செவ்வாய், 2 ஜூலை, 2013
திங்கள், 1 ஜூலை, 2013
லால்குடியில் புதிய தமிழகம் உண்ணாவிரதம்
லால்குடியில் புதிய தமிழகம் உண்ணாவிரதம்
லால்குடி, : லால்குடியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற் றது.
ஒன்றிய செயலாளர் நம்பிராஜ் தலைமை வகித்தார். தொண்டரணி செயலாளர் மணிகண் டன், மகளிரணி தலைவி கலாவதி, அவைத்தலை வர் செல்வமணி, ஒன்றிய பொறுப்பாளர்கள் பிர பாகர், செல்வமணி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். புதிய தமிழகம் கட் சியின் மாநில தலை வர் டாக்டர் கிருஷ்ண சாமி கலந்து கொண்டு பேசி னார்.
நகர செயலாளர் சர வணன் வரவேற்றார். புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் முருகானந் தம் நன்றி கூறினார்.
சென்னையில் ஜூலை 15 உண்ணாவிரத போராட்டம் தேவேந்திர குல வேளாளர் அரசியல் முன்னணி முடிவு..
திருச்சி, : ஆய்வு நூலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து சென் னையில்
வரும் ஜூலை 15ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த தேவே ந்திர குல வேளாளர்
அரசி யல் முன்னணி முடிவு செய்துள்ளது.
தேவேந்திரகுல வேளா ளர் அரசியல் முன் னணி குழுவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் புரட்சிகவிதாசன் தலைமை வகித் தார். மூவேந்தர் வக்கீல் சங்க துணைத்தலைவர் சுப்ரமணியம், மாநில பொருளா ளர் தட்சிணாமூர்த்தி, நாகை சோமுஇளங்கோ, மாநில இளைஞரணி செய லாளர் திண்டுக்கல் கணேசபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், செந்தில் மல்லர் எழுதிய ‘மீண்டளும் பாண்டியர் வரலாறு‘ என்ற குடிமரபியல் ஆய்வு நூல் கடந்த ஆண்டு மே 30ல் வெளியிடப்பட்டதற்கு தமி ழக அரசு தடை விதித்ததற் கும், நூலை எழுதிய எழுத் தாளர் மீது சாத்தூர் போலீ சார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததற்கும், நூல் களை பறிமுதல் செய்ததற் கும் கண்டனம் தெரிவித்து, ஜூலை 15ம் தேதி சென்னை யில் போர் நினைவு சின்னம் அருகே உண்ணாவிரதம் மேற்கொள்வது. அன்று மாலை தமிழக முதல்வர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் மனு அளிப்பது போன்ற தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. பின்னர் செய்தியாளர்களிடம் புரட்சிகவிதாசன் கூறுகையில், புத்தகம் வெளி யிட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது எழுத் தாளர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கதக் கது என்றார். கூட்டத்தில், லால்குடி ஆசி ரியர் வரதராஜன், திருச்சி தமிழ்நெஞ்சன், திருப்பூர் பகவதி, கோவை அசோக்பண் ணாடி, புதுகை திருநாவுக்கரசு டென்னீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தகங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்குமா? : புத்தக தடையால் சர்ச்சை...
"பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும்
பாண்டியர்
வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது, கருத்து
சுதந்திரத்துக்கு எதிரானது; தடையை நீக்க வேண்டும்' என, எழுத்தாளர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடை : செந்தில் மல்லர் என்பவர் எழுதிய, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, அப்புத்தகத்தை வெளியிட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இப் புத்தகத்திற்கு தடை செய்திருப்பது, தமிழகத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
இதுகுறித்து, எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் கூறியதாவது: புத்தக வாசிப்பு பழக்கமே, குறைந்து வரும் இன்றைய சூழலில், புத்தகங்களால் மோதல் வரும் என நினைப்பது, தவறானது. கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தில், மிகப் பெரிய ஜாதி மோதல்களை தூண்டும் விதமாக, ஜாதிக்கட்சித் தலைவர்கள் பேசிய போது, அமைதியாக இருந்த தமிழக அரசு, அறிவுதளத்தில் இயங்கக் கூடிய புத்தகங்களை தடை செய்திருப்பது, தவறானது.
