ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கரன் கடந்த பிப். 22ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோருக்கு புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேற்று ஆறுதல் கூறினார். பின்னர், கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: பாஸ்கரன் படு கொலையை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தால் நீதிமன்றத் தின் அனுமதி பெற்று இங்கு வந்துள்ளேன். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சைக்கிள், வேன் மற்றும் டிராக்டர்களில் மணல் கொள்ளை நடக்கிறது. இங்கு மணல் கொள்ளையர்களால்தான் அதிக கொலைகள் நடக்கின்றன. இந்த கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை தனி புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். நேர்மையான போலீசாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..
திங்கள், 2 மார்ச், 2015
தொடர் கொலைகளுக்கு காரணமான மணல் கொள்ளை தடுக்க தனி குழு.. டாக்டர் கிருஷ்ணசாமி ..
ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கரன் கடந்த பிப். 22ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோருக்கு புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேற்று ஆறுதல் கூறினார். பின்னர், கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: பாஸ்கரன் படு கொலையை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தால் நீதிமன்றத் தின் அனுமதி பெற்று இங்கு வந்துள்ளேன். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சைக்கிள், வேன் மற்றும் டிராக்டர்களில் மணல் கொள்ளை நடக்கிறது. இங்கு மணல் கொள்ளையர்களால்தான் அதிக கொலைகள் நடக்கின்றன. இந்த கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை தனி புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். நேர்மையான போலீசாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..
சாதி வெறி கொலைகள் அதிகரித்து வருவது ஆபத்தானது: கிருஷ்ணசாமி பேட்டி...
ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டதற்கு சாதி வெறியே காரணம். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி வெறி கொலைகள் அதிகரித்து வருவது ஆபத்தானது. இதற்கு முடிவு கட்ட காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2014–ம் ஆண்டு 112 கொலைகள் நடந்துள்ளன. இதில் 87 கொலைகள் தென் மாவட்டத்தில் நடந்துள்ளது. 40–க்கும் மேற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவங்களை தடுக்க சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பாஸ்கரன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையாக விசாரிப்பார்கள் என நம்புகிறோம். இதில் உண்மை குற்றவாளிகள் பிடிபடாவிட்டால் சி.பி.ஐ. விசாரணையை கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொலைகள் அதிகரிப்புக்கு மணல் கொள்ளையே காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு...
திருவைகுண்டம் பிச்சனார்தோப்பில் பொதுமக்களிடம் பேசுகிறார் கிருஷ்ணசாமி. படம்: என். ராஜேஷ்
‘தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் அதிகரித்து வரும் கொலைகளுக்கு மணல் கொள்ளையே காரணம்’ என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சியின் திருவைகுண்டம் நகர செயலாளர் மா. லெட்சுமணன் என்ற பாஸ்கர்(28) கடந்த 22-ம் தேதி கொலை செய்யப்பட்டார். பாஸ்கரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். பதற்றம் காரணமாக திருவைகுண்டம் வட்டத்தில் கடந்த 25-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள், சாதி அமைப்பு தலைவர்கள் திருவைகுண்டம் வட்டத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி திருவைகுண்டம் செல்வதற்காக தூத்துக்குடி வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த 26-ம் தேதி பாஸ்கரின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர். இந்நிலையில் தன்னை திருவைகுண்டம் செல்ல அனுமதிக்க கோரியும், 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும் கிருஷ்ணசாமி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, கிருஷ்ணசாமி மார்ச் 1-ம் தேதி காலை 11 மணி முதல் 1.30 மணிக்குள் திருவைகுண்டம் செல்ல அனுமதி அளித்தது. அதன்பேரில் கிருஷ்ணசாமி நேற்று திருவைகுண்டம் பிச்சனார்தோப்புக்கு சென்றார். பாஸ்கரின் தந்தை மாரிமுத்து மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
பின்னர் கிருஷ்ணசாமி கூறும்போது, பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை பகுதிகளில் தாமிரவருணி ஆற்றில் மணல் கொள்ளை அதிகம் நடைபெறுகிறது. இதனால்தான் இந்த பகுதியில் படுகொலைகள் அதிகம் நடக்கின்றன.
இது தொடர்பாக புகார் செய்தால், புகார் செய்பவர் மீதே போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர். வருவாய் துறையினரும் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இந்த பகுதியில் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பாஸ்கர் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை சிபிசிஐடி போலீஸார் கைது செய்ய வேண்டும்.
தலித்கள் மீது தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல் தொடர்பாக தனி புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு தனி நபருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், வசதிகள், வாய்ப்புகள் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை. அவை முறையாக கிடைக்க பேரூராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
மணல் கொள்ளையே கொலைகளுக்கு காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு...
- கொலை செய்யப்பட்ட பாஸ்கரனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடந்த தொடர் கொலைகளுக்குக் காரணமான மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
புதிய தமிழகம் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் நகரச் செயலர் பாஸ்கரன் கடந்த பிப்.22ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக, கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் வரத் திட்டமிட்டார்.
ஆனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம், அவர் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவைகுண்டம் செல்லலாம் என அனுமதி அளித்தது.
அதன்படி, காலை 11.40 மணிக்கு கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் வந்தார்.
பின்னர், பிச்சனார்தோப்பில் உள்ள பாஸ்கரனின் வீட்டுக்குச் சென்ற அவர், பாஸ்கரனின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:
மணல் கொள்ளையர்களால்தான் இப்பகுதியில் அதிகமான கொலைகள் நடக்கின்றன. கால்வாய், மூலக்கரை, பக்கப்பட்டி ஆகிய கிராமங்களில் நடந்த கொலைகளை அடுத்து தற்போது பாஸ்கரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைகள், மனித உரிமை மீறல்களை தனி புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாகப் புகார் வந்துள்ளது என்றார். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணசாமி புறப்பட்டு சென்றார்.
போலீஸ் குவிப்பு: கிருஷ்ணசாமி வருகையையொட்டி, தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங், டி.ஐ.ஜி. சுமித்சரண் ஆகியோர் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், அப்பகுதியில் சென்ற வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.
ஞாயிறு, 1 மார்ச், 2015
கொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஆறுதல்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28). புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளராக இருந்த இவர், கடந்த 22–ந்தேதி மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன் (வயது 23), விக்னேஷ் (22), பாதாளம் (23), இசக்கிஆனந்த் (20), சிவா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஸ்கர் கொலையால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை போடப்பட்டது. கட்சி தலைவர்கள் யாரும் ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஸ்கரின் பெற்றோருக்கு ஆறுதல்கூறுவதற்காக ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல அனுமதி கேட்டு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், இன்று 1–ந்தேதி பகல் 11 மணி முதல் 1–30 மணிக்குள் 15 பேருடன் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார்தோப்பு கிராமத்திற்கு செல்ல டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று பகல் 11 மணிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் பிச்சனார்தோப்பில் உள்ள பாஸ்கர் வீட்டிற்கு கட்சி நிர்வாகிகள் சிலருடன் சென்றார். பின்னர் பாஸ்கரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து வெளியே வந்த கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறும்போது, மணல் கொள்ளையர்களால் இந்த கொலை நடந்துள்ளது. எனவே இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டாக்டர் கிருஷ்ணசாமி வருகையையொட்டி ஸ்ரீவைகுண்டம், பிச்சனார்தோப்பு, பத்மநாபமங்களம், தோழப்பன்பண்ணை, மணக்கரை, கொங்கராயகுறிச்சி, புளியங்குளம் உள்பட பல்வேறு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. மேலும் பகல் 11 மணி முதல் நெல்லை– திருச்செந்தூர் வழித்தடத்தில் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




