் கண்டு தேவேந்திரனை பூமிக்கு அனுப்பி வேளாண்மை செய்யச் சொல்லி இருக்கிறான். அந்த தேவேந்திரன் பூமிக்கு நெல்லைக் கொண்டு வந்து நட்டான். பார்வதியின் வியர்வையில் பிறந்தவன் கழியன்(கழிநீர் நீலை) என்பவன். அவன் மேலோகத்தில் முதல் முதலாக நெல்லைக் கண்டுபிடித்து அதைச் சாப்பிட்ட சிவன், அந்த அரிசியின் சுவையைப் பாராட்டுகிறார். அந்த கழியன் பூமியில் நெல் விவசாயம் செய்கிறான். ஒரு கதை இப்படிச் சொல்கிறது. பார்வதிக்கும் சிவனுக்கும் வல்லபன் என்று ஒரு குழந்தை பிறக்கிறான். வல்லபன், இந்திரனுக்கு வளர்ப்பு மகனாகிறான். அப்போது சிவன், ‘நீ நெல்லை உற்பத்தி செய்து, பூலோகத்தில் பயிர் செய்து மக்களைக் காப்பாற்று, நீ வேண்டும்போது பார்வதி கங்கை நீரைப் பொழிவாள், நீ இருக்கும் இடம் என்றென்றும் பசுமையாகவும், நீர் நிறைந்தும் இருக்கும் என்று வரம் அளித்து பூமிக்கு அவனை அனுப்புகிறார். தேவேந்திரன் குடும்பம், ‘செந்நெல், மண்வெட்டி, உழுவயல், நீர் நிறைந்த குளம், ஆறு’ வேண்டுமென்று கேட்டது. சிவனார் மகிழ்ந்து, கேட்டதைக் கொடுத்தார். அதுமுதல் தேவேந்திரர்கள் நெல் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.தேவேந்திர குல வேளாளர்களில் குலமரபுக் கதைகளின் சாரம் இதுதான். இந்தப் புராண, மக்கள் மரபுக் கதைகள், மூன்று விஷயங்களைத் தம் பாணியில் சொல்லி இருக்கின்றன. ஒன்று, நெல் மேல் உலகில் இருந்து கொண்டு வரப்பட்டது. இரண்டு, தேவேந்திர குலம் நெல்லை உருவாக்கி, உற்பத்தி செய்து வாழும் குலம். மூன்று, நெல் விவசாயத்துக்கு ஆதாரமாக நீர் நிலைகளை உருவாக்கியவர்கள். இக் கருத்தே அக் கதைகளின் சாரம். இவைகளை ஆராய்வோம். உலகம் முழுக்கப் பழைமையான சமுதாயங்களின் தோற்றக் கதைகள் இப்படியான குறியீடுகளாகத்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இவைகள் கற்பனைகள் அல்ல. கதை ரூபமான உண்மைகள்.1. நெல் மேல் உலகில் இருந்து, இந்திரன் உலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்க முடியாது. ஆனால், இதர பகுதியில் இருந்து அதாவது மலை மாதிரி குறிஞ்சி நிலப் பகுதியில் இருந்து ஆதி உழவர்களால் சமதளமான மருத நிலத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்பதே இக் கதையின் அர்த்தம். மலைப் பகுதியில், சமவெளிகளில் இயற்கையாக விளைந்துக்கிடந்த நெல் மணிகளைக் கண்டடைந்து, அதை விவசாய விஞ்ஞானமாக மாற்றிக் கழனிகளைத் தயார் செய்து பண்படுத்தி நெல் விதைத்து, நாற்றுகளை உருவாக்கி, மாற்றி நட்டு, விவசாயம் செய்திருப்பதையே அந்தக் கதைகள் குறிப்பிடுகின்றன. மலை என்பதைத்தான் மேல், மேல் உலகம் என்று மக்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்.2. ஆதி உழவர்களான, தேவேந்திர குலம், சுமார் அறுபது வகையான நெல்லைக் கண்டுபிடித்து விவசாயம் செய்திருக்கிறது. சங்க காலத்துக்குச் சற்று முன்னர், தமிழ் மக்கள் உணவில் நெல் பிரதான இடம் பெறவில்லை. வரகரிசி, தினை, கொள்ளு, அவரை ஆகியவை பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதாக, புறநானூறு 335ம் பாடல் சொல்கிறது. ஆக, தமிழர் உணவில் நெல் என்கிற உணவுப் பொருளைச் சேர்த்ததில் ஆதிகால உழவர்களான மள்ளர்க்குப் பேரிடம் உண்டு என்பது இந்தக் கதைகளின் அடுத்த சேதி.3. நெல் விவசாயத்துக்காக நீர் நிலை, ஆறு, குளம், ஏரி, வாய்க்கால்கள் வேண்டும். அதை, நெல் விவசாயம் செய்த மள்ளர்கள் உருவாக்கினார்கள். இது ஒரு விஞ்ஞானம்தான். மழைத் தண்ணீர் ஓடும் பாதையைக் கண்டறிந்து, அது தேங்கி நிற்கும் இடத்தில் குளம் வெட்டினார்கள். பெரும் பள்ளத்தை ஏரி ஆக்கினார்கள். இயற்கை நீர்ப் பெருக்கை ஆறு என்று பெயரிட்டு (நிலத்தை அறுத்துக்கொண்டு செல்வதால் அது ஆறு ஆயிற்று. ஆறு என்றால் வழி என்று பொருள்) அதன் இரு கரையிலும் மேடுயர்த்திக் கரை கட்டிக்கொண்டார்கள். நீரை நிர்வாகம் செய்தவர்கள், நீர் ஆணிக்கர் என்று சொல்லப்பட்டார்கள். பண்ணைக்கு உரிமையாளர் பண்ணாடி ஆனார்கள். கடைமடைப் பகுதியில் விவசாயம் செய்தவர் கடையர் ஆனார்கள். மடை எடுக்கும் நுட்பம் கற்றவர்கள் மடையர் ஆனார்கள். களத்தில்நெற்களத்தில் பணி செய்தவர் களமர் ஆனார்கள். கால் என்றால் நிலப்பகுதி என்று பொருள். வெற்றிலைக் கால், என்றால் வெற்றிலை விளைநிலம் என்று அர்த்தம். நெற்காலில் பணி செய்தவர்கள் காலாடி ஆனார்கள். வாய்க்கால்காரர்களே வாய்காரர்.மருத நிலத்தின் விவசாயம் நிலை பெற்றதை ஒட்டிய காலப் பகுதியில்தான்சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், குடும்பம் என்கிற சமூக அமைப்பு தோன்றி இருக்கிறது. ஒரு தலைவி, ஒரு தலைவன், குழந்தைகள் என்ற ரத்த உறவு கொண்டவர்கள், ஒரு கூரையின் கீழ், தனிச் சொத்து உரிமையோடு வாழத் தொடங்கிய காலம்தான் குடும்பம் என்ற அமைப்பு உருவான காலம். அது, மருத நில உழவர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. அந்த அமைப்புக்குக் காரணமாக இருந்த மருத நில உழவர்கள் குடும்பனார் எனப்பட்டார்கள். குலம், குழு வாழ்க்கை சிதைந்து, தனிச் சொத்து, தனிக்குடும்பம் உருவான பழம் காலத்து வரலாறு இது. சங்க இலக்கியம் முழுக்க முழுக்கக் குடும்ப அமைப்பை நிலைப் பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதற்குக் காரணம், உருவாகி வந்து கொண்டிருக்கிற புதிய நாகரிகமாகிய ‘குடும்பம்’ என்ற புதிய வாழ்க்கைமுறையை நிலைபேறு அடையச் செய்யத்தான்.குடும்பம் என்பது, ஒரு சிறிய அரசாங்கம். பெரிய அரசாங்கத்தின் சிறிய பதிப்பு அது. அங்கு அரசன். இங்கு குடும்பத் தலைவன். அங்கு அரசி. இங்கு தலைவி. அங்கு அரசுக்கு உரியவன் இளவரசன். இங்கு சொத்துக்கு உரியவர்கள் குழந்தைகள். இந்தக் குடும்பம் என்ற அமைப்பில்தான் ‘ஆண் தலைமை’ உருவாகிறது. (அது சரியா, தவறா? என்று ஆராயும் இடம் இதுவல்ல.) குடும்ப அமைப்பு நிலைபெற்ற பிறகுதான் திட்டவட்டமான சட்டமுறைகள், அமைப்புகள் கொண்ட அரசுகள் உருவாகின்றன.சங்க காலத்திலேயே இந்திர வணக்கம் இருந்திருக்கிறது. இந்திரன், பெரிய கடவுளாக இருந்திருக்கிறான். இந்திரனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் சங்கத் தமிழர்களிடம் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரம் சங்க இலக்கியமான ஐங்குறு நூற்றில், ஓரம் போகியார் எழுதிய மருதம் தொடர்பான பாடலில் இந்திர விழா பற்றி வந்துள்ள செய்தி இது:இந்திர விழாவிற் பூவின் அன்ன புன்தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி எவ்வூர் நின்றன்று மகிழ்ன நின் தேரே& என்பது அந்தப் பாடல்.இந்திர விழாவுக்குப் பலவிதமான பூக்களைத் தருவித்துத் தொகுத்தாற்போல, இவ்வூர் மங்கையரைத் தொகுத்து ஆடல் பாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது இப்பாட்டின் சுருங்கிய பொருள்.இந்திரவிழா கொண்டாடப்-படுவதன் நோக்கம், முதல் நோக்கம் மழை. மழைக்குக் கடவுளாகிய இந்திரனை விழா எடுத்து வணங்கி அவன் அருளாகிய மழையைப் பெறுவது என்பதே. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகினால், நாட்டில் பசி மறையும். வளம் பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதாகும். அதனால்தான் பொங்கலுக்கு முதல்நாள் இந்திரனாகிய போகிக்கு (போகிபோகம் துய்ப்பவன்) ஒதுக்கப்பட்டது.மருத நிலத்து வேந்தன், இந்திரன் வழிபாடு இவ்வளவு சிறப்பாக நடந்த நாட்டில், அது வழக்கமற்று மறைந்து போகக் காரணம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. சிலப்பதிகாரம் அதற்குப் பிந்தைய மணிமேகலை காலத்திலும், கி.பி. 5ம், 6ம் நூற்றாண்டு வரை இந்திர வணக்கம் பெரு வழக்காக இருந்து வருகிறது. பின் ஏன் மறைந்தது?அறிஞர் குருசாமி சித்தர் களப்பிரர் மற்றும் வடுகர் ஆட்சிக் காலங்களில் சமய தளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் வாழ்க்கை முறை மாறியது என்கிறார். உண்மைதான். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு, சைவ, வைணவ மதங்கள், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டன.வைணவ மதக் கடவுளான கண்ணன், இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடை செய்கிறான். இந்திரன் கோபம்கொண்டு, ஊரை அழிக்கும் மழையை, புயலை அனுப்புகிறான். கண்ணன், கோவர்த்தனகிரி மலையைத் தூக்கிப் பிடித்து, மக்களைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அழித்தான் என்கிற கதை இந்திர மதத்துக்கும், வைணவத்துக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தின் கதைதான். சங்க காலத்துக்குப் பிறகு, குறிப்பாக சோழப் பேரரசர்கள் காலத்தில் அரசர்களின் ஆஸ்தான புரோகிதர்களாக அமர்ந்த பிராமணர்கள், ராஜகுருக்களாக விளங்கி, தமது பூர்வ வைதீகத்தை விடுத்து, சைவம், வைணவம் சார்ந்ததும், மள்ளர்கள் வேத மதங்களான சைவ, வைணவத்தை ஆதரித்ததும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.மிகப் பெரிய கோயிலைக் கட்டச் சொன்னார் ராஜ-ராஜனிடம், அவன் ஆசிரியரும் ராஜகுருவும் ஆன கருவூர் தேவர். இதன் காரணம், கோயில் மிகப் பெரிதாய் இருப்பதன் குறியீடு, மற்ற மதங்களைவிடவும் சைவம் பெரியது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தத்தான். வைணவத்துக்கும் இது பொருந்தும். இந்திரனின் பரம்பரையாகச் சொல்லிக்கொண்ட வேந்தர்கள், சிபியின் பரம்பரையாகச் சொல்லிக்கொண்டார்கள்.தமிழரின் சமயம், வாழ்க்கையோடு இணைந்த, மிக இயல்பான மிக எளிமையான சமயம். வாதங்கள், தத்துவங்கள் இல்லாத மகிழ்ச்சி தரக்கூடிய சமயம். தமிழர்களே அடிப்படையில் இன்ப நாட்டம் உடையவர்கள். அன்பும், காதலும், மிக இயற்கையாக வெளிப்பட்ட சண்டையும், போரும், போருக்குப்பின் சமாதானமும் என்று மிகச் சாமான்ய, அதேசமயம் மிக எளிமையான சமூகம் இது.மிகக் கடுமையான சண்டையும் மிகக் கடுமையான அன்பும் கொண்ட, தூய்மையான மனமும் இயற்கையாகிய வாழ்வும் கொண்ட மகத்தான இனம் தமிழினம். வடநாட்டிலிருந்து வந்த சமயங்களும் உள்நாட்டுச் சமயங்களும் அவர்கள் வாழ்க்கை என்ற குளத்தில் கல் வீசி அவர்கள் அமைதியக் கெடுத்தன.என்றாலும் மள்ளர்கள் பலருக்கே அவர்கள் வரலாறு தெரியவில்லை. அவர்கள் விளைவித்த நெல் மணிகளின் குவியல்தான், ஒரு காலச்சக்கரத்தையே கட்டி எழுப்பியது. தமிழ்க் கலாசாரம், பண்பாடு என்று தமிழரின் பெருமைகளாகப் பேசப்படுவது எல்லாம் தமிழ் உழவர்களின் கலாசாரம்தான் என்பதே உண்மை. நெற்களம்தான் தமிழ்க் களம். நெல் என்பதே சொல்லும் ஆயிற்று. நீர் என்பதே நீர்மை ஆகி, அன்பாயிற்று. வரப்பு என்பதே வரம்பாகி, சட்டம் நீதி ஆயிற்று. விளைச்சல் என்பதே சமூக வளர்ச்சி என்று ஆயிற்று. உழப்பட்டதுக்கே நிலம் என்று பேர். உழப்படாதது வெறும் மண்தான். உழவர்களே சகல முன்னேற்றத்துக்கும் அச்சாணி.சரித்திரம் தொடர்கிறது.
Posted by DevendraKural at 6:18 AM 0 comments Links to this post
Wednesday
ஜாதி வெறி கொண்டாட்டங்கள்
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் படுகொலை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதல், கடந்த அக்டோபர் இறுதி வாரத்திலிருந்து நவம்பர் முதல் வாரம் வரை, தென்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1200 பேர் மீது வழக்குகள் புனைவு என்பதாக, முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கி வைத்த வன்முறைகள், ஜாதி/கோஷ்டி மோதல்களாக வழக்கம் போல் கவனிப்பாரின்றி கிடப்பில் போடப்பட்டுவிட்டன। தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் ஒருவர் தவறாமல் ஒட்டுமொத்தமாகக் கலந்து கொண்ட இவ்விழாவின் மூலம், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தேவர் சாதியினராலும், தமிழக அரசாலும் முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன। அரசு சார்பில் அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் ‘தேவர் ஜெயந்தி விழா' கொண்டாடப்பட இருப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கமுதி தாலுகாவில் விழா நாட்களில் கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்' என்றும் ‘தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்' என்றும் ‘ஒவ்வொரு 30 கி.மீ. தூரத்திற்கும் ஓர் அவசர சிகிச்சை வண்டி நிறுத்தப்படும்' என்றும் "போக்குவரத்து வழித்தடங்களில் ஒவ்வொரு இடத்திலும் வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர், துணை மாஜிஸ்ட்ரேட் ஆகிய அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்' என்றும் தெரிவித்திருந்தார். முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழா மூன்று நாட்களும், மதுரையில் மருதுபாண்டியர் சிலை திறப்பு விழா ஒரு நாளும் மேலும் இவ்விழாப் பணிகளுக்காக அரசு ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பொறுப்பேற்றல், விடுபடல் என ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு தென் தமிழகத்தின் 8 மாவட்டங்களின் அரசு எந்திரம், அன்றாட மக்களின் பணிகளை விடுத்து இவ்விழாவில் முடக்கப்பட்டன. அனைத்து உழைக்கும் மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டன.
முத்துராமலிங்கம் நூற்றாண்டுக்கு 2 கோடி ஒதுக்கியது யார்? 3 கோடி ஒதுக்கியது யார்? என கருணாநிதியும் ஜெயலலிதாவும் பட்டிமன்றம் நடத்தினர்। ஆனால், அரசுத் துறைகளின் மேற்சொன்ன ஒருவார கால ‘திட்டத்தில் வராத' (மக்கள் நலத் திட்டங்களில்) செலவினங்கள் எத்தனை கோடி எனக் கேட்கத்தான் இங்கு எவருமில்லை. அரசு செலவில் நூற்றாண்டு விழாவையொட்டி முத்துராமலிங்கத்தின் நினைவு இல்லம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, ஏறத்தாழ 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தமிழக முதல்வரே பசும்பொன் விழாவில் கூறியிருந்தார்.
இவ்விழாவின் பக்க விளைவாக, பசும்பொன் கிராமத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த 75 தலித் குடும்பங்கள் அவ்வூரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்। அவர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரி வித்தாலும், தலித் மக்களின் வாழ்க்கை ஆதாரம் ‘நிரந்தரமற்றது' என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. மேலும், முத்துராமலிங்கம் இறந்து போன மதுரை பசுமலையில் அவரது நினைவு மண்டபத்தைக் கட்ட அரசு முடிவு செய்து, அதற்கும் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்நினைவு மண்டபம் கட்டத் தேவைப்படும் இடத்திற்காகப் பசுமலையில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஒரு மேல்நிலைப் பள்ளியின் இடத்தையும் அரசு கேட்டுள்ளது। இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அப்பள்ளியின் நிர்வாகம் தொடுத்த வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு அரசிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார். ‘முத்துராமலிங்கத்தை ஒரு தேசியத் தலைவராகவும் தலித் மக்களை அழைத்துக் கொண்டு அவர் ஆலயப் பிரவேசம் செய்ததாகவும், அப்படிப்பட்டவருக்கு இடம் தர பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும்' எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதியரசர்.
ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், ஒரு பள்ளிக்கூடம் உருவாக்கத் தேவையான இடம்-நிலம் அமைவிடம், கட்டுமான உருவாக்கம், அப்பள்ளிக் கூடத்தை மய்யப்படுத்தி அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் என பாதிப்பிற்கு உள்ளாகும் பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுக்கத் தவறியுள்ளது உயர் நீதிமன்றம்। பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்க்கை ஆதாரம் என்ற அக்கறை, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் அக்கறை வேண்டாமா?
பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு நூற்றாண்டு விழா எடுப்பதைப் போலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகயிருந்த ஜீவா, ஏகாதிபத்திய எதிர்ப்பு மாவீரன் பகத்சிங் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களும் இவ்வாண்டில் கொண்டாடப்படுகின்றன। ஆனால், இவ்விழாக்கள் ஒரு நாள் மட்டுமே அரசால் நடத்தப்பட்டன. அதிலும் சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பகத்சிங் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்பதாக இருந்தும், அவ்விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மிக வலிமையான அரசியல் கட்சியாகவும் அக்கட்சியின் தலைவராகவும் இருக்கும் தமிழக முதல்வர் கலந்து கொள்வதாக இருந்தும், சுமார் நூறு பேர்கள் அளவிலே வந்திருந்ததால்தான்-அவ்விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பகத்சிங்கை வழிபாட்டு உருவாக மட்டுமே உயர்த்திப் பிடித்து, போர்க்குணத்துடன் அரசியல் அரங்குகளுக்கு வரும் இளைஞர்களை தமது நாடாளுமன்றப் பன்றித் தொழுவத்தில் அணியமாக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட, இவ்விழாவிற்கு தமது இளைஞர் பட்டாளத்தை அனுப்பி வைக்கவில்லை!
ஜீவா, பகத்சிங் ஆகியோருக்கு இருக்கும் ‘பொது அடையாளம்' அடிப்படையில் முத்துராமலிங்கத்திற்கு இல்லை। அவர் ‘தேசியத் தலைவர்' என்றும் "அனைத்து சமூகங்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர்' என்றும் ‘சுதந்திரப் போராட்டத் தியாகி' என்றும் ‘தலித் மக்களை அழைத்துக் கொண்டு ஆலயப் பிரவேசம் செய்தவர்; தனது நிலங்களை தலித் மக்களுக்குப் பிரித்து வழங்கியவர்' என்றும் பல்வேறு அடையாளங்களை அவருக்கு ஆதரவானவர்கள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர்.
ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் ஒரு குடிமகனாகப் பங்கெடுத்தவர் என்பதைத் தவிர, பிற அடையாளங்கள் இட்டுக்கட்டப்பட்டவை। சுதந்திரப் போராட்டத்தில் தனது முழு சொத்தையும் இழந்து நீண்ட காலம் சிறையில் வாடி தன் உடல், பொருள், காலம் அனைத்தையும் அர்ப்பணித்து, காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி, கடும் இன்னல்களை சந்தித்து மறைந்தவர் வ.உ. சிதம்பரனார் அவர்கள். அவருக்கு ‘தேசியத் தலைவர்' அடையாளம் வழங்கப்படவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட்டு- சொந்த சாதி மக்களைத் தன் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்தி, சாதி வெறியூட்டி, தமிழகத்தில் ‘சாதிக் கலவரம்' என்ற தொடர் மோதல்கள் நிகழக் காரணமான ஒருவருக்கு (முத்துராமலிங்கத்திற்கு) இப்பட்டம் சூட்டப்படுகிறது. இதைத் தேவர் சாதியினர் உருவாக்கி மகிழலாம். ஆனால் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அரசு அதை அங்கீகரிக்கலாமா?
முத்துராமலிங்கம் தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகவோ, அதற்கு உதவியதாகவோ வரலாற்று ஆவணங்கள் எதுவுமில்லை। நில உச்சவரம்புச் சட்டத்திற்குப் பயந்து தனது சொத்துகளை அவர் பதினாறு பங்காகப் பிரித்து, தன் விசுவாசிகளின் பெயரில் பினாமி சொத்துகளாக மாற்றினார். இதில் பதினைந்து பினாமிகள் அவரது சொந்த சாதியினர். ஒருவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தனது ஏவலுக்கு சேவகம் புரிந்த சோலைக் குடும்பன் போன்ற ஒரு விசுவாசியை பினாமியாக்கி-தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதை அவர்தம் துதிபாடிகள், தலித் மக்களுக்கு அவர் தன் நிலங்களைப் பிரித்துக் கொடுத்ததாகக் காலந்தோறும் கதையளந்து வருகின்றனர். சொத்துத் தகராறுக்காகத் தனது நெருங்கிய உறவினரைத் தாக்கியவர் என்பதும் குடும்ப வழி சொத்துகளுக்காக தன் தந்தையின் மீதே வழக்குத் தொடுத்தவர் என்பதும், முத்துராமலிங்கம் என்னும் பிற்போக்கு நிலவுடைமையாளரின் மறைக்கப்படும் பக்கங்கள்.
1957இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதாகக் கருதிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட முத்துராமலிங்கத்தைத் தான் – தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் என்றும், சாதி வேற்றுமைகளைச் சாடியவர் என்றும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உட்படப் பலரும் வாய்கூசாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்। காமராஜரை பொதுமேடைகளில் ‘சாணான்' என இழிவுபடுத்திப் பேசியவர் என்பதும், சீனிவாசய்யங்கார், ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனர்களையே தனது வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டிருந்தவர் என்பதும் அவரது இந்துத்துவ-சாதிய சார்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.
‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று முழங்கிய முத்துராமலிங்கம், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஒருசேர வழிபடும் தலைவராக இருக்கும் முரண் பகை முரண் அல்ல। சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் போகிற போக்கில் "நாலு நல்ல வார்த்தைகள்' பேசிவிட்டால் போதும், எவரொருவரையும் துதி பாடி கொண்டாடக் காத்திருக்கிறது பிழைப்புவாத அரசியல் நடத்தும் சாதி இந்துக்களின் கூட்டம். காங்கிரஸ் கட்சியில் தான் விரும்பிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதால் தான் முத்துராமலிங்கம் நேதாஜி அணியில் இணைந்து கொண்டாரே ஒழிய, சுபாஷின் அரசியல் கோட்பாடுகளைப் பின்பற்றியவராக அல்ல.
மேற்கு வங்கத்தில் பார்வர்டு பிளாக் கட்சி, இடதுசாரி கூட்டணியிலுள்ள ஒரு சோஷலிஸ்டு கட்சியாம் (!) தமிழகத்திலோ ஒரு சாதிச் சங்கம் என்ற அளவிற்கு அக்கட்சியைத் தரம் தாழ்த்தியதும், அதிலும் சாதி வெறியர்கள் ‘குரங்குகள் அப்பம் பிட்ட கதை' யாக அதை எட்டுக் குழுக்களாகப் பிரித்து, கட்டைப் பஞ்சாயத்து கும்பல்களாகப் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் உருவாக்கிய ‘பெருமை'யும் முத்துராமலிங்கத்தையே சாரும்। தற்பொழுது, கழிசடை சினிமாக்காரன் கார்த்திக் ஒரு கும்பலுக்குத் தலைவனாம்!
பிற்போக்குத்தனமான நிலவுடைமை அதிகாரங்களுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவும், பொது சமூகத்தின் நலன் கருதி மறவர் மற்றும் பிரன்மலைக் கள்ளர் ஆகிய 16 சாதியினர் மீது ‘கை ரேகைச் சட்டத்தைப் பிரயோகிப்பவர்களாகவும் ஆங்கிலேய ஆட்சியினர் இருந்த காரணத்தால்தான் முத்துராமலிங்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய அவசியத்திற்குள்ளானார்। தனது காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு, நேதாஜியின் பெயரைப் பயன்படுத்திக் கொண்ட முத்துராமலிங்கத்திற்கு வீர சாவர்க்கர், கோல்வால்கர், திலகர், நாதுராம் கோட்சே போன்ற இந்துத்துவ பாசிஸ்டுகள்தான் ஆதர்ச தலைவர்கள். இதற்கு நேர்மாறாக, காங்கிரசின் மிதவாத அரசியலை உள்வாங்கிக் கொண்டாலும், காமராஜரின் அடித்தட்டு வர்க்க உணர்வோட்டத்தைப் புரிந்து கொண்டவராக, தீண்டாமை சாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றில் சமரசமற்ற போர்க்குணத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்கியவராக விளங்கியவர் இம்மானுவேல் சேகரன்.
‘முதுகுளத்தூர் கலவரம்' தொடர்பாக கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்டிய முத்தரப்பு சமாதானக் கூட்டத்தில் தனக்கு இணையாக, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கையில் அமர வைக்கப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக, தனது அடியாட்களை ஏவி, இம்மானுவேலைக் கொலை செய்தவர் முத்துராமலிங்கம்। இக்கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, வழக்கின் முடிவில் விடுதலை செய்யப்பட்டாலும் இம்மானுவேல் கொலைக்குக் காரணமானவர் என்ற வடு, ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் தீராத வலியாய் தேங்கிப் போயுள்ளது.
தலித் மக்கள் மீதான தீண்டாமை ஒதுக்கலையும் சாதிப் பாகுபாடுகளையும் வெளிப்படுத்துவதில் சாதி இந்துக்களில் எந்தவொரு தனித்த சாதியினரும் குறைவானவர்கள் அல்ல। ஆனால், எண்ணிக்கையில் அதிகமான குறிப்பிட்ட சில சாதியினர் மட்டுமே, தலித் மக்கள் மீதான நிரந்தர வன்முறையாளர்களாகத் தங்களை நிறுவிக் கொண்டுள்ளனர்। தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ‘முக்குலத்தோர்' என்று அழைக்கப்படும் மூன்று சாதியினரும், வடமாவட்டங்களில் வன்னிய சாதிக் குழுமமும், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கொங்கு வேளாளக் கவுண்டர்களும், பரவலாக நாயுடு சாதியினரும் தான் பெரும்பான்மையான இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
இதற்கான காரணங்கள் ஆய்வுக்குரியவை அல்ல। மேற்குறிப்பிட்ட இச்சாதியினர் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களாக இருப்பதும், தத்தம் பகுதிகளில் சாதிய அரசியல் அதிகார மய்யங்களில் செல்வாக்கு மிக்கவர்களாகத் தங்களை நிரந்தரப்படுத்திக் கொள்ள எத்தனிப்பதுமே, இத்தகைய வன்முறைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதிலுள்ள அடிப்படை நோக்கம். தனக்குக் கீழேயுள்ள பலவீனமான பிரிவினரை ஒடுக்கி, பொது சமூக வெளியில் அச்சத்தையும் பிற சமூகத்தினருக்கு எச்சரிக்கையையும் ஊட்டுவதன் மூலம் தங்கள் ஆதிக்கம் வலுப்படும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி, மய்ய நீரோட்ட அரசியலில் தமக்கென வலுவான இடத்தை நிறுவிக் கொண்டவர்கள் வன்னியர்கள்। ராமசாமி படையாச்சி முதல் மருத்துவர் ராமதாஸ் வரை, இதற்கான உந்துவிசையாகப் பயன்பட்டவர் முத்துராமலிங்கத் (தேவர்) என்றால், அது மிகையல்ல. தென்மாவட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தொடர் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, அதன் வழியே மய்ய நீரோட்ட அரசியலில் மற்றெந்த சாதியினரை விடவும் தங்களை உச்சபட்ச அதிகாரத்தில் இருத்திக் கொண்டிருப்பவர்கள், முக்குலத்தோர் எனப்படும் மூன்று சாதிக் கூட்டணியினர்தான். தென் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியில் கூட முக்கியப் பொறுப்புகளில் இவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். வலுவான சாதிக் கூட்டணி உருவாகியுள்ளது. இதை மூடி மறைக்க, அவ்வப்போது தமிழ்ப் பாதுகாப்பு இயக்க முகமூடிகளை அணிந்து கொள்ளும் ஆதிக்க சாதிக் கூட்டணிக்கு, தொல் தமிழர்களே சாமரம் வீசிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல?
இத்தகைய பேராபத்தான ஆதிக்க சாதி அரசியல் கூட்டணி உருவாகியுள்ள சூழலில் தான், எச்சரிக்கை செய்யும் முகமாக, முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு நடத்த எதிர்ப்பு தெரிவித்து – ‘ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி'யின் மாநில அமைப்பாளர் அ। சிம்சன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (w.p.No. 33699/2007) ஒன்றை கடந்த அக்டோபர் 23 அன்று தொடுத்தார். தமிழ் நாடு அரசு, ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவருக்கு அரசு சார்பில் விழா எடுப்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய கூறுகளுக்கு எதிரானது என்றும், விதி 17க்கு எதிரானது என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளாகக் கூறப்பட்டுள்ள விதி 51 A(c&e)க்கு எதிரானது என்றும், எனவே அந்த விழாவை இல்லா நிலையது மற்றும் சட்டப் புறம்பானது (Null and void and illegal) என அறிவிக்கக் கோரியும், எதிர்காலத்தில் எந்த தனிப்பட்ட சாதியத் தலைவருக்கும் மக்கள் நல அரசு விழாக்கள் நடத்தக் கூடாது என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, தலைமை நீதிபதி வழக்கை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்। தமிழக முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த எம். பக்தவச்சலம் 26.10.1957 அன்று தமிழக சட்டப் பேரவையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் மீது குற்றம் சாட்டி தாக்கல் செய்திருந்த அறிக்கையின் சில பகுதிகளை வாதியின் வழக்குரைஞர் படித்துக் காட்டிய பிறகே, தலைமை நீதிபதி வழக்கை அனுமதித்தார். அப்போது அவர் அரசு வழக்குரைஞரிடம், "21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், தீண்டாமை போன்ற கொடிய குற்றங்களை ஒழிக்க வேண்டும். அரசே இவ்வாறு நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன'' என்று கூறினார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, பதில் தர வேண்டுமென அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
மேலும், இந்த விழா எடுப்பதால் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிரான மனநிலைக்கு வருவதற்கும், தென் மாவட்டங்களில் சமூகப் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது। முத்துராமலிங்கம் காலத்திலிருந்தே தென் மாவட்ட தலித் மக்கள் மீது தொடர்ச்சியாக ஆதிக்க சாதியினர் மேற்கொண்டு வரும் வன்முறைகள் (மேலவளவு முருகேசன் படுகொலை உட்பட) பலவும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தன. தற்பொழுது வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், அரசு திட்டமிட்டவாறு அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் விழாவை நடத்தி முடித்துள்ளது. அதன் விளைவாக, வழக்கில் சுட்டிக் காட்டியவாறு இன்றுவரையும் தென்மாவட்டப் பகுதிகளில் சமூகப் பதற்றமும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையின்மையும் உருவாகியுள்ளது. இதற்கான சூழலை அரசே உருவாக்கியதன் தொடக்கப் புள்ளியாக,
முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள தலித் மக்கள் வாழும் வீரம்பலுக்கும் மறவர் சமூகத்தினர் வாழும் இளஞ்செம்பூருக்கும் இடையே மோதல் கருக்கொண்டது। முதுகுளத்தூருக்குப் படிக்கச் செல்லும் வீரம்பல் பள்ளி மாணவர்கள் சிலரை அடித்தும், மாணவிகளைக் கேலி பேசியும் இளஞ்செம்பூர் மறவர்கள் அச்சுறுத்தி யுள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்ட பிறகும், ‘சேதுநாடு தெய்வீகப் பேரவை' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முப்பெரும் விழாவிற்கு காவல் துறை அனுமதி வழங்கியது. இவ்விழாவை முன்னின்று ஏற்பாடு செய்தவர்கள், திராவிட விழிப்புணர்ச்சிக் கழகத்தின் தலைவரான பி.டி. குமாரும், ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவரான பூவலிங்கம் என்பவருமே.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தவர் தான், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி। 1993 முதல் பரமக்குடியிலிருந்து பொன்னையாபுரம்-கீழத்தூவல்-கீழக்கன்னிச்சேரி வழியாகப் பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் இவ்வழியில் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு பதற்றமான நேரங்களில் தடை நடைமுறையில் இருந்திருக்கிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரான பூவலிங்கம், பரமக்குடி அய்ந்து முனை சாலையில் கிருஷ்ணசாமிக்கு பி.டி. குமார் மாலை அணிவித்து சந்திக்க வைத்த ("நக்கீரன்' 7.11.2007) பிறகு, அனைவரும் ஏறத்தாழ 20 கார்களில் இவ்வழியிலேயே பயணம் செய்துள்ளனர். கீழத்தூவலுக்கும் கீழக்கன்னிச்சேரிக்கும் இடையில் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட நாளிலிருந்து, அனைத்து தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் "மர்மக் கும்பல்' ஒன்று தாக்கியதாகவே செய்தி வெளியிட்டு வந்தன.
ஆனால், காவல் துறையோ ஊகத்தின் அடிப்படையிலேயே கீழக்கன்னிச் சேரியைச் சேர்ந்த 59 தலித்துகள் மீது வழக்குப் பதிவு செய்து, இதுவரை 13 நபர்களைக் கைது செய்துள்ளது. கிருஷ்ணசாமி தாக்கப்படும்போது, அடுத்த காரில் இருந்த பி.டி. குமார் தப்பித்து வேறு காரில் ஓடிவிட்டதாக, அவர் தந்த வாக்குமூலத்தையே ஊடகங்கள் எழுதி வருகின்றன. ஆனால், தலித் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட பி.டி. குமார்-பூவலிங்கம் சாதிவெறிக் கும்பல் முன்னேற்பாடாக இச்சதிச் செயலை செய்திருக்கக் கூடாதா என்ற சந்தேகம் காங்கிரஸ் கட்சியிலேயே பலருக்கும் எழுந்துள்ளது.
வீரம்பல், கீழக்கன்னிச்சேரி போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, முதுகுளத்தூர் பகுதியின் சமூக சூழலை விசாரணை செய்யும் முகமாக, ‘வன்கொடுமைக்கு எதிரான வழக்கறிஞர் மற்றும் ஆர்வலர் மய்யம்' என்ற அமைப்பின் கீழ் வழக்குரைஞர்கள் இன்குலாப், பகத்சிங், வையவன், முருகன் மற்றும் சமூக ஆர்வலர்கள் அசோக், சுரேஷ், இருளாண்டி உள்ளிட்ட பதினாறு பேர் கொண்ட குழு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது।
அதில், "கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவத்தில் பி।டி. குமார் மற்றும் பூவலிங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் கொள்வதற்கு, போதுமான நியாயம் உள்ளது. கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக இரவு 8.30 மணியளவில் பி.டி. குமார் தாக்கப்பட்டதாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வதந்தியால், முதுகுளத்தூரில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவரும், அப்பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவருமான வின்சென்ட் சாம்சனை, 25க்கும் மேற்பட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்த அடையாளம் காணப்பட்ட நபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இக்கொலை வெறித்தாக்குதல் பி.டி. குமாரின் திட்டமிட்ட சதியால் நடந்துள்ளது என்பதற்குப் போதிய காரணங்கள் உள்ளன'' என்று கூறியுள்ளனர். கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவத்தை விசாரித்து அரசுக்கு அறிக்கை தர நியமிக்கப்பட்டுள்ள அய்.ஏ.எஸ். அதிகாரியான பரூக்கி, நாம் எழுப்பும் சந்தேகங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
நிறைமாத கர்ப்பிணியான வின்சென்ட்டின் மனைவி கெர்சியாள் சகுந்தலா, கொலையில் தொடர்புடையவர்களின் பெயர்களை நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தும் இவர்களைக் கைது செய்வதில் காவல் துறை, மெத்தனம் காட்டுகிறது। முதுகுளத்தூர் வட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமுள்ள தலித் கிராமங்களில் விசாரணை என்ற பெயரிலும் தேடுதல் நடவடிக்கை என்ற பெயரிலும் நள்ளிரவிலும் அத்துமீறி பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றனர். 30.10.2007 அன்று இரவு 8 மணியளவில் நுழைந்து பெண்களை மிரட்டியுள்ளனர். 31.10.07 அதிகாலை 5 மணியளவிலும் கீழக்கன்னிச்சேரி கிராமத்திற்கு விசாரணைக்கு வந்த காவல் துறையினர், தலித் பெண்களிடம் மிகவும் கேவலமாகப் பேசியுள்ளனர். சில வீடுகளையும் அங்கிருந்த உடைமைகளை யும் அடித்து நொறுக்கி, காவல் துறை அராஜகத்திற்கு நிரந்தர சாட்சியமான ‘கொடியங்குள'த்தை நினைவுபடுத்திச் சென்றுள்ளனர். முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவும் நடைமுறைப்படுத்தப்பட்டு, தலித் மக்கள் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இன்றுவரை இப்பகுதியில் நிகழ்ந்து வரும் காவல் துறை அத்துமீறல்களையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வியல் நெருக்கடிகளையும் துளியளவும் கண்டு கொள்ளாத தமிழக அரசுக்குத் துணை போவதாகவே, ஊடகங்களின் மவுனத்தைக் கருத முடிகிறது। "ஏற்கனவே தேவர் சிலைக்கு செருப்பு மாலை போட்டவரான ஒரு ஆசிரியரை வெட்டிக் கொன்றனர்'' என ‘நக்கீரன்' 7.11.07 இதழில் அதன் இணையாசிரியரே எழுதுகிறார். வின்சென்ட் வெட்டிக் கொல்லப்பட்டதற்கான தேவர் சாதி மன உணர்வை நியாயப்படுத்தும் விதமாகவே, போகிற போக்கில் எவ்வித ஆதாரங்களுமின்றி அழுத்தம் திருத்தமாக ‘நக்கீரன்' காமராஜ் எழுதிச் செல்கிறார். ஆனால், ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும், முதுகுளத்தூரில் வசித்து வந்த மறவர் சாதியினரோடு நட்புறவோடும் பழகி வந்தவரான வின்சென்ட் மீது இப்படியொரு குற்றச்சாட்டோ, அது குறித்த வழக்குகளோ இல்லை. "நக்கீரன்' 10.11.07 இதழில் வின்சென்ட் மனைவியும் இதை உறுதி செய்திருக்கிறார். ‘நக்கீரன்' வருத்தம் தெரிவிப்பதே அதன் பத்திரிகை தர்மமாக இருக்கும்.
கலவர ஈரம் காயக்கூடாது என ஆளும் வர்க்கம் கருதுகிறதா என சந்தேகிக்கும் வகையில், பசும்பொன் கிராமத்தில் பேசும் போது, ‘மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்ட ஆவன செய்வேன்' என்றும், மதுரையில் மருதுபாண்டியர் சிலை திறப்பு விழாவில் ‘முக்குலத்தோர் ஒரு மனதாக விரும்பினால் "தேவரினம்' என ஒரே பெயரில் அழைக்கப்பட அரசு ஆணை வெளியிடப்படும்' என்று இரு முக்கிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறார் தமிழக முதல்வர்। தளபதி சுந்தரலிங்கம் பெயரை போக்குவரத்துக் கழகம் ஒன்றிற்கு சூட்டிய காரணத்தினால் அதை ஏற்றுக் கொள்ள முன்வராத ஆதிக்கச் சாதியினர் வன்முறையில் இறங்கியதன் விளைவாக மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சூட்டப்பட்டிருந்த (டாக்டர் அம்பேத்கர் பெயர் உட்பட) அனைத்துத் தலைவர்களின் பெயர்களும் அரசால் நீக்கப்பட்டன.
இயல்பாகவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கும் பெருந்தன்மை, பிற சமூகத்தினருக்கு இருப்பதில்லை என்பதையே சுந்தரலிங்கம் பெயர் நீக்க நிகழ்வுகள் உணர்த்தின। ஆனால், காலப்போக்கில் மக்களுக்கு நேரும் மறதியை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் இதே வகையான சமூகச் சூழலை ஆளும் அரசே ஏற்படுத்துவது என்ன நியாயம்? (30 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தந்தை பெரியாருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க இவர்கள் முயலவில்லை என்பது வெட்கக்கேடு.) மேலும், நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு இணையாக முத்துராமலிங்கம் உருவச்சிலை நிறுவவும், அவருக்கு ‘பாரதரத்னா' விருது தர அரசியல் ரீதியாக வலு சேர்க்கவும் அக்குறிப்பிட்ட சாதியினர் முயன்று வருவதையும் நாம் அறிகிறோம்.
இவற்றிற்கு இணையாக, மதுரையில் அவருக்கு நூறு அடி உயர சிலை நிறுவவும், ‘இரண்டாம் படை வீடு' என்ற பெயரில் கோயில் கட்டி ஏற்கனவே நிலவிக் கொண்டிருக்கும் வழிபாட்டு உணர்வை ஆதிக்க சாதி வெறியூட்டி வளர்க்கவும் ஜெயலலிதா-சசிகலா-சேதுராமன் கூட்டணியினர் அடிக்கல் நாட்டியுள்ளனர்। இந்நேரத்தில் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலை நிறுவ வேண்டுமென, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜான்பாண்டியன் தலைமையில் மறியல் நடந்தபோது, காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு நான்கு தலித் உயிர்கள் பலியான சம்பவம் நம் நினைவிற்கு வரவேண்டும். பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதில் ஆதிக்கச் சாதியினரோடு, ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அனைத்து அரசியல் சக்திகளும் ஒத்த கருத்தில் இருக்கின்றனர்.
ஆனால் ‘தேவர்' பெயர் சூட்டலும், மணி மண்டபம் கட்டும் வேலைகளும், பொதுப் பெயர் சூட்டி குறிப்பிட்ட சாதியினரை வலிமைப் படுத்துதலும் தி।மு.க. அரசால் முன்மொழியப்படும் இச்சூழலில்தான், தலித் மக்கள் ஆங்காங்கே தன்னியல்பாக அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன், தளபதி சுந்தரலிங்கம் சிலைகளை நிறுவ முயல்வதும் அவற்றை அப்புறப்படுத்த காவல் துறை ஓடிக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போராட்டங்கள் ஒரு வகையில் ஆதிக்க சாதியினருக்கு எதிரான பண்பை தன்னியல்பில் கொண்டுள்ள தலித் மக்களின் சுயமரியாதை உணர்வையும், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக இயக்கம் உருவாக்கி தன் இன்னுயிரைத் தியாகம் செய்த இம்மானுவேல் சேகரனின் வீரமரபையும் உயர்த்திப் பிடிக்கும் சமரசமற்ற கலகச் செயல்பாடுகளாகவே இருக்கின்றன. இவ்வகையான கலகங்களின் வாயிலாகத்தான் சாதி ஒழிப்பை மய்யப்படுத்தும் சமூக விடுதலைப் போராட்டங்கள் உயிர்ப்புடன் இருப்பதை நாம் உணர முடிகிறது.
பார்ப்பன எதிர்ப்பு, திராவிட இயக்க அரசியல், பிற்படுத்தப்பட்டவர்கள் நலன் என்ற அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு, தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டு காலமாக அரசியல் நடந்து வருகிறது। 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமது சுயமரியாதைக்கும் அரசியல் உரிமைகளுக்கும் போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கும் தனிச் சேரிக் குடிகளாகவும், மனித மலத்தை மனிதனே சுமக்கும் கொடுமைகளை ‘தொழில்' என்ற பெயரில் சுமப்பவர்களாகவும், சாதி இந்துக்கள் என அறியப்படுகிற பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படுகிறவர்களாகவும் ஒவ்வொரு நாளும் தீராத துன்பத்தில் உழன்று வருகின்றனர். தென்மாவட்டங்களில் முத்துராமலிங்கத்திற்குப் பிறகு இத்தகைய ஒடுக்குமுறைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டு, அமைப்பாக்கப்பட்ட வன்முறைகளாக நாள்தோறும் ஏதேனும் ஓர் ஊரில் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இத்தகைய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த, கடுமையாக ஒடுக்க, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூட இதுவரையில் எந்த அரசுகளும் முன்வரவில்லை.
நடுநிலையாளர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்கள் என சொல்லிக் கொள்பவர்கள்கூட, சாதி தீண்டாமை எதிர்ப்பில் நேர்மையாக நடந்து கொள்வதில்லை। அனைவரும் போலிகள் எனத் தோலுரிந்து போன நிலையில் தான் ஒடுக்கப்பட்ட மக்களே நேரடியாகக் களமிறங்கி, தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், சமூகக் கொடுமை களுக்கெதிராக அமைப்பாகவும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டைத் தழுவி தலித் மக்களிடம் கிளர்ந்த எழுச்சி, ஒரு தேக்க நிலையை- பின்னடைவை- சரிவை சந்தித்து விட்டதாக அறிவுஜீவிகள் விவாதித்து வரும் நிலையில், புதிய அணுகுமுறையுடனும், மாற்று செயல்திட்டங்களுடனும் தலித் மக்கள் எழுச்சி பெற்றுப் போராட வேண்டிய அவசியத்தையும் நெருக்கடியை யும் ‘தேவர் நூற்றாண்டு' வன்முறைகள் ஏற்படுத்தியுள்ளன.
இச்சூழலில், ‘சூத்திரன் பட்டம்' நீங்கப் போராடும் பிற்படுத்தப் பட்ட சாதியினர், ‘பஞ்சமன்' என ஆயிரம் ஆண்டு காலமாக ஒதுக்கப்பட்டு வரும் பெரும் சமூகக் குழுமத்தின் வலிகளுக்கும் காயங்களுக்கும் காரணமானவர்களாக இருந்து வருவதைத்தான் ‘தேவர் ஜெயந்தி' போன்ற சாதிவெறிக் கொண்டாட்டங்கள் உணர்த்துகின்றன।
button="vert";
submit_url ="http://egalaiva.blogspot.com/2007/12/blog-post.html"
Posted by ஏகலைவா at 12/26/2007 09:25:00 PM
தம்பி” - யார் நீ
“தோழர், தம்பி திரைப்படத்தை உடனே பாருங்கள். மாவோ வரிகளில் தொடங்கி, சேகுவேரா வரிகளோடு திரைப்படம் முடிகிறது” என என் அரசியல் நடவடிக்கைகளில் எனக்கு நெருக்கமான ஒரு தோழன் தொலைபேசி செய்தான். திரைப்படத்தின் தாக்கத்தால் தார்மீகக் கோபம் கொப்பளித்துப் பெருகுவதாகக் கூறிய, சமூக அக்கறையில் ஆவேசங் கொண்ட அவனது வரிகளால் ஆர்வத்தால் உந்தப்பட்டேன். ‘ரௌத்ரம் பழகு’, ‘நையப்புடை’, ‘புரட்சி செய்’ என்ற வரிகளோடு திரைப்படத்தின் சுவரொட்டிகள் காணும் இடம் தோறும் என்னைக் கலவரப்படுத்திக் கொண்டேயிருந்தன. நேரமும் மனநிலையும் வாய்த்த ஓர் இரவுக் காட்சியில் என் சகோதரன் ஒருவனோடு அத்திரைப்படத்தை மிகச் சமீபத்தில் பார்த்தேன்.‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படமும், அத்திரைப்படம் வெளிவந்த சில மாதங்களுக்குப் பிறகு, மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிகழ்த்திய ஓர் கலை இரவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குனர் சீமானின் அற்புதமான மேடைப் பேச்சும், மிகச் சமீப காலங்களில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கு, ஈழ ஆதரவு நிலைப்பாடு, பெரியார் சிந்தனைகளை உரக்கப் பேசும் திண்மை ஆகிய சமூக அக்கறை பொதிந்த இயக்குனரின் நடவடிக்கைகளும் என்னை பாதித்து, கவனம் பெறச் செய்து அவரின் (சீமானின்) பால் ஒருவித ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியிருந்ததன் விளைவாக, ‘தம்பி’ திரைப்படத்தின் மீதான ஆவல் என்னுள் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ஐந்து கோவிலான் (இணை இயக்குனர்), கிட்டா (இணை இயக்குனர்), செழியன் (ஒளிப்பதிவு உதவி இயக்குனர்) என சில நண்பர்களும் இத்திரைப்படத்தில் பணி செய்திருப்பதால் திரைப்படத்தைக் காணுவதற்கான ஆவல் என்னுள் ததும்பி வழிந்தது.ஒரு திரைப்படம் என்ற வகையில் ‘தம்பி’யின் கதையும் காட்சி அமைப்புகளும் புதியன அல்ல. காட்சிக் கோணங்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, பெரும்பாலானவர்களின் நடிப்பாற்றல் எனப் பலவும் தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப வளர்ச்சியோடு ஒப்பிடும்போது சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சீமானின் ‘பாஞ்சாலங்குறிச்சி’யில் வெளிப்பட்ட நேர்த்தியும் உயிரோட்டமும் இத்திரைப்படத்தில் தொலைந்து போயிருந்தன. இத்தகைய பலவீனங்களை ஒதுக்கி வைத்து, திரைப்படத்தின் அரசியல் அல்லது கருத்துருவாக்கம் குறித்து தான் நான் பேச விழைகிறேன்.ரௌடிகள் அல்லது ரௌடியிசம் தான் கதாநாயகன் ‘தம்பி’யின் எதிர்நிலைப் (Opposite Side) பாத்திரப் படைப்பு. போலீசின் துணையோடு ரௌடிகளை அல்லது ரௌடியிசத்தை ஒழிப்பதுதான் தம்பியின் முழுநேர வேலை. ஒழிப்பது என்பது கூட அழிப்பது அல்ல. தட்டிக் கேட்பது, தவறுகளைத் திருத்துவது, திருத்தி வாழ வைப்பது என்பவைதான் தம்பியின் நோக்கங்கள். அதுவும் கராத்தே பயிற்சியில் தேர்ந்த தம்பி, ஒவ்வொரு ரௌடிக்கும் தருவது ஒரே ஒரு அடியும், ஒரு சில வார்த்தை அறிவுரையும் தான். கழிசடை அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவியுமான போலீசும் திட்டமிட்டு உருவாக்குபவர்கள் தான் ரௌடிகள். புரட்சிகர அரசியலை அறிந்திருப்பதாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சீமானுக்கு ரௌடியிசத்தின் இந்த மூலவேர் நன்கு தெரிந்திருக்கும். ஆனாலும் கழிசடை அரசியல்வாதிகளைத் திரைக்கதையில் தப்ப விட்டுவிட்டு, ரௌடிகளை ஒழிக்க அல்லது திருத்த போலீசையே துணைக்கு அனுப்புகிறார். ‘தம்பி’யோடு, தம்பியும் மகாத்மா காந்தி முதல் தென்னாட்டு காந்தி வரை தனது அறிவுரைகளை உரையாடல்களில் அள்ளித் தெளிக்கிறார். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் கூடாது என்கிறார். இரத்தத்தை இரத்தத்தால் கழுவ முடியாது என்கிறார். வன்முறைக்குப் பதிலீடாக அகிம்சையைப் போதிக்கிறார் - மிதமான வன்முறையோடு.நமக்குத் தேவை அமைதியும் சமாதான சகவாழ்வும்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் நமக்கு அல்லது மக்களுக்கு எதிரிகள் யார்? அவர்கள் எந்த வழிகளில் இச்சமூகத்தில் வினையாற்றுகிறார்கள்? அவர்களின் பலம், சமூக- அரசியல் பின்னணி எத்தகையது? என்பவற்றைத் தீர்மானிப்பதில்தான் நமது எதிர்வினையும், செயற்படுகளமும், போராட்ட முறைகளும் உருக்கொள்ள முடியும். ‘தம்பி’ போன்ற தமிழ் சினிமாவின் கதாநாயகனுக்கு வேண்டுமானால் அசுரபலம் கொண்ட அவனது கைகள் மட்டுமே ஆயுதமாகப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அரசியல் அறிவில் பலவீனமாக, நிராயுதபாணியான, சக மனிதனின் மீது அக்கறை இல்லாத பொதுப் புத்தியில் வாழும் நம் சமூக தனிமனிதனுக்கு நம்பிக்கை ஊட்ட தேவையான தத்துவம், உணர்வோட்டம், அரசியல் ஆயுதம் எவையும் தம்பியால் பரிந்துரைக்கப் படுவதில்லை. ‘நான் உயிரோடு இருக்கும் வரை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என முழு பாரத்தையும் தன் மீது சுமத்திக் கொள்கிறான். ரௌடிகள் திருந்தி வாழ, தான் வெட்டுப்பட்டு வீரத் தழும்புகளோடு பொதுப்புத்தி மாறாத மக்கள் நடுவில் உதாரண புருஷனாக உருவெடுக்கிறான். தம்பி உயிரோடிருக்கிறான் என்ற நம்பிக்கையில் நாமும் நமது அன்றாட வேலைகளில் மூழ்கிக் களிக்க திரையரங்கத்திலிருந்து வெளியேறுகிறோம்.இதெல்லாம் இருக்கட்டும். இத்திரைப்படத்தின் முக்கியமான இன்னொரு கோணத்தை அல்லது மையமான கருத்துருவாக்கத்தை அணுகிப் பார்க்க விழைவதே நமது தலையாய நோக்கம். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, குறிப்பாக ‘தேவர் மகன்’ திரைப்படம் வெளிவந்ததற்குப் பிறகு, தமிழ் சினிமாவின் பெரும்பாலான வன்முறைப் படங்கள தேவர் சமூகத்தின் பெருமையையும் தேவர் சாதியினரின் மூர்க்கத்தையும் தேவர் சமூகத்தின் மீதான பிற சமூகங்களின் அச்சத்தையும் திரைக்கதையின் மையமான அல்லது அச்சமான உணர்வோட்டமாகச் சித்தரிப்பதில்தான் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றன. சில திரைப்படங்கள் வெளிப்படையாகவும், சில திரைப்படங்கள் மறைமுகமாகவும் இத்தகைய அரசியலில் கவனம் செலுத்துகின்றன. வணிக நோக்கம் தவிர வேறில்லை எனவும் இதை அரசியல் கண்கொண்டு விமர்சிக்கக் கூடாது எனவும் கூற முனைபவர்களுக்கு என் எழுதுகோல் முனையே ஆயுதம்.தமிழ்நாட்டின் சாதி சமூகப் பின்புலத்தை அறிந்தவர்கள் இதனைப் புரிந்து கொள்ள முடியும். இராமநாதபுரம் மாவட்டம் ‘பரமக்குடி’ கதாநாயகன் ‘தம்பி’யின் சொந்த ஊர் என திரைப்படத்தின் உரையாடலில் ஓரிடத்தில் வருகிறது. ‘தம்பி வேலு தொண்டைமான்’என்ற பெயரும் கதாநாயகன் வீட்டுச் சுவரில் தொங்கவிடப்பட்டு, இரண்டு அருகாமை (close-up) காட்சிகளில் காட்டப்படும் பசும்பொன் முத்தராமலிங்கத் தேவரின் உருவ ஓவியமும் கதாநாயகனின் சாதியைச் சொல்லிவிடுகின்றன. ரௌடிகளாகப் பாத்திரப்படும் சண்முக-சரவண பாண்டியன் சகோதரர்களும், உணவில் மாமிச வில்பத்தை அல்ல வெறியை, அக்ரகாரத்து வக்கீலிடம் வெளிப்படுத்தும் ரௌடிக் கும்பலின் கையாள் பாத்திரமும், ரௌடிக் கும்பலின் தலைவன் அண்ணாச்சியின் கடுக்கண் அணிந்த விடைத்த காதும், முறுக்கிய மீசையும், மேற்சட்டையணியாத வெற்றுடம்பும் கொண்ட அப்பா பாத்திரமும் தேவர் சாதி கதாபாத்திரங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தாக்குதலுக்கு எதிர் தாக்குதலும், வன்முறைக்கு எதிர் வன்முறையும் ஒரு தேவரிடமிருந்து இன்னொரு தேவர்தான் எதிர் கொள்ள முடியும் என்பதை இக்கதாபாத்திரங்கள், நடுரோட்டில் கலவரம் நடந்தால் அலறி ஓடும் பொதுப் புத்திக்கு ஒவ்வொரு முறையும் நினைவூட்டுகின்றன. தேவர் மகனில் தொடங்கி விருமாண்டி, சண்டக்கோழி, தம்பி வரை இக்கூத்து தொடர்கிறது.இந்த ரௌடிக் கும்பலால் படுகொலை செய்யப்படும் நிராயுதபாணிகளின் வரிசையில் DYFI தோழர் ஒருவரின் குடும்பமும் காட்சிப்படுகிறது. அவர் வீட்டு சுவரில் புகைப்படங்களாகத் தொங்கும் அம்பேத்கரும், பகத்சிங்கும் அவரொரு தலித் தோழராக இருப்பதற்கான சாத்தியங்களைத் தருகின்றன. தலித் தோழரை படுகொலை செய்த சாதி இந்து ரவுடித்தன அறிவுரையால் திருந்துவதோடு தலித் தோழர் குடும்பத்திற்கு முழு உதவியையும் ‘தம்பி’செய்கிறார். எங்களால் (தேவரால்) மட்டுமே தலித்திற்கு உடல் வன்முறையில் இருந்தும் பொருளியல் வன்முறையில் இருந்தும் பாதுகாப்பு தரமுடியும் என இப்பாத்திரப் படைப்பு நமக்கு விட்டுச் செல்கிறது. ஊரையே இரத்தச் சகதியில் முழ்கடிக்கும் ரௌடிக் கும்பலைத் திருத்துவதோடு மட்டுமில்லாமல், தாதா ரௌடியின் குடும்பத்தையும் அவர்களே திட்டமிடும் கலவரத்திற்கு நடுவில் தம்பி வேலு தொண்டைமான் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றுகிறான். ரௌடிக் கும்பலின் தலைவன் மெய்சிலிர்த்து தம்பியை ‘தன் குலசாமி’யென ஆராதிக்கிறான். அவனுக்கு தம்பி ‘குலசாமி’ தான். ‘ஞானத் தந்தை’ பாரதிராஜாவால் உணர்வூட்டப்பட்ட சீமானுக்கு அவன் பேரன்பு கொண்ட ‘தம்பி’ தான்.முலை அறுக்கப்பட்ட மூளியாய், இராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேவர் சாதி வெறியர்களால் நிர்வாணமாக வீசப்பட்ட ஒரு பள்ளச் சகோதரியின், வன்னியர் சாதி வெறியர்களால் வீடு கொளுத்தப்பட்டு, விழுப்புரத்தில் சாம்பலாய்க் கரிந்து போன ஒரு பறத் தாயின், கவுண்டர் சாதி வெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கும், சுரண்டலுக்கும் நித்தமும் உள்ளாக்கப்படும் ஒரு அருந்ததியச் சகோதரியின், போலீசு மிருகங்களால் வாழ்வு சீரழிக்கப்பட்ட வச்சாத்தி பழங்குடியினப் பெண்களின் தலைமுறை வாரிசாய் சீமான் அறியாத ‘பெருங்கோபம்” கொண்ட தம்பிகளில் ஒருவன் நான்.சாதி வெறியர்களை, வன்கொடுமையாளர்களை, பெண் உடல்களின் மீது தங்கள் அதிகார-வக்கிர வெறியைப் பிரயோகிப்பவர்களை உபதேசம் செய்து திருத்தவும் அதற்கு ‘என்னை நானே எரித்துக் கொள்வேன்’என ‘தம்பி’யைப் போல தன்னைப் பணயம் வைக்கவும் அன்புக்குரிய அண்ணன் சீமானே, அடுத்த திரைப்பட ஆக்கங்களில் அறிவுறுத்த வேண்டாம். ஏனெனில் ‘நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென, எங்கள் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்’. எங்கள் எதிரிகள் யாரென்பதை நாங்களே தீர்மானிக்கிறோம்.அமைதி என்பது யுத்தத்திற்குப் பிந்தையது. யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை அல்லது இப்போது தான் தொடங்கியிருக்கிறது.பின்குறிப்பு :இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் இளையாங்குடியில் பிறந்த இயக்குனர் சீமானுக்கு:‘தெருவில் குரங்கு குட்டிக் கரணம் போட்டாலும் வேடிக்கை பாக்குறீங்க, கொலை நடத்தாலும் வேடிக்கை பாக்குறீங்க’என பொதுப்புத்தியைச் சாடும் உங்கள் சமூகக் கோபம் ‘தம்பி’க்கு மரியாதையைத் தந்திருக்கிறது.பசும்பொன் தேவரை அறிந்த உங்களுக்கு, பரமக்குடியில் நடுவீதியில் படுகொலை செய்யப்பட்ட போராளி இம்மானுவேல் சேகரனையும் தெரிந்திருக்கும். வேலு தொண்டைமானின் இடத்தில் இம்மானுவேல் சேகரனின் தலைமுறையிலிருந்து ஒருவனைக் கதாநாயகனாக்கியிருந்தால், ‘தம்பி’யின் திரைக்கதை தடம்மாறிப் போயிருக்கும்.
மள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் - மூவேந்தர்
மள்ளர் குலத்தவர்கள். மள்ளர் என்ற அவர்களது பூர்வீகப் பெயர் சேர, சோழ, மாமன்னர்களின் ஆட்சியதிகார வீழ்ச்சியின் பின் விஜயநகர வடுகர்களால் அவர்களின் கைக் கூலிகளால் பள்ளர்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.அத்ற்குதவியாக பள்ளு இலக்கியங்கள் இயற்றப்பட்டது. தற்பொழுது நாற்பது பள்ளு இலக்கிய நூல்கள் தமிழகத்தில் இருக்கின்றன். அவ்ற்றில் இரண்டு, நூறு வருடங்களுக்கு யாழ்ப்பாணப் புலவர்களால் இயற்றப்பட்டது. இச்சமூக மக்களை இழிவபடுத்தவே பள்ளு இலக்கியம் இயற்றப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது. மள்ளர் என்ற பெயர்தான் பள்ளர் என்று மாற்றப்பட்டதனை பள்ளு நூல்களிலேயே காணலாம். செங்கோட்டுப் பள்ளு மள்ளர் குலத்தவர்களின் கொடைப் பண்புகளையும் விழுமியங்களையும் எடுத்துக் கூறுகின்றது.
Posted by Mallar kula Kshtriyan at 7:57 AM
எழுதப்படாத சரித்திரம் 28
Posted on பெப்ரவரி 8, 2010 by devendirar
எழுதப்படாத சரித்திரம் 28‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’‘தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும்.
மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள்.
காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்யமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள். வயல் நண்டுகள், ஆமைகள், ஆடுகள், மான்கள் அவர்களின் உணவாயின.
நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள்.
‘மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.
‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்…’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.
இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.
‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.
நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்?
யார் இந்த தேவேந்திரன்?
ஆரியர்களின் ஆதிக் கடவுள் இந்திரன். அவர்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் முப்பது சதவிகிதம் இந்திரன் பற்றிய பாடல்களே ஆகும். ‘எங்களுக்குச் சோறு கொடு, சுராபானம் (சாராயம்) கொடு, எங்கள் எதிரிகளை அழி என்று கேட்டுக்கொள்ளும் பாடல்கள் அவை. இந்திரன், புராணங்களின் படி தேவர்களின் கடவுள். காசிப முனிவரும், அதிதி தேவியும் அவன் பெற்றோர். அவன் மனைவி இந்திராணி. ஆயுதம் வச்சிரம். இந்திரன் பற்றிய வேறு நல்ல தகவல்கள் புராணங்களில் இல்லை. ஆனால், ஆரியர்களின் ஆதி இலக்கியங்களில் அவன் ஒப்பற்ற கடவுளாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அவன் மழை, இடி, மின்னல் ஆகியவைகளின் கடவுளாக இருக்கிறான். ஆக, ஆரியர்களின் மழைக் கடவுள் இந்திரனே ஆவார்.
உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது. ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள்.
வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘போகி’ என்ற பெயர் இந்திரனுக்கு உண்டு. தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி.
மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது.
சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை.
‘மள்ளரியம்’ எனும் பண்பாட்டுச் சொல்லை உருவாக்கிய அறிஞர் முனைவர் தே.ஞானசேகரன், இதுபற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அவைகளில் இருந்து சில குறிப்புகள் தருகிறேன்.
நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள்.
நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.
பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.
சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-?
சரித்திரம் தொடர்கிறது
‘
பிரபஞ்சன்
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized Leave a Comment »
history
Posted on பெப்ரவரி 8, 2010 by devendirar
எழுதப்படாத சரித்திரம்குடும்பம் உருவான வரலாறு!தேவேந்திர வேளாளர்களின் குலமரபுக் கதைகளாகப் பல கிடைக்கின்றன. ஆய்வாளர் தே.ஞானசேகரன் சுமார் 12 கதைகளைத் தொகுத்துத் (மள்ளர் சமூக வரலாறு) தந்திருக்கிறார். ஒரு கதை, தேவேந்திரனுக்கும் நீர் நிலையில் இருக்கும் தாமரையில் இருக்கும் திருமகளுக்கும் பிறந்த குழந்தையின் வழியினரே தேவேந்திரர்கள் என்கிறது. தேவேந்திரனின் வியர்வையில் பிறந்தவர்கள் அவர்கள் என்கிறது ஒரு கதை.
இந்திரனின் பிள்ளை தேவேந்திரன் பள்ளிக்குச் செல்லாமல், குழிதோண்டி, தண்ணீர்ப் பாய்ச்சி உழவு செய்து விளையாடினான். இந்திரன் அதைக் கண்டு தேவேந்திரனை பூமிக்கு அனுப்பி வேளாண்மை செய்யச் சொல்லி இருக்கிறான். அந்த தேவேந்திரன் பூமிக்கு நெல்லைக் கொண்டு வந்து நட்டான். பார்வதியின் வியர்வையில் பிறந்தவன் கழியன்(கழிநீர் நீலை) என்பவன். அவன் மேலோகத்தில் முதல் முதலாக நெல்லைக் கண்டுபிடித்து அதைச் சாப்பிட்ட சிவன், அந்த அரிசியின் சுவையைப் பாராட்டுகிறார். அந்த கழியன் பூமியில் நெல் விவசாயம் செய்கிறான்.
ஒரு கதை இப்படிச் சொல்கிறது. பார்வதிக்கும் சிவனுக்கும் வல்லபன் என்று ஒரு குழந்தை பிறக்கிறான். வல்லபன், இந்திரனுக்கு வளர்ப்பு மகனாகிறான். அப்போது சிவன், ‘நீ நெல்லை உற்பத்தி செய்து, பூலோகத்தில் பயிர் செய்து மக்களைக் காப்பாற்று, நீ வேண்டும்போது பார்வதி கங்கை நீரைப் பொழிவாள், நீ இருக்கும் இடம் என்றென்றும் பசுமையாகவும், நீர் நிறைந்தும் இருக்கும் என்று வரம் அளித்து பூமிக்கு அவனை அனுப்புகிறார். தேவேந்திரன் குடும்பம், ‘செந்நெல், மண்வெட்டி, உழுவயல், நீர் நிறைந்த குளம், ஆறு’ வேண்டுமென்று கேட்டது. சிவனார் மகிழ்ந்து, கேட்டதைக் கொடுத்தார். அதுமுதல் தேவேந்திரர்கள் நெல் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.
தேவேந்திர குல வேளாளர்களில் குலமரபுக் கதைகளின் சாரம் இதுதான். இந்தப் புராண, மக்கள் மரபுக் கதைகள், மூன்று விஷயங்களைத் தம் பாணியில் சொல்லி இருக்கின்றன. ஒன்று, நெல் மேல் உலகில் இருந்து கொண்டு வரப்பட்டது. இரண்டு, தேவேந்திர குலம் நெல்லை உருவாக்கி, உற்பத்தி செய்து வாழும் குலம். மூன்று, நெல் விவசாயத்துக்கு ஆதாரமாக நீர் நிலைகளை உருவாக்கியவர்கள். இக் கருத்தே அக் கதைகளின் சாரம். இவைகளை ஆராய்வோம். உலகம் முழுக்கப் பழைமையான சமுதாயங்களின் தோற்றக் கதைகள் இப்படியான குறியீடுகளாகத்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இவைகள் கற்பனைகள் அல்ல. கதை ரூபமான உண்மைகள்.
1. நெல் மேல் உலகில் இருந்து, இந்திரன் உலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்க முடியாது. ஆனால், இதர பகுதியில் இருந்து அதாவது மலை மாதிரி குறிஞ்சி நிலப் பகுதியில் இருந்து ஆதி உழவர்களால் சமதளமான மருத நிலத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்பதே இக் கதையின் அர்த்தம். மலைப் பகுதியில், சமவெளிகளில் இயற்கையாக விளைந்துக்கிடந்த நெல் மணிகளைக் கண்டடைந்து, அதை விவசாய விஞ்ஞானமாக மாற்றிக் கழனிகளைத் தயார் செய்து பண்படுத்தி நெல் விதைத்து, நாற்றுகளை உருவாக்கி, மாற்றி நட்டு, விவசாயம் செய்திருப்பதையே அந்தக் கதைகள் குறிப்பிடுகின்றன. மலை என்பதைத்தான் மேல், மேல் உலகம் என்று மக்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்.
2. ஆதி உழவர்களான, தேவேந்திர குலம், சுமார் அறுபது வகையான நெல்லைக் கண்டுபிடித்து விவசாயம் செய்திருக்கிறது. சங்க காலத்துக்குச் சற்று முன்னர், தமிழ் மக்கள் உணவில் நெல் பிரதான இடம் பெறவில்லை. வரகரிசி, தினை, கொள்ளு, அவரை ஆகியவை பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதாக, புறநானூறு 335ம் பாடல் சொல்கிறது. ஆக, தமிழர் உணவில் நெல் என்கிற உணவுப் பொருளைச் சேர்த்ததில் ஆதிகால உழவர்களான மள்ளர்க்குப் பேரிடம் உண்டு என்பது இந்தக் கதைகளின் அடுத்த சேதி.
3. நெல் விவசாயத்துக்காக நீர் நிலை, ஆறு, குளம், ஏரி, வாய்க்கால்கள் வேண்டும். அதை, நெல் விவசாயம் செய்த மள்ளர்கள் உருவாக்கினார்கள். இது ஒரு விஞ்ஞானம்தான். மழைத் தண்ணீர் ஓடும் பாதையைக் கண்டறிந்து, அது தேங்கி நிற்கும் இடத்தில் குளம் வெட்டினார்கள். பெரும் பள்ளத்தை ஏரி ஆக்கினார்கள். இயற்கை நீர்ப் பெருக்கை ஆறு என்று பெயரிட்டு (நிலத்தை அறுத்துக்கொண்டு செல்வதால் அது ஆறு ஆயிற்று. ஆறு என்றால் வழி என்று பொருள்) அதன் இரு கரையிலும் மேடுயர்த்திக் கரை கட்டிக்கொண்டார்கள். நீரை நிர்வாகம் செய்தவர்கள், நீர் ஆணிக்கர் என்று சொல்லப்பட்டார்கள். பண்ணைக்கு உரிமையாளர் பண்ணாடி ஆனார்கள். கடைமடைப் பகுதியில் விவசாயம் செய்தவர் கடையர் ஆனார்கள். மடை எடுக்கும் நுட்பம் கற்றவர்கள் மடையர் ஆனார்கள். களத்தில்நெற்களத்தில் பணி செய்தவர் களமர் ஆனார்கள். கால் என்றால் நிலப்பகுதி என்று பொருள். வெற்றிலைக் கால், என்றால் வெற்றிலை விளைநிலம் என்று அர்த்தம். நெற்காலில் பணி செய்தவர்கள் காலாடி ஆனார்கள். வாய்க்கால்காரர்களே வாய்காரர்.
மருத நிலத்தின் விவசாயம் நிலை பெற்றதை ஒட்டிய காலப் பகுதியில்தான்சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், குடும்பம் என்கிற சமூக அமைப்பு தோன்றி இருக்கிறது. ஒரு தலைவி, ஒரு தலைவன், குழந்தைகள் என்ற ரத்த உறவு கொண்டவர்கள், ஒரு கூரையின் கீழ், தனிச் சொத்து உரிமையோடு வாழத் தொடங்கிய காலம்தான் குடும்பம் என்ற அமைப்பு உருவான காலம். அது, மருத நில உழவர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. அந்த அமைப்புக்குக் காரணமாக இருந்த மருத நில உழவர்கள் குடும்பனார் எனப்பட்டார்கள். குலம், குழு வாழ்க்கை சிதைந்து, தனிச் சொத்து, தனிக்குடும்பம் உருவான பழம் காலத்து வரலாறு இது. சங்க இலக்கியம் முழுக்க முழுக்கக்
குடும்ப அமைப்பை நிலைப் பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதற்குக் காரணம், உருவாகி வந்து கொண்டிருக்கிற புதிய நாகரிகமாகிய ‘குடும்பம்’ என்ற புதிய வாழ்க்கைமுறையை நிலைபேறு அடையச் செய்யத்தான்.
குடும்பம் என்பது, ஒரு சிறிய அரசாங்கம். பெரிய அரசாங்கத்தின் சிறிய பதிப்பு அது. அங்கு அரசன். இங்கு குடும்பத் தலைவன். அங்கு அரசி. இங்கு தலைவி. அங்கு அரசுக்கு உரியவன் இளவரசன். இங்கு சொத்துக்கு உரியவர்கள் குழந்தைகள். இந்தக் குடும்பம் என்ற அமைப்பில்தான் ‘ஆண் தலைமை’ உருவாகிறது. (அது சரியா, தவறா? என்று ஆராயும் இடம் இதுவல்ல.) குடும்ப அமைப்பு நிலைபெற்ற பிறகுதான் திட்டவட்டமான சட்டமுறைகள், அமைப்புகள் கொண்ட அரசுகள் உருவாகின்றன.
சங்க காலத்திலேயே இந்திர வணக்கம் இருந்திருக்கிறது. இந்திரன், பெரிய கடவுளாக இருந்திருக்கிறான். இந்திரனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் சங்கத் தமிழர்களிடம் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரம் சங்க இலக்கியமான ஐங்குறு நூற்றில், ஓரம் போகியார் எழுதிய மருதம் தொடர்பான பாடலில் இந்திர விழா பற்றி வந்துள்ள செய்தி இது:
இந்திர விழாவிற் பூவின் அன்ன புன்தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி எவ்வூர் நின்றன்று மகிழ்ன நின் தேரே& என்பது அந்தப் பாடல்.
இந்திர விழாவுக்குப் பலவிதமான பூக்களைத் தருவித்துத் தொகுத்தாற்போல, இவ்வூர் மங்கையரைத் தொகுத்து ஆடல் பாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது இப்பாட்டின் சுருங்கிய பொருள்.
இந்திரவிழா கொண்டாடப்-படுவதன் நோக்கம், முதல் நோக்கம் மழை. மழைக்குக் கடவுளாகிய இந்திரனை விழா எடுத்து வணங்கி அவன் அருளாகிய மழையைப் பெறுவது என்பதே. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகினால், நாட்டில் பசி மறையும். வளம் பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதாகும். அதனால்தான் பொங்கலுக்கு முதல்நாள் இந்திரனாகிய போகிக்கு (போகிபோகம் துய்ப்பவன்) ஒதுக்கப்பட்டது.
மருத நிலத்து வேந்தன், இந்திரன் வழிபாடு இவ்வளவு சிறப்பாக நடந்த நாட்டில், அது வழக்கமற்று மறைந்து போகக் காரணம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. சிலப்பதிகாரம் அதற்குப் பிந்தைய மணிமேகலை காலத்திலும், கி.பி. 5ம், 6ம் நூற்றாண்டு வரை இந்திர வணக்கம் பெரு வழக்காக இருந்து வருகிறது. பின் ஏன் மறைந்தது?
அறிஞர் குருசாமி சித்தர் களப்பிரர் மற்றும் வடுகர் ஆட்சிக் காலங்களில் சமய தளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் வாழ்க்கை முறை மாறியது என்கிறார். உண்மைதான். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு, சைவ, வைணவ மதங்கள், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டன.
வைணவ மதக் கடவுளான கண்ணன், இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடை செய்கிறான். இந்திரன் கோபம்கொண்டு, ஊரை அழிக்கும் மழையை, புயலை அனுப்புகிறான். கண்ணன், கோவர்த்தனகிரி மலையைத் தூக்கிப் பிடித்து, மக்களைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அழித்தான் என்கிற கதை இந்திர மதத்துக்கும், வைணவத்துக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தின் கதைதான். சங்க காலத்துக்குப் பிறகு, குறிப்பாக சோழப் பேரரசர்கள் காலத்தில் அரசர்களின் ஆஸ்தான புரோகிதர்களாக அமர்ந்த பிராமணர்கள், ராஜகுருக்களாக விளங்கி, தமது பூர்வ வைதீகத்தை விடுத்து, சைவம், வைணவம் சார்ந்ததும், மள்ளர்கள் வேத மதங்களான சைவ, வைணவத்தை ஆதரித்ததும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.
மிகப் பெரிய கோயிலைக் கட்டச் சொன்னார் ராஜ-ராஜனிடம், அவன் ஆசிரியரும் ராஜகுருவும் ஆன கருவூர் தேவர். இதன் காரணம், கோயில் மிகப் பெரிதாய் இருப்பதன் குறியீடு, மற்ற மதங்களைவிடவும் சைவம் பெரியது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தத்தான். வைணவத்துக்கும் இது பொருந்தும். இந்திரனின் பரம்பரையாகச் சொல்லிக்கொண்ட வேந்தர்கள், சிபியின் பரம்பரையாகச் சொல்லிக்கொண்டார்கள்.
தமிழரின் சமயம், வாழ்க்கையோடு இணைந்த, மிக இயல்பான மிக எளிமையான சமயம். வாதங்கள், தத்துவங்கள் இல்லாத மகிழ்ச்சி தரக்கூடிய சமயம். தமிழர்களே அடிப்படையில் இன்ப நாட்டம் உடையவர்கள். அன்பும், காதலும், மிக இயற்கையாக வெளிப்பட்ட சண்டையும், போரும், போருக்குப்பின் சமாதானமும் என்று மிகச் சாமான்ய, அதேசமயம் மிக எளிமையான சமூகம் இது.
மிகக் கடுமையான சண்டையும் மிகக் கடுமையான அன்பும் கொண்ட, தூய்மையான மனமும் இயற்கையாகிய வாழ்வும் கொண்ட மகத்தான இனம் தமிழினம். வடநாட்டிலிருந்து வந்த சமயங்களும் உள்நாட்டுச் சமயங்களும் அவர்கள் வாழ்க்கை என்ற குளத்தில் கல் வீசி அவர்கள் அமைதியக் கெடுத்தன.
என்றாலும் மள்ளர்கள் பலருக்கே அவர்கள் வரலாறு தெரியவில்லை. அவர்கள் விளைவித்த நெல் மணிகளின் குவியல்தான், ஒரு காலச்சக்கரத்தையே கட்டி எழுப்பியது. தமிழ்க் கலாசாரம், பண்பாடு என்று தமிழரின் பெருமைகளாகப் பேசப்படுவது எல்லாம் தமிழ் உழவர்களின் கலாசாரம்தான் என்பதே உண்மை. நெற்களம்தான் தமிழ்க் களம். நெல் என்பதே சொல்லும் ஆயிற்று. நீர் என்பதே நீர்மை ஆகி, அன்பாயிற்று. வரப்பு என்பதே வரம்பாகி, சட்டம் நீதி ஆயிற்று. விளைச்சல் என்பதே சமூக வளர்ச்சி என்று ஆயிற்று. உழப்பட்டதுக்கே நிலம் என்று பேர். உழப்படாதது வெறும் மண்தான். உழவர்களே சகல முன்னேற்றத்துக்கும் அச்சாணி.
சரித்திரம் தொடர்கிறது.‘
பிரபஞ்சன்
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized Leave a Comment »
வீடு வீடாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)