சனி, 25 டிசம்பர், 2010

கீழ வெண்மனி தியாகிகளுக்கு டாக்டர்.கிருஷ்ணசாமி அவ்ர்கள் தலைமையில் அஞ்சலி

நாகை:-1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் கீழ வெண்மணியில் நடந்த துயர சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது.





உழைத்த உழைப்பிற்க்கு அரைப்பிடி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயர சம்பவம் நடந்த நாள் அது.





தியாகம் புரிந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது.





அம்மக்களின் அளப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கீழவெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் இன்று (டிசம்பர் 25) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக