ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

விருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதியன்று கடையடைப்பு போராட்டம்..

விருதுநகர் மாவட்டம்,ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை நவீன படுத்த தமிழக அரசு அறிவித்த 165 கோடியை உடனடியாக அமுல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 06-02-15 அன்று மாபெரும் பொது வேலை நிறுத்தம் நடைப்பெற்றது.இந்த பொது வேலை நிறுத்தத்தில் விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் கடையடைப்பு மற்றும் மாவட்டம் முழுவதும் சலைமறியலில் ஈடுப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

விருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதியன்று கடையடைப்பு போராட்டம்..

கலைஞருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு! ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை என பேட்டி!

திமுக தலைவர் கலைஞரை, அவரது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். திமுகவுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும். தேர்தல் ஆணையமும், அரசு இயந்திரமும் இணைந்து ஸ்ரீரங்கத்தில் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட பிரச்சனையில், நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில்தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழகத்தில் தமிழக அரசு நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல் இழந்துவிட்டது என்றார். 

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர்,  ‘’ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் ஆதரவு அளிக்கிறது. அக்கட்சி வேட்பாளர் ஆனந்தனுக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறேன். நாட்டில் 62 ஆண்டுகளாக பிரிட்டிஷ் முறை தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த நடைமுறையை தற்போதைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க வேண்டும்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை என்பது போதாது. இது மதம் கொண்ட யானையை நூல் கயிறு கட்டி அடக்குவதற்கு சமமாகும். எனவே தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

தேர்தலின்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி தலைமை செயலாளர் நோட்டீசு அனுப்பியுள்ளார். அதில் உண்மை நிலையை அறிய வேண்டும். தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உரிய பொறுப்பு பதவி வழங்கப்படவில்லை. அவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.

டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி முத்துகருப்பன். பிரிவு உபசார விழாவில் அவருக்கு உரிய அணிவகுப்பு மரியாதை வழங்காமல் அவமதித்துள்ளனர். இது கண்டிக்கதக்கது.

தேனி மலைப் பகுதியில் நியூட்ரினோ விஞ்ஞான ஆய்வுக் கூடத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நவீன விஞ்ஞான யுகத்துக்கு இந்த ஆய்வு தேவைதான். அதை எதிர்ப்பது முறையல்ல. தமிழகத்தில் தலித் மக்களை ஒருங்கிணைத்து புதிய தமிழகம் கட்சி சார்பில் அகில இந்திய மாநாடு நடத்த உள்ளோம்’’என்று கூறினார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் ஆதரவு அளிக்கிறது. அக்கட்சி வேட்பாளர் ஆனந்தனுக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறேன். நாட்டில் 62 ஆண்டுகளாக பிரிட்டிஷ் முறை தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த நடைமுறையை தற்போதைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க வேண்டும்.
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை என்பது போதாது. இது மதம் கொண்ட யானையை நூல் கயிறு கட்டி அடக்குவதற்கு சமமாகும். எனவே தண்டனையை கடுமையாக்க வேண்டும்.
தேர்தலின்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி தலைமை செயலாளர் நோட்டீசு அனுப்பியுள்ளார்.
அதில் உண்மை நிலையை அறிய வேண்டும். தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உரிய பொறுப்பு பதவி வழங்கப்படவில்லை. அவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.
டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி முத்துகருப்பன். பிரிவு உபசார விழாவில் அவருக்கு உரிய அணிவகுப்பு மரியாதை வழங்காமல் அவமதித்துள்ளனர். இது கண்டிக்கதக்கது.
தேனி மலைப் பகுதியில் நியூட்ரினோ விஞ்ஞான ஆய்வுக் கூடத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நவீன விஞ்ஞான யுகத்துக்கு இந்த ஆய்வு தேவைதான். அதை எதிர்ப்பது முறையல்ல. தமிழகத்தில் தலித் மக்களை ஒருங்கிணைத்து புதிய தமிழகம் கட்சி சார்பில் அகில இந்திய மாநாடு நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மதமாற்றம் செய்வற்கு காரணம் அரசுதான் என்பதை உணரவேண்டும்:கிருஷ்ணசாமி ..

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன் கொடுமை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி, தென்தமிழகத்தில் மிக அதிக அளவில் வன்கொடுமை நடந்து இருப்பதாக கூறி உள்ளார்.

உதாரணமாக கடந்த ஒரு மாதத்திற்குள் மதுரையில் மட்டும் 5–க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி குராயூர் கிராமத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது சமூக விரோதிகள் கற்களை வீசி உள்ளனர்.

இதில் வெள்ளைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர் இறந்து 16 நாள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.  எனவே,  மாவட்ட கலெக்டர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமை களமாக தென்மாவட்டங்கள் மாறி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றத்தையும் அமைக்க வேண்டும். இந்த சம்பவம் நடைபெறும் இடங்களில் துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும்.

இது தொடர்பாக மனு கொடுக்க ஆளுநரிடம் நேரம் ஒதுக்கிதருமாறு கேட்டேன். ஆனால் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. இன்னும் 2 நாட்களில் நேரம் ஒதுக்கா விட்டால் ஆளுநர் ரோசையா மீது ஜனாதிபதியிடம் புகார் கூறுவேன். ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மதமாற்றம் செய்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இதற்கு காரணம் அரசுதான் என்பதை உணரவேண்டும்’’என்று கூறினார்.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதியன்று கடையடைப்பு போராட்டம்..

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதியன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சலால் இதுரை 23 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இன்னும் பல குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். துப்புரவு பணிகளை சரிவர செய்யாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதால் வந்த ஆபத்து தான் இது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகிறது. இந்த கால கட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் ஒரு இலக்கு நிர்ணயம் செய்து சுகாதார பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் டெங்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும். டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.
ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த ரூபாய் 165 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்தது. அந்த நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. இதை உடனடியாக ஒதுக்கி இந்த சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த வலியுறுத்தி வருகிற 6 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் புதிய தமிழகம் கட்சி சார்பில் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் நடத்தப்படும்..