ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 1 ஜனவரி, 2014

மள்ளர் மீட்புக் கள ம் .

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி...





கிருஷ்ணசாமி நேற்று மதியம் 12.20 மணிக்கு, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார். பின்னர், கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளாக, ஆங்கில புத்தாண்டின் போது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.

அதேபோல், இன்றும் அவருக்கு நான் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். புதிய தமிழகம் கட்சி ஏற்கனவே ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழிக்கு ஆதரவளித்தது. அதன்பிறகு ஏற்காடு இடைத்தேர்தலிலும் ஆதரவளித்தோம். நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடிப்போம்.

இன்றைய சூழ்நிலையில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வலுவான கூட்டணி அமைப்பதற்கு, பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து நாங்கள் பேசினோம். காங்கிரஸ், பாஜ அல்லாத மற்ற சக்திகளை ஒருங்கிணைக்க முயற்சிகளை மேற்கொள்வோம். அதுதான் நாட்டுக்கு நன்மை தரும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு புதிய தமிழகம் ஆதரவு.........

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு புதிய தமிழகம் ஆதரவு

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நீடித்தது. 

இந்த சந்திப்பின்போது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். பின்னர், வெளியே வந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- 

கேள்வி:-தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்ததன் நோக்கம் என்ன?. 

பதில்:- ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரை வந்து சந்தித்தேன். கடந்த 15 ஆண்டுகளாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறேன். அந்த வகையில் இன்றும் சந்தித்தேன். 

கேள்வி:-பாராளுமன்ற தேர்தல் குறித்து எதுவும் பேசினீர்களா?. 

பதில்:-தற்போதைய நாட்டின் நிலைமை, தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவருடன் பேசினேன். 

கேள்வி:-பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா?. 

பதில்:-ஆமாம். தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம். எம்.பி.யாக கவிஞர் கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், ஏற்காடு இடைத்தேர்தலிலும் தி.மு.க. வுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொண்டுவருகிறோம்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி, 3 ஆண்டுகள் இடைவெளியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தாவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மள்ளர் மீட்புக் கள ம் ....


...

நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க.வுக்கு கிருஷ்ணசாமி ஆதரவு!



சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று நண்பகலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், அரசியல் நிலவரம் குறித்து கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

லோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்!

லோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்!

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் 'தற்போதைய தோழமை கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் திமுக போட்டியிடும்' என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை உள்ளன. இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் தலைவர் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்றார். அதிமுகவுடன் மோதல்- திமுகவுக்கு ஆதரவு சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, அதிமுக அணியில் இடம்பெற்றது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக அரசுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி குரல் கொடுத்தார். பின்னர் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரித்தார். ஏற்காடு இடைத் தேர்தலிலும் திமுகவுக்கு தமது ஆதரவை அவர் தெரிவித்தார். இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏவான நிலக்கோட்டை ராமசாமி, திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது டாக்டர் கிருஷ்ணசாமி, கருணாநிதியை நேரில் சந்தித்த கையோடு லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்றும் அறிவித்துள்ளார்.லோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்!