புதன், 2 மார்ச், 2011

தேர்தல் கூட்டணி யாருடன்?நெல்லையில் ஜான்பாண்டியன் பேட்டி



திருநெல்வேலி:மதுரையில் பிப்ரவரி 27ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மாநாடு நடக்கிறது.
இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்கவும், வாழ்க்கை தரம் மேம்படவும் முழுமூச்சாக செயல்படுவேன். பிரிந்து கிடக்கும் தேவேந்திர குல அமைப்புகளையும், தலைவர்களையும் ஒரே அணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பசுபதி பாண்டியன் மற்றும் சில தலைவர்களிடம் பேச்சு நடத்தும்.வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மாநாடு நடக்கிறது.


இதில் அனைத்து அமைப்புகளின் தலைவர்களையும் அழைக்க உள்ளோம். எங்களது முன்னோர்கள் 1805ம் ஆண்டு பச்சை, சிவப்பு கொடியை அறிமுகப்படுத்தினர். இந்த கொடியை அரசியல் கொடியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் நேரத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம். தேர்தலில் கூட்டணியும் உண்டு. போட்டியும் உண்டு. அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து நான் கருத்துசொல்ல விரும்பவில்லை. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ஊழல் செய்தவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் அவர் தண்டிக்கப்படவேண்டும். ஜாதியின் பெயரை சொல்லி தப்பிக்க கூடாது. இவ்வாறு ஜான்பாண்டியன் பேசினார்.

1 கருத்து:

  1. 1).What about your occupation
    2).How can you purchased BMW car for your son and daughter
    3)How much amount you got from Jayalalitha on the Sankarankoil by election
    4)Why are you cheating our 1.5 crore people

    பதிலளிநீக்கு