செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.சஸ்பெண்ட் – தேவேந்திரர் மீது தி.மு.க. அரசு போர்

திராவிட கட்சிகள் காலத்துக்கு முன்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு என்று மிகப்பெரிய மரியாதை இருந்தது. பின்னர் அரசியல்வாதிகளால் பந்தாடப்படும் நபர்களாக அவர்கள் மாறிப்போயினர். எனினும், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் மீறி ஐ.ஏ.எஸ். என்ற பதவிக்கான மிடுக்கை காட்டியவர்கள் திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்திலும் உண்டு. அதற்கு 1970களில் நெல்லை மாவட்ட ஐ.ஏ.எஸ் கலெக்டராக இருந்த சுந்தரம், சேரன்மாதேவி துணை கலெக்டராக இருந்த சந்திரலேகா என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல் ஆக்கிரமிப்புகளை அகற்றி குர்னிகால் சிங், ஸ்வரண்சிங் போன்ற அதிகாரிகளையும் கூறலாம். அதேபோல் 1990களில் ஐ.ஏ.எஸ். வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டவர் உமாசங்கர். இவர் 1990ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். 1995-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மதுரையில் சுடுகாட்ட கொட்டகை அமைக்கப்பட்டது. அதில் ஊழல் நடைபெற்றதை வெளிக்கொண்டு வந்தவர். அபபோது கூடுதல் கலெக்டராக உமாசங்கர் பதவி வகித்தார். சுடுகாட்டு ஊழலை அம்பலப்படுத்தியதால் இவரின் பெயர் பத்திரிகைகளில் பரபரப்பாய் இடம்பெற்றது. இவரின் பணிக்கு பாராட்டுகளும் குவிந்தன. இதைத்தொடர்ந்து 1996-ல் தி.மு.க. ஆட்சி அமைக்கப்பட்டபோது, ஜெயலிலிதா மற்றும் முந்தைய ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த செல்வ கணபதி ஆகியோர்மீது வழக்கு தொடரப்பட்டது. தி.முக. ஆட்சிக்கு வந்ததும் இணை கண்காணிப்பு ஆணையாளராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார். பின்னர், முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூரின் கலெக்டராகவும் பதவி வகித்தார். திருவாரூரில் மின்ஆளுமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, மின் ஆளுமையில் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டமாக மாற்றி காட்டினார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, அவர் எல்கர்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்நிறுவனத்தில் பணிகளில் ஒன்று இலவச கலர் டி.வி. வழங்குவதாகும். அதன்பிறகு 2008-ல் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல்வர் டாக்டர் கலைஞர் குடும்பத்துக்கும், மறைந்த மத்திய அமைச்சர முரசொலி மாறனின் குடும்ப வாரிசுகளுக்கும் இடையே டி.வி.சேனல் பிரச்சினை ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு செக் வைக்கவே உமா சங்கருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. அந்த பதவியில் இருந்த உமாசங்கர் சன் நிறுவனத்துக்கு சொந்தமான சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கை தேசியமயமாக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைந்ததிருந்தார். அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் சிறுசேமிப்பு இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் உமாசங்கர். அந்த மனுவில், நான் ஒரு தனியார் கேபிள் டி.வி.வை தேசியமயமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததும், ஒரு மத்திய மந்திரி மீது நடவடிக்டிக எடுக்க வேண்டும் என்று சொன்னதுமே இதுபோன்ற நிலை ஏற்பட காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 21ம் தேதி இரவு உமாசங்கரை தமிழக அரசு திடீரென்று சஸ்பெண்டு செய்தது. இதற்கான உத்தரவு, அவரது வீட்டில் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் வகிந்து வந்த சிறுசேமிப்பு இயக்குனர் பதவிக்கு, சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மோகன்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உமாசங்கர் சஸ்பெண்டு விவகாரம் பற்றி தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகையில், யு.பி.எஸ்.சி. (ஐ.ஏ.எஸ்.) தேர்வு எழுதுவதற்காக உமாசங்கர் சமர்பித்த சாதி சான்றிதழில், சலுகை பெறுவதற்காக, தலித் கிறிஸ்தவரான அவர், தலித் (இந்து) என்று அதில் மாற்றி குறிப்பிட்டுள்ளார். அதற்கான போதிய ஆதாரம் அரசிடம் உள்ளது. இதன் அடிப்படையில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். போலி சான்றிதழ் தந்தமை பற்றியும, சஸ்பெண்டு செய்யப்பட்டது பற்றியும் யு.பி.எஸ்.சி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். உமாசங்கரை சஸ்பெண்ட செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கும் காரணத்தை பார்க்கும்போது அவர் வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டிருக்கிறார். தலித் கிறிஸ்தவர்களுக்கு சலுகை கொடுக்கப்பட வேண்டும் என்று கலைஞர் விடுத்த கோரிக்கை சும்மா அரசியல் காரணங்களுக்கானது என்பது இந்த சஸ்பெண்ட் மூலம் தெரியவருகிறது. அவர்மீது அரசு சொன்ன வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் வலுவில்லாததால் ஜாதிச் சான்றிதழ் என்ற துருப்புசீட்டை வைத்து கலைஞர் ஆட்டம் காட்டுகிறார். மேலும், இநத் ஜாதி சான்றிதழ் விபரம் இதற்கு முன்னர் அரசுக்கு தெரியாதா? சுடுகாட்டு ஊழலில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி இப்போது தி.மு.க.வில் இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் தான் ராஜ்யசமா எம்.பி. பதவியை தங்க தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்திருக்கிறார் கலைஞர். இதன்மூலம் ஊழலுக்கு எதிரானவர் கருணாநிதி என்ற உண்மையும் அடிபட்டு போகிறது. கேபிள் டி.வி. சேனல் விவகாரத்துக்குள் கலைஞரின் குடும்பத் தொழில் சிக்கி இருப்பதாலும், அதில் உள்ள பல ரகசியங்களை உமாசங்கர் அம்பலப்படுத்தியது தான் அவர் மீதான கோபத்துக்கான காரணம் என்பது கலைஞரின் நடவடிக்கை மூலம் தெளிவாகிறது. சுடுகாட்டு ஊழலை அம்பலப்படுத்தியதற்காக 2001ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது கூட உமாசங்கர் மீது ஜெயலலிதா சஸ்பெண்ட் என்ற அஸ்திரத்தை ஏவவில்லை. ஆனால், கருணாநிதி ஏவி இருக்கிறார். இதன்மூலம் தேவேந்திர சமுதாயம் மீது கருணாநிதி தன் மனதுக்குள் எவ்வளவு உச்சபட்ச வெறுப்பில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது, தேவேந்திரர்களே, கடந்த சட்டசபை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் கருணாநிதிக்கு நாம் போட்ட ஓட்டுகளுக்கு பரிசுதான் உமாசங்கர் சஸ்பெண்ட். எனவே நாம் ஒன்றுதிரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துவது கட்டாயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக