சனி, 21 ஆகஸ்ட், 2010

கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரர்களும் மிரட்டுகிறார்கள்-உமாசங்கர் புகார்

சென்னை: என்னை சட்டவிரோதமா முறையில் தமிழக அரசும், முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரும், மாறன் சகோதரர்களும் மிரட்டி வருகின்றனறர். அவர்களிடமிருந்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், மத்திய அரசின் பாதுகாப்புப் படை மூலம் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார் சமீபத்தில் தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர். இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். அதில் உமாசங்கர் கூறியிருப்பதாவது... பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நான் பணியாற்றி வந்தேன். நேர்மையாகவும், நியாயமாகவும் நான் பணியாற்றியதை விரும்பாமல் தொடர்ந்து என்னை இடமாற்றம் செய்து வந்தனர். என் மீது, அகில இந்திய அரசுப் பணி சட்டம், மக்கள் சேவகர் விசாரணைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு உட்பட்டு எந்தவிதமான விசாரணையையும் தமிழக அரசு எடுக்கட்டும். ஆனால் அதைச் செய்ய அரசுக்குத் தைரியம் இல்லை. மாறாக என் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு முதல்வர் காவல்துறையை நிர்பந்தித்து வருகிறார். தற்போதைய முதல்வர் தலைமையிலான தமிழக அரசு சகிப்புத்தன்மை அற்றதாக உள்ளது. காரணம், மாறன் சகோதரர்களுக்கு எதிராகவும், இடிஎல் இன்பிராஸ்டிரக்சரில் நடந்த முறைகேடுகளை நான் அம்பலப்படுத்தியதுமே காரணம். இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தொடர்பு உண்டு. இந்த ஊழலில் மத்தியில் உள்ள ஒரு திமுக அமைச்சருக்கும் பங்கு உண்டு. இதன் காரணமாகவே அரசு அதிகாரத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. எனது ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக என் மீதான விசாரணை எதுவாக இருந்தாலும், அதை மத்திய ஊழல் ஆணையமோ அல்லது சிபிஐயோ நடத்த வேண்டும். அல்லது தமிழக அரசு சம்பந்தப்படாத ஏதாவது ஒரு ஏஜென்சி விசாரணையை நடத்த வேண்டும். மேலும், நான் மத்திய அரசின் துறை ஏதாவது ஒன்றில் பணியாற்ற உத்தரவிட வேண்டும். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மத்திய படைகள் மூலம் போதிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் உமாசங்கர் தகவல் : தட்ஸ் தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக