ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

விழுப்புரத்தில் வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் ..டாக்டர் கிருஷ்ணசாமி

கோவை: மின் கட்டண உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரி விழுப்புரத்தில் வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர்  கிருஷ்ணசாமி தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியது: 2011ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்புக்கு  வந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா, மின் கட்டணத்தை உயர்த்தினார். தற்போது, ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி 15 சதவீதம் மின் கட்டணத்தை  உயர்த்தியது கண்டனத்திற்கு உரியது. இந்த கட்டண உயர்வால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கும். 500 யூனிட் வரை மின் மானியம் என்பது கண் துடைப்பு.  இதில் வெறும் 15 சதவீதம் பேர் மட்டுமே பயனடைவார்கள். 35 சதவீதம் பேர் கடுமையாக பாதிக்கப்படுவர்.

முந்தைய திமுக ஆட்சியில் இருந்த மின் திட்டத்தையும் சீர்படுத்தவில்லை. புதிய மின்திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. மின் வாரியத்தில் கடுமையான நிர்வாக  சீர்கேடும், மெகா ஊழலும் நடக்கிறது. மின்வாரியத்தின் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கட்டண உயர்வை  முழுமையாக வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில், விழுப்புரத்தில் வரும் 19ம் தேதி காலை எனது தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

வெண்மணி தியாகிகளுக்கு மள்ளர்மீட்பு களம் 46வது வீரவணக்கம்............

புதன், 10 டிசம்பர், 2014

தென்மாவட்ட சாதிக்கொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை: டாக்டர் கிருஷ்ணசாமி

தென்மாவட்டங்களில் நடைபெறும் சாதிக்கொலைகளைப்பற்றி சட்டசபையில் பேசி அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து புதியதமிழகம் கட்சி இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து சட்டமன்ற பேரவை வளாகத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு :-
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளடங்கிய தென்மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் தேவேந்திரகுல வேளாளர் 18 பேர், உள்பட 74 பேர்; நாடார் சமுதாயம், பிள்ளைமார் சமுதாயம், யாதவர் சமுதாயம் மற்றும் சிறுபான்மையினர் சமூகத்தை சார்ந்தவர்கள் படுகொலைக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.
அங்கு சட்டம் ஒழுங்கு முற்றும் சீர்குலைந்து காணப்படுகிறது. அங்கு பணியாற்ற கூடிய காவல்துறை அதிகாரிகள் அதே போல் வருவாய் துறை அதிகாரிகள் ஒரு சாதி சார்புடையவர்களாக செயல்படுவதால், சாதரணமாக தங்களுக்கு சமூக கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளது என்றும், பெண்கள் தங்களை அவமானம் படுத்துகிறார்கள் என்றும், பள்ளி மாணவர்கள் படிக்கப்போகின்ற பொழுது தாங்கள் அவமானத்திற்கு ஆளாகிறோம் என்றும் புகார் கொடுத்தால் கூட, புகார் கொடுப்பவர்களை கூலிப்படையின் மூலமாக தீர்த்துக்கட்டக்கூடிய ஒரு மிகப்பெரிய சமூக அநீதி அங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுக்குறித்து தழிகத்திற்கு உரிய சட்டம் ஒழுங்கை கவனிக்க வேண்டிய காவல்துறையோ அல்லது தமிழ்நாட்டு காவல்துறைக்கு பொறுப்பேற்று இருக்க கூடிய முதலைமைச்சரோ சிறிதும் அக்கறை செலுத்தாத காரணத்தினால் அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மையின் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து வேறு இடங்களுக்கு குடிப்பெயர வேண்டிய ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது குறித்து உடனடியாக சட்டமன்றத்தினிலே பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கடந்த 4ம் தேதி 9மணிக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் கவனஈர்ப்பு தீர்மானம் மற்றும் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்திருந்தேன். 4ம் தேதி அனுமதி கேட்டேன் 5ம் தேதியும் அனுமதி கேட்டேன் அனுமதி அளிக்க வில்லை. இன்று அவைக்கூடியதும் நான் வந்து தென்மாவட்டங்களில் கலவரம் குறித்து அவை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டுமென்று அவைத்தலைவரிடம் அனுமதி கேட்டதற்கு அனுமதி மறுத்தார். ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்துடன் எடுத்துக்கொள்ளப்படும் என்று சொன்னார். அதற்கு பின்பும் எடுக்காத காரணத்தினாலே புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் வெளிநடப்பு செய்திருக்கிறேன்.
எங்களுடை கோரிக்கை கடந்த 6 மாதத்தில் தென்மாவட்டங்களில் நடந்த அந்த 74 படுகொலைக்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்.
ஒரு சாதி சார்புடைய அதிகாரிகளை உடனடியாக தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். அங்கு உடனடியாக பாதுகாப்புக்காக துணை இராணுவத்தை நிறுத்த வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை ஆகும்.

பேரவையிலிருந்து 3வது முறையாக கிருஷ்ணசாமி வெளிநடப்பு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்றும் வெளிநடப்பு செய்தார்.

சட்டப்பேரவையில் இன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கனிம மணல் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால், தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் கிருஷ்ணசாமி இன்று 3வது முறையாக வெளிநடப்பு செய்தார்.
ஏற்கனவே சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி இரண்டு முறை வெளிநடப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தென்மாவட்ட சாதிக்கொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை: டாக்டர் கிருஷ்ணசாமி ..

சென்னை: தென்மாவட்டங்களில் நடைபெறும் சாதிக்கொலைகளைப்பற்றி சட்டசபையில் பேசி அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து புதியதமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழக சட்டசபையின் குளிர்காலக்கூட்டத்தொடர் மூன்றாவது நாளக இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை அவை தொடங்கியதும் எதிர்கட்சியினர் சத்துணவு முட்டை கொள்முதல் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மான கொண்டு வந்து பேசினர். எதிர்கட்சிகளின் புகாருக்கு சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி விளக்கம் அளித்தார். முன்னதாக தென்மாவட்டங்களில் நடைபெற்றுவரும் கொலைகள் பற்றி பேசுவதற்கு புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ டாக்டர் கிருஷ்ணசாமி அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணசாமி வெளிநடப்புச் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மாவட்டங்களில் 6 மாதங்களில் 71 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து அவையை ஒத்திவைத்து பேச அனுமதி கோரினேன், சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்களின் ஆதிக்கம் நிலவுகிறது 71 பேர் கடந்த 6 மாதங்களில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலானாய்வு விசாரணை செய்யவேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.