வெள்ளி, 12 ஜூலை, 2013
வியாழன், 11 ஜூலை, 2013
இளவரசன் படுகொலை மீது உரிய நீதி விசாரணை கூறி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் "ஜான் பாண்டியன்" சென்னை உயர் நீதிமன்றத்தில் (08.07.201) மனு தாக்கல் செய்துள்ளார்..

இளவரசன் படுகொலை மீது உரிய நீதி விசாரணை கூறி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் "ஜான் பாண்டியன்" சென்னை உயர் நீதிமன்றத்தில் (08.07.201) மனு தாக்கல் செய்துள்ளார்..
"தேசிய மாநாடு.....புதிய தமிழகம்
தருமபுரியில் கடந்த ஆண்டு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞனும், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்து சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட நாள் முதல் இளவரசன் மரணம் அடைந்த தருணம் வரை தமிழகத்தில் நடந்து வரக்கூடிய பல்வேறு சமூக சிக்கல்கள் குறித்து கலந்தாலோசிக்க சமூக ஆர்வலர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் 9.7.2013 அன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் சமூக சமத்துவ படை கட்சியின் தலைவர் திருமதி.ப.சிவகாமி இ.அ.ப. (ஓய்வு), அருந்ததி மக்கள் கட்சியின் தலைவர் வலசை ரவிச்சந்திரன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பாவண்ணன், முற்போக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், மக்கள் சிவில் உரிமைக் கலகத்ஹ்டின் தமிழ்நாடு-புதுச்சேரி தலைவர் பேரா.சரஸ்வதி, மனித உரிமை ஆர்வலர் பேரா.அ.மார்க்ஸ், வழக்கறிஞர் திரு.அ.சரவணன், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா.கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1)தமிழகத்தில் அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகள், அண்மையில் தருமபுரியில் நடந்த இளவரசன்-திவ்யா காதல் திருமணம் உள்ளிட்டு சாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் மற்றும் கவுரவக் கொலைகள் ஆகியவை குறித்து
சனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் சமூக அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் ஆழ்ந்த கவலை கொள்கின்றன. இந்த வன்கொடுமைகளை ஆதரித்து ஆதிக்க சாதி சக்திகளை ஒன்றிணைத்து தமிழத்தில் சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
2)இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் தனிமனித உரிமையாகிய காதல் திருமணங்கள், சாதிகடந்த திருமணங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, வன்முறையைத் தூண்டியும், ஏழுகோடி தமிழ் மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் மேற்குறிப்பட்ட சமூகக் கொடுமைகளை ப்பட்டது.அறவே தடுத்து நிறுத்தும் பொருட்டு தமிழக அரசு, கவுரவக் கொலைகளைத் தடுக்கும் அவசர சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.
3)மேற்குறிப்பிட்ட கோரிக்கையை, மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தும் பொருட்டு வருகின்ற 31.07.2013 அன்று (காலை பிரதிநிதிகள் மாநாடு, மாலை பொதுமக்கள் மாநாடு) அனைத்துக் கட்சித் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்கும் "தேசிய மாநாடு" நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

செவ்வாய், 9 ஜூலை, 2013
சந்தர்ப்பம் எப்படி உள்ளதோ அதன்படி கூட்டணி: கிருஷ்ணசாமி பேச்சு
தேவேந்திரகுல வேளாளர் இனத்தை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாவிரத போராட்டம் திங்கள்கிழமை நடந்தது. இந்தப் போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,வும் கலந்து கொண்டார்.
போராட்டத்தில் பேசிய அவர்,
போராட்டத்தில் பேசிய அவர்,
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் இனத்தை பட்டியல் இனத்தில் சேர்போம் என்று தமிழக ஜெயலலிதா சொன்னார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனால் தான் இந்த உண்ணாவிரதம்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது ராஜ்யசபா தேர்தலுக்கு தி.மு.கவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி கேட்கிறார்கள். அதே போல அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டனி தொடருமா என்று கேட்கிறார்கள்.
இப்போதைக்கு இந்த கூட்டனி அமைந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அப்போது சந்தர்ப்பம் எப்படி உள்ளதோ அதன்படி கூட்டனி அமைப்போம். இவ்வாறு கூறினார்.
-இரா.பகத்சிங்.
மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூலுக்கு தடை எதிர்த்த மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவு..
சென்னை:"மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூலுக்கு, விதிக்கப்பட்ட தடையை, ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மள்ளர் இனம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்த, செந்தில் மள்ளர் என்பவர், தாக்கல் செய்த மனு:
மள்ளர் மீட்புக் களத்தின் நிறுவனராக உள்ளேன். "மள்ளர்' இனத்தின் வேர்களை அறியும் விதத்தில், சமூக ஆய்வில் ஈடுபட்டேன். ஏழு ஆண்டு ஆய்வுக்குப் பின், மள்ளர் வரலாற்றை கண்டுபிடித்தேன். இதற்காக, கல்வெட்டுகள், தாமிர பட்டயங்கள், பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்துள்ளேன்.