சுப தின அழைப்பிதழ்கள், பிளக்ஸ் பேனர்கள், கட் - அவுட்கள் போன்றவை, ஜாதி மோதல்களை தூண்டும் விதமாக வைக்கப்படும் போது, தமிழக அரசு, அதை கண்டும் காணாமல் போகிறது; ஆனால், வரலாற்றை மறுபரிசீலனை செய்யும் நூலை, தடை செய்திருப்பது, துரதிஷ்டமானது; தடையை நீக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
10 லட்சம் பரிசு : நூலாசிரியர் செந்தில் மல்லர் கூறியதாவது: கடந்த, ஏழு ஆண்டுகளாக, தென் மாவட்டங்களில் உள்ள கல்வெட்டுகள், நில ஆவணங்கள், சமூக மரபுகள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை முழுமையாக, ஆய்வு செய்து, 700க்கும் மேற்பட்ட மேற்கோள்களுடன், புத்தகத்தை எழுதினேன். ஏப்., 28ல், சாத்தூரில், பிரமாண்ட விழாவில், நூலை வெளியிட தீர்மானித்திருந்தோம். அதற்கு, மாவட்ட காவல் துறை தடை
விதித்தது. மதுரை ஐகோர்ட் கிளையை அணுகிய போது, மதுரையில் வெளியிட அனுமதி அளித்தது. அதற்குள், தமிழக அரசு, என் புத்தகத்தை தடை செய்துள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்துவது மாதிரியான வார்த்தைகள், என் புத்தகத்தில் இல்லை. அரசு, என் ஆய்வு முடிவுகளின் உண்மை தன்மை குறித்து, ஆய்வு செய்ய, தனிக்குழு நியமித்திருக்க வேண்டும். பின், தடை செய்திருக்க வேண்டும். ஆனால், பொத்தாம் பொதுவாக தடை செய்திருப்பது, தவறானது. என் ஆய்வு முடிவுகள், உண்மைக்குப் புறம்பானவை என, தமிழக அரசு நிரூபித்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு தரத் தயாராக உள்ளேன். இம்மாதம், 28ம் தேதி, புத்தகத்தை வெளியிட தீர்மானித்துள்ளேன். அதற்கு, கோர்ட்டின் உதவியை நாடுவேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியாவில், "எமர்ஜென்சி' அமலில் இருந்த காலத்தில், வலம்புரி ஜானின், "நியாயம் கேட்கிறோம்' என்ற புத்தகமே, தமிழகத்தில், கடைசியாக தடை செய்யப்பட்டது.
- நமது நிருபர் -

மீண்டெழும் பாண்டியர் வரலாறு ...
செந்தில் மள்ளர் என்பவர் எழுதிய ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ என்ற
புத்தகம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதோடு, செந்தில் மள்ளர்மீது தேசத்
துரோக வழக்கு பொடப்பட்டு அவரைத் தேடி வருகிறார்கள் என்ற செய்தியை ஒருவேளை
நீங்கள் செய்தித்தாளில் படித்திருக்கலாம்.
நேற்றி லயோலா கல்லூரியில் கருத்துரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் என்ற நிகழ்வு நடைபெற்று, தமிழக அரசின் தடை கண்டிக்கப்பட்டது. நானும் ஒரு பேச்சாளராக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கலந்துகொண்ட பிறரை மேலே உள்ள போஸ்டரில் பார்த்துத் தெரிந்துகொள்க.
எந்தப் புத்தகத்தையுமே ஓர் அரசு தடை செய்யக்கூடாது என்பது என் கருத்து. சட்டம் ஒழுங்கு என்பதைக் காரணம் காட்டி, சமூகங்களுக்கு இடையே கலவரம் மூண்டுவிடும் என்று சொல்லி சில புத்தகங்களை மட்டும் தடை செய்தல் நியாயமற்றது. இன்று தமிழில் வெளியாகியுள்ள எண்ணற்ற புத்தகங்களில் பலப்பல, குறிப்பிட்ட மதத்தோருக்கும் சாதியினருக்கும் எதிராக, மிகக் கேவலமான, கீழ்த்தரமான வசை மொழியில் எழுதப்பட்டுள்ளவை. பல மாத, வார இதழ்களேகூட அப்படிப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றன.
கண்டன இலக்கியம் என்பது இந்து, கிறிஸ்தவ மத பிரசாரகர்களால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவை எதிர் மதத்தோரை, எதிர்க் கருத்துள்ளோரை நிச்சயமாகக் கடுமையாகத் தாக்கியும் அவர்கள் மனம் புண்படுமாறும்தான் எழுதப்பட்டவை. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே இருந்துவரும் இதுபோன்ற புத்தகங்கள், இன்றும் வெளியாகின்றன என்பதுதான் உண்மை. அமைதிப் பூங்காவாகத் திகழும் புத்தகப் பதிப்புலகில் செந்தில் மள்ளரின் புத்தகம் மட்டும் திடீரென்று அமைதியைக் குலைத்துவிடும் எண்ணம் கொண்டதாக அவதரித்துள்ளது என்பதுபோல் தமிழக அரசு தோற்றுவிக்கும் எண்ணம் நியாயமற்றது. அதைவிட, இப்படிப்பட்ட புத்தகத்தைத் தடை செய்ததுமட்டுமின்றி, அதனை எழுதியவரை தேசத் துரோகக் குற்றச்சாட்டு என்று சொல்லிச் சிறை பிடிக்க முற்படுவது அராஜகமானது.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பலவும் கிட்டத்தட்ட 500 புத்தகங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்ட விஷயங்கள்தாம் என்று நேற்று பேசிய ஒரிசா பாலு சொன்னார். கூடவே சில புத்தகங்களைக் கையில் கொண்டுவந்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மனுஷ்யபுத்திரன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்துத் தான் பேசியதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
கூட்டத்தில் பேசிய இருவர் - எழுகதிர் பத்திரிகையாசிரியர் அருகோ என்பவரும் மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சக்திவேல் என்பவரும், மற்றும் பொதுவாகவே கூட்டத்துக்கு வந்திருந்த பெரும்பான்மை மக்களும் ஒரு கருத்தில் உறுதியாக இருந்ததுபோல் இருந்தது. புத்தக ஆசிரியர் செந்தில் மள்ளர், தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் ‘வடுக வந்தேறிகள்’ என்று தன் ‘என்னுரை’யில் சொல்கிறார். இவ்விருவரும் கூட்டத்தினரும் வடுக வந்தேறிகள் என்று தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் தெலுங்கு பேசும் சாதியினரைச் சொல்கிறார்கள். அந்த வார்த்தை பயன்படுத்தப்படும்போதெல்லாம் கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
புத்தகத்தின்மீதான தடையைக் கண்டித்த அதே நேரம், மேடையிலேயே, ‘வந்தேறிகள்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையும் அதனைக் கூட்டம் கை தட்டி வரவேற்றதையும் நான் கடுமையாகக் கண்டித்தேன்.
வந்தேறிகள் என்ற வார்த்தையைக் கொண்டு பார்ப்பனர்கள், முஸ்லிம்கள் என்று ஆரம்பித்துப் பலரைக் கைகாட்டி இனத் தூய்மைவாதம், கலாசார தேசியம் ஆகியவற்றைப் பேசுவோரது அரசியல் எனக்கு ஏற்புடையதல்ல. அதில் இப்போது சேர்ந்துள்ளது ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கத்தை எதிர்க்கும் தமிழ் தேசியம். அவர்கள் கண்டுபிடித்துள்ள எதிரி ‘வடுகர்கள்’. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் இதைப்பற்றியது அல்ல. அப்படி அந்தப் புத்தகத்தைக் குறுக்கிவிட முடியாது, கூடாது. ஆனால் அந்த இழையோட்டமும் அப்புத்தகத்தில் இருப்பதும், அதே கருத்தைக் கொண்டோர் அக்கருத்தை மேடைமீது கூறுவதும் பொதுவான அறிவியக்கத்துக்கு எதிரானவை.
இவற்றைத் தாண்டி, அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை தமிழக அரசு தடை செய்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். புத்தகத்தின்மீதான தடை நீக்கப்படவேண்டும். புத்தக ஆசிரியர்மீது போடப்பட்டிருக்கும் அபாண்டமான வழக்கு உடனடியாக விலக்கிக்கொள்ளப்படவேண்டும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)