ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 30 மார்ச், 2011

அனைத்து கிராமத்திற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் - டாக்டர். கிருஷ்ணசாமி























ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி குறிஞ்சிநகர், பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.



வாக்குகள் சேகரித்து டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில், "தூத்துக்குடி மாநகராட்சி, சங்கரப்பேரி, மாப்பிள்ளையூரணி, தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி பகுதிகளில் மக்கள் குடிநீர் பிரச்சனையாலும், மின்வெட்டு பிரச்சனையாலும் அவதிப்பட்டு வருகின்றனர். என்னை வெற்றி பெற செய்தால் ஆறு மாதத்திற்குள் அனைத்து கிராமத்திற்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி வகை செய்வேன். பொதுக் கழிப்பிடம், தனி நபர் கழிப்பிடம் அனைத்து கிராம, நகர மக்களுக்கும் கிடைக்க செய்வேன். சாலை வசதி, போக்குவரத்து வசதி மட்டுமின்றி அனைத்து அடிப்படை வசதிகளையும் சட்டசபையில் போராடி பெற்றுத் தருவேன். அரசு திட்டங்கள் அனைத்தும் நேரிடையாக கிடைத்திட, லஞசம், லாவண்யமற்ற முறையில் மக்கள் பயன் பெற பாடுபடுவேன். வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் வகையில் மாசில்லாத தொழில் நிறுவனங்களை தென் தமிழகத்தில் அமைத்திட குரல் கொடுப்பேன்" என்றார்.





மேலும், "தி.மு.க. அரசில் கிலோ அரிசி ஒரு ரூபாய் ஆனால் குடிநீர் விலை 3 ரூபாய், 5 ரூபாய். பருப்பு 100 ரூபாய், எண்ணெய் விலை 100 ரூபாய், உப்பு விலை பத்து ரூபாய் இந்த நிலையில் மக்களை பணம் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கி விடலாம் என தி.மு.க. வினர் வருகின்றனர். தாமிரபரணி, வைகை, பாலாறு என ஆற்று மணலை கொள்ளையடித்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தை வைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என நினைக்கின்றனர். மக்கள் வாக்குகளை விற்று தங்கள் உரிமைகளை இழந்து விடக்கூடாது. தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.





ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அம்மையார் அவர்கள் ஏழைகளே இருக்க கூடாது என திட்டம் தீட்டியுள்ளார். மீனையும் கொடுத்து, மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கவும் உள்ள திட்டம்தான் கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம். இதனால் தானாகவே மக்கள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்" என்று டாக்டர்.கிருஷ்ணசாமி பேசினார்.



அ.இ.அ.தி.மு.க., சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., மூவேந்தர் முன்னேற்ற கழகம், பார்வர்ட் பிளாக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.

டாக்டர். கிருஷ்ணசாமி பிரச்சாரம்






அப்பாவி மக்கள் இழந்த நிலங்களை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுப்பேன் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார்.





தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் மோசடியாக விற்கப்பட்டு வருகின்றது. ஆளும் தி.மு.க. பிரமுகர்களின் அரசியல் செல்வாக்கினால் போலி பட்டாக்கள் தயாரித்து வெளி மாநில பிரமுகர்களுக்கும், பெரிய தொழிலதிபர்களுக்கும் நிலங்கள் விற்கப்பட்டு வருகின்றது.



பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் கிடையாது. காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால், இது சிவில் வழக்கு விசாரித்துதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி வழக்கு பதிவு செய்வதே கிடையாது. ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாநத்தம் கிராமத்தில் சுமார் நூறு ஏக்கர் நிலங்களை இழந்த ஐம்பத்திற்கு மேற்பட்ட சிறு விவசாயிகள் மற்றும் பெண்கள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்து மனு அளித்தனர்.



சில்லாநத்தம் மட்டுமின்றி ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற்றுள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நில மோசடிக்கு முடிவு கட்டுவேன் எனவும், அப்பாவி மக்கள் இழந்த நிலங்களை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுப்பேன் எனவும் டாக்டர்.கிருஷ்ணசாமி உறுதியளித்துள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம்





ஓட்டப்பிடாரம் தொகுதி, அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று மாலை தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அப்பொழுது, அதிமுக முன்னாள் செயலாளர் விபிஆர் சுரேஷ், தற்போதைய ஒன்றிய செயலாளர் சண்முகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.





இன்று அவர், அத்திமரப்பட்டியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை டாக்டர் கிருஷ்ணசாமி தொடங்கினார். அப்போது, அவர் பேசியதாவது : நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் எனக்கு தெரியும். அத்திமரப்பட்டி கிராமம் 3 போகம் விளையும் பூமி. நான் சட்டமன்றம் சென்றால் இதற்காக குரல் கொடுப்பேன். விவசாயிகளை நான் பாதுகாப்பேன்.



ஓட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர் சாலை வசதிகளுக்காக, பாடுபடுவேன். நான் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, எதற்கும் 5 பைசா கூட வாங்கியது கிடையாது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானாலும் சரி, சாத்தான்குளத்தில் டாடா ஆக்கிரமிப்பு ஆனாலும் சரி நான் குரல் கொடுத்தேன். இது நண்பர் சரத்குமாருக்கு தெரியும். என்மீது முழு நம்பிக்கையுடன் எனக்கு நீங்கள் வாக்கு அளிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.



இதைத் தொடர்ந்து, அவர் அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், சேர்வைகாரன்மடம், கட்டாலங்குளம், முடிவைதானேந்தல், வர்த்தகரெட்டிபட்டி, திம்மராஜபுரம் ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.

சனி, 26 மார்ச், 2011

நெல்லை தொகுதியில் பசுபதி பாண்டியன் போட்டி

அகில இந்திய தேவேந்திர குல கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நெல்லை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.இவர் நேற்று மாலை நெல்லை கோட்டாட்சியர் ராஜபிரபாகரனிடம் மனுதாக்கல் செய்தார்.



நெல்லை தொகுதியில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் போட்டியிடு கிறார்


அவரது மனுவை முன்மொழிந்த 10 நபர்களில் ஒருவர் பாளை தொகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை மீண்டும் கோட்டாட்சியரிடம், பசுபதி பாண்டியன் மனுதாக்கல் செய்தார். அவருடன் மாநகர செயலாளர் வண்ணை முருகன்,தென்மண்டல அமைப்பாளர் பொன்ராஜேந்திரன் ஆகியோர் உடன் வந்தனர்.





அதே போல் நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏஎல்எஸ் லட்சுமணனுக்கு மாற்று வேட்பாளராக மாநகர துணை செயலாளரும்,நெல்லை பகுதி செயலாளருமான உலகநாதன் இன்று மனுதாக்கல் செய்தார். இதே போல் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மதனுக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் லட்சுமணன் மனுதாக்கல் செய்தார்.

johnpandian


ஓட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர்.கிருஷ்ணசாமி பிரசாரம்









ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஓட்டு சேகரித்தார்.



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதியதமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நேற்று புதூர்பாண்டியாபுரம் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். புதூர்பாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.



பிரசாரத்துக்கு மோகன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், அ.தி.மு.க. தொகுதி செயலாளர் புகழும்பெருமாள், மாநில அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வேலாயுதபுரம், சில்லாநத்தம், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

திங்கள், 21 மார்ச், 2011

முதுகுளத்தூரில் ஜான்பாண்டியன் போட்டி

முதுகுளத்தூர்:தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன், முதுகுளத்தூரில் கூட்டணிக் கட்சி ஆதரவுடன் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலில் மூன்றாவது அணியாக யாதவ மகா சபை, எங்களது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி ஆகியோரது கட்சிகள் இணைந்து, தேர்தலை சந்திக்கிறோம்.இந்த மூன்றாவது கூட்டணி கட்சி சார்பில், தமிழகத்தில், 13 இடங்களிலும், நான் முதுகுளத்தூரிலும் போட்டியிடுகிறேன். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள், வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.