நான் எழுதிய, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' எனும் நூல், கடந்த ஆண்டு, மே மாதம் வெளியிடப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதி, விற்பனையாகி உள்ளன. நூல் வெளியீட்டுக்குப் பின், மள்ளர் சமூகத்தினருக்கும், மற்ற சமூகத்தினருக்கும் இடையே, எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. எந்த சமூகத்தையும் விரோதிக்கும் நோக்கம் கிடையாது.
என் நூலில், "பாண்டிய மன்னர்களின் வாரிசுகள் தான், மள்ளர்கள்' என, கூறியுள்ளேன். என் நூலை, தடை செய்து, கடந்த, மே மாதம், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நூலை வைத்திருந்ததற்காக, என்
உறவினர் பெருமாள்சாமியை, சாத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். அரசு
உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் தனபாலன், சுப்பையா, சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய "பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் விஜயேந்திரன் ஆஜரானார். "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
பாதுகாப்பு
அரசு தரப்புக்கு, "நோட்டீஸ்' கொடுத்து, இவ்வழக்கை விசாரிக்க வேண்டும். அரசு தரப்பில் பதில் அளிக்க, அவகாசம் கோரப்பட்டது. நூல் வெளியீட்டாளர், பிரிண்டர், அரசு அதிகாரிகளால் குறி வைக்கப்படுவதாக, மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, அரசிடம் நிலைமையை விளக்கி, சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்.
இம்மனு மீதான விசாரணை, இம்மாதம், 18ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு, "பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

மீண்டெழும் பாண்டியர் வரலாறு நூலாசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும்..
மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்னும் நூலை எழுதிய அதன் ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கே.செந்தில் மல்லர் மனு தாக்கல் செய்துள்ளார்.
7 ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு, 644 அரிய ஆவணங்களை ஆராய்ந்து மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதினேன். கடந்த 28.5.2012 அன்று நூல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நான் எழுதிய நூலை தடை செய்து கடந்த மே 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது சட்ட விரோதமானது. ஆகவே, எனது நூலை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் செந்தில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், ஆர்.சுப்பையா மற்றும் சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.விஜேந்திரன், மனுதாரர் செந்தில் எழுதிய நூல் வெளியிடப்பட்டு ஓராண்டுகள் முடிந்து விட்டன. 1000 பிரதிகளுக்கு மேல் நூல் விற்பனை ஆகி விட்டது. இந்த நூலின் காரணமாக இதுவரை ஒரு சிறு அசம்பாவித சம்பவம் கூட எங்கும் நடைபெறவில்லை. இந்நிலையில் மனுதாரரின் நூலை அரசு தடை செய்துள்ளது. மேலும், மனுதாரரும், அவரது குடும்பத்தினரும் ஏராளமான சித்திரவதைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்று வாதிட்டார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தனக்கு அவகாசம் வேண்டும் என்று கோரினார்.
இதனைத் தொடர்ந்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள், அச்சடித்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இம்மாதம் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
திங்கள், 8 ஜூலை, 2013
எத்தனை தடைகள் வந்தாலும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டே தீருவேன்-செந்தில் மள்ளர்
ஒரு புத்தகத்துக்கு தமிழக அரசு விதித்து இருக்கும் தடை, எழுத்தாளர்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏன் இந்தக் களேபரம்? அந்த அமைப்பின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பாஸ்கர சோழனிடம் கேட்டோம்.
''ஏழு ஆண்டு கால உழைப்பில், 'மீண்டெழும் பாண்டிய வரலாறு’ என்ற நூலை செந்தில் மள்ளர் எழுதினார். இந்தப் புத்தகத்தை கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சாத்தூரில் வெளியிட இருந்தோம். ஆனால், அந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்கு காவல் துறை தடைவிதித்தது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். அதன்பிறகு, புத்தகத்தை மதுரையில் வெளியிடலாம் என்று அனுமதித்தனர். ஜூலையில் புத்தகத்தை வெளியிடலாம் என்ற முடிவில் இருந்தபோதுதான் தமிழக அரசு இந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்து இருப்பதோடு, செந்தில் மள்ளர் மீது தேசத்துரோக வழக்கையும் பதிவுசெய்துள்ளது. செந்தில் மள்ளரின் மாமனார் பெருமாள் சாமி மீதும் தடை செய்யப்பட்ட புத்தகத்தை விற்றதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளிவிட்டது.
தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். 'பள்ளரே, மள்ளர். பள்ளரே பாண்டியர். அவர்கள் தமிழ் பகைவர்களான நாயக்கர்களால் வீழ்த்தப்பட்டனர்’ என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடித்தளம். பாண்டியர்கள்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்கிறோம். இதை எழுதியதன் மூலமாக சாதி மோதலைத் தூண்டுகிறோம் என்கிறார்கள். சாதி மோதலைத் தூண்டக்கூடிய புத்தகங்கள் இங்கே ஏராளம் உள்ளன. தமிழனின் தொப்புள்கொடி உறவை விவரிக்கும் இந்தப் புத்தகத்துக்கு தடைவிதித்து இருப்பது கொடுமையிலும் கொடுமை. இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள செய்திகளை ஆதாரத்துடன் மறுப்பவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் வெகுமதி தருகிறேன் என்று, செந்தில் மள்ளர் அறிவித்துள்ளார். அதை எதிர்கொள்ள முடியாதவர்கள்தான் இந்தப் புத்தகத்தை தடை செய்ய மறைமுகமாகத் தூண்டுகிறார்கள்'' என்றார்.
''புத்தக வாசிப்பு பழக்கமே குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில், புத்தகங்களால் மோதல் ஏற்படும் என்ற நினைப்பில் தமிழக அரசு தடைசெய்து இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில்,
சாதிக் கலவரங்களைத் தூண்டும்விதமாக சிலர் பேசும்போதும், சாதி உணர்வைத் தட்டி எழுப்பும் வகையில் பேனர்கள் வைக்கப்படும்போதும் வேடிக்கை பார்த்த அரசு, புத்தகங்களைத் தடைசெய்வதில் மட்டும் இத்தனை அவசரம் காட்ட வேண்டியதில்லை'' என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.
தலித் முரசு இதழின் ஆசிரியர் புனிதப் பாண்டியன், ''ஒரு புத்தகம் வெளியிடுவதற்கு முன்னரே அதற்கு தடை விதித்து இருப்பதோடு, உண்மை நிலவரம் தெரியாமல் அதன் ஆசிரியர் மீது தேசத்துரோக வழக்கு போட்டது அரசாங்கத்தின் மிகப் பெரிய தவறு. அதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒருவரின் கருத்தைத் தெரிவிக்க முதலில் அனுமதிக்க வேண்டும். ஆனால், இங்கு கருத்துரிமைக்கே தடைவிதித்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இங்கே பல தலைவர்கள் கட்சிகளின் பெயரில் தலித்துகளுக்கு எதிராக சாதி மோதலை தூண்டிவிட்டபோது அவர்களைத் தண்டிக்காத அரசு, ஒருவரின் உரிமையைச் சொல்லக்கூடிய புத்தகத்தைத் தடைசெய்வது தவறு. எனக்கும் அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டு இருக்கும் பல கருத்துக்களில் உடன்பாடு இல்லை. ஆனால், சமூகத்தால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்றே கருதுகிறேன். இதனால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. சிறப்புவாய்ந்த அரசர்களைத் தங்கள் தலைவனாக இங்கே எல்லா சாதியினரும் கொண்டாடுகிறார்கள். அதோடு, ஒரு அரசனின் வரலாறு மட்டும் ஒட்டுமொத்த தமிழர்களின் வரலாறு ஆகிவிடாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.
தேவர் இன இளம்புலிகள் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜமறவன், ''தங்களை உயர்ந்த சாதியினராகக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட புத்தகம் அது. அதனால், அவர்களை உயர்ந்த சாதியினராக சமுதாயம் ஏற்றுகொள்ளுமா? உண்மையைத் திரிக்காமல் வரலாற்றை எழுத வேண்டும். மற்ற சமுதாயத்தினரை கேவலப்படுத்தி, தன்னுடைய சமுதாயத்தை உயர்த்திக்காட்ட வேண்டும் என்ற நோக்கம்தான் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பதில் எந்தத் தவறும் இல்லை'' என்றார்.
தலைமறைவாக இருக்கும் செந்தில் மள்ளர், புத்தகம் தடை செய்யப்பட்டவுடன் 'யூ டியூப்’ மூலம் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ''இது புத்தகத்துக்கான தடை அல்ல. ஒட்டுமொத்தத் தமிழ் தேசிய அரசியலுக்கே விதிக்கப்பட்ட தடை. தமிழினத்தின் வரலாற்றைத் தமிழக அரசு மூடி மறைக்கும் செயல், அரசியல் உள்நோக்கம்கொண்டது. உண்மையான வரலாற்றை யாராலும் மூடி மறைக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டே தீருவேன்'' என்று பொரிந்திருக்கிறார் செந்தில் மள்ளர்.
நல்ல தீர்ப்பு கிடைக்கட்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)