வெள்ளி, 1 ஏப்ரல், 2011
டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம்
எங்களுக்கு சீட் முக்கியமில்லை. தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம் என, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,
தமிழகத்தில் நிலமில்லாத விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியது. அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது என்று தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

புதன், 30 மார்ச், 2011
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு 10 தொகுதிகளில் போட்டி; நெல்லை வேட்பாளர் பசுபதிபாண்டியன்
வருகிற சட்டசபை தேர்தலில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
நெல்லை தொகுதியில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் போட்டியிடு கிறார். தேர்தல் பணிகளில் ஈடு படுவது குறித்து நிர்வாகி களுடனான ஆலோசனை கூட்டம் பாளை சகுந்தலா ஓட்டலில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் அறிமுகப் படுத்தப்படுகிறார்கள்.

2 தொகுதிகளில் ஜான் பாண்டியன் போட்டி
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் முதுகுளத்தூர், நிலக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஜான்பாண்டியன் பாளையங்கோட்டையில் நேற்று மாலை கூறியதாவது:-
இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சமூக சமத்துவ பறை, வாணிப செட்டியார் பேரவை, வ.உ.சி. பேரவை, அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆகிய 6 கட்சிகள் இணைந்து இந்திய ஜனநாயக முன்னணி என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கூட்டணிக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டணி வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக முன்னணி கூட்டணியில், எங்கள் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
நாங்கள் 8 பொதுத்தொகுதிகளிலும், 8 தனித்தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். பொதுத்தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் முடிவு அமையும். முதுகுளத்தூர் (பொதுத்தொகுதி), நிலக்கோட்டை (தனித்தொகுதி), ஆகிய 2 தொகுதிகளில் நான் போட்டியிடுகிறேன். மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவிக்கிறேன்.
ஸ்ரீவைகுண்டம்- சாந்திதேவி, போடி நாயக்கனூர்- முகமது ஷாபி, உடுமலைப்பேட்டை- கண்ணன், ராஜபாளையம்- கருப்பசாமி, சூளூர்- அலெக்ஸ் பாண்டியன், சிங்காநல்லூர்- கலைச்செல்வி, அருப்புக்கோட்டை- கலைச்செல்வன், பெரியகுளம்- நல்லுசாமி, பரமக்குடி- சந்தோஷ்குமார், சங்கரன்கோவில்- ராஜேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர்- கண்ணன், துறையூர்- பி.சம்பத்குமார், அவினாசி- ரங்கசாமி, சோழவந்தான்- ஏ.ஜவகர். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.
ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறோம். நிலக்கோட்டையில் மாவட்ட தலைவர் ஆ.ராமசாமி போட்டியிடுவார். ஒட்டப்பிடாரத்தில் நான் போட்டியிடுகிறேன். நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன். தொடர்ந்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன். கூட்டணி கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்வது குறித்து கூட்டணி தலைமை தான் அறிவிக்க வேண்டும். எங்கள் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)