அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அவர்களை, அவர்களது இல்லத்தில் நேற்று திங்கட் கிழமை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் அருணா, அமைப்புச் செயலாளர் திரு. வி.கே. அய்யர், மாணவர் அணிச் செயலாளர் திரு. பாஸ்கர் மதுரம், விருதுநகர் மாவட்டச் செயலாளர் திரு. ராமராஜ், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் திரு. வி. சுப்பிரமணியம் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர் திரு. ஐயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக