ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 30 மார்ச், 2015

தமிழக அரசே.! தமிழக அரசே.!! கொம்பனை தடை செய்..புதிய தமிழகம் கட்சி திருச்சி...

கார்த்திக் நடித்த கொம்பன் திரைப்படம் ஏப்ரல் 2 ம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அந்தப் படத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர் புதிய தமிழகம் கட்சியினர். இந்தப் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும், வசனங்களை நீக்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணசாமிக்கு சென்னையில் பிரிவியூ ஷோ காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த பின் கிருஷ்ணசாமி படம் வெளி வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தணிக்கை குழுவுக்கு புகார் மனுவை அளித்தார். மதுரை நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கும் தொடர்ந்துள்ளார். தங்கள் எதிர்ப்பின் ஒரு பகுதியாக படத்தை தடை செய்ய கோரி திருச்சியில் புதிய தமிழக கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை தடுத்து 34 பேரை கைது செய்து அருண் ஓட்டலில் உள்ள சுமங்கலி மகா ஹாலில் அடைத்து வைத்துள்ளனர்.

தமிழக அரசே.! தமிழக அரசே.!! கொம்பனை தடை செய்..புதிய தமிழகம் கட்சி திருச்சி

கொம்பன் திரைப்படத்தை தடைசெய்யக்கோாி திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்..

புதிய தமிழகம் கட்சி திருச்சி வடக்கு மாவட்ட சார்பில் ஆர்பாட்டம் சாலை மறியல் சாதிமோதலை தூவும் கொம்பன் திரைப்படத்தை தடைச் செய்யக்கோரி.தலைமை:.(ம.அய்யப்பன் மாவட்ட செயலாளர்) ( முன்னிலை:மு.பாலு மாவட்ட இளைஞரணி செயலாளர் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய செயலாளர்கள். மண்ணை.ம.தினகரன்,லால்குடி ப.நம்பிராஜ்,புள்ளம்பாடி து.முருகானந்தம்,உப்பிலியபுரம் மருகானந்தம்,கூத்தூர்கனேஷ்,கூத்தூர்சுதாகர்.கூத்தூர்சுரேஷ் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்

கொம்பன் திரைப்படத்தை தடைசெய்யக்கோாி தென்காசியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்..

தென்காசி-30 தென்காசியில் இன்று தாலுகா அலுவலகம் முன்பு ”கொம்பன்” திரைப்படத்தை தடைசெய்யக்கோாியும் கொம்பன் திரைப்படத்தை பாா்க்கமாட்டோம் என்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தங்களுடைய எதிா்ப்பை தொிவிக்கும் விதத்தில் புதிய தமிழகம் கட்சியினா் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளா் ஜெயக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் செய்தனா். ஆா்ப்பாட்டத்தில் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா் சந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளா் இசக்கி, கடையநல்லூா் கவுன்சிலா் ராஜ் உட்பட 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்

சாதி கலவரம் வராமல் தடுக்க முடியுமா? - நீதிபதியின் கேள்வியால் கொம்பன் வெளியாவதில் சிக்கல்!

கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் வராமல் தடுக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குப் பிறகு படத்துக்கு தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது தெரிந்துவிடும். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்‘ பட கதைக்கும் தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார். வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், படத்தை தடை செய்யக் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார். அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரினார். இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, "இந்தப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படும்," என்று தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞரோ, "அப்படி எதுவும் நிகழாது'' என்றார். உடனே நீதிபதி தமிழ் வாணன், "சாதிக் கலவரம் வராது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா?'' என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல் துறையினரிடமும் கேட்டார். இதற்கு உடனே பதிலளிக்க வேண்டும். பிற்பகலில் பதில் வந்தபிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார். இன்று மதியம் நீதிபதியின் தீர்ப்பில், திட்டமிட்டபடி ‘கொம்பன் ரிலீசாகுமா? இல்லை தடை செய்யப்படுமா? என்பது தெரியவரும்.

நெல்லையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: புதிய தமிழகம் கட்சியினர் 31 பேர் கைது

திருநெல்வேலியில் தடையை மீறி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொம்பன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை.
இந்த நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச்செயலர் நடராஜன் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 31 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கொம்பன் சர்ச்சை - தணிக்கை அதிகாரிகளின் பாகுபாடு!


ஏப்ரல் 2ந் தேதி வெளியாகிறது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் முத்தையா இயக்கியுள்ள கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படம். படம் ‘யு’ சர்டிபிகேட்டுடன் வெளியாவதாகத் சின்னத்திரைகளில் விளம்பரம் வெளியாகிவரும் நிலையில், இப்படத்தால் சாதிரீதியிலான சர்ச்சையும் பதற்றமும் உருவாகும் என புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார். 

தணிக்கைக் குழுவினர் இப்படத்தை நிராகரித்துவிட்டதாகவும் எனவே மறுதணிக்கை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், “ஒரு படம் சென்சார் சர்டிபிகேட் பெறாத நிலையில் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாது. அத்துடன் மறுஆய்வு செய்யவேண்டுமென்றால் அதற்கு சில நாட்கள் ஆகும். அதுவும் அலுவலக வேலை நாட்களில் தணிக்கை உறுப்பினர்கள் படத்தைப் பார்ப்பது வழக்கம். 

ஆனால் இதற்கு மாறாக விடுமுறை நாளான ஞாயிறன்று காலையில் கொம்பன் படம் சென்சார் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தின் நெருக்கடி கருதி இப்படிக் கோரியபோது சென்சார் இந்தளவு வேகமாக செயல்பட்டதில்லை.  

ஏற்கனவே அஞ்சான் உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் பல இந்திப் படங்களும் விதிமீறல்களுடனும் தனிப்பட்ட நலன்கள் கருதியும் சென்சார் செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகும் சென்சார் துறை பாரபட்சமாக செயல்படுகிறது என சினிமா வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். 

தேசம் முழுவதும் பாதிக்கும் அளவுக்கு தணிக்கை குழு மாறியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீ யார் கண்டிப்பதற்கு என்று கேட்டால், நான் கலைஞன் என்று பதில் சொல்லுவேன் என்று உத்தம வில்லன் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கொம்பன் பட வட்டாரமோ, மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ள படத்தை வெளியிடுவதற்கு சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்கிறார்கள். தணிக்கை அதிகாரிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ?