ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

சங்கரன் கோயிலும், பள்ளர்களின் தேர்த் திருவிழாவும்




    தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது சங்கரன் கோயில். இக்கோயில் பெயரிலேயே இவ்வூரின் பெயரும் வழங்கி வருவது சிறப்பு. உக்கிரப் பாண்டியனால் ஏறத்தாழப் தொள்ளாயிரத்து நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்னரே இக்கோயில் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோயிலின் வலப் பக்கமுள்ள தூணில் உக்கிர வ்ழுதிப் பாண்டியனது திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    சாலிவாகன சகாப்தம் 945 (கி.பி.1022 ) கொல்லம் 199 இல் மதுரைப் பாண்டிய அரசனான உக்கிர வழுதிப் பாண்டியன் திருநெல்வேலிக்கு வடக்கேயுள்ள மானூருக்கு வந்து, அதனருகே 'உக்கிரங் கோட்டை' அமைத்து அரசாண்டான். அக்கால கட்டத்தில் தான் சங்கரன் கோயிலையும் கட்டியுள்ளார். சகாப்தம் 1095 கொல்லம் 349 இல் சீவலமாற பாண்டிய மன்னன் வள்ளியூருக்கு வந்து திருப்பணி செய்து, பிற்பாடு சங்கரன் கோயிலும் திருப்பணிகள் செய்துள்ளார். அதன் பின் மானூரை விரிவுபடுத்தி, அவ்வூரில் ஒரு குளமும் வெட்டினார். இச்செய்திகளைக் கோயிலில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.13 )மேற்கண்ட பாண்டியரின் ஆட்சிப் பகுதியான மானூர் இன்றும் பள்ளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பேரூர் என்பதையும், சீவலமாற பாண்டியனால் வெட்டப் பட்ட குளத்தில் உள்ள தூணில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு பாண்டியர் வரலாற்றை அறிய உதவும் சான்று என்பதையும், பாண்டியர்களின் படைத்தளமாக விளங்கிய உக்கிரன்கோட்டை பள்ளர்களின் கோட்டை என்பதுவும் வரலாறு.

    உக்கிரவ வழுதிப் பாண்டியன் காலத்தில் கரிவலம்வந்தநல்லூர் நகரை ஆண்ட பிரகத்துவச பாண்டியனும், இக்கோயிலில் திருப்பணிகள் செய்துள்ளார் என்பதும், இப்பாண்டிய மன்னரின் மகனே விசய குஞ்சர பாண்டியன் என்பதும், சங்கரன் கோயில் இருக்கும் இடம் கரிவலம்வந்தநல்லூருக்கு நந்தவனமாக இருந்ததென்பதும் புராணத்தால் புலப்படும் செய்திகளாகும். ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.13 )

மரபு வழிச் செய்திகள்


    "மானூரை ஆண்ட உக்கிர வழுதிப் பாண்டியன் மதுரை மாநகர் சென்று மீனாச்சியம்மையையும் , சொக்கப் பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கம் கொண்டிருந்தார். மணிக்கிரீவன் என்ற தெய்வம் பார்வதி தேவியின் சாபத்தால் பறையனாகிப் புன்னை வனக் காவலனாக இருந்தான். அதனால், அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்த நல்லூர் புன்னை வனத்தில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்க்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு புறத்தில் புற்று ஒன்று வளர்ந்தது. காவற் பறையன் புற்றை வெட்டிய போது புற்றினுள் இருந்த பாம்பின் வாழும் வெட்டப் பட்டது. அப்போது, அவன் அங்கே சிவனின் காட்சியைக் கண்டான். அந்த வேளை உக்கிர பாண்டியன் அடுத்த வனத்தில் இருந்ததை அறிந்து தான் கண்ட காட்சியைச் சொல்ல ஓடினான். அன்று பாண்டியருடைய யானைத் தந்தத்தினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் அது கண்டு செய்வது அறியாது திகைத்து இருந்த போது காவற் பறையன் ஓடி வந்து அரசரிடம் செய்தியைத் தெரிவித்து உடன் வர அழைத்தான். உடன் சென்ற உக்கிர பாண்டியர் புற்றினையும், புற்றிடம் கொண்டாரையும், கூழை வாலினதாக்கிய பாம்பினையும் கண்டார்.




    சங்கரனார் கட்டளையிட உக்கிர பாண்டியர் காடு கொன்று நாடாக்கி, மருத நிலம் சமைத்து, ஊர் அமைத்துக் கோயில் கட்டி ஆட்சி செய்தார். உக்கிர பாண்டியனின் யானை தந்தத்தினால் குத்திய இடத்தில் தோன்றிய ஊருக்கு பெருங்கோட்டூர்  எனப் பெயர் ஏற்பட்டது. உக்கிர பாண்டியன் கோவிற் பூசைக்குப் பெரும் நிலங்களைக் கொடுத்து; ஒரு சித்திரை மாதத்தில் யானை மேல் ஏறி இறைவனைக் காணக் காரணமாக இருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப்  போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டு வந்து பெரு விழா நடத்தி மகிழ்ந்தார்" என்று மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.10 )

    மேற்கண்ட மரபு வழிச் செய்தியில் யானை தந்தத்தால் குத்திய இடத்தில், தோன்றிய பெருங்கோட்டூர் பள்ளர் குலத்தாரின் பேரூராகும். பழம் பெரும் இவ்வூரில் பள்ளர்களின் குடியிருப்பு ஏற்ப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிற்ப்பாடே அங்கே மறவர் குடியேற்றம் ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.


    "இந்திரனுக்குத் துன்பம் இளைத்த மாயாசுரனைத் தொலைக்கக் கோமதியம்மாள் ஏவிய மாயவாயு திக்கில் மலையாக இருந்தது" ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.5 )என்ற செய்தியையும் "தேவேந்திரன் மகனாகிய சயந்தன் காக்கை உருவாகிச் சீதையின் தனத்தில் கொத்தினான். அதையறிந்த இராமபிரான் ஓர் அம்பை அவன் மேல் ஏவினான். சயந்தன் காக்கை உருவம் நீங்கமலேயே நின்றான். இதனால் இந்திரனால் ஏவப்பெற்று, அவன் தந்த முத்து மாலையைச் சங்கரருக்குச் சாத்தி, வழிபாட்டுத் திருவருள் பெற்றதால் முன்னைய உருவம் அடைந்தான்" ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.11 ), என்ற செய்தியையும் சங்கரன் கோவில் தல வரலாறு குறிக்கின்றது. இந்திரனைப் தரம் தாழ்த்தும் பிராமணியத்தின் பிற்போக்குத் தனம் இக்கட்டுக் கதையில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சிவ வழிபாட்டிக்கு மாற்றப் படுவதற்கு முன்னர் அங்கே இந்திரா வழிபாடு இருந்தது என்பது தெளிவு.

கல்வெட்டுச் செய்திகள்


    சங்கரன்கோயிலில் பழங்காலப் பாண்டியரலால் கட்டப் பட்ட மண்டபங்களும், அவைகளில் உள்ள சிற்பச் சிலை வேலைப்பாடுகளும் காண்போரைக் கவரும் வண்ணம் உள்ளன. 1506 ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்ட பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகளும் சங்கரன்கோயிலில் காணப்படுகின்றன. இது இவரது 33 வது ஆட்சியாண்டைச் சார்ந்ததாகும். கோயிலைச் சுற்றியுள்ள சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளில் பராக்கிரம பாண்டியன் நிலக்கொடைவழங்கிய செய்தி இடம் பெற்றுள்ளது. கோபுரத்தின் தெற்குச் சுவரில் சிதைந்துள்ள கல்வெட்டு சர்வசித்து சகம் 1510 இல் அவனது 26 ஆவது ஆட்சியாண்டில் பொறிக்கப் பட்டுள்ளது. கி.பி.1562 -1605 வரை அதிவீரராம பாண்டியன் சங்கரன் கோயில் பகுத்யை ஆட்சி செய்துள்ளான். இவனே கழுகுமலைப் பகுதியையும் ஆண்ட பாண்டிய மன்னனாவான். சங்கரன் கோயிலின் வடக்குப் பக்கமுள்ள ஒரு கல்வெட்டில் குலசேகர பாண்டியன் சகம் 1475 ஆகிய தனது மூன்றாவது ஆட்சியாண்டில் கோட்டூர் என்னும் ஊரை இக்கோயிலுக்குக் கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது.( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.14-15 )


மற்றுமொரு கல்வெட்டில் (கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு)

"
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே
தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன்
தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்தில் பறையர் தங்களுக்கு இந்த
வரிசை உண்டென்று நடப்புவித்தார்கள். ஆனபடியினாலே ஐந்து சாதிக்கும் பிள்ளை என வேந்தலிலிருக்கும் அனுமக் கோடி அடிச்சாலும் (வாகைகுளம்) குட்டிக்குடும்பனும் அல்ல கர்த்தாகுடும்பனும், கூட்டிக் கொண்டு சமூகம் ஏறி விண்ணப்பித்துக் கொள்ள ஆதி பூர்வ ராஜாக்கள் கொடுத்த  பட்டயம் பார்த்துப் பறையர்களுக்கு உண்டான வரிசை நன்மைக்கு மூன்று கால் பந்தலும் ஒரு சிலம்பும் ஒரு கொடுக்கும் ஒத்த
 மாராப்பும், ஒரு பந்தமும் கிளப் பாவாடையும் மஞ்சியில் தண்டியக்
 கொம்பில்லாத வீடும் துன்மைக்குக் கட்டணமும், பட்டடப்
படிக்கு கட்டளையிட்டோம். குடும்பிகளுக்கு குதிரைக்குடையும்
 இட்டு இந்த இரண்டு கோட்டை விதைப் பாடும் கொடுத்து இந்த
 வரிசைப் பரிகாரம் கட்டளை இடுவித்தோம். இதற்க்கு அதிகம் பண்ணினவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே போலாவார்களாகவும்"
 ( தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 /1914 )
    என்று திருநெல்வேலி -சங்கரன் கோவில் - கரிவலம் வந்த நலூரிக் கோயில் கல்வெட்டுகள் குறித்துள்ளன. (தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 / 1914 )

    மேற்கண்ட கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள பாண்டியன் தேவேந்திரனோடே கூடியிருக்க என்ற செய்தியும் தேவேந்திரக் குடும்பன் உக்கிரப் பெரு வழுதியோடும், சோழனோடும், சேரனோடும் உறவுப் படுத்துகின்ற செய்தியும் தேவேந்திரர்களுக்குப் பஞ்சவன் விருது வழங்கப்பட்ட செய்தும் பள்ளர்களே பாண்டிய மரபினர் என்பதை உறுதி செய்கின்றன.

    தமிழகத்தில் நெல்லை முதன் முதலாய்ப் பயிர் செய்தவர்கள் பள்ளர்களே எனக் கூறும் கரிவலம்வந்த நல்லூர்க் கல்வெட்டும் ( ARE 432 /1914 ) திருவில்லிப் புத்தூர்க் கல்வெட்டும் (ARE 588 /1926 ) பள்ளர்களைப் பாண்டியன் உக்கிரப் பெரு வலுதியுடன் தொடர்புபடுத்துகின்றன.

    சங்கரன் கோயில் தேர் மிகப் பெரியதாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாளில் நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். தென் பாண்டி நாட்டிலுள்ள பழம் பெரும்கொயிலில் தேரோட்டும் உரிமை காந்திநகர்ப் பள்ளர்களுக்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத் தக்கதாகும். தேர்த் திருவிழாவின் போது தேவேந்திர குல வேளாளர்களின் சமூக கொடியான சிவப்பு,பச்சை வண்ணக் கொடி தேரில் பறக்க விடப்படுவதும் வழக்கில் உள்ளது. (நேர்காணல், வழக்குரைஞர், மா.கலைமணி, அழகநேரி, சங்கரன் கோவில்)

    கரிவலம் வந்த நல்லூர்க் கோயிலில் ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களில் ஆண்டிற்கு இருமுறை தேரோட்டம் நடைபெறும். இக்கோயிலும் தடிபோட்டுத் தேரோட்டும் உரிமை கரிவலம் வந்த நல்லூர் பச்சேரி பள்ளர்களுக்கும், ஒப்பனையாள்புரம் பள்ளர்களுக்கும் உடையதாகும். கோயில் முன்புறம் 'தேவேந்திர குல வேளாளர்' சமூக மடம் உள்ளது. தற்போது வங்கி இக்கட்டிடத்தில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் பத்தாம் திருவிழா பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கு உரியதாகும்.

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும். பெரும்பள்சேரி, வடக்குக் கரிசல்குளம், ஆகிய இரு ஊர்ப் பள்ளர்கள் இக்கோயிலில் தடிபோட்டுத் தேரோட்டும் உரிமை உடையவர்களாக உள்ளனர்.நாணல் புல், மூங்கில் ஆகியவற்றை கோயிலுக்கு வழங்கும் முறையும் பள்ளர்கள் வழி வழியாகப் பின்பற்றி வந்தனர். இதற்காக கோயில் நிருவாகத்தில் இருந்து பள்ளர்களை வெற்றிலை,பாக்கு வைத்து அழைத்தனர். இம்மரபு வழக்கமானது இன்று வரை நீடித்து வருகிறதென்பதும் குறிப்பிடத் தக்கதாகும். பள்ளர்கள் இறந்தால் திருவில்லிப்புத்தூர் கோயிலில் பூசை நிறுத்தப் படும். இறந்தவர்களுக்கு கோயிலில் இருந்து வேட்டி,துண்டு,நெருப்பு ஆகியவை கொடுத்து அனுப்புவது இன்றும் நடைமுறையில் உள்ளது. தற்போது கோயில் நிலமான 12 குறுக்கம் வயல்களை பள்ளர்கள் தமக்குச் சொந்தமாக பயிர் செய்து வருகின்றனர். திருவில்லிப்புத்தூரைச் சுற்றிலும் பள்ளர் ஊர்களே ஏராளம் உள்ளன. இக்கோயில் கோபுரமே தமிழ்நாடு அரசு முத்திரையாக உள்ளது.

சங்கரநாராயண சுவாமி கோயிற் புராணம்


    இப்புராணத்தை இயற்றியவர் சீவல மாற பாண்டியராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சங்கரன்கோயிலில் குடி கொண்டிருக்கும் தெய்வம் சங்கரலிங்கப் பெருமாளும், ஆவுடையம்மாளும் ஆவர். இந்நூலில் கடவுள் வணக்கப் பாடலில் 'மல்லர்' என்றும், திருநாட்டுச் சருக்கத்தில் எட்டுப் பாடல்களில் மள்ளர்,மள்ளியர் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளது. அது பற்றி இங்கே பார்ப்போம்.



பாயிரம் - கடவுள் வணக்கம்
செய்யுள் 4 
கருணைக் கடல் மல்லர் சிவபெருமான் 
        "நீர்கொண்ட செலுஞ்சடை மேனிலவுமிழ்வெண் பிறை வயங்க நெடுவான் பூத்த,
        வேர்கொண்ட தாரகையினிடை இடையே தவலமுகை யீன்று தோன்றுங்,
        கார்கொண்ட புன்னை வனங்காமுற்று வாழ்கருணைக் கடலை மல்லற்,
        சீர்கொண்ட சீராசைத் திருநகர் வாழ் சிவக் கொழுந்தைச் சிந்த செய்வோம்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.199 .)

    கங்கையைத் தலை முடியிலே கொண்டவரும், குளிர்ந்த ஒளிக்கதிர்களை வீசும் வெண்பிறை விண்ணிலே பூத்தது போல் தன தலையில் விளங்க வைத்திருப்பவரும் கருணைக் கடலாம் மல்லர் சிவபெருமான் வாழும், அகண்ட வெளியிலே அரும்பு பூத்தது போல் நட்சத்திரங்கள் தோன்றும், மேகங்கள் மழைபொழியும், புன்னை மரங்களும், பூத்து மலரும் பூக்களும் நிறைந்த காடு கொண்ட, சீர் கொண்ட, திருநகர் சங்கரன்கொயிலை மனதில் நினைத்துக் கொள்வோம்" என்ற பொருளில் மேற்கண்ட செய்யுள் பொருள் தருகின்றது.


திருநாட்டுச் சருக்கம்
செய்யுள் 5 
மள்ளர்கள் வெள்ளத்தை அடக்குதல்
        "மதத்த யானையைப் பாகர்கள் வசப்படுத் துதல்போற் 
         கதத்தின் மேவிய வெள்ளத்தைக் கால் குளங் களினால்
         விதத்தி லேலேச் செலுத்திவன் சிறைபுரிந் திரும்பின்
         பதித்த மள்ளர்க ளுழுதொழின் முயற்சியிற் பயின்றார்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.200 .)

    மதம் பிடித்த யானையைப் பாகர்கள் கட்டுப்படுத்துவது போல், சீறிவரும் வெள்ளத்தைக் கால்வாய்,குளங்களிலே சீராகச் செல்லும்படி செலுத்திச் சிறைப்படுத்திய இரும்பைப் போன்ற வலிமை மிக்க கால்களையுடைய மள்ளர் குலத்தார், பின்னர் அந்த நீரை வயல்களிலே பாய்ச்சி உளவுத் தொழிலைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் விளக்குகின்றது.


செய்யுள் 6 
மள்ளர் காலி முளைத்தனர் களிப்பால்
        "ஏர்தரு மூரியேறு மிருங்கடா வினமுங் கட்டிக்
         கூர்நு திக் கொழுக்க ளாழ வுழவர வுழுது கோட்கள்
         சீர்தரு நாளில் வானோர்க் கிறைவனாந் தெய்வம் போற்றிக்
         கார்நிற மள்ளர் சாலி முளைத் தனர்க ளிப்பால்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.200 .)

    ஏரில் பூட்டத்தக்க வலிமையான எருதுகளையும், பெரிய எருமைக் கடாக்களையும், ஏரில் பூட்டி, கூர்மையான நுனி கொண்ட கொழுக்களால் ஆழமாகவும், நெருக்கமாகவும் உழுது, கோள்கள் சரியான நிலையில் இருக்கும் நல்ல நாளில் வானோர்க்கு இறைவனான தேவேந்திரனைப் போற்றித் தொழுவது கருமை நிற வண்ணம் கொண்ட மள்ளர் குலத்தார் மகிழ்ச்சி போங்க நாற்றாங்கால் நாற்று முளைத்து வளர நெல் விதைத்தனர்.

செய்யுள் 8 
மள்ளர் தம் சொற்ப்பொழிவால் சமய வேறுபாடு களைதல்
        "அறநெறி யெய்து செல்வா மாமென வளர்ந்த நாற்றை 
         மரநெறிக் கூற்ற மள்ள வாள்விழிக்   கடைசி மாதர்
         முறநெறி செவிமா லியானை முரண்டரு மள்ளர் சொல்லாற்
         பிற பிற சமைய போதம் பிரித்தாற்போல் பெயர்த்தா ரன்றே"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.201 .)

    அற வழியில் மள்ளர் விதை விதைத்து வளர்த்த நாற்றை படை வீரர்களில் கடும் நெறி கூற்றுவன் போல், வாள் விளிக் கடைசியரான மல்லத்தியர் பிடுங்கினார்கள். முறம் போன்ற காதுகளையுடைய செழிப்பு மிக்க பெரிய யானை போன்ற வலிமை மிக்க மள்ளர் தமது சொற்ப்பொழிவால்  பிற சமய வேறுபாடுகளைக் களைந்து எறிவது  போல்,மள்ளர்க மகளின் நாற்றுகளைப் பறித்தெடுத்தனர்' என்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் உவமை காட்டி விளக்குகின்றது.


செய்யுள் 10
மள்ளத்தியரின் கொலை விழிக்கு அஞ்சி ஓடும் பகைவர்கள்
        "பதித்திடு நாறு வீறி யெழுந்திடும் பருவ நோக்கி
         மதித்திடு மள்ளர் சொல்லான் மள்ளிய ரெல்லாங் கூடிக்
         குதித்திடுஞ் சேர்கள் கூர்வேற் கொலை விழிக் கஞ்சியோட
         வுதித்திடு பகைபோற் றோன்றுங் களைகளைக் களைத லுற்றார்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.202 .)

    நட்ட நாற்றுகள் செழிப்புடன் உயர்ந்து எழுந்திடும் காலத்தில் உலகத்தார் மதித்திடும், மள்ளர் சொல்லத் துள்ளிக் குதித்திடும் மீன்கள் போலக் கண்கள் கொண்ட மள்ளத்தியரெல்லாம் கூடிக் கூறிய வேலின் கொலைத் தன்மையுள்ள, பார்வைக்கு அஞ்சியோடும் பகைவரிடம் தோன்றும் பகைபோல, வயல்களில் வளர்ந்த கலைகளைப் பிடுங்கி எறிந்தனர்.

செய்யுள் 13 
மள்ளர் நெல்லளத்தல்
        "காரெலாஞ் சேர்த்துக் கட்டுந் தகுதியோர் கடாக்கள் கட்டிப்
         போரலாம் பிரித்துத் தள்ளி யடித்ததிற் பதடி போக்கிச்
         சீரெலாஞ் சிறந்த மள்ளர் தூற்றிநெற் கூட்டிச் சேர்த்துப்
         பாரெல்லாம் புகழ்க ணேசர்ப் பணிந்து பின் னளந்தா ரன்றே"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.203 .)

    கருமை வண்ண மேகத்தைஎல்லாம் கூட்டிச் சேர்த்துக் கட்டினார் போல் கரிய வண்ண எருமைக் கடாக்களைத் தாம் பில் கட்டி வைக்கோல் போரைப் பிரித்து நிலத்தில் கிடத்திப் போரடித்துத் தூற்றிப் பதர்களைப் போக்கி நெல்லைக் கூட்டிச் சேகரிக்கும், பெருமைகளில் சிறந்த மள்ளர் குலத்தார் உலகம் புகழும் கணேசரைத் தொழுது பின் நெல்லை அளந்தார்கள் என்கிறது மேற்கொண்ட செய்யுள்.

சீவலமாற பாண்டியனின் சங்கர நாராயண சுவாமி கோயில் புராணம் மள்ளர் வரலாற்றை மாண்புடன் எடுத்துரைக்கின்றது. கல்வெட்டுச் செய்திகளும், கள ஆய்வு செய்திகளும், புராண செய்யுள்களும் பாண்டிய மரபினர் பள்ளர்களே என்று பரிந்துரை செய்கின்றது. பாண்டியராட்சி முடிவுற்ற போது அவர் தம் மரபினரான பள்ளர்களுக்கு இருந்த பேரளவிலான உரிமை மறுக்கப் பட்டுப் பெயரளவிலான உருமை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

கழுகுமலை முருகன் கோயிலும், பள்ளர்களின் பங்குனித் திருவிழாவும்



    பள்ளர் கோட்டை என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு அதி மதுர பாண்டியன் என்பான் ஆட்சி செய்து வந்தான். பள்ளர் கோட்டையான பழனங்கோட்டை (வயல் சூழ்ந்த கோட்டை) பின்னாளில் பழங்க்கோட்டை (பழமையான கோட்டை) என்றானது. இவ்வூர் தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டி வட்டத்தில் கழுகுமலை அருகே உள்ளது. 'குழுவானை நல்லூர்' எனவும் அழைக்கப் பெற்ற கழுகுமலையில் 'சமணப் பள்ளி' இருந்தது. பள்ளர் குல மக்களே சமணத்தை தழுவி இருந்தனர். இச்சமணக் கோயிலானது கி.பி.8 -12 ஆம் நூற்றாண்டுகளில் இந்துக் கோயிலாக மாற்றப் பட்டது ஈனக் கூறுவார் நாவலாசிரியர் பூமணி. பாண்டியர்கள் ஆண்டு வந்த பழங்க்கோட்டையை கைலாசபுரம் ரெட்டியார்களும், மறவர்களும் அழித்துள்ளனர். இவ்வூரில் உள்ள பள்ளர் தெருவில் பழமையான சிறிய கல்மண்டபம் இன்றும் உள்ளது. அதிமதுர பாண்டியன் என்னும் பள்ளர் குல வேந்தன் அருகில் வடபுறம் ஒரு கல் தொலைவிலுள்ள உவணகிரியைச் (உவணம் - கழுகு;கிரி - மலை  ) சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் வேட்டையாடச் சென்றார். அப்போது இளைப்பாறிக் கொண்டிருந்த வேளையில் ஒரு பசு பாறை ஒன்றின் மீது தானாகவே பால் சுரப்பதைப் பார்த்தாராம். அப்போது மணி ஓசையும் காதில் விழுந்ததாம்.வியப்படைந்த பாண்டிய வேந்தன் எழுந்து பசு அருகே செல்லவும், பசு மிரண்டு ஓடியதாம். பூசை மணி ஓசையும் நின்றுவிட்டதாம். அன்று இரவே முருகன் தனது பக்தர்கள் இரண்டு பேரின் கனவில் தோன்றி மன்னரிடம் சென்று பசு பால் சுரந்த இடத்தில் தனக்குக் கோயில் எழுப்புமாறு கூறிக் கட்டையிட்டாராம். இச்செய்தியறிந்த வேந்தன் உடனே தனது படையணிகளோடு உவணகிரி காட்டுப் பகுதிக்குச் சென்று பசு பால் சுரந்த பாறையைப் பெயர்த்தெடுத்தாராம். அனே ஒரு க்கையும், குகையினுள் மயில் மீது அமர்ந்த முருகன் சிலையினையும் கண்டு வணங்கினாராம். உடனடியாக உடன்காடாய் இருந்த உவனகிரிப் பகுதியைத் திருத்தி முருகனுக்குக் கோயில் அமைத்துத் தன மக்களைக் குடியமர்த்தி அவ்விடத்திற்கு உவணகிரி எனப் பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. (தினமலர் 26 .07 .2000 ப.11).கோவிலினுள் மலைப்பாறைக்கருகில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 குறுக்க பரப்பளவில் நடுவில் மகிழ்வு மணடபத்துடன் நான்கு புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட தெப்பக்கு குளத்தையும், இப்பாண்டிய வேந்தன் வெட்டினான். மழைக்காலங்களில் கரிசல் காடுகளில் பெய்யும் மழைநீர் மேற்க்குக் கண்மாய் மதகு வழியாக அடிப்பகுதியில் அமைக்கப் பட்ட கல் வாய்கால் வழியாகத் தெப்பத்திற்கு வருகிறது. இத்தெப்பத் தண்ணீர் இவ்வூர் மக்களுக்கு இன்று குடிநீராகப் பயன்படுகிறது. இந்தத் தெப்பத்தில் 'அப்ரேக்' என்னும் தாமிரச் சத்துள்ள கரிசல் மண் கலந்துள்ளதால் தண்ணீர் கெட்டுப்போகாமலும்,

மருத்துவ சக்தியுடனும் இருக்கின்றது. கோய்ல்லின் பின்புறம் உள்ள மலையின் மேலே பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில் மூன்று சமணச் சிறப்பத் தொகுதிகளும், அய்யனார் கோயிலும், சுனையும் உள்ளன. தென்னகத்தின் எல்லோரா என அழைக்கப் பெரும் வெட்டுவான் கோயிலும் உள்ளது. இந்தக் கோயில் பெரும் பாறையில் 25 அடி ஆழத்தில் சமணத்தைத் தோண்டிய சிற்ப வெளிப்பாடாகும். "பாண்டிய மன்னர்கள் சமணத்தைத் தழுவியபோது அவர்தம் மரபினரான பள்ளர்களும் சமத்தையே தழுவினர். நாயக்கர்களின் படையெடுப்பால் பாண்டிய மன்னர்களும், ஏராளமான பள்ளர்களும் கொல்லப் பட்ட பின்னரே சமணம் என்னும் 'ஆசீவகம் வீழ்ந்தது' எனக் கூறுவார் 'நாவலாசிரியர் பூமணி'.

    கழுகு மலைக்கு 'அறைமலை' என்றொரு பெயரும் இருந்து வந்தது. கழுகுமலையின் உண்மையான பெயர் திருநெற்சுரம் என்பதாகும். நெற்சுரம் என்பதே நேச்சுரம் என்றாகியிருக்க வேண்டும். இப்பகுதி நேச்சுரம் நாடு எனவும் வழங்கி வந்தது. இப்பகுதியை வீரநாராயண பாண்டியன் என்ற பாண்டிய மன்னும் ஆண்டு வந்துள்ளான். இவ்வூருக்கு வடபுறமுள்ள குளத்திற்கு 'வீரநாராயண ஏரி' என்று பெயர். உவர்ணகிரிக்கும், கவர்ணகிரிக்கும் வரலாற்றுத் தொடர்பு இருந்துள்ளது.பின்னாளில் உவர்ணகிரி என்பது கழுகுமலை என்று பெயர் மாற்றப் பட்டது. பாண்டிய மரபினராகிய பள்ளர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னல் இக்கோயில் நிருவாகம் முழுவதும் எட்டையபுரத்துப் பாளையக்காரனிடம் ஒப்படைக்கப் பட்டது. இன்றளவும் எட்டப்பனின் பிறங்கடைகளே இக்கோயில் வருமானத்தில் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர். இருப்பினும் அதிமதுர பாண்டியன், வீரநாராயண பாண்டியன் ஆகிய அபாண்டிய மன்னர்களின் மரபினர்களான பள்ளர்களுக்கும், இலைமறைகாயாகச் சில உரிமைகளும் பர்பு வழிப்பட்ட மரியாதைகளும் இன்றளவும் இருந்து வருகின்றன.
    கழுகுமலை முருகன் கோயிலுக்கு உரிமை உடைய 25 குறுக்க நெல் வயல்கள் கழுகுமலை வடக்குத் தெருவைச் சேர்ந்த பள்ளர்களுக்கு உரிமை உடையதாக உள்ளது. கெச்சிலாபுரத்திற்கு வடக்கேயுள்ள கழுகுமலை முருகன் கோயிலுக்குரிய புன்செய் நிலங்கள் (4 .52 .௦ ஹெ.ஏர்) இவ்வூரைச் சேர்ந்த பெ.குமாரசாமி,பெ.மாரியப்பன் ஆகிய பள்ளர் குலத்தவர்களின் பெயரிலேயே (19 /3A , 19 /4 ) இன்றும் உள்ளது. பங்குனி உத்திரத் தேர்த்திருவிழாவின் போது இக்கோயிலில் தொன்று தொட்டு இன்று வரை பள்ளர்களுக்கே முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.தேரினை இயக்கும் தடிபோடும் உரிமை பள்ளர்களுக்கு மட்டுமே உள்ளது.

 பள்ளர்கள் தவிர வேறு குலத்தவர் எவரும் தடியினைத் தொடக்கக் கூடாது. "தேவேந்திரன் தொட்டால் தான் தேரோடும்" என்னும் சொல் வழக்கு எல்லா தரப்பு மக்களிடமும் வழங்கி வருகின்றது. தேரின் மேலே நான்கு குதிரைகளை ஒட்டியவாறு தேவேந்திரன் உருவ மரச் சிற்பம் உள்ளது. தேரினைச் சுற்றியுள்ள சிற்பங்கள் யாம் காமக் கலைகளை கற்றுத் தருவதாக உள்ளது. தேரின் வலதுபுறத் தடி கெச்சிலாபுரம், சங்கரலிங்க புரம் பள்ளர்களுக்கும்,இடதுபுறத் தடி கழுகுமலை, ஆலங்குளம் பள்ளர்களுக்கும் உரிமையுடையதாகும்.100 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் பூசகர்களும், நிருவாகிகளும் பள்ளர் ஊர்களுக்கு மேளதாளத்துடன் சென்று, ஊர்க் குடும்பனாருக்கு மாலை அணிவித்து, தேங்காய்,பழம்,வெற்றிலை,பாக்கு வைத்து, வெண்கொற்றக்குடை பிடித்து முதல் மரியாதை செய்து அழைத்து வந்து, தேரோட்டச் செய்வாராம். ஆனால் இப்போது இந்நிலை படிப்படியாக மாறிப் பள்ளர் ஊர்களுக்கு சென்று அழைத்து வரும் மரபு அற்று போய்க் கோயில்களில் வைத்தே பள்ளர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு ஊர்க் குடும்பனார்களுக்குக் கழுத்தில் மாலை அணிவிக்கப் பட்டு, வலது கையில் பூ சுற்றப் பட்டு சந்தனம்,குங்குமம் அணிவிக்கப் பட்டு நல்ல முறையில் தேரோட்டி நகர் வளம் வந்து, விழா எடுத்து மக்களை மகிழ்வித்துத் தேரினை நிலையில் நிறுத்தக் கோயில் பூசகர்களால் (பிராமணர்களால்) வாழ்த்தப் படுகிறார்கள்.(நேர்காணல்,கு.பாதாளை அம்மாள், கெச்சிலாபுரம்).

தேர் நிலை கொண்டு நிற்கும் இடத்தருகே பள்ளர்களுக்கு சமூக மண்டபம் இருந்தது. இம்மண்டபம் பாண்டிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட நாயக்கர் ஆட்சியின் போது இடித்து தள்ளப் பட்டது. மண்டபம்  இருந்த இடம் பள்ளர் சமூகத்திற்கு பாத்தியப் பட்டதாகவே இருந்தது.  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாகப் பள்ளர்களின் அறியாமையாலும், குற்றப் பரம்பரையினரான மறவர்கள் கோயில் நிருவாகத்திற்குள் உட்புகுததாலும் இருந்த அந்த இட உரிமையும் பள்ளர்கள் இழக்க நேரிட்டது. அதிமதுர பாண்டியனின் மரபினரான கழுகுமலைப் பகுதி வாழ் பள்ளர்கள் தங்களது மரபு வளையக் கூட அறிய முடியாத அளவிற்கு வடுகராட்சி வினையார்ரியுள்ளது என்பது வேதனைக்குரிய புலனமாகும்.

செந்தூர் முருகன் கோயிலும், செந்நெல் முதுகுடியினரும்




    முத்துக் கொழிக்கும் பாண்டி மண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள பழம்பெரும் எழிலூர் திருச்செந்தூர். இக்கடற்கரையில் அமைந்துள்ள மலை 'சந்தன மலை' என வழங்கப் பெற்றது. 'செந்தின் மலை' எனவும் அதற்குப் பெயர் இருந்தது. இது மருதமும், நெய்தலும் மயங்கிய ஊர் என்பதைக் கடைச்சங்கப் புலவர் பரணர் அகநானூற்றில்

        "கழனி உழவர் கலிசிறந்(து) எடுத்த
        கறங்கிசை வெரீஇப் பறந்த தோகை
        அணங்குடை வரைப்பகம் பொலிய வந்திருக்கும்
        திருமேனி விளக்கின் அலைவாய்
....."

எனப் பாடியுள்ளார். (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.1 )



    தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர் எம்.எசு.பூரணலிங்கம் இரண்டாம் தமிழ்சங்கமிருந்த இடம் கபாடபுரம் என்றக் குறித்துப் பிறைகோடுகள் "அலைவாய்" எனக் குறித்துள்ளார். 

    வால்மீகி, இராமாயணத்தில் கபாடபுரத்தின் இருப்பிடத்தைச் சுட்டும் பொழுது 

        "தாமிரபருணி அழகிய சந்தனச் சோலைகளால்
         மூடப்பெற்ற திட்டுக்களையுடயதாய்க்
         கணவனிடத்தில் அன்புள்ள யுவதியானவள்
         புக்ககம் புகுமாறு போல சமுத்திரத்தில்
         சென்று விழும், பிறகு பொன்னிறைத்தாயும்
         
பாண்டியர்க்கு யோக்கியமாயுமுள்ள கபாடத்தைப்
         பார்க்கக் கடவீர்கள்
"  

(பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.1) 
    எனக்குறித்துள்ளார்.

    வால்மீகி கபாடபுரத்திற்க்குக் கூறியுள்ள குறிப்புகள் திருச்செந்தூருக்கு மிகவும் பொருத்தி வருகின்றன.

    தண் பொருநையாறு (தாம்பிரபரணி) கடலோடு கலக்குமிடத்திற்க்குத் தெற்கே சந்தனச் சோலைகளும், முத்துக்களும் காணப் பெற்ற இடம் திருச்செந்தூராகும்.

    'சந்தனக்காட்டுகுள்ளே கந்தனை நான் கண்டு கொண்டேன்' என்பது இவ்வட்டாரத்து நாடோடிப் பாடலின் ஓரடி. திருச்செந்தூர் முருகன் குடியிருக்கும் மலைக்குச் சந்தன மலை எனப் பெயர். கந்தபுராணம் இம்மலையைக் 'கந்தமாதன பர்வதம்' எனப் புகழும், இன்று இம்மலையில் சந்தன மரங்கள் இல்லை. ஆயினும் அருணகிரி நாதர் காலத்தில் (கி.பி.15 ஆம் நூற்றாண்டு என்பர்) இம்மலையில் சந்தன மரங்கள் அடர்ந்திருந்தன. செந்தில் கந்தனைப் பாடும் போது  அருணகிரி நாதர்,

        "சந்தனத்தின் பைம் பொழில் தண் செந்திலில்
        தாங்கும் பெருமாளே"  

(பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.2)
    எனப் பாடியுள்ளார். இன்றும் இக்கோயிலில் வழங்கப்படுமளவு சந்தனம் ஏனைய முருகன் கோயில்களில் வழங்கப் படுவதில்லை. கால மாறுபாடுகளால் சந்தன மரங்கள் அழிந்து போயிருக்கலாம்.

    சாணக்கியர் தம் பொருள் நூலில் 'பாண்டியக் கவாடம் என்ற முத்தைப் பற்றி கூறுகிறார். கபாட புரத்தில் முத்துக்கள் கிடைத்தன. இன்றும் இப்பகுதியில் முத்தெடுக்கின்றனர். அருணகிரி நாதரும்,பகழிக் கூத்தரும் இவ்வூரில் முத்துக்கள் கொழிப்பதைப்  புகழ்ந்து பாடியுள்ளனர்.
        "செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ் தெரி
         செந்திற் பதி நகர் உறைவோ னே"
          (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.2)

    என அருணகிரி நாதர் பாடியுள்ளார். குன்றெறிந்த குமரவேள் சங்கத்தில் இருந்ததை நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். சங்கத்திற்கு இலக்கண நூல் ஈந்த அகத்தியருக்கு இங்கு கோயில்கள் உண்டு. கபாடபுரத்தின் ஒரு பகுதியாக இவ்வூர் விளங்கி இருக்கிறது. மீதமுள்ள பகுதியே கடலால் கொள்ளப் பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களான சிவனும், முருகனும் கபாடபுரத்திலுள்ள இடைச்சங்கம் எனப்படும் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் அவைப் புலவர்களாக இருந்ததாகக் கூறப்படும் செய்திகள் இதனை உறுதிப் படுத்துகின்றன.

    கலங்கள் வந்து தாங்கும் வாயிலாக அமைந்ததால் கபாடபுரம் என்றும்,பின்பு அலைவாய் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம். அகநானூறு, தொல்காப்பிய மேற்கோள் செய்யுள், திருமுருகாற்றுப் படை கந்த புராணம் ஆகிய நூற்கள் இவ்வூரை 'அலைவாய்' எனக் குறிப்பிடுகின்றன.
 
    முருகன் நிலை பெற்று இருப்பதால் 'திரு' என்ற அடைமொழி பெற்றுத் 'திருச்சீரலைவாய்' என்ற பெயர் நிலைத்தது. இக்கோயிலில் அலைவாயு கந்த பெருமான் எனப் பெயருள்ள இவ்வூருக்கு நாமனூர் அலைவாய் என்றும் பெயர் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூரின் நடுவில் அமைந்துள்ள சிவக்கொழுந் தீசுவரர் கோயில் கல்வெட்டில் திருச்செந்திலூர் என்ற பெயர் காணப்படுகிறது. இப்பெயர் மருவியே 'திருச்செந்தூர்' என்றாகியிருக்க வேண்டும்.

    கி.பி.1648 ஆம் ஆண்டு உலாந்தர்கள் சிவக்கொழுந்தீஸ்வரர்  கோயிலில் தாக்குதல் நடத்தியாதத் தெரிகிறது. இக்கோயிலிலுள்ள பல சிலைகள் அடித்து நொறுக்கப பட்டுள்ளன. சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் முருகன் சில இருந்ததென்றும், அது கி.பி.10 ஆம் நூற்றாண்டில் கடற்கரைக் கோயிலுக்கு மாற்றப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குலசேகரன் பட்டணம் சரவணமுத்து ஞானியரது ஏடு "கி.பி.1648 ஆம் கடற்க்கரை கோயில் முருகன் கோயிலாக மாற்றப்பட்டது" எனக் குறிப்பிடுகிறது. (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.5) பேராசிரியர். க.நெடுஞ்செழியன் கருதுவதைப்  போல் ஐயனார் கோயிலாகவே கடற்கரைக் கோயில் இருந்துள்ளது. அதற்க்கு முன்பாக இக்கோயில் பாண்டியரின் அரண்மனையாத் தோற்றம் பெற்றுள்ளது.

    கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் ஏராளமான குகைக் கோயில்கள் அமைத்தனர். பாண்டியர்களும் குகைக் கோயில் அமைத்தனர். திருச்செந்தூர்க் குகைக் கோயிலும் இக்காலத்திலேயே அமைக்கப் பட்டிருக்கலாம்.

    "பாண்டிய நாட்டிலும் குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன... அவை பல்லவர்கள் காலத்திலேயே உருவாக்கப் பட்டவை என்பதிலும் பல்லவக் கலை மரபையே பின்பற்றியவை என்பதிலும் ஐயமில்லை" என்கிறார் கே.ஏ.நீல கண்ட சாசுதிரி (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.7). அமெரிக்க நாட்டு பிட்சுபர்க்குப் பலகலைக்கழகச் சமத் துறைப் பேராசிரியர் டாக்டர் பிரட்டு குளோதியும் இம்முடிவுக்கே வருகிறார்.

    கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் ஆதி சங்கரர் திருச்செந்தூர் சுப்ரமணிய புரத்தில்
    "பெரிய கடலின் கரையினிலே, முனிவர்கள் போற்றிப் புகழ்கிறதாயும், பாவங்களைத் தீர்க்கவல்லதாயும் விளங்கும் கந்தமாதன மலையில் அருட்பெரும் சோதியாக் குகப் பெருமான் ஒருக்கையில் அமர்ந்து அண்டினவர்களுக்குக் கெல்லாம் ஆதரவு தருகிறார். அவரது பொற்பாதங்களைப் பற்றி உய்வாம்" என்கிறார் (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.7), இதனால் ஆதிர் சங்கரர் காலத்திற்கு முற்பட்டே இஃது ஒரு குகைக் கோயிலாக இலங்கியது என்பது  புலனாகும்.

    "வரகுண பாண்டியனால் திருச்செந்திற் கோயில் நித்த வழிபாட்டிற்காக 1400 பொற்காசு பன்னீருராரிடைப்  பகிர்ந்து கொடுக்கப் பட்டது. வட்டி ஆண்டிற்கு ஒரு காசிற்கு இரு கலம் நெல் என்றும், வட்டியைக் கொண்டு வழிபாட்டை நடப்பிக்க வேண்ருமேன்ரும் வட்டி நிலுவையாயின் இரட்டியும் 25 காசு தண்டமும் இருக்க வேண்டுமென்றும் விதிக்கப் பட்டன. இக்கல்வெட்டு பொறிக்கப் பட்ட காலம் கி.பி. 875 ஆம் ஆண்டாகும்." (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.126 - 127 )

    பாண்டியன் மாறவர்மன் காலத்தில் மங்கலக்குறிச்சி என்னும் ஊரில் இரண்டு மா அளவு நிலங்களைப் பூசைக்குக் கொடுத்ததாக இக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. கி.பி.15 ஆம் நூற்றாண்டில் இக்கோயிலில் நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டு இக்கோயிலில் உள்ள நக்கீரர் சிலைக்குப் பூசை செய்வதற்காக ஒரு நிலத்தை 630 கலியுக ராமன் பணத்திற்கு விற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திருச்செந்தூர்க் கோயிலில் நக்கீரர் சிலை இருந்ததை அறிகிறோம்.ஆனால் இப்போது நக்கீரர் சிலை திருச்செந்தூர்க் கோயிலில் இல்லை.

    "கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் அடையாளம் தெரியாமல் மறந்து விட்டனர். நாயக்க மன்னர்களும் இப்பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அடுத்திருந்த திருவிதாங்கூர் மன்னர்கள் திருநெல்வேலிச் சீமையின் தென்பகுதியை ஆண்டனர். இதற்கான ஆவணம் திருச்செந்தோர்க் கோயிலில் உள்ளது" எனக் குறிப்பிடுகிறார் கால்டுவெல். (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.8 )

    ஆனால் பாண்டிய மன்னர்களும், அவர் தம் வழி வந்த மரபினரும், மரபினரும் திட்டமிட்டு அடையாளம் தெரியாமல் ஆக்கப் பட்டுள்ளனர். திருச்செந்தூர்க் கோயிலின் மேற்க்குக் கோபுர வாயில் அடைக்கப்பதர்க்கான காரண காரியங்களை ஆய்ந்து ஆராய்வோமானால் பாண்டிய மரபினரை எளிதாக் கண்டறிய முடியும்.

    திருச்செந்தூர்க் கோயிலுக்கு நேரடி உறவும், உரிமையும் உள்ள ஊர் 'திருச்செந்தூர்பட்டி'. இவ்வூர் திருவைகுண்டம் வட்டம், ஆழ்வார்கற்குளம்  ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இவ்வூர் 'திருச்செந்தூர்ப் பச்சேரி' எனவும் வழங்கப்படுகிறது. பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பள்ளர்கள் மட்டுமே வாழக்கூடிய இச்சிற்றூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊராகும். வயல் சூழ்ந்த இவ்வூரைச் சுற்றி 35 கோட்டை விதைப்பாடு நிலம் உள்ளது. கோயில் தோன்றிய காலந்தொட்டு பன்னெடுங்காலமாக 'நாள் பூசை' செய்வதற்குப் பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளர் குல மக்கள் பொருநை ஆற்றில் புனித நீராடி, நெல் குத்தி அரிசி கொண்டு சென்றுள்ளனர். இவ்வரிசியின் மதிப்பு '3 1 /2 கோட்டை' எனக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1947 க்கு முன் திருச்செந்தூர்ப் பட்டியிலிருந்து திருச்செந்தூர்க் கோயிலுக்கு 'நாட்கதிர்' கொண்டு செல்லும் மரபு இருந்துள்ளது. 'நாட்கதிர்' கொண்டு செல்லத் திருச்செந்தூரில் இருந்து கோயில் யானை திருச்செந்தூற்பட்டிக்கு வந்து 'நாட்கதிரை' எடுத்துக் கொண்டு சென்று நான்கு வீதிகளில் வளம் வந்து மேற்கு வாயில் வழியாகக் கருவறைக்குள் சென்று நாட்கதிரைக் கசக்கி அதனை அரிசியாக்கி அதில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக் கோயிலில் உள்ள அரிசியோடு போட்டுப் பொங்கல் வைப்பார். யானையுடன் நாட்கதிரைக் கொண்டு செல்லக் கூடிய பள்ளர்களின் செலவுத் தொகையைக் கோயில் குடும்புவே ஏற்றுக் கொள்ளும். தமிழ்க் கடவுள் முருகனுக்குப் படைத்த அப்பம், தேங்காய், பழம் ஆகிய பண்டங்களைக் கோயிலுக்குச் சென்றவர்கள் பெற்றுக் கொண்டு வந்து திருச்செந்தூர்பட்டியில் உள்ள  ஒவ்வொரு வீட்டிற்கும் முறைப்படி வழங்குவர். பிற்காலங்களில் சீட்டுக் குலுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட இருவர் 'நாட்கதிரைக்' கொண்டு சென்று கோயிலின் மேற்கு வாயில் வழியாக மண்டபத்தில் வைத்து, அதனை அரிசியாக்கிப் பொங்கலிடுவர். இதற்காகக் கோயில் குடும்பில் இருந்து ரூபாய் 500 செலவுத் தொகையாகக் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு முறை சீட்டுக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் பட்ட விவரமறியாத இருவர் நாட்கதிர் கொண்டு செல்ல அங்கே மேலாண்மை செய்ய வந்த வெள்ளையர்கள் நாட்கதிர் கொண்டு சென்ற பள்ளர்களைப் பற்றி கேட்டபோது கோயிலில் ஆதிக்கம் செலுத்தி வந்த வந்தேறி ஆரியப் பிராமணர்கள், "கோயிலுக்கும், பள்ளர்களுக்கும் இனி எந்த உறவும், வரவும் இல்லை" என ஏமாற்றிக் கையொப்பம் வாங்கிக் கொண்டு, 500 ரூபாயும், அப்பமும், தேங்காய், பலமும் கொடுக்காமல் அனுப்பி விட்டனர். அத்தோடு கோயில் குடும்பிற்க்கும், பள்ளர்களுக்குமான நிருவாக உறவுகள் நிறைவுற்றது.

    திருமணம் செய்து கொள்ளக் கூடியவர்கள் திருச்செந்தூர்க் கோயிலுக்கு பாக்கு வைக்க வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 1 1 / 4 பணமும், முருகனுக்குக் கட்டிய பட்டும் கோயிலில் இருந்து கொடுத்து விடப்படும்.அப்பத்தைக் கட்டிக் கொண்டு தான் திருமணம் நடைபெறும். பள்ளர்கள் இறந்தாலும், ஆணாக இருந்தால் வேட்டி, துண்டும், பெண்ணாக இருந்தால் சேலையும் அடக்கச் செலவுப் பணமும் கோயிலிலிருந்து கொடுத்து விடப்படும்.

    பின்னாளில் பள்ளர் குளத்தில் பிறந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாத்தூர், சின்ன ஓடைப்பட்டியைச் சேர்ந்த கோ.சங்கிலி என்பவர் திருச்செந்தூர் கோயிலின் அறங்காவல் குழுவில் இருந்தார். அதன் பின்னர் கோயில் நிர்வாகத்திற்கும், பள்ளர்களுக்குமான உறவுகள் முற்றிலும் அறுந்துப் போய் விட்டது. இருப்பினும் வரலாற்றுத் தொடர்புகள் சில உரிமைகளை நிலை நாட்டிக் கொண்டு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முருகனுக்குப் பிடிக்கப்படும் வெண்கொற்றக் குடையும், இரண்டு சேவல் கொடியும் திருச்ன்சென்தூர்க் கோயிலில் இருந்து தெருச்செந்தூர் பட்டிக்கு கொடுத்து விடப்படும். அவ்வாறு இறுதியாகக் கொடுத்து விடப்பட்ட வெண்கொற்றக் குடையிலுள்ள வெண்கல கலசமும், இரண்டு சேவை கொடியும் திருச்செந்தூர் பட்டியிலுள்ள அம்மன் கோயிலில் தான் இன்றும் உள்ளது. உடையார் குளம், வடக்குக் காரசேரி, ஒனாகுளம், சிங்கத்தாங்குறிச்சி, ஆலந்தா, வல்லநாடு, நாணல்காடு, முத்தாலங்குறிச்சி, முறப்பநாடு, படுகையூர், காசிலிங்காபுரம், அனைவரதநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து பள்ளர்கள் காவடி கட்டித் திருச்செந்தூர்பட்டியில் ஒன்று கூடி அங்கிருந்து திருச்செந்தூர் சென்று மேற்கு வாயில் வழியாகச் சென்று முருகனை வழிபட்டு வந்தனர். அதன் பின்னர்தான் மேற்கு வாயில் அடைக்கப் பட்டது.

    "பழம்பெரும் கோயில்களின் மேற்கு வாயில்,பாண்டிய மன்னர்களும் அவர் தம் மரபினரும் வருகின்ற வழியாதலால் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்த போது கோயில்களின் மேற்கு வாயில்கள் மூடப் பட்டன. அதிகாரத்தை இழந்ததால் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கும் கோயில் நுழைவு மறுக்கப் பட்டது" என்ற வரலாற்று அறிஞர் இரா.தேவ ஆசீர்வாதத்தின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இக்கோயில் வரலாற்றால் உறுதி செய்யப் படுகிறது.

    திருச்செந்தூர்க் கோயிலின் மேலக் கோபுர வாயிலும் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தபோது இழுத்து மூடப் பட்டுள்ளது. மேற்கு வாயில் பகுதியில் உள்ள தூண்களில் குடும்பன் பெயர் தாங்கிய பல கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன. மேலக் கோபுர வாயிலில் அமைந்துள்ள தெருவிக்குக் கோட்டைத் தெரு என்று பெயர். இத்தெருவில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப் பட்ட பத்து பழம் பெரும் மடங்கள் அமைந்துள்ளன. திருச்செந்தூர்ப் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளர் குலத்தாரின் கிளைப் பிரிவினர் ஒவ்வொருவருக்கும் ஒரு மடம் என்ற கணக்கில் பத்து பெருமடங்கள் உள்ளன. கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து கோட்டைத் தெரு வழியாக வரும் போது முதலாவதாக 'அஞஞாப் பள்ளர்' மேடம் உள்ளது. அதன் கீழ்ப்புறம் 'வாதிரியப் பள்ளர்' மடமும், 'சோழியப் பள்ளர்' மடமும் சேர்ந்தார்ப் போல் உள்ளது. அதன் கீழ்ப்புறம் 'வங்கப்பள்ளர்' மடம் உள்ளது. அடுத்ததாக 'அளத்துப் பள்ளர்' மடமும், அதன் கீழ்ப்புறம் 'கொற்கை நாட்டார்( பள்ளர்)' மடமும் உள்ளது. அதற்க்கடுத்ததாகப் 'பருத்தி கோட்டை நாட்டார் (பள்ளர்)' மடமும், 'சீவந்திவள நாட்டார் (பள்ளர்)' மடமும், 'வீரவள நாட்டார் (பள்ளர்)' மடமும் உள்ளன. ஒவ்வொரு மடமும் அரைக்குறுக்கத்திற்கு மேல் பரப்புக் கொண்டதாகச் சுற்றுசுவர் கட்டப் பட்டுள்ளது. இவற்றில் ஐந்து மடங்கள் பயன்பாட்டிலும், நான்கு மடங்கள் பாழடைந்த நிலையிலும் இருக்கின்றன. வீரவள நாட்டுப் பள்ளர் மடத்திற்கு வடபுறம் அருகே இருந்த ஒரு பள்ளர் மடம் மற்றவர்களுக்கு விற்கப் பட்டு மடம் இருந்த சுவடு தெரியாமல் அவ்விடம் வீடுகளாகிப் போயின. கோட்டைத் தெருவின் முடிவில் வண்டிகள் நிறுத்துவதற்காக இருந்த பள்ளர்களுக்கு உரிமையுடைய நிலங்கள் பின்னாளில் பறையர்களுக்கு கையளிக்கப் பட்டது. இது தமிழர்களாகிய பள்ளர்களையும், பறையர்களையும் மோத விட்டு பிரித்தாளும் வடுகச் சூழ்ச்சியாகும்.












    இக்கோயிலின் மேற்கு வாயில் ஆண்டிற்கு ஒருமுறை முருகன், தெய்வானை திருமணம் நடைபெறும் காலத்தில் மட்டும் திறக்கப் படுகிறது. திருப்பரங்குன்றத்தில் தற்போதும் நடைமுறையில் உள்ள முருகனுக்கும், தேவேந்திரனின் மகள் தெய்வானைக்கும் திருமணம் முடிந்து தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்கு மறு வீடு செல்லும் வழக்காறு திருச்செந்தூர்க் கோயிலில் வழக்கொழிக்கப்பட்டுள்ளது.

    கால ஓட்டத்தில் பள்ளர் குலத்தவர்கள் இக்கோயில் உரிமைகளில் நாட்டம் செலுத்தாததாலும், பலர் கிருத்துவம் தலுவியதாலும், நாடர்களாகிய 'சாணார்' சமூகத்தவர்கள் இக்கோயிலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். இதற்க்கு இவர்களின் சமூக எழுச்சியும், பொருளியல் மேம்பாடும், அரசியல் அதிகாரப் பகிர்வும் அடிப்படையாய் அமைந்திருந்தது. இக்கோயிலில் பள்ளர் குலத்தவர்கள் முதல் மரியாதை இழந்து, முற்றிலும் உரிமைகள் பறிக்கப் பட்ட போதிலும் இக்கோயில் பள்ளர்களுக்கு மட்டுமே உரிமை உடையதேன்பதும், பள்ளர் குலத்தவர்களே பாண்டிய மரபினர்கள் என்பது இக்கோயில் சொல்லும் வரலாறு உண்மையாம்.

தென்காசி கோயிலும், தென்பாண்டி வேந்தர்களும்




       திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்தின் அருகே பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தென்காசி. இங்கே பாண்டியர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இக்கோயிலின் ஆய்வினூடாகவும் பள்ளகளே பாண்டியர் என்று அறிய முடிகிறது.
'காசி கலியன்' என்ற பெரும்புலவர் பாடிய பாக்கள் தென்காசி கோயிலில் கல்வெட்டுகளாக உள்ளன. அதில்....
"சீர்கொண்ட செங்கமலை வாழத் திரையாடைப்பார்கொண்ட வாள்வீர பாண்டியன் என்று - ஏர்கொண்டகானுலா மாலைக்கன குமகுடம்பு னைந்தான் மாணவே லானபிரா மன்" (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.80 )

      அபிராம பாண்டியன் போருக்கு செல்கின்ற போது அவனது வாளையும், வெண் கொற்றாக்குடையினையும் பாராட்டுகின்ற புலவர் ஏர்கொண்ட பாண்டியன் என எடுத்துரைப்பது பாண்டியர்கள் பள்ளர்களே என்பதை உணர்த்துகின்றது.

பராக்கிரம பாண்டியன் மெய்க்கீர்த்தியில்
" சிவநெறி யோங்கச் சிவாற்சனை புரிந்துமருது ராற்கு மண்டப மமைத்து"  (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.89  )


எனவரும் அடிகளில் மருதூரார்களான மள்ளர்கட்கு - பள்ளர்கட்கு மண்டபமமைத்த செய்தி இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், அதிவீரராம பாண்டியன், வரதுகராம பாண்டியன், வரகுணராமன், குலசேகரன்,வரகுணராம பாண்டியன் உள்ளிட்ட பல பாண்டிய மன்னர்களில் பெயர்களைக் கல்வெட்டில் அறிய முடிகிறது.

   கலியுக ஆண்டு 4558ன் மேல் கார்த்திகை மாதம் 5ஆம்  நாள் (கி.பி. 1457 ) தென்காசிக் கோயிலில் பராக்கிரம பாண்டியன் கோபுரம் அமைக்கக் கால்கோளிட்ட செய்தியைப் பாடலாக வடித்துத் தந்துள்ள கல்வெட்டில்,

"செந்நெல் வயல் தென்காசி நகரில்நற்காத்திகைத் திங்கள் தியதி ஐந்தில்........................................................திருக்கோபுரம் காணத் துடியிடையாய்உபான முதல் தொடங்கினானே" (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.31  )என்று தென்காசி நகர் செந்நெல் வயல் சூழ்ந்த செந்நெல் முதுகுரியினரான மள்ளர்களின் - பள்ளர்களின் ஊர் என்பது உணர்த்தப் படுகிறது.
    கோபுரத்தை கட்டுகின்ற வேளையில் பராக்கிரம பாண்டியன் பகை அரசர்களின் படையெடுப்பையும், உள்நாட்டுப் போர்களையும், கருவூலத்தில் போதிய பொருளின்றி நிலைகுலைந்து போனதாலும் கோபுரத்தை அவனால் முழுமையாகக் கட்டி முடிக்க முடியவில்லை.

     இம்மன்னனுக்குப் பின்னர் ஆண்ட பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் சக ஆண்டு 1518 இல் இக்கொபுறப் பணியை நிறைவு செய்தான். இவனுக்குப் பின் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீரராம பாண்டியன், கி.பி 1564 இல் முடி சூடினான். இவனுக்குப் பின் கி.பி.1588 இல் துங்கராம பாண்டியன் முடிசூடி அரசாண்டான். இவன் சிறந்தத் தமிழ் புலவனாகவும் திகழ்ந்தான். இவனுக்குப் பின்னர் கி.பி.1618 இல் வரகுணராம குலசேகரன் அரசுக் கட்டிலில் அமர்ந்தான். அதனைக் கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

    இம்மன்னனுக்குப் பின் கி.பி.1748 இல் வகோன்ராமப் பாண்டியனின் மகன்கள் தங்களுக்குள் முரண்பாடு கொண்டு தென்காசி நகரில் கீழக் கோட்டையிலிருந்தும், மேலக் கோட்டையிலிருந்தும் ஆட்சி புரிந்தனர். இவர்களுக்குள் இருந்த பகையைப் பயன்படுத்திக் கொண்ட வடுக வந்தேறிகள் இவர்களைச் சுரங்கப்ப் பாதை வழியாகச் செல்ல வைத்து வஞ்சமுடன் கொன்று ஒழித்தனர்.

    முகமதியர்கள் தென்காசியக் கைபற்றி ஆட்சி செய்த பின்னர் முழுமையாக நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது தென்காசி. பாண்டியர்கள் வலிமை குன்றிய பின் உரிமை முறை பற்றிய ஓலைச் சுவடிகளைக் கோயில் கோபுரத்தில் ஒளித்து வைத்தனர். இதனை அறிந்த வடுகர்கள் கோபுரத்தையே தீவைத்துக் கொளுத்தினர். கி.பி.1771 ஆம் ஆண்டு தென்காசியில் பாண்டியர்களின் ஆவணங்கள் நெருப்பிற்கு இரையாக்கப் பட்டு அழிக்கப்பட்டதாகத் திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்பு என்ற நூல் கூறுகிறது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36  )

     பிறிதொரு குறிப்பு 25 .03 .1814 ஆம் ஆண்டு தென்காசி கருவூலத்தைக் கைப்பற்றும் வகையில் பாளையக்காரன் (நாயக்கன்) ஒருவனால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது என்கிறது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36  )

     சென்கி என்ற மேலை நாட்டு கிருத்தவ போதகர் தனது கி.பி.1729 ஆம் ஆண்டையக் குறிப்பேட்டில், தென்காசிக் கோபுரமும், அதன் மேலுள்ள கடிகாரமும் நன்றாக உள்ளது என்று பதிவு செய்துள்ளார். அனால் கி.பி.1824  இல் நிலம் அளக்கும் அளவர் குறிப்பில் தென்காசிக் கோபுரம் தீவைக்கப் பெற்று அழிந்து பரிதாபமாகக் காட்சி தருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36  )

     இடியும், மின்னலும் கோபுரத்தைத் தாக்கி அழித்ததாகப் பின்னாளில் கட்டுக் கதைகள் வடுகர்களாலும், வடுகர்களுக்கு வாலுருவும் ஒரு சில புல்லுருவிகளாலும் புனையப் பட்டுக் கற்பிக்கப் பட்டன. உண்மைகளை உறங்கப் போடலாம்,. ஒருபோதும் கொள்ள முடியாதல்லவா? மள்ளர் குல மாமன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் உருவாக்கப் பெற்ற கோபுரம், 'பாண்டியர் மரபினராகிய பள்ளர்களின் ஆட்சி' மீண்டும் இந்த மண்ணில் வந்து விடக் கூடாது என்னும் வடுகச் சூழ்ச்சியினால் சாம்பலாக்கப் பட்டது.

     தென்காசி கோயிலில் தேரோட்டும் உரிமை நன்னகரம் பள்ளர்களுக்கு இருந்தது. கால ஓட்டத்தில் இவ்வுரிமை மறுக்கப் பட்டு வழக்கொழிப்பு செய்யப் பட்டது. நன்னகரத்தை சார்ந்த பள்ளர்குலத்தவரான சுடலைமாடன் மகன் இசக்கி முத்து என்பவர் ஆண்டுதோறும் தென்காசி கோயிலுக்கு நாள்கதிர் கொண்டு செல்லும் வழமை இன்றுவரை நடப்பிலிருந்து வருகிறது.

     தென்காசிப் பாண்டியர்களின் மரபறிய முடியாதவாறு வடுகர்கள் அடையாள அழிப்பு வேலைகளைச் செய்த போதிலும், இன்றளவும், முன்னமே பதிவு செய்துள்ள தென்காசி, செங்கோட்டைப் பகுதி வாழ் பள்ளர்களின் நில ஆவணங்களில் 'பாண்டிய குல விவசாயம்' என்ற பதிவுகளும், பள்ளர்கள் யாவரும் தங்களின் பெயரின் பின்னொட்டாகப் 'பாண்டியன்' என்னும் தமது குடிப் பெயரினை இணைத்து இடும் மரபும், தங்களை 'பாண்டியர் சமுதாயம்' என அழைத்துக் கொள்ளும் வளமையும் மெய்மை வரலாறுகளை உலகறியச் செய்யும்.

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலும், நெல்லின் மக்களும்

தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் நெல்லின் மக்களாம் (மள்ளர்) பள்ளர்களுக்கு வழங்கிவரும் மரபுரிமை குறித்து கட்டுரைகளை இங்கே காண்போம். 'தாழ்த்தப்பட்டோருக்கான ஆலைய நுழைவு போராட்டம்' என்பது போன்ற சம்பவங்களுக்கும், மள்ளர்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும், மரபு வழியாகவே மள்ளர்களுக்கு அதி முக்கிய கோவில்களில் இன்றும் முதல் மரியாதை இருந்து வருவதும் கண்கூடு.


திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலும், நெல்லின் மக்களும்

        பாண்டிய நாட்டில் உள்ள பழம் பெருமை வாய்ந்த கோவில்களில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் அமைந்துள்ள 'திருநெல்வேலி'யின் வரலாற்றுப் பழம் பெயர் 'மருத வேலி' என்பதையும், இது மள்ளர் ஊர் என்பதையும், இதுவே பாண்டிய நாட்டின் தலைநகர் என்பதும் வரலாறு. வயல்வெளிகள் சூழ்ந்த 

மள்ளர் ஊரான பழம் பாண்டி நாட்டின் தலைநகராக விளங்கிய 'மருத வேலி' என்பதே பின்னர் 'நெல் வேலி' என வழங்கப்பட்டது. நெல்லின் மக்களான மள்ளர்கள் நெல்லை அடித்துப் பிரித்துக் குவித்திருந்த வேளை ஒரு நாள் பெரும் மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாம். அவ்வெள்ள ஓட்டத்தில் நெற்குவியல்கள் அடித்துச் செல்லாதபடி பாண்டிய வேந்தன் ஒருவன் தனது மள்ளர் படை கொண்டு வேலியிட்டுக் காத்ததுபோல காத்தானாம். இக்காரணம் பற்றியே 'மருதவேலி' என்பது 'நெல்வேலி' எனப் பெயர் மாற்றம் பெற்றதாகவும், அப்பாண்டிய வேந்தனே 'நெல்லையப்பர்' என நெல்லின் மக்களான மள்ளர்களால் போற்றப்பட்டதாகவும் தெரிகிறது. பிற்காலத்தில் 'திருநெல்வேலி' என்றானது. திருநெல்வேலி தலபுராணம் என்ற நூல் இவ்வூரினை 'மருதவேலி' என்றும், பாண்டிக் கோவை என்ற நூல் இவ்வூரினை 'நெல்வேலி' என்றும் குறிக்கின்றன. 


        நெல்லையப்பர் கோயிலின் முகாமையான கருவறையைச் சுற்றியுள்ள நடைக்கூடத்தை - திருச்சுற்று மண்டபத்தை கட்டியவன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆவான். (கே.வி.இராமன், பாண்டியர் வரலாறு, ப. 279). இக்கோயிலில் ஆடி மாதம் தொடங்கி 45 நாள் நடைபெறும் பூசையில் பள்ளர் குலப் பெண் அம்பிகையாக நெல் கொண்டு காட்சியளித்தல் பார்க்கத் தக்கது. நெல்வேலி கட்டின திருவிளையாடல் தை மாதம் நடைபெறும். இக்கோயிலின் நடு மண்டபத்தில் பாண்டியர்களின் உருவத்தைக் காணலாம். (பாண்டிய நாட்டு கோயில்கள், ப.98 ).  அறிவர் குணா நெல்லையப்பர் கோயிலை நேரில் வந்து கள ஆய்வு செய்து இதனை ஐயனார் கோயில் என்றே அறிதியிட்டு உறுதி செய்கிறார். ஐயனார் பாண்டியரின் படைத் தலைவன் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. 'இந்நகரில் உள்ள சிந்துபூந்துறையில் ஒரு நாள் நீராடினவர் பதினாயிரம் கிரிச பலன் அடைவர்' என 'நகர்பெருமை' என்ற தலைப்பில் நெல்லையப்பர் கோயில் தன வரலாறு கூறுகிறது.(அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தலவரலாறு,ப.11 ).


               நெல்லையப்பர் கோயிலுக்கு ஏறத்தாழ 512 குறுக்கம் நன்செய் நிலங்களும், 2960 குறுக்கம் புன்செய் நிலங்களும் உள்ளன. இந்நிலங்கள் தென்பத்து, பாட்டப் பத்து, கனடியப்பேரி, அருகன்குளம், சேந்தி மங்கலம், மேலப் பாளையம், பெரிய பாளையம், பல்லிக் கோட்டை ,நான்சான்குளம், தென்கலம், மணிமூர்த்தீசுவரம், பிரான்சேரி,தெய்வேந்திரபேரி, சேரன்மகாதேவி, சுப்பிரமணிய புறம், செட்டிக் குறிச்சி, திருப்பணி நெடுங்குளம், பூவாணி ஆகிய ஊர்களில் உள்ளன. (அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தலவரலாறு, ப.29 ). நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான விளை நிலங்கள் உள்ள மேற்கண்ட ஊர்கள் யாவும் பள்ளர் குலத்தவர்களின் ஊர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


               நெல்லையப்பர் கோயிலில் முதல் மரியாதையும், தேரோட்டும் உரிமையும், தென்பத்துப் பள்ளர்களுக்கே உரியதாகும். இக்கோயில் தேர்த் திருவிழாவின் போது 'தேவேந்திர குல வேளாளர்' சமூகக் கொடியான 'சிவப்பு பச்சை' வண்ணக் கொடி தேரில் பறக்க விடப்பட்டே திருவிழா நடைபெறுகிறது. (நேர்காணல், ஆ.மனோன்மணி, தென்பத்து)

தேவேந்திரன் சக்ரவர்த்தி: ஊர் குடும்பு ஆட்சி முறை

   மருத நிலத்தில் தோன்றிய ஊர்க்குடும்பு ஆட்சிமுறை களத்து மேட்டை நடுவமாகக் கொண்டெழுந்த காணியாட்சி முறையாகவே தொடக்கத்தில் இருந்தது. எனவே தான் நெல் விளைவிக்கப்படும் நிலங்களின் தொகுப்பிற்கு 'குடும்பு' என்று பெயர் ஏற்ப்பட்டது. குடியிருப்பதற்காக மக்களிடம் இருந்து மன்னர்களால் பெறப்பட்ட வரிக்கு 'குடிமை' என்று பெயர். சோழர் காலத்தில் தோட்ட வாரியம், கழனி வாரியம், ஏரி வாரியம் எனத் தனித்தனி அமைப்புகள் இருந்ததைப் போன்று 'குடும்பு வாரியம்' என்றொரு தனி அமைப்பும் இருந்து இயங்கி வந்துள்ளது. இதில் பணி புரிந்தவர்கள் 'குடும்பு வாரியப் பெருமக்கள்' என்று அழைக்கப் பெற்றனர்.

       காஞ்சிபுரம் வட்டம், மணி மங்கலம் கல்வெட்டில் 'குடும்பிடு பாடகம்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. குடும்பிடு பாடகம் என்பது நிலப் பெயர் ஆகும். குடும்பு செய்வதற்கான நிலம் குடும்பிடு பாடகம் என்றானது. குடும்பர்களுக்கு உரிமையுடைய நிலம் குடும்பிடு பாடகம் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாகேசுவர சாமி கோயில் கருவறையின் தெர்க்குச் சுவரில் உள்ள கல்வெட்டு முதல் பராந்தக சோழனின் 40 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. (கி.பி.947 ) இக்கல்வெட்டில் 'குடும்பு காட்டுக்காற் குடும்பி' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.

      களத்து மேட்டைக் கவனிக்கவும், விளை பொருட்களைக் கள்ளர்களிடம் இருந்து காக்கவும், ஏர் மள்ளர்களான குடும்பர்களுக்குத் துணையாகப் போர் மள்ளர்களான காலாடிகள் விளங்கினர். ஏர்க்கள நிருவாகத்தொடு போர்க்கள நிருவாகமும் இணைந்தபோது குடும்பன் காலாடி ஆட்சி முறையான மூவேந்தர்களின் அடிப்படை ஆட்சிமுறை தோன்றியது. குடும்பர்களுக்கு உதவியாக இருந்த காலாடிகளுக்குப் பதிலாக சில இடங்களில் வாரியார்கள் இருந்தனர். வாரியன் என்ற சொல்லே பின்னாளில் வாதிரியான் எனத் திரிந்தது. வாதிரியான் என்பது தற்போது 'வாத்திரியான்' என்று திராவிடத்தால் திரிக்கப் பட்டுள்ளது. வாதிரியான் என்பது பட்டியல் சாதிகளில் அகர வரிசை எண்.72 இல் உள்ளது.

இடைக்கால சோழர் ஆட்சியில் குடும்பு முறை

     குடும்பு என்னும் சொல்லாட்சி வரலாற்றில் தொன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து இடம் பெற்று வருவதைக் காண முடிகிறது. பாண்டிய மன்னர்கள் ஏற்ப்படுத்திய குடும்பிய முறை பின்னர் சோழர்களிடமும், சேரர்களிடமும் வழக்கில் இருந்தது. ஊர்க்குடும்பு ஆட்சிமுறையை உலகிற்கு உணர்த்துவதற்கு உரிய சான்றாக நிப்பது உத்திரமேரூர் கல்வெட்டாகும். இக்கல்வெட்டின் மூலம் இடைக்கால சோழர் ஆட்சி குடும்பு முறை செயல்பட்டதைப் பற்றிப் பார்ப்போம்.


உத்திரமேரூர் கல்வெட்டு - 1 
தேவேந்திரன் சக்ரவர்த்தி
ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பாரந்தக சோழர் காலம்


அ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மர்க்குயாண்டு பனிரெண்டாவது   உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம். இவாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீ முகப்படி ஆணை.


ஆ) இதனால் தத்தனூர் மூவேந்தர் வேளாண் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலம் சம்வத்சர வாரியமும், தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்.


இ) பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானியத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன மைனயிலே அ.


ஈ) கம் எடுத்துக் கொடன்னு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும், சாஸ்த்திரத்திலும், காரியத்திலும் நிபுணர் எனப் பட்டி.


உ) ருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்மா சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய் தொழிந்த பெருமக்களுக்கு


ஊ) அணைய பந்துக்கள் அல்லாதாரை குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு


எ) பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிரு வருசம் சம்பத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோலை


ஏ) லை வாங்கி பன்னிருவரும் தோட்ட வாரியம் ஆவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியம்


ஐ) வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும், முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவவியவஸ்தை ஒலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு


ஒ) ம். குடவோலையில் பேர் எழுதி இடப் படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவார வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத


ஓ) வாரியங்கள் ஒரு கால் செய்தாரை பிள்ளை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெராததாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரி வர்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட


ஓள) ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கேட்டு கிஷ்டர் வர்த்த்திதிடுவாராக வியவஸ்தை  செய்தோம் உத்திர மேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோம்.


உத்திரமேரூர் கல்வெட்டு - 2 
அ ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி வன்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதினாறு காலியூர் கோட்டத்து தன கூற்று உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர நாராயணன் ஸ்ரீ பராந்தக தேவன் ஸ்ரீ பரகேசரிவன் மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முப்படி ஆ


ஆ) ஞஞையினால் சோழ நாட்டுப்புறங் கரம்பை நாட்டு ஸ்ரீ வாங்க நகரக்கரஞ் செய்கை கெண்ட யக்ரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமாள் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும்  சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும், இடுவதற்கு வியவஸ்தை செய் பரிசாவது குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா


இ) ரே கூடிக் காணிலத்துக்கு மேல் இறை நிலமுடையான் தன மனையிலே அகம் மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்ப்பட்டார் மந்த்ர பிராமணம் வல்லான் ஒதுவித்தறிவானைக் குட வோலை இடுவதாகவும் அரக்கா நிலமே யுடையனாயிலும் ஒரு வேதம் வல்லனாய் நாலு பாஷ்யத்திலும்  ஒரு பா


ஈ) ஷ்யம் வக காணித்தறிவான அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆகாரமு டையாரானாரை யேய் கொள்வதாகவும் அர்த்த சௌசமும் ஆன்ம சௌசமும் உடையாராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்து கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றனவர் பேரவ்வை


உ) க்களையும், அவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் இவர்கள் தகப்பநோடுப் பிறந்தானையும் தன்னோடுப் பிறந்தாளை வோட்டானையும் உடப் பிறந்தாள் மக்களையும் தன மகளை வேட்ட மருமகனையும் தன தமப்பனையும்


ஊ) தன மகனையும் ஆக இச்சுட்ட.....பர்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும், அகமியாகமனத்திலும் மகா பாதங்களில் முன் படைத்த நாலு மகா பாதகத்திலுமெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முன் சுடப்பபட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும் சம சரக்க பதிதாரை பராஸ்யசித்தஞ் செய்யுமளவும்


எ) குடவோலை இடாததாகவும்....தியும், சாகசிய ராயிரைப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் பரத்ரவியம் அபகரித் தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ரத பிராயஸ் சித்தஞ் செய்து சுத்தரானாரையும் அவ்வவர் ப்ராணாந்திகம் 


ஏ) வாரியத்துக்கு குடவோலை யெழுதிப் புகவிடப் பெருந்தாகவும் .... பாதகஞ் செய்து பிராயச் சித்தர் செய்து சுத்தரானாரையும் கிராம கண்டகராய் ப்ராயஸ்சித்தஞ் செய்து சத்தரானாரையும் அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் ப்ரானாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதி எழுதிப்புகவிடப் பெருதாக


ஐ) வும் ஆகா இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி இபன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக்குடம் புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் போது மகா சபைத் திருவடியாரை சபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு அன்றுள்ளீரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா


ஒ) மே மகா சபையிலேரும் மண்டகத்தி லேயிருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பிமாரில் வருத்தராய் இருப்பா ரொரு  நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்குலெடுத்துக் கொண்டு நிற்க பகலே யந்திர மறையாதானொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றொரு குடத்துகே புகவிட்டுக் குலைத்து அக்குடத்திலோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே


ஓ) குடுப்பதாகவும் அக்குடத்த வோலை மத்தியஸ் தன வாங்கும்போது அஞ்சு விரலும் அகல வைத்த உள்ளங்கையாலே ஏற்றுக் கொள்வானா கவும் அவ்வேற்று வாங்கின வோலை வாசிப்பானாகவும் வாசித்த அவ்வோலை அங்குள் மண்டகத்திருந்த தம்பிமார் எல்லோரும் வாசிப்பாராகவும் வாசித்த அப்பர் திட்டமிடுவதாகவும் இப்பரிசே முப்பது குடும்பிலும் ஒரே பேர் கொள்வதாகவும் இக்கொண்ட முப்பது பேரினுந்தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விச்சையா வருத்தரையும்


ஓ) வயோவ்ருத்தர்களையும் சம்வத்ஸர வாரியராக கொள்வதாகவும் மிக்கு நினாருட்பன்னிருவரைத் தொட்ட வாரியங் கொள்வதாகவும் நின்ன அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வதாகவும் இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன்னுற்றருபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்ய நின்றாரை அபராதங்


ஐ) கண்டபோது அவனை யொழித்துவதாகவும் இவர்கள் ஒழித்த அனந்தரமிடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன்மைக்ருதயங் கடை காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப்பராகவும் இவ்வியவஸ்தை யோலைப்படியே...க்ருக்குடவோலை பரித்தக் கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்து.


ஓ) க்கு முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி முப்பது வாயோலை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்னிரண்டு பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்ச வாரியமும் ஆவனவாகவும் பிற்றை ஆண்டும் இவ்வரியங்களை குடவோலை பறிக்கும் போது இவ்வரியங்களுக்கு முன்னம் செய்


ஓ) த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக் இடப் பெருததாகவும் மத்தியஸ்தரும் அர்த்த சௌசமுடையானே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி சுத்தன் ஆச்சி தன பின்னன்றி மாற்றுக் கண


ஓள) க்குப் புகழ் பெருதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மாற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெருதாராகவும் இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூரா சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக் காட்ட ஸ்ரீ ஆளஞயா


அக்கு) ல் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்ட யாக்ரமவித்த பாட்டனாகிய சேர்மாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் கிராமத்து அப்யுதயமாக துஷ்டர் கேட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையாம் இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்கு வியவஸ்தை மத்யஸ்தன்


அ) காடாடிப் போத்தன் சிவகுறி இராஜமல்ல மங்கலப்பிரியனேன்.


       குடும்பு ஆட்சியில் குடவோலை முறை குறித்து மேற்கண்ட உத்திரமேரூர் கல்வெட்டு உணர்த்துகிறது. மேலும் இக்கல்வெட்டு இராசராசச் சோழனை தேவேந்திரன் சக்ரவர்த்தி குஞ்சர மல்லன், இராசமல்லன் எனவும் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

குடும்பு வாரியம்

    திருப்பாற்கடல் கற்ப்பூரிசுவரர் கர்ப்பகிரக வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு பரகேசரிவர்மன் பராந்தக சோழன் (கி.பி.918 ) காலத்தியது. இது குடும்பு வாரியப் பெருமக்களும்,தோட்ட வாரியப் பெருமக்களும் கழனி வாரியப் பெருமக்களும், ஏரி வாரியப் பெருமக்களும் பெரிய ஏரி மராமத்து செய்தது பற்றிக் குறிப்பிடுகின்றது.


"ஸ்வத்ஸ ஸ்ரீ மாதிரி கொண்ட சேர்ப்பரகேசரி பன்மர்க்குயாண்டு பன்னிரண்டாவது கோட் நாள் நூற்றுருபத்தொன்பது பருவூர்க் கோட்டடத்துக் காவதிப்பாக்கமாகிய அமணி நாராயணச் சதுர்வேதி மங்கலத்து......இவ்வாட்டைக் குடும்பு வாரிய பெருமக்களுந் தொட்ட வாரியப் பெருமக்களும் பட்டர்களும் வசிட்டர்களும் உள்ளிட்ட மகாசபையார் பணியால் இவ்வாண்டு ஏரி ாரிகஞ் செய்கின்ற ஏரிவாரிகப் பெருமக்களோம் சோழ நாட்டுப் பாம்புணிக் கூற்றுத்து  அரைசூர் அரை சூருடைய .... ன் தீரன் சென்னிப் பேரரையர் பக்கல் ஒன்பதரை மாறி நிறை நூற்றிருபதின் கழஞ்சு பொன் கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சுப் பொன்னும் எம்மூர் பெரிய ஏரி கரை மண்ணாட்டுகின்ற ஓட நாயன்மார்க்கிடுவதற்க்கு முதலாக கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சு பொன்னாலும் வந்த வர்த்தியாலேய் பாண்டியனும் ஈழத்தரையனும் வந்து பெருமானடிகளோடு வேரூர் அஸ்திகடை செய்த நான்று இச்சென்னிப் பேரையர் சென்ற இடத்துப்பட்ட சேவகர் காரிமங்கலமுடையானுக்கும் வலிக் குட்டிக்கும் பெருநாயகனுக்கும் அழிநிலை மாடம்பிக்கும் ஆக இந்நால்வரையும்."


    பள்ளு நூல்களில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கூடற் பள்ளுவில் வடிவழக் குடும்பன் குடும்பு செய்து ஊர் மக்களுக்கு உழைத்த செய்தியைக் கீழ்கண்டவாறு உரைக்கிறது.

செய்யுள் 88 
    "ஆளுக்கும் பணியாள் - சீவலப்

      பேரிக்குள் காணியான் - வில்லென்றும்
            அரிப்பிட்டுப் போட்டான் -
பள்வரி

            தெரிப்பிட்டுக் கோட்டான்

            ...................................... குடும்பு செய்

            தூராருக் குழைத்தான் - அழகர் சொம்

            மார்க்கப் பிழைத்தான்"


    என்று வடிவழகக் குடும்பன் குடும்பு செய்து ஊர்மக்களுக்காக உழைத்துத் தாழ்வின்றி தானும் பிழைத்த செய்தியை வெளிப்படுத்துகிறது. இங்ங்கனம் குடும்பு என்னும் சொல் ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் தலிமைப் பதவியைக் குறிக்கிறது. 


    கி.பி.1891 இல் பதிப்பிக்கப்பட்ட ஆற்றங்கரை சம்சுதான வித்துவான் கடிகை ஐந்கமுத்து புலவர் இயற்றிய பொய்கைப் பள்ளுவில், பொய்கைக் குடும்பன் குடும்பு செய்த வரலாற்றினைக் கூறுவதாகவுள்ள பாடலடிகள் வருமாறு.


செய்யுள் 27 
    "இன்னமென்று சொல்வேனேன் பள்ளியர் தம் பெருமை
    யிதற்க்குமே லதிகமா மியம்பக்கே ளும்
    மன்னு திருநெடுமால் கொண்டதும்
பள்ளியீசன்
    மற்றோர்சேர் வதும்
பள்ளி மாநிலமெல்லாம்
    பண்ணுந் துலுக்கர்தொழு கையும்
பள்ளி வாசல்கல்வி
    பயிலு மிடமனைத்தும்
பள்ளி யிவற்றால்
    தென்னன் சொக்கலிங்கபெத் தண்ணல்பண் ணைக்
குடும்பு
    செய்யடியேன் குலத்திற் சிறந்தோ னானேன்
".....

மதுரை வரலாறும், மள்ளரின் மேன்மையும்

தென்பாண்டி நாட்டிலுள்ள பள்ளர்கள் நடுவே மதுரை என்பது 'மருதை' என்றே வழங்கி வந்துள்ளது. வைகையாற்றின் தென்கரையில் அவனியாபுரம்,வில்லாபுரம்,பழங்காநத்தம்,மாடக்குளம்,பொன்மேனி,தானத்தவம்புதூர்,விராட்டிபத்து,அச்சம்பத்து,ஆரப்பாளையம்,அனுப்பானடி,சிந்தாமணி,ஐராவத நல்லூர்,விரகனூர் ஆகிய ஊர்களும், ஆற்றின் வடகரையில்வண்டியூர்,கருப்பாயூரணி,மானகிரி,மதிச்சியம்,கோசாகுளம்புதூர்,செல்லூர்,'மீனாட்சி புரம்' என்ற பெயரில் மூன்று ஊர்கள்,தத்தநேரி,விளாங்குடி ஆகிய ஊர்களும் மதுரை மாநகருக்குள் நடுவம் கொண்டுள்ள மருத நில மக்களான பள்ளர்களின் பழம்பெரும் குடியிருப்புகளாகும்.


         மதுரையில் சுந்தரேசுவரர் கோயிலில் கிழக்குக் கோபுரம் அவனிவேந்தராமன் என்கிற சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. கோயிலின் வெளிப்புறச் சுவர்களை எழுப்பியவனும் இவனே. இச்சுவர் 'சுந்தர பாண்டியன் திருமதில்' என்றே வழங்கப்படுகிறது (கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு பக்.279). பாண்டிய அரசர்கள் 'அவனிப சேகரன்' என்றும், பாண்டிய அரசிகள் 'அவனி முழுதுடையாள்' என்றும் அழைக்கப் பெற்றனர்(கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு பக்.152). இது பற்றியே அவனியாபுரம் என்ற ஊர்ப் பெயர் எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரில் பள்ளர்குல மக்களே பெருந்திரளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 


        பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் பாண்டியர் வரலாற்றை அறிய உதவுகிறது. மதுரையைப் பற்றிய அக்காலத்தியக் கதைகளை இப்புராணம் பதிவு செய்துள்ளது. 'மாடக்குளக்கீழ் மதுரை' எனக் கல்வெட்டுகளில் வரும் பெயர் இந்நூலிலும் வருகிறது. 'மாடக்குளத்தில் வந்துதித்தவரான பரமசிவனுக்கு' எனப் பள்ளர் வரலாற்றை பறைசாற்றும் பழனி செப்பு பட்டய வரி 216 குறிக்கும். பாண்டியர் வரலாற்றை தாங்கிய மேற்கண்ட வரலாற்று முதன்மைச் சான்றுகள் முன்மொழிகின்ற மதுரை 'மாடக்குளம்' பள்ளர்களின் பழம்பெரும் ஊர் என்பது குறிப்பிடத் தக்கது.


சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம் - ஊர்சூழ்வரி
அடிகள் 15 - 22
                             மல்லன் மதுரை
"அல்லலுற் றாற்றா தழுவளைக் கண்டேகி
மல்லன் மதுரையா ரெல்லாருந் தாமயங்கித்
களையாத துன்பமிக் காரிகைக்கு காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கோல்
மன்னவர் மன்ன மிதிக்குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றஞ் சிதைந்த திதுவென்கோல்
மண் குளிரச் செய்யு மறவே னெடுந்தகை
தண்குடை வெம்மை விளைந்த திதுவென்கோல்
"

    பெருந்துயரமுற்று ஆற்றாது அழுகின்ற கண்ணகியைக் கண்டு அவள் துயரத்தைத் தம்மால் ஆற்ற முடியவில்லையே என்று ஏக்கமுற்று மல்லன் பாண்டிய நெடுஞ்செழியனுடைய மதுரை நகரத்தில் வாழுகின்ற மக்களெல்லாம் தாமும் இரங்கி அழுது மயங்கிக் கூறுகின்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் எடுத்துரைக்கின்றது.


        இச்செய்யுளின் மூலம் 'மல்லன் மதுரை' வாள் வேந்தனான தென்னவன் பாண்டிய மன்னனின் தலைநகர் என்பது தெரிய வருகிறது. நெடுநெல்வாடையும் பாண்டியரின் தலைநகரை 'மாட மோங்கிய மல்லன் மூதூர்' (அடி.29) என்கிறது. பொ.வே. சோமசுந்தரனாரின் கழக வெளியீடு 'மல்லன் மூதூர்' என்கிறது. ஏனைய பதிப்புகள் சிலவற்றில் திரிக்கப்பட்டு 'மல்லல் மூதூர்' எனப்பதிப்பிக்கப்பட்டுள்ளது. 'மல்லன் மூதூர்' என்றாலும் வளமுடைய பழைமையான மருத நிலத்து ஊர் என்று தான் பொருள். வளம் என்றாலே பயிர்த்தொழில்,உற்பத்திப் பெருக்கம் என்பதையே குறிக்கும். எனவே பாண்டியரின் தலைநகரான 'மல்லன் மூதூர் - மல்லன் மூதூர்' என்பது மள்ளர்களின் ஊர் என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ளவியலாது. 


திருவிளையாடற் புராணம்
மெய்க்காட்டிட்ட படலம்
செய்யுள் 27
                    மல்லன் மாநகரில் மள்ளரின் ஆரவாரம்
"பல்லிய மொலிக்கு மார்பும் பாயபரிசுலிக்கு மார்ப்புஞ்
சொல்லொலி மழுங்க
மள்ளர் தெழித்திடு மார்ப்பு மொன்றிக்
கல்லெனுஞ் கைம்மைத் தாகிக் கலந்தெழு சேனை மேனாள்
மல்லன்மா நகர்மேற் சீறி வருகடல் போன்ற தன்றே"


    பல்வகை இசைக்கருவிகளின் முழக்கமும், குதிரைகளின் கனைப்பொலியும் மள்ளர் போர்ப்படை வீரர்களின் ஆரவார ஒலியும் ஒன்றோடொன்று கலந்து பேரொலியாயின. அப்படி மள்ளர் சிவபெருமானின் மள்ளர் படை வரும் ஒலி, முன்பொரு காலத்தில் பாண்டிய மல்லனின் மதுரைக் கடல் சீறி வந்து கொண்டது போலிருந்தது எனக் கூறும் மேற்கண்ட செய்யுளடியின் ஊடாக மதுரை மாநகர், மள்ளர்களின் பேரூர் என விளங்கி வந்தமையை அறிய முடிகிறது. இரா.பி.சேதுப்பிள்ளை தனது 'ஊரும் பேரும்' என்னும் நூலில் மதுரை என்பதை 'மருதந்துறை' என்று குறிப்பிடுகிறார்.


        மதுரை காந்தி என்ற நூலில் பா.சி.சந்திரபிரபு, 1935 ஆம் ஆண்டு நா.ம.இராசுப்பராமன் என்பவர் நகராட்சித் தலைவராக இருந்தபோது மதுரை நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 


    "நகராட்சியின் மூலம் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளும் நடைபெற்றன. நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களுக்கும், தெருக்களுக்கும் சாதிப் பெயர் சூட்டக் கூடாது என்று ஐயா அவர்கள் தடை விதித்தார். சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட அரசுகள் இது போன்ற சீர்திருத்தம் கொண்டுவர இன்றும் கூடத் தயங்குவதைப் பார்க்கிறோம். புரட்சிகரமான இத்திட்டத்தை 1935ஆம் ஆண்டில் ஐயா அவர்கள் மதுரையில் செயல்படுத்தியது அசாதாரணமானதாகும். அதற்கிணங்க சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்களுக்கு மாற்றுப் பெயர் அளிக்கப்பட்டன. உதாரணமாக 'பள்ளர் தெரு' என்று வழங்கி வந்த தெருவுக்கு 'பெருமாள் கோயில் தெரு' என்று சூட்டப்ப் பட்டது. இன்று அந்த தெருவில் வசிப்பவர்களும் கூட இச்செய்தியை அறிவார்களா என்பது சந்தேகமே." (பா.சி.சந்திரபிரபு, மதுரை காந்தி (ஒரு சத்தியாகிரகியின் கதை), ப.44-45)
    

        பெருமாள் கோயில் தெருவாகப் பெயர் மாற்றப்பட்ட 'பள்ளர் தெரு' மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மேற்குப் புறம் இருந்தது. இவ்வாறு பள்ளர் குல மக்களின் அடையாளங்கள் பல அழிந்து போய்விட்டன.


பாண்டியர் இடுகாடு - கோவலன் பொட்டல்
    

        மதுரை பழங்காநத்தத்தில் உள்ள 'கோவலன் பொட்டல்' என அழைக்கப் படுகின்ற 'பாண்டியர் இடுகாடு' உண்மை வரலாற்றை உணர்த்துவதற்குத் தடம் பிடித்து காட்டும் தரவாக விளங்குகிறது. கே.ஆர்.அனுமந்தன் போன்ற வரலாறு அறிஞர்களால் கூறப்படும் பழங்காநத்தத்தில் உள்ள பாண்டியர் இடுகாடு என்பது இன்று பள்ளர்களின் இடுகாடாக இருக்கின்றது. அந்த இடத்தில் 'தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட மயானம்' என்று எழுதி வைக்கப் பட்டுள்ளது. இடுகாடு என்பது ஒரு குலத்திற்கு சொந்தமான சொத்தாகவே இருந்து வருவதை நாம் பார்க்கின்றோம். பொதுவாகவே ஒரு குலத்திற்கான இடுகாட்டை வேறொரு குலத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்துவது இல்லை. இஃது தமிழரின் மரபு வழக்காறாகவே இருந்து வருகிறது.

(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாடு - பள்ளர் சுடுகாடு நுழைவுப் பகுதி புகைப்படம்)
(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாடு - பள்ளர் சுடுகாடு உள்ப்புறம் புகைப்படம்)
(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாட்டில் உள்ள பள்ளரின் கல்லறை)

        பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைச் சிறைப்படுத்தி மரண தண்டனை வழங்கிக் கொன்றதால் கோவலனின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படாமல் பாண்டியர்கள் தங்களின் இடுகாட்டிலேயே அடக்கம் செய்து விட்டதாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே 'பாண்டியர் இடுகாடு' 'கோவலன் பொட்டல்' என்று அழைக்கப் படுகிறது. இந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் காட்டுவதாகக் கூறி மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு பலமுறை முயற்சித்தும், அம்முயற்ச்சியைப் பழங்காநத்தம் பள்ளர்கள் முறியடித்து விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இம்மரபு வழிச் செய்திகளையும், நடப்பியல்புகளையும் ஒப்பு நோக்கும் போது பள்ளர்களே பாண்டியர் மரபினர்கள் என்னும் வரலாறு உறுதி செய்கிறது.