வியாழன், 19 ஆகஸ்ட், 2010
'உமாசங்கரை' பழிவாங்கிய அராஜ அரசு...
"ஒரு அரசு இயந்திரம் நல்ல முறையில் இயங்குவதற்கு காரணம் அவ்வரசு உழியர்கலே" என்று அறிஞர் அண்ணா அவர்களே கூறியிருக்கிறார் ஆனால் அண்ணாவின் தம்பிகள் என்று சொல்லிகொண்டு ஆட்சியில் அமர்ந்த அல்ப பன்னாடைகள்...இயந்திரத்தை, இயந்திரத்தை நிர்வகிப்பவரை(உமாசங்கர்.IAS) ஒழுங்காக இயங்கவிட்டார்களா... அரசு சலுகை என்ற பெயரில் உழியர்களுக்கு அவர்கள் கேட்கும் முன்னே பல சலுகைகளை வாரி இறைத்து தேர்தலுக்காக அவ்வுழியர்களை தன் கைவசமே வைத்துகொண்டு செயல் புரியும் அரசு..கையில் சிக்காமல் இருக்கும் நேர்மையான அதிகாரிகளை பழிவாங்குகிறது.
அரசு உழியர்கள் லஞ்சம் வாங்க கூடாது என்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறை ஒன்று உள்ளது. இதில் கடைநிலை, இடைநிலை உழியர்கள் அப்ப அப்ப லஞ்சம் வாங்கி மாட்டுவது உண்டு. ஒரு குடும்பத்தில் அப்பன் ஒழுக்கமாக இருந்தால்தானே பிள்ளையை ஒழுக்கமாக வளர்க்க முடியும். அப்பன் அயோக்கியனாக இருந்தால் பிள்ளை எப்படி வளரும். அப்பனை பார்த்துதான் பிள்ளை வளரும். அரசு ஊழல் இல்லாத ஆட்சி செய்தால் உழியர்களும் கையுட்டல் வாங்காமல் இருப்பார்கள் ஆனால்...."'நான் எப்படி வேணுன்னாலும் இருப்பேன் ஆனா நீ யோக்கியனா இரு' ஏன்னா, நான் பண்ற ஊழல் எனக்கு மட்டும்தான் ஆனா நான் அப்போ, அப்போ ஊழலில் இருந்து உனக்கு பல சலுகைகளை அறிவிப்பேன் அதுவரை நீ வாய்திருக்காமல் வேலைய பாரு" என்றால் அது எதுமாதிரி அரசு..இந்தியாவில் 'எந்த அரசியல்வாதி ஊழல் செய்தான்' என்று தண்டிக்கபட்டிருக்கான் இதை எண்ணி பார்த்தால் யாரும் இல்லை என்றுதான் என் எண்ணம். அப்படிப்பட்ட ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வெளிச்சத்திற்க்கு கொண்டுவரும் நேர்மையான அதிகாரி தடாலடியாக ஏதோ மொக்க(அல்ப) காரணம் சொல்லி மாற்றபடுகிறார் அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்யபடுகிறார்.
இதில் தற்பொழுது உமாசங்கர் என்ற IAS அதிகாரி அராஜக அரசால் பழிவாங்கப்பட்டார். இவர் வாங்கும் சம்பலத்திற்கும் மட்டும், மக்கள் நலனுக்கும் மட்டுமே பணி புரிந்துவந்த இவரை ஏதோ அல்ப காரணம் கூறி பணி இடை நீக்கம் செய்தது. எந்த வகையில் நியாயம். அரசியல்வாதி குடும்பம் நினச்சா முட்டிக்கும், இல்லனா ஒட்டிக்கும்...முட்டிக்கும் போது இன்னும் நல்லா முட்டவேண்டும் என்று அவ்வதிகாரி பயன்படுத்தப்பட்டார். இவ்வுண்மை தெரிந்தும் தன்பணியை நியாயமாக செய்து பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் வேலையில் முட்டிகனுவங்க மறுபடியும் ஒட்டிகனாங்க..ஒட்டிகுனதுக்கு தன்மானம் இல்லாத தமிழனுக்கு கவிதை வேற சொன்னாரு...அது என்ன கன்றாவி கவிதையோ எனக்கு மறந்துபோச்சு...இதன் பிறகுதான் உமாசங்கர் முழமையாக பழிவாங்கப்பட்டார். இவர் மேல் அரசு சுமத்திய குற்ற சாட்டை நீதி மன்றம் புரகணித்தது. (பராவில்லை நீதித்துறை சிலநேரத்தில் தன் கடமையை தவறாமல்தான் செய்கிறது...நீதித்துறைக்கு எங்கள் பாராட்டுகள்) உமாசங்கர் சங்கதி, எதிர்கட்சிகள், பத்திரிகை துறை, மனித உரிமை போன்ற பல்வேறு அமைப்புகள் அவருக்கு ஆதரவாக அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் வரை போய்விட்டது. அப்போதுதான் அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைய பிசைந்து கொண்டு, விழித்துக்கொண்டு இருக்கிறது.
இப்போது இணைய பதியுலகம் ஊடாக நாங்கள் கேட்பது. அவருக்கு மீண்டும் பணி உறுதி செய்யப்படவேண்டும். உமா சங்கரை சுதந்திரமாக பணி செய்யவிடவேண்டும். அவரின் கோரிக்கைகள் நிறைவேற்றபடவேண்டும். அவரை பழிவாங்கும் போக்கை இவ்வரசு கைவிடவேண்டும்...
நல்ல நேர்மையான அதிகாரிகளை பகைத்துக்கொண்டு ஒரு அரசால் நீண்ட நாள் இருக்கமுடியாது. அப்படியிருந்தால் மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது அதற்கு பதில் சொல்லுவார்கள்...
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக