ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு நீதிபதி கட்ஜுவை விசாரிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..


‘‘சக நீதிபதி பற்றி கருத்து கூறிய, நீதிபதி கட்ஜுவிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்’’ என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் புதன் கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திடீரென எழுந்து பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர், ‘காலையில்தானே கடிதம் கொடுத்தீர்கள். பிறகு பேசலாம்’ என்றார். அதைத் தொடர்ந்து, வெளிநடப்பு செய்த கிருஷ்ண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரை பற்றி, இதே நீதிமன்றத்தில் பணியாற்றி பின்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த கட்ஜு, பதவி வகித்த 7 ஆண்டு பிறகு, அந்த நீதிபதியை பற்றி கூறியுள்ள கருத்து பற்றி அவையிலேயே எழுப்ப விரும்பினேன். அதற்கு அனுமதி மறுத்த காரணத்தால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.
பதவியில் இருந்தபோது எதுவும் கருத்து தெரிவிக்காமல், ஓய்வு பெற்ற பிறகு சக நீதிபதி ஒருவர் பற்றி இதுபோன்ற கருத்து களை தெரிவிக்க ஆரம்பித்தால், நீதி துறையின் மாண்பே கெட்டு விடும். நீதிபதி கூறியுள்ள கருத்து நிச்சயமாக அவராக கூறியதாக இருக்காது. இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பால் அவையில் சிரிப்பலை..




சட்டசபையில் கவன ஈர்ப்பு தொடர்பான விவாதம் முடிந்த பிறகு, உறுப்பினர்கள் ஒரு சிலர் எழுந்து, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டனர். அதில் டாக்டர் கிருஷ்ணசாமியும் (புதிய தமிழகம்) ஒருவர். அவர் பேசும்போது, நான் இந்த அவையில் 50-க்கு மேற்பட்ட கவன ஈர்ப்புகளை கொண்டு வந்துள்ளேன். ஆனால் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றார். தொடர்ந்து அவர் பேச முயன்றபோது, சபாநாயகர் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. 

அதனைத் தொடர்ந்து, வலது கையை உயர்த்திக்காட்டி, அவையை விட்டு வெளியேறுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறி புறப்பட்டார். அப்போது அவரது கையை உறுப்பினர் சரத்குமார் (தென்காசி தொகுதி) பிடித்து, தாங்கள் எழுத வாங்கிய என்னுடைய பேனாவை தந்துவிட்டு போங்கள் என்று

சைகையிலேயே குறிப்பிட்டார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. அதன்பின்னர், சட்டை பையில் இருந்த பேனாவை எடுத்து சரத்குமாரிடம் கொடுத்துவிட்டு உறுப்பினர் கிருஷ்ணசாமி வெளியேறினார்

சனி, 2 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் கோட்டையில் கொடை விழா...

இலங்கை ராணுவ இணையத்தில் ஜெ.வை பற்றி விமர்சனம்: ஜவாஹிருல்லா, கிருஷ்ணசாமி கண்டனம்..





மீனவர் பிரச்சனை குறித்து ஜெயலலிதா, நரேந்திர மோடி இடையேயான கடித பரிமாற்றம் குறித்து கொச்சைப்படுதும் வகையில் செய்தி வெளியானதற்கு தமிழகத்தில் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. 

சட்டமன்ற வளாகத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறுகையில், ஒரு முதல் அமைச்சர், நாட்டின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை இலங்கை ராணுவ இணையதளத்தில் தரக்குறைவாக ஒரு தலைப்பிட்டு கட்டுரை வெளிவந்திருக்கிறது. இது கண்டனத்துக்கு உரியது.

இந்த பிரச்சனையை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எழுப்புவதற்கு நாங்கள் முயற்சித்தபோது, சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்றார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழ்நாடு அரசுக்கு தலைமை தாங்குபவர்களை பற்றி கொச்சைப்படுத்தக் கூடிய வகையிலும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றும், கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை என்பது போல் கருத்துக்களை தெரிவிக்கக் கூடிய வகையில் செய்தியை போட்டுள்ளார்கள். இது தமிழகத்தில் உள்ள மக்களை புண்படுத்தும் அளவிற்கு உள்ளது என்றார். 

புதிய தமிழகம் கோட்டையில் திருவிழா...

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி ஆதிக்க வெறியாட்டம்..?



தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரிவாள் வெட்டு,
சொத்துக்கள் சூறை, உடைமைகள் கொள்ளை !
சாதி வெறியர்களுடன் காவல்துறை கூட்டணி !
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகிலுள்ள தெற்கு மணக்கரை ஊரில் தேவர் சாதி ஆதிக்க வெறியர்களால் தாழ்த்தப்பட்ட (Mள்ளர்) சமூகத்தினரின் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் 8-க்கும் மேற்பட்ட இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்ப்பட்டுள்ளன. நகை, பணம் கொள்ளையடித்து மூன்று நபர்களை வெட்டி தமது சாதி ஆதிக்க வெறியினை நிலைநாட்டியுள்ளனர்.
தேவர் சாதிவெறிதெற்கு மணக்கரை தாமிரபரணி படுகையில் உள்ளது. இரு சமூகத்தினருமே நெல் விவசாயம் செய்து வருகின்றனர். தேவர் சாதியினர் வயல்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வேலைக்கு செல்வது வழக்கம். சொந்தமாகவும் வயல்கள் வைத்துள்ளார்கள். இதனை ஏற்க மனமில்லாத தேவர் சாதி வெறியர்கள் வயலுக்கு நீர் பாய்ச்சும் போது முதல் வயல் தாழ்த்தப்பட்டவர் வயலாக இருந்தால், முறைப்படி நீரினை பாய்ச்சவிடாமல் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டும் பொருட்டு வாய்க்கால் மடையில் அரிவாள் மற்றும் செருப்பை வைப்பதும் அதை எடுத்து விட்டு நீர் பாய்ச்சினால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைத் தாக்குவதின் மூலம் பல ஆண்டுகளாக அடாவடி செய்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஆடு, மாடுகள் தேவர் சாதியினரின் வயல்களில் மேய்ந்தால் மாடுகளை வெட்டி விடுவதும் தண்டம் (அபராதம்) விதிப்பதையும் இன்று வரை வாடிக்கையாகச் செய்து வருகின்றனர். அதற்கு நேர் எதிராக இவர்கள் மாடுகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரது வயலில் மேய்ந்தால், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடம், “எங்ககிட்டயே அபராதம் கேட்பியா” என்று மிரட்டுவதும், தாழ்த்தப்ட்ட சமூகத்துப் பெரியோர்களைப் பேர் சொல்லி போடா வாடா என்று அழைப்பதும் ஆடு மாடுகளைக் களவாடிச் சொல்வதும் காவல் துறையில் புகார் கொடுத்தால் தாழ்த்தப்பட்ட மக்களைக் காவல்துறையை வைத்தே மிரட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் திருவிழாவின் போது தமது சமூகத் தலைவர்களின் பாடலை மேளத்தில் வாசிப்பதையோ, கச்சேரியில் பாடுவதையோ தடைசெய்தே வந்துள்ளார்கள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த திருவிழாவில் சில இளைஞர்களின் முயற்சியினால் தமது சமூகத் தலைவர்களின் பாடல்களை பாடச் செய்துள்ளார்கள். இதனால் தேவர் சாதியினர் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்கள்.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேவர் சாதியினர் பகுதியில் உள்ள பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும். அப்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அடிப்பதும் மிரட்டுவதும் தொடர்கிறது. ரேசன் கடை தேவர் சாதியினர் பகுதியில் உள்ளதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ரேசன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. ஊரில் ஏதும் பிரச்சனை என்றால் கட்டப்பஞ்சாயத்து செய்வதும் நடந்து வருகிறது.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக தேவர் சாதியைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடையைத் தாழ்த்தப்பட்ட மக்களின் பகுதியில் திறந்துள்ளார். இதனால் தேவர் சாதியினர் குடித்து விட்டு ஊருக்குள் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வருவதும் கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை வாங்குவதுமாக அட்டூழியம் செய்து வந்துள்ளார்கள்.
கடந்த 03.06.2014 -ம் தேதி இரவு பொது தண்ணீர் தொட்டியில் தாழ்த்தப்பட்டவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த தேவர் சாதியினர் மது அருந்த தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது தேவர் சாதியினர் மீது தண்ணீர் தெறித்துள்ளது. இதனால் அவர்கள் வம்புச் சண்டை இழுத்துள்ளனர். சாதியைச் சொல்லித் திட்டி அடித்துள்ளனர்.
இது சம்பந்தமாக முறப்பநாடு காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் புகார் கொடுத்துள்ளார்கள். அன்று தேவர் சமூகத்தினர் கோவில் திருவிழா என்பதால் காலையில் இரு சமூகத்தினரையும் வரச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்து மறுநாள் வரச்சொல்லி அனுப்பி வைத்துள்ளது காவல்துறை. காவல்துறையில் தமக்கு நியாயமான விசாரணையும் நடவடிக்கையும் இருக்காது என்று கருதிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 04-06-2014 அன்று காலை காவல் நிலையத்திற்கு செல்லவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தேவர் சாதியினர், மாலை 5 மணி அளவில் 40-க்கும் மேற்பட்டோர் கத்தி, கம்பு, அரிவாள் ஆகியவற்றுடன் வந்து தாழ்த்தப்பட்டவரின் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கியும் நகை மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்தும் ரூ 20 லட்சத்திற்கும் மேலாகப் பொருளாதார இழப்பு ஏற்படுத்தியும் கண்ணில் பட்ட மற்றும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களையும் வெட்டியுள்ளார்கள். காவல்துறை எப்போதும் போல் கண்துடைப்புக்காக சில நபர்களை மட்டும் கைது செய்து ஆதிக்க சாதி வெறியர்களுக்குத் துணை போகின்றது.
இதைக் கண்டித்து ‘தேவர்சாதி ஆதிக்க வெறியர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடு’ என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உரிமை பாதுகாப்பு மையம் நெல்லை அமைப்புக் குழுவின் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த சுவரொட்டி ஆதிக்கசாதி வெறியர்களை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது. சுவரொட்டியில் கொடுத்திருந்த செல்பேசி எண்ணுக்கு நள்ளிரவில் கம்ப்யூட்டர் மூலமாகவும் வெளிநாடுகளிலிருந்தும், பொதுத் தொலைபேசி மூலமாகவும் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
“நாங்கள் எங்களுடைய செல்போன் எண்களை வெளியிட்டுள்ளோம். துணிவு இல்லாத நீங்கள் கோழைத்தனமாக ஏதேதோ எண்களில் இருந்து பேசுகிறீர்கள். எங்களுடைய முகவரி வெளிப்படையாக உள்ளது. உங்களுக்குத் துணிவு இருந்தால் நீங்கள் இருக்கும் இடத்தைச் சொல்லுங்கள் அல்லது எங்கள் முகவரிக்கு வாருங்கள், பேசுவோம். சாதி என்பது நம்மீது சுமத்தப்பட்டுள்ள இழிவு – நீயே சூத்திரனுக்குப் பிறந்தவன் என்று இழிவுபடுத்தப்படுகிறாய். அப்படியிருக்கும் போது நீ மற்றவர்களை இழிவுபடுத்துவது கேவலம் இல்லையா” என்று கடுமையாகக் கேட்டபின் அவர்களது தொல்லை அடங்கியது.
இப்படிப்பட்ட சாதி ஆதிக்க வெறியர்களின் அஸ்திவாரத்தில் தான் தென் மாவட்டங்களில் அதிமுக ஆட்சி கட்டி எழுப்பப்பட்டுள்ளது. வடக்கே ராமதாசு இந்த வெறியர்களைக் கூட்டணி சேர்த்துக் கொண்டுதான் வன்னிய சாதி வெறி அரசியல் செய்து ஆட்சியைப் பிடிக்க கனவு காண்கிறார்.
கொடியன்குளம், மாஞ்சோலை, பரமக்குடி, வாச்சாத்தி, நத்தம் காலனி என்று இவர்களது வெறியாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரால் கட்சி நடத்தும் தலைவர்கள் இவர்களுடன் மாற்றி மாற்றிக் கூட்டணி வைத்து ஆட்சியை, அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறி வருகின்றனர். தென் கோடி மாவட்டங்களில் தேவர் சாதி ஆதிக்க வெறியை எதித்துப் போராடி தங்களது உரிமைகளை நிலைநாட்ட தலித் மக்கள் புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்து போராட முன்வர வேண்டும். சாதித் தலைவர்களை நம்பிப் போவதில் பயன் எதுவும் இல்லை என்பதை உணர வேண்டும்.
தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
நெல்லை அமைப்புக்குழு

தமிழக முதல்வரிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்...ஜான் பாண்டியன்

ஏழு கோடி தமிழர்களின் இதயமாக செயல்படும் தமிழக முதல்வர் குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக இனணயதளத்தில் தரக்குறைவான வார்த்தைகளில் செய்தி வெளியிட அனுமதித்த தரங்கெட்ட இலங்கை அரசின் திமிரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது...
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் துரித கடிதம் அனுப்புவதை காதல் கடிதம் என்று கொச்சைப்படுத்தியும் தமிழக முதல்வரின் சண்டித்தனம் என்று கேவலப்படுத்தியும் மோடி மந்திரம் என்ற வார்த்தையின் மூலம் பாரத பிரதமரை அவமதித்தும் செய்தி வெளியிட அனுமதித்த இலங்கை அரசின் திமிரை அடக்க கட்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மத்திய அரசை வலியுறுத்துகிறது..