ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

முதல்வருக்கு நன்றி சொன்ன உமா சங்கர்



சாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு என தமிழக அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.



ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காக தெரு வில் நின்று பொதுமக்கள் போராட்டம் நடத்தும் அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது.



சென்னையின் அரங்குகளிலும் நெல்லையின் தெருக்களிலும் நின்று 'உமாசங்கரைப் பணியில் சேர்த்துக்கொள்' என்று மக்கள் கோரிக்கைவைக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம் ஆனது?



"ஆண்டவன் ஒருவனை நம்பியே களத்தில் நிற்கிறேன். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் முகம் தெரியாதவர்கள்கூட தொலைபேசி வாயிலாகவும், இ-மெயில் மூலமாகவும் வார்த்தைகளிலும் எழுத்திலும் நம்பிக்கையை விதைக்கிறார்கள். முன் எப்போதையும்விட, என் வீடு இப்போது மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படுகிறது.



முதல்வருக்கு நன்றி!" - தெளிவாகப் பேசுகிறார் உமாசங்கர். தமிழகத்தின் பிரபலமான ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த உமாசங்கரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.



"20 வயதிலேயே அரசுப் பணிக்கு வந்தவன் நான். வங்கிப் பணியில் இருந்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 26-வது வயதில் ஐ.ஏ.எஸ்., ஆனேன். முதலில் வேலூரில் ஒரு வருடம் உதவி கலெக்டர். பிறகு மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர் என வெவ்வேறு ஊர்களிலும், துறைகளிலும் பணி. பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வனவாசம். தி.மு.க. ஆட்சி வந்ததும் எல்காட் எம்.டி. பணி. அதன் பிறகு, தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பணி. அங்கிருந்து வேறு பணிக்கு திடீரென மாற்றப்பட்டேன். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்னை விசாரிக்க... நான் நீதிமன்றப் படியேற... பணி நீக்கம் செய்யப்பட்டு இப்போது வீட்டில் உள்ளேன்."



"உங்களை தலித் ஆதரவு அதிகாரி என்று கூறுகிறார்களே?"



"இன்னும் சிலர் கம்யூனிஸ்ட் என்பார்கள். தீவிரமாக மக்கள் பணி செய்வதால், சிலர் 'தீவிரவாதி' என்றார்கள். நான் எங்கு பணியில் இருந்தாலும், நிலமற்ற ஏழை விவசாயிகள் பெருமளவில் என்னைச் சந்திப்பார்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் தலித்துகள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், அவர்களின் வலியை என்னைவிட வேறு யார் உணர்ந்துகொள்ள முடியும்? என் அலுவலகம், வீடு இரண்டின் கதவும் அவர்களுக்காக எப்போதுமே திறந்தே இருக்கும். இதனால்தானோ என்னவோ, எனக்குக் குறைவான நண்பர்களே உள்ளனர். 20 ஆண்டுகள் பணி முடித்துவிட்டேன். மீதம் உள்ள 15 ஆண்டுகளையும் பாதி அரசுப் பணி, மீதி மக்கள் பணி என்று வடிவமைத்துக்கொள்வதாகத் திட்டம் இருக்கிறது."



"உங்களை எதிரியாக நினைத்த ஜெயலலிதாவே உங்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடும் அளவுக்கு வந்திருக்கிறாரே?"



"பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், 'உங்களுக்காகக் களம் இறங்குகிறோம்' என்று பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு அலை. 'வேண்டாம். அரசியல் சாயம் பூசுவார்கள். நான் அரசியல் சார்பற்ற அதிகாரியாகவே தொடர விரும்புகிறேன்' என்றேன். ஆனால், நெருக்கடி முற்ற முற்ற... அவர் களே களத்துக்கு வந்துவிட்டார்கள். தேவேந்திரகுல வேளாளர் உட்பட பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள், வைகோ, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுவார்... அறிக்கைவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 'பலவான்களை உனக்காக இறங்கிப் பேசவைப்பேன்' என்கிறது பைபிள். அது தான் இன்று நடக்கிறது!"



"கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். உங்களுக்குள் பிணக்கு வர என்ன காரணம்?"



"நான் யாருக்கும் செல்லப் பிள்ளை கிடையாது. என்றுமே மக்களுக்காக செயல்படும் பிள்ளையாகத்தான் இருந்து வருகிறேன். கோப்புகள் அனைத்திலும் கேள்வி கேட்காமல் கையெழுத்திடும் அதிகாரிகளையே அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். ஆனால், இன்று துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே துணிச்சலாகக் கேள்வி கேட்டு, சாதக பாதகங்களை விளக்கிச் சொல்லும் சில அதிகாரிகளைத் தனக்குக் கீழ் வைத்திருக்கிறார்."

"அ.தி.மு.க. ஆட்சி வனவாசம் என்கிறீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்



உங்களுக்கு நல்ல பதவிகள்தானே கொடுக்கப்பட்டன?"



"தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்த முதல்வர், 'எங்கேய்யா போறே?' என்றார். கம்ப்யூட்டரில் ஆர்வம் என்ப தால் 'எல்காட்' என்றேன். ஓ.கே. என்றார். அந்தச் சமயத்தில்தான் இலவச கலர் டி.வி. திட்டம் நடைமுறைக்கு வந்தது. பலரும் பதறிஅடித்துப் பின்வாங்கிய அந்தத் திட்டத்தை நான் கையில் எடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன். எல்காட்டின் துணை நிறுவனமான 'எல்நெட்', டைடல் பார்க் அருகில் உள்ளது. இந்த நிறுவனம் 'ஈ.டி.எல். இன்ஃப் ராஸ்ட்ரக்சர்' என்ற துணை நிறு வனத்தைத் தொடங்கியது.



இதற்காக 25 ஏக்கர் பள்ளிக்கரணையில் இடம் வாங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த கம்பெனியே காணாமல் போனது. அந்த முறைகேடுகளை விசாரிக்கப் போனபோது, கோப்புகள் காணாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். நானே அமர்ந்து தேடி, கிடைத்த கோப்புகளை வைத்து ஆய்வு செய்யச் சென்றேன். நான் அங்கு சென்ற சில நிமிடங் களிலேயே 'உங்களை மாற்றி விட்டார்கள்' என்று தகவல் வந் தது. ஆனால், முறைகேடுகள்பற்றி தெளிவான அறிக்கையை, முதல்வர், தலைமைச் செயலர், எல்காட் போர்டு ஆகியோருக்கு அனுப்பினேன். இவை அனைத்தையும் சென்னை உயர்நீதி மன்றம், மத்திய தீர்ப்பாயத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற நட வடிக்கையில் இருப்பதால் பிர மாணப் பத்திரத்தில் குறிப்பிட் டுள்ளதைத் தவிர வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை!"



"லஞ்ச ஒழிப்பு குற்ற விசாரணை உங்கள் மீது தொடர்கிறதா?"



"வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக விசாரிக் கிறார்கள். உடனடியாக என் மீது வழக்கு பதிவு செய்து, என்னைக் கைது செய்யுங்கள் என்றுதான் நீதிமன்றத்தில் என் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதை செய்யத் தயங்குகிறார்கள். ஏன் என்றால், என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. ஓர் அரசு ஊழியன் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எது வாங்கினாலும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. கம்ப்யூட்டர், செல்போன், கார் என்று எது வாங்கினாலும் உடனடியாகத் தெரியப்படுத்தி வருகிறேன்.



அப்படி இருக்கையில் என் மீது என்னவென்று அவர்கள் எஃப். ஐ.ஆர். ஃபைல் செய்வார்கள்? இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியிருக் கிறேன். இதை எல்லாம் எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்குப் புகாராக அனுப்பினேன். அந்தக் கோபத் தில்தான் என் சாதிச் சான்றித ழைக் காரணம் காட்டி, என்னைப் பணி நீக்கம் செய்துள்ளார் முதல்வர். நான் இந்து தலித் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்த வன். காலப்போக்கில் நம்பிக்கையின்பால் கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்றுவருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக மாறிவிடுவேனா? மேலும், சாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு."



"கருணாநிதி அரசின் சாதனை என்று எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?"



"ஓரிரு விஷயங்கள் உண்டு. சி.பி.எஸ்.சி., மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ-இந்தியன் என்று பாடத் திட்டத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்கக் கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேசமயம், 'நேர் நேர் தேமா... நிறை நேர் புளிமா' என்று குழப்பியடிக்கும் அளவுக்கு தமிழ்ப் பாடங்களில் இலக்கணம் தேவை இல்லை என்பது என் கருத்து. செய்யுளைக் குறைத்து உரைநடையை அதிகரித்தால், பிறகு மாணவர்களே ஆர்வமாக இலக்கணம் கற்பார்கள்."



"அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?"



"நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். 12 பேர்களில் ஒருவ னாகப் பிறந்தவன். மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தும் அளவுக்கு வருமானம் உள்ள தம்பி இருக்கிறார். தங்கைகள், வெளிநாட்டில் இன்ஜினீயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் கார் வாங்கி உள்ளேன். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், கார் வாங்கிய ஒரே ஐ.ஏ.எஸ்., அதிகாரி நானாகத்தான் இருப்பேன்.



இதையும் அரசிடம் தெரிவித்துவிட்டேன். என் அனுபவங்களைப் புத்தகமாக எழுத உள்ளேன். 'நாசி யில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே' என்றார் இயேசு. இனி, நானும் அப்படியே எச்சரிக்கையுடன் வாழ இருக்கிறேன்

திராவிடத்தை திராவகமாக்கும் நாம் சாதி தமிழர் சீமான்!





“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என் மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மான வாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள் சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண்டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும் மனக்குறையின்றி, நிறைமனதுடன் அனுபவிப்பேன் – சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகின்றேன். [பெரியார், ´தமிழர் தலைவர்´ என்னும் நூலில் இருந்து... பக்கம்:15] என்ற உறுதியோடு சமூகபோராளியாக வாழ்ந்து எழுத்தையும், சொல்லையும், செயலில் வெளிக்கொணர்ந்து 95-வயது வரை தமிழர்களுக்காக சளைக்காது போராடிய சமூகப் போராளி பெரியாரின் சொற்கள் என்றும் தமிழர்களை ஏமாற்றிய புரட்டு சொற்களாக இருந்ததில்லை. யாருக்கும் எதற்கும் அஞ்சாது சாகும்வரையில் உண்மையாய், கொண்ட கொள்கையின் மீது உறுதியாய் நின்று உரத்த சிம்மக் குரலாக இருந்த பெரியார் மீது, ´நான் பெரியாரின் பேரன்´ என்று சொல்லிக் கொண்டே அவதூறு சொற்களை கொட்ட ஆரம்பித்திருக்கிறார். சீமான்.[1]



“இல்லாத திராவிட இன உணர்வை நமக்குக்காட்டி அதற்காக அரசியல் செய்ய பல்வேறு இயக்கங்கள் இங்கே இருக்கின்றது. ஆனால் உண்மையிலேயே நீயும் நானும் திராவிடனா?” என்னும் கேள்வியை எழுப்புகிறார் சீமான்.



பெ.தி.க சமூக அமைப்பு சார்பாக நடைப்பெற்ற இருபதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் ´நான் இனத்தால் திராவிடன்´[2][காண்க: 01:03 நொடியில்] என வீரமுழக்கம் செய்திருந்த சீமானுக்கு ´திராவிடன்´ குறித்து கேள்வி எழுப்பும் யோக்கியதை இருக்கிறதா? பெரியாரை விமர்சிக்கும் யோக்கியதை இருக்கிறதா?



நாளொரு தத்துவமும், பொழுதொரு உளறலுமாக ஓட்டு பொறுக்கியாகும் சீமானுடைய முன்னாள் திராவிடம் என்பது எது? இதற்கு என்ன விளக்கம் வைத்திருந்தார்/ வைத்திருக்கிறார்/ வைத்திருக்கப்போகிறார்?



சமீபத்தில் ´இந்தியன் ரிப்போர்ட்டர்´ செப்டம்பர், 2009-இதழில் கூட “திராவிடம் என்பது இப்போது திராவகம் ஆகிவிட்டது” என்ற கருத்தை வைத்திருந்தார்.



மொத்தத்தில் திராவிடம் பேசியே தமிழன் உருப்படாமல் போய்விட்டான் என்று புலம்பும் சீமானின் திராவிடம் குறித்த புரிதல் எந்த நிலையை கொண்டது?



´ஜனகணமன´ என வங்காள மொழியில் பாடப்படும் இந்திய தேசீயகீத பாடலை முழுவதுமாக பாடிப்பாருங்கள்.



சிந்துநதி பாயும் நாட்டைச் சிந்து என்றும், கங்கை நதி பாயும் நாட்டைக் கங்கா என்றும், யமுனை நதி பாயும் நாட்டை யமுனா என்றும், உத்திரபிரதேசத்தையும், பீகார் மற்றும் ஒரிசாவை உத்கல் என்றும், தான் பிறந்த தாயகமான வங்காளத்தை வங்கம் என்றும் எழுதிய உலகம் மதிக்கத்தக்க மேதையான ´இரவீந்திரநாத் தாகூர்´ தேசிய கீதத்தில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் மாநிலங்களை தனித்தனியாக வைத்து ஏன் தேசீயகீதம் இயற்றவில்லை. நான்கு மாநிலத்தையும் சேர்த்து திராவிடம் என்றே ஏன் இரவீந்திரநாத் தாகூர் எழுதி வைத்தார் தேசீயகீதத்தில்….



1922-இல் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் இருந்து 400-கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிந்து மாகாணத்தில், சிந்து ஆற்றின் அருகே தொல்லியலாளர்களால் ´மொகஞ்சதாரோ´ நகரம் கண்டிபிடிக்கப்பட்ட போது வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதன் மொத்த அளவு 53.000-மைல்கள். இதில் இராஜஸ்தானிலுள்ள ´கலிபங்கன்´ என்னும் இடத்திலும், குஜராத்திலுள்ள லோதால் என்னும் இடத்திலும் வாழ்ந்த பண்டைய மக்களை ஆராய்ச்சியாளர்கள் ´திராவிடர்கள்´ என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ´மொகஞ்சதாரோ´ கால மக்களை திராவிடர்கள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட என்ன காரணம்?[3]



“ஆரியர்- திராவிடர் உண்மை” என்ற நூலில் திராவிடர்கள் என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியதை பெரியார் தொகுத்திருக்கிறார்.[4]



அம்பேத்கர் ´ஆரியர் திராவிடர்´ குறித்து பல நூல்களை ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார்.



ஆனால் சீமானோ, “நான் தமிழனா? திராவிடனா? என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்” என்கிறார்.



இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.



ஆனால், திராவிடன் என்ற இனத்தை இல்லாத திராவிடமாகவோ, திராவகமாகவோ அறிவிக்க என்ன ஆதாரம் இருக்கிறது சீமானிடம் என்கின்ற கேள்வியை எழுப்பும் கடமை எமக்கிருக்கிறது.



வரலாறு தெரியாமல் பேசும் சீமானின் குழப்பவாதங்களுக்கு திராவிடமும், பெரியாரியமும் கேலிக்குரியதாக ஆக எம்மால் அனுமதிக்க முடியாது.



எப்போது ஒரு கருத்து குறித்து விமர்சிக்க முற்படுகின்றோமோ அவை குறித்து விரிவான விளக்கங்களையும் கொடுப்பதுதான் பண்பாளனின் நடத்தைக்கு அழகு.



நினைத்தால் “நான் திராவிடன் என்பதும், மற்றொரு முறை எவன் திராவிடன்? எங்கே இருக்கிறது திராவிடம்?” என்பதும், “சாதி ஒழிய வேண்டும்” என்பதும், “சாதியை மறந்து தமிழர்களாய் ஒன்றுபடுங்கள்” என்பதுமாக சகிக்க முடியாத வசனங்களுடன் தொடர்ச்சியான கருத்துத் தடுமாற்றங்களுடன் நிதானம் இல்லாமல் உளற ஆரம்பித்திருக்கிறார் தம்பி சீமான்.



கடைசியாக கனடா நாட்டிற்கு மாவீரர் தினத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது பேசிய வசனங்களில் விசாரணைக்கு கனடா நாட்டு போலீசாரால் உட்படுத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்ற…



“சனியன் தலைவார ஆரம்பித்தால் சடை போட்டு பொட்டும், பூவும் வைக்காமல் போகாது” என்பது போல….



தமிழ்நாட்டுக்கு வந்த கையோடு, “என்னை கனடாவில் விலங்கு போட்டு கைது செய்து நாடு கடத்தினர் என அடுக்கடுக்காக பொய்யுரை பரப்பி அரசியல் நடத்த முயலும் சீமானுக்கு…



பெரியாரை விமர்சிக்க யோக்கியதை இருக்கிறதா? ஏற்கனவோ நாம் கனடா கைது குறித்து சீமானின் மோசடியை ஆடியோ கேசட் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருந்தோம்.[5][காண்க: 2:03 நொடியில் இவ்வாசகம் ஆடியோவில் வருகிறது]



இனி ´திராவிடம்´ குறித்து தம்பி சீமான் பேசுவதற்கு முன் வரலாறு குறித்து யோசிப்பாரா?



2



அண்மையில் பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு சீமான் மாலை போட்டதும், அது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “அந்த மக்களுக்காகப் போராடிய முத்துராமலிங்கத்தை ஏன் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள்”" என அபத்தமான வாதத்தை முன்வைத்ததும் நாம் மறந்துவிட முடியாது. தற்போது மேலும் ஓர் அபத்தமான வாதத்தை வைத்திருக்கிறார்.



“குற்றப்பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கப் போராடியவரை போராளி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?” என்னும் கேள்வியை சமீபத்தில் கீற்று இணையதளத்தில் வைத்திருக்கிறார் தம்பி சீமான்.



பிழைப்புவாத அரசியல்போக்கு இப்படித்தான் திமிரான போக்குடன் வெளிப்படும்.



இதே இணையத்தளத்தில் தான் [கீற்று] முன்பு பசும்பொன் முத்துராமலிங்கம் குறித்து விமர்சனம் வைத்தபோது சீமான்….



“தம்பி திரைப்படத்தில் முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான் என்று கூழைக்கும்பிடு போட்டார்.[6]



இப்போதோ முத்துராமலிங்கத்தை ஏன் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள் என்கிறார்.



இதற்காக மீண்டும் அறியாமல் செய்த பிழையென ´வசனம்´ பேசமாட்டார் என நம்புகிறோம்.



1957-சூலை, 10-அன்று திருப்புவனம் புதூரில் முத்துராமலிங்கம் பேசும்போது ‘காங்கிரசாரின் அராஜகம் எல்லை மீறிவிட்டது; காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரில் இருந்துதான் மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்.



காரணம் அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராசருடன் முரண்பாடுகள் இருந்தது.



முத்துராமலிங்கத்தின் வார்த்தைகள் எப்போதும் வன்முறையை தூண்டி சாதிச் சண்டையை உருவாக்கும் போக்காகவே இருந்திருக்கிறது என்பதற்கு இவை போன்ற வசனங்களே இன்றைய தலைமுறையினருக்கு சாட்சியாக இருக்கிறது.



இவைப்போன்ற ´சுயசாதி வன்முறையாளர்´கள் தான் போராளிகளா?



முதுகுளத்தூர் கலவரத்தின் வரலாறு தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் முத்துராமலிங்கத்தை ஒரு மனிதராக கூட கருதமாட்டார்கள் என்பதே நிதர்சனமாக இருக்கும் போது ஏன் போராளியாக பார்க்க வேண்டும் என்கிறார் சீமான்.



தேவரை போராளியாக பார்க்க வேண்டிய அவசியம் நமக்கெதற்கு? நாம் என்ன ஓட்டுப்பொறுக்கிகளா? ஓட்டு போடுகிறவர்களா?



ஜே.ஜீவபாரதி என்பவர் பல ஆதாரங்களுடன் எழுதிய நூல்களான,



-தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர்,

-பசும்பொன் தேவரின் கட்டுரைகள்,

-சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர்,

-பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும்,

-பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்,

-சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு,



போன்ற நூல்களில் ஆதாரங்களுடன் முத்துராமலிங்கத்தின் ஜாதிவெறி உணர்வை அம்பலப்படுத்தி இருக்கிறார். அவற்றை படித்தால் முத்துராமலிங்கம் போராளியா? ஜாதி வெறியரா? என்பதை நாம் உணர முடியும்.



யார் இந்த தினகரன்?



முஷ்டக் குறிச்சி கிராமத்தில் தேவர் சமுகத்தைச் சேர்ந்த தினகரன் அன்னியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு அய்ந்து ஆண்டுகள் சிறை தண்டனை அடைந்தவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கும் தினகரன் தன் பெயரில் ´தினகரன் நாளிதழை´ உருவாக்கி சமூக – அரசியல் விமர்சனங்களை எழுதியவர். அவர் சொல்கிறார்:



“கலகத்திற்கு வித்திட்ட வகுப்பிலும், நிலத்திலும் உதித்தவன் நான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயந்தான்”



இந்த அறிவிப்பை 1957-இல் இமானுவேல் படுகொலை செய்யப்பட்ட பிறகும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சாதிப்போரில் ஏற்பட்ட பல உயிர் இழப்புக்களுக்கு பிறகு 1958-இல் ´முதுகுளத்தூர் கலவரம்´ என்னும் சிறு நூலை தினகரன் பல ஆதாரங்களுடன் எழுதினார்.



தம் சாதியைச் சேர்ந்தவர்களை முத்துராமலிங்கம் வன்முறையில் ஈடுபடுத்துவதும், ஆதிக்க உணர்வோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருடன் பகைமையோடு இருப்பதும், அவர்கள் மீது வன்முறையையும், அடக்குமுறையையும் கையாண்டதைக் கண்டு மனம் வெதும்பி கூறினார் தினகரன்.



´தினகரன் நாளிதழில்´ முதுகுளத்தூர் கலவரம் குறித்து தினகரன் எழுதிய தொடர்ச்சியான கட்டுரைகளுடன் முத்துராமலிங்கத்தை கிண்டல் செய்தும், கேலி சித்திரத்துடன் வந்துக் கொண்டிருந்த கட்டுரைகளைக் கண்டு தேவர் சமூகம் கொதிப்படைந்தது.



நம் சாதியைச் சேர்ந்த ஒருவன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசுவதோடு அல்லாமல் தேவரை கேலி செய்வதா? என ஆத்திரங்கொண்டு, தினகரனை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தது.



இச்சம்பவம் 1958-இல் நடந்தது.



முதுகுளத்தூர் கலவரம் நூலில் தினகரன், முத்துராமலிங்கம் குறித்து கூறிய சம்பவங்களில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.



*முஸ்லிம் வீடுகளை தேவர்கள் தாக்கிய வழக்கில் தீர்ப்பு நகல் தனக்கு தரப்படாததால், முதுகுளத்தூர் சப் மாஜிஸ்திரேட் பிரம்மநாயகம் (பிள்ளை)யை படுகொலை செய்தார்.



*1928-இல் இருந்து அரசுக்கு வரி செலுத்தாததால், தான் அபகரித்த நிலத்தை ஏலம் விட்டதற்காக கமுதி உதவி தாசில்தார் சிதம்பர (முதலியார்) காலை வெட்டினார்.



*1937-இல் நடந்த தேர்தலில் ராமநாதபுரம் ராஜாவுக்கு தேர்தல் வேலை செய்ததற்காக கமுதி உதவி தாசில்தார் நாகராஜய்யரை தாக்கினார்.



மேலும் முத்துராமலிங்கம் தன் சாதி மக்களை பகுத்தறிவு சிந்தனையை நோக்கி கொண்டு செல்லாமல் வெட்டு, குத்து, கொலை, வன்முறை கொண்டு அடக்கு. அதுவே நமக்கு தீர்வு என பெரும்பான்மையான கல்வி அறிவு அற்ற சமூகத்தை தன் தேவைக்கேற்றபடி ஆட்டுவிக்கும் போக்கைக்கண்டு முத்துராமலிங்கம் மீது கண்டங்களை வைக்கிறார் தினகரன்.



3



முதுகுளத்தூர் கலவரம் ஏற்படக் காரணம் என்ன?



தினகரன் எழுதிய நூலில் இருந்து ஆதாரங்களுடன் சில சம்பவங்களை பாருங்கள்:



´காடமங்குளம்´ என்னும் இடத்தைச் சேர்ந்த ஒன்பது தாழ்த்தப்பட்டவர்கள் ஒரே இரவில் காணவில்லை என்பதும், அவர்கள் தேவர் இனத்தை சேர்ந்தவர்களால் தூக்கிச் செல்லப்பட்டு பத்ரகாளிக்கு பலி கொடுக்கப்பட்டதாக தொடங்குகிறது சம்பவங்கள்.



1957-இல் தாழ்த்தப்பட்ட மக்கள் பலிகொடுக்கப்பட்ட சம்பவம் தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பாக பேசப்பட வைத்தவர் இமானுவேல்.



நாயைக் காணோம், ஆட்டைக் காணோம், மாட்டைக் காணோம் என்பது போல் முத்துராமலிங்கத்திற்க்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் பேசினால் காணாமல் போய் கொண்டிருந்தார்கள்.



தாழ்த்தப்பட்ட மக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் முத்துராமலிங்கத்தின் அராஜகத்திற்கு பொறுத்துக் கொண்டும், அனுசரித்துக் கொண்டும் இருந்த காலம்.[7][8]



கிட்டத்தட்ட 1925-இல் இருந்து 30-வருடங்களாக முத்துராமலிங்கத்திற்க்கு எதிராக ஒரு குரல் கூட கொடுத்திராத காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இமானுவேல் 1953-ஆம் ஆண்டில், “ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின்” தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு” நடத்தியதும், 1954-ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களை நடத்தியதும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. நமக்கும் ஒரு தலைவன் இருக்கிறான் என்னும் போக்கு தங்கள் மீது அநீதி நடக்கும் போதெல்லாம் தட்டி கேட்க வைத்தது.



´காடமங்குளம்´ சம்பவமும் அப்படித்தான் இமானுவேலால் தட்டி கேட்கப்பட்டது. எம் இன மக்களில் ஒரே இரவில் 9-பேர்களை காணவில்லை. தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் தூக்கிச் சென்றார்கள் என்பதற்கு சாட்சிகள் உள்ளன. விசாரணை நடத்துங்கள்! என்று ராமநாதபுரம் ஆட்சித் தலைவரிடம் முறையிடு செய்கிறார்.



பஞ்சாயத்தில் பொதுமக்கள் முண்ணனியில் குற்றவாளியாக நிற்க வைக்கப்பட்டு முத்துராமலிங்கம் விசாரிக்கப்பட்டு அவரிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது.



பலநூறு ஆண்டுகளாக தங்களுக்கு அடிமை வேலைகளை செய்துக் கொண்டு தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த சமூகம் இன்று தங்கள் சமூகத்திற்கு எதிராக விசாரணைக்கு கொண்டு சென்று முத்துராமலிங்கத்தை குற்றவாளியாக நிற்க வைத்திருக்கிறதே என தேவர் சமூகம் கொதிக்கிறது.



இச்சம்பவம் நடந்து மறுநாள் 1957-செப்டம்பர் 11-இரவு ஒன்பதரை மணிக்கு பரமக்குடி பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் இமானுவேல் படுகொலை செய்யப்படுகிறார். அப்போது இமானுவேல் வயது 33.



இச்சம்பவம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தேவர் சமூகத்திற்கும் பெரும் மோதலை உருவாக்க காரணமாகியது.



முதுகுளத்தூர் கலவரம் குறித்து விடுதலை நாளேட்டில் (8.10.1957) விரிவாக கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பெரியாரும் காங்கிரசும் இருந்தது. காமராசரிடம் முத்துராமலிங்கம் கைது செய்ய வேண்டும் என்று பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.[9][10][11][12][13]



இப்படி தாழ்த்தப்பட்டவர்களிடம் சர்வாதிகாரியாக இருந்தவர் எப்படி போராளியாக இருக்கக்கூடும்?



சீமான் சொல்கிறார், “குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கப் போராடிய முத்துராமலிங்கம் ஏன் போராளியாக இருக்கக்கூடாது” என்று.



குற்றப்பரம்பரை சட்டம் நீக்கப்பாடுபட்ட முத்துராமலிங்கம் தம் இன உயர்வுக்கு மட்டுமே அச்சட்டத்தை உபயோகப்படுத்த முற்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்களிடம் தொடர்சியான ஆதிக்க மனோபாவத்துடனே இருந்திருக்கிறார் என்பதற்கு முதுகுளத்தூர் கலவரம் சாட்சி. அவரை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் என்ன நடக்கும் என்பதற்கு தினகரன் படுகொலை சாட்சி!



இப்போது சொல்லச் சொல்லுங்கள் சீமானை….



குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கிய முத்துராமலிங்கம் போராளி என்றால் 1953-ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு” நடத்தியதும், 1954- ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களை நடத்தியதும் தம் இன மக்களின் விடுதலைக்கும், உரிமைக்கும் போராடிய இளைஞன் இமானுவேல் முழு நேர சமூகப் போராளியாக பாடுபட்ட போராளி இல்லையா?



சீமான், இமானுவேல் கல்லறைக்கும் மாலை போட்டு மரியாதை செய்கிறோம். முத்துராமலிங்கம் சிலைக்கும் மாலை போட்டு மரியாதை செய்கிறோம் என்கிறார். ஆனால் ஏன் முத்துராமலிங்கம் மட்டும் போராளி என்கிறார்? முத்துராமலிங்கம் போல் இமானுவேலும் போராளியே என்று சொல்ல வேண்டியது தானே!



சமீபத்தில் தோழர் கொளத்தூர் மணி இமானுவேல் சேகரனைக் கொன்ற “குற்றவாளிகளை கைது செய்து சிறையில் வைக்கவில்லையென்றால் நான் நேரடியாக போராட தெருவில் இறங்குவேன்” என்று அறிவிப்பு செய்திருக்கிறார்.[14]



இதை சீமான் ஆதரிப்பாரா?



அதேபோல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தையும் பெ.தி.க நடத்த இருக்கிறது. தமிழின அமைப்புகள் ஈழ ஆதரவுப் போராட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத்தோடு இணைந்து போராடின. ஆனால் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளரை எதிர்த்து பெரியார் திக போராடியபோது தமிழின அமைப்புகள் ஒன்றுகூட ஆதரவு தரவில்லையே ஏன்?



அந்த நிலைப்பாட்டை தான் சீமானும் எடுப்பார் என்றால் சாட்சாத் சீமான் ஓட்டுப்பொறுக்