வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

புதிய தமிழகம் கண்ணீர் அஞ்சலி




சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக 20/02/11 - மாலை மணியளவில்  மாவீரன் பிரபாகரனின் தாயார் வே. பார்வதியம்மாள் அவர்களின் மறைவிற்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நிறுவனர் - தலைவர் டாக்டர். க. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் பெரும்திரளாகக் கலந்துகொண்டுமெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

டாக்டர். க. கிருஷ்ணசாமி அவர்கள் ஆற்றிய புகழுரையில் கூறியதாவது:

மாவீரன் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மறைவு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நெஞ்சங்களிலில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் நோய்வாய்ப்பட்டு கடந்த ஆண்டு சிகிச்சைக்காக சென்னை வந்தபோது மனிதநேயமற்ற முறையில் மத்தியமாநில அரசுகள் விமானநிலையத்திலேயே அவரை திருப்பி அனுப்பின. சர்வதேச தமிழ் மக்களுக்கு முகவரி ஏற்படுத்திக் கொடுத்தவரும்ஈழத்தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாளையே முழுமையாக அர்ப்பணித்தக் கொண்ட மாவீரன் பிரபாகரனின் தாயார் முறையான சிகிச்சை பெற முடியாமலேயே காலமானார் என்பது கொடுமையிலும் கொடுமை. உலகத்தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் அவர் நீஙகா இடம் பிடித்தவிட்டார். அவரது நினைவும்புகழும் தமிழர்கள் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்கும்.இவ்வாறு அவர் உரையாற்றினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக