ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 23 ஜூலை, 2012

நீர் ஆதாரங்களை பாதுகாக்க போராட்டம் "புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி அழைப்பு

கோவை : ""தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க, அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு போராடும் விதத்தில், ஆக., 6ம் தேதி சென்னையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படும்'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
தெரிவித்தார்.கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேயிலை தோட்டத் தொழிலாளர் உரிமைக்காக, 1999 ஜூலை 23ல், "புதிய தமிழகம்' தலைமையில், திருநெல்வேலியில் நடந்த பேரணியில், போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகி, 17 பேர் தாமிரபரணி ஆற்றில் இறந்தனர். அவர்களின் 14வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (இன்று) திருநெல்வேலியில் பேரணி மற்றும் மவுன அஞ்சலி நடக்கிறது. தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளன. நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்த, தமிழக அளவில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி, ஆக., 6ம் தேதி சென்னையில், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துகிறோம். டாஸ்மாக் "பார்' ஒப்பந்த படிவ வினியோகத்தில்,விண்ணப்பங்களை வெளிப்படையாக கொடுக்காமல், குறிப்பிட்ட சிலருக்கு தருவதாக திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் புகார்கள் வந்துள்ளன. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்; அரசு வருமானத்தில் நஷ்டத்தை தரும். தகுதியுடையவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 14 ஜூலை, 2012

மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் ஆய்வு

திரு.கு.செந்தில்மள்ளர் தனது படைப்பான மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் ஆய்வு நூலில் மறுக்க முடியாத இலக்கிய,கல்வெட்டு,செப்பேடு,நில ஆவனம் உள்ளிட்ட சான்றுகளால் பள்ளர்களே பாண்டியர்கள் என மெய்ப்பித்திருக்கிறார். தமிழ்நாட்டின் மிக உயர்ந்த தரத்தில் வந்துள்ள முதல்தர புத்தகம் மள்ளர்களால் மள்ளர்களே பாண்டியர்கள் என எழுதப்பட்ட உலக தரத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் அவசியம் வாங்கி படியுங்கள்

கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தூத்துக்குடி, ஜூலை.12-

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தூத்துக்குடி வந்தார். அப்போது புதியதமிழகம் கட்சி தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. வுமான டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யப்படவில்லை என்றும், வீட்டுமனைபட்டா,குடிநீர், முதியோர் உதவித்தொகை தொடர்பாக கொடுக்கப்பட்ட 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

இதையடுத்து அந்த பிரச்சினை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். அதன்பிறகு அமைச்சரை முற்றுகையிட்டிருந்த பொது மக்கள் கலைந்துசென்றனர். கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.