சனி, 18 ஆகஸ்ட், 2012
அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீட்டுக்கான சட்டம் எதிர்த்து புதிய தமிழகம் கட்சி ஐகோர்ட்டில் மனு
சென்னை : அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு
வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில்,
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல்
செய்த மனு: கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்பில், ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினருக்கு, 19 சதவீத இடஒதுக்கீடு வகை செய்வதற்கான சட்டம் உள்ளது.
இடஒதுக்கீட்டு விதிகளை அமல்படுத்துவதில் பல குறைபாடுகள் உள்ளன.
அருந்ததியினர் சமூகத்தில் உள்ள ஏழு பிரிவுகளுக்கு, முதல் இடம்
ஒதுக்கப்படுவதன் மூலம், ஆதிதிராவிட சமூகத்தில் உள்ள, 69 பிரிவினருக்கு
வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இச்சட்டத்தால், ஆதிதிராவிட பிரிவுகளில்
பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே, அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீட்டுக்கு வகை
செய்யும் சட்டம் செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்
பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய,
"முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு
நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012
கல்வி உதவித் தொகை திட்டம்: புதிய தமிழகம் கட்சி கோரிக்கை
சென்னை, ஆக. 5: உயர்கல்வி பெற விரும்பும் ஏழை மாணவ, மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள உதவித் தொகை திட்டத்தை கல்லூரி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: சமூக நீதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவ, மாணவர்களுக்கு அரசு உதவிபெறும் தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அக் கல்லூரிகளில் நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்த முடியாததால் ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
இப் பிரச்னை குறித்து நான் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். எனவே, அந்த கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவித்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 115 கோடியை முதல்வர் ஒதுக்கினார்.
மேலும், 1985-ம் ஆண்டு அரசு ஆணையின்படி, பட்டியலின மாணவ, மாணவர்களிடமிருந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அதையும் கல்லூரி நிர்வாகங்கள் செயல்படுத்துவதில்லை.
இந் நிலையில், முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தை எந்த கல்வி நிறுவனமும் அமல்படுத்துவதாகத் தெரியவில்லை.
எனவே, கல்லூரி நிர்வாகங்கள் அந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பட்டியலின மக்களிடம் கட்டணம் வசூலிப்பதையும் கைவிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்
சிலைகள் உடைப்பு: பஸ்கள் நிறுத்தம்
மதுரையிலிருந்து அவனியாபுரம், பெருங்குடி, காரியாபட்டி, ரிங் ரோடு தடங்களில் இயக்கப்படும் அரசு மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் வெளியூர் பஸ்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.
மதுரையில் பதற்றம்: அம்பேத்கர், இமானுவேல் சிலைகள் விஷமிகளால் உடைப்பு
அவனியாபுரம்: மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே டாக்டர் அம்பேத்கர் சிலையும், இமானுவேல் சேகரன் சிலையில் உடைக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவனியாபுரம் அருகே பெருங்குடியில் விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள அம்பேத்கார் சிலையை நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர். அதேபோல பெருங்குடி அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள இமானுவேல்சேகரன், அம்பேத்கர் சிலைகளையும் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி விட்டு தப்பி விட்டனர்.
இரண்டு இடங்களில் அம்பேத்கர் சிலை, இமானுவேல்சேகரன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அவனியாபுரம், பெருங்குடி, சுற்று வட்டார பகுதிகளில் காட்டு தீ போல பரவியது.
இந்த நிலையில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி விடுதலை சிறுத்தை கட்சியில் பெருங்குடி ரிங் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, சாத்தூர், விருதுநகர் ஆகிய ஊர்களில் இருந்து மதுரைக்கு வரும் பஸ் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு பல கிலோ மீட்டர் தூரம் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
அதேபோல சின்ன உடைப்பு கிராமத்திலும் 500-கும் மேற்பட்ட பொதுமக்கள் சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் மதுரையில் இருந்து அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.
சிலை உடைப்பு மற்றும் பஸ் மறியல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 இடங்களில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் நடுரோட்டில் முட்கள், மரங்களை போட்டு தடை ஏற்படுத்தி உள்ளனர். சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்களால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.

தலைவர்களின் சிலைகள் உடைப்பு: 60 பேர் கைது: மதுரையில் பதட்டம்
மதுரையில் சிந்தாமணி, சின்னஉடைப்பு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலை இரண்டும், இமானுவேல் சேகரன் சிலையையும் நேற்று இரவு சேதப்படுத்தப்பட்டிருந்தது.
அதிகாலையில் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறிய-ல் ஈடுபட்டவர்களை போலீசார் கலைக்க முயன்றனர். பின்னர் 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)