ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

நாடாளுமன்றத் தேர்தல்: எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இந்திய கம்யூனிஸ்டா? டாக்டர் கிருஷ்ணசாமியா? l

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுமே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. சமீபத்தில் இக் கூட்டணியை விட்டு புதிய தமிழகம் வெளியேறியது. அடுத்த தேர்தலில் தனித்தே போட்டி என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துவிட்டாலும் கூட்டணியை தொங்கிக் கொண்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன். இந் நிலையில் இன்று சட்டசபையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ குணசேகரன் கூறுரையில், சில்லறை வர்த்தகம், தகாவிரிப் பிரச்சனை உள்பட அனைத்து விவகாரங்களிலும் மக்கள் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றார். பின்னர் தனது பேச்சை நிறைவு செய்கையில், சனி பிணம் தனியாகப் போகாது என்பதைப் போல காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு விரைவில் சனி பிணமாகச் செல்ல இருக்கிறது. அவர்களோடு சேர்ந்து சில கட்சிகளும் போக உள்ளன. டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த கிருஷ்ணசாமி, நாங்கள் எப்போதும் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறோம். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் தான் மாறிமாறி வேறு வேறு அணிகளுக்குப் போகிறீர்ர்கள். நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். இதையடுத்துப் பேசிய குணசேகரன், ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோதுதான் கம்யூனிஸ்ட்டுகள் அந்த அணியில் இடம் பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்தோமே தவிர, மற்ற எதிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது இல்லை என்றார். இன்னொரு இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஆறுமுகம் பேசுகையில், தேசிய மாநாடுகளில் ஆய்வு செய்த பிறகே அனைத்து முடிவுகளையும் இடதுசாரிகள் எடுக்கின்றனர். குணசேகரன் தேர்தல் தொடர்பாக எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணசாமி ஏன் அப்படி எடுத்துக் கொள்கிறார் எனத் தெரியவில்லை என்றார்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

ஆளுநர் உரையில் எந்த புதிய செய்திகளுமே இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி





தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (30.01.2012) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் எம்எல்ஏ டாக்டர் கிருஷ்ணசாமி,

இன்று ஆளுநர் ரோசய்யா அவர்களின் உரையில், தமிழ்நாட்டில் இந்த ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகின்ற நிலையிலும் தொடரும் மின்வெட்டு, தானே புயலால் ஏற்பட்ட பாதிப்பு, கூடங்குளம் அணுமின் நிலையம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை போன்றவற்றிற்கு ஒரு தீர்வு காணக் கூடிய வகையில் எந்த புதிய செய்திகளுமே இதில் இல்லை என்றார்.


















ஞாயிறு, 27 ஜனவரி, 2013

சாதிய தீயை பரப்பும் அரசியல் தலைவர்கள்..: ராமதாஸ் மீது ஜான்பாண்டியன் காட்டம் ....

சிதம்பரம்: தமிழகத்தில் சாதிய பிரச்சனைகள் குறைந்துவரும் நிலையில் சில அரசியல் தலைவர்கள் சாதிய தீயை பரப்புகின்றனர் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை மறைமுகமாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் சாடியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் சில பகுதிகளில் குறந்துள்ளது, சில பகுதிகளில் அதிகரித்துள்ளது. தற்போது. சாதிய பிரச்சனைகள் தமிழகத்தில் குறைந்துள்ளன. ஆனால் சில அரசியல் கட்சித்தலைவர்கள் சாதிய தீயை பரப்பி வருகின்றனர். இந்தத் தலைவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். வன் கொடுமை சட்டத்திற்கு திருத்தம் செய்வது தவறாகும். அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

புதன், 23 ஜனவரி, 2013

முதல்வர் அவர்களுக்கு நன்றி


  கரிகால்சோழமள்ளர் அவர்களுக்கு நமது முதல்வர் அவர்கள் மணி மண்டபம் கட்ட ஆணையிட்ட முதல்வர் அவர்களுக்கு நன்றி ......
தேவேந்திர வேளாளர் முன்னேற்றப்பேரவை , கோயம்புத்தூர்  (காந்திமநகர் ) சார்பாக  மள்ளர்களின் குலப்பெரராசர் கரிகால்சோழன் அவர்களுக்கு  நமது முதல்வர் அவர்கள் மணி மண்டபம் கட்ட ஆணையிட்ட முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி கோயம்புத்தூர்  முழுவதும் ஒட்டியுள்ளனர்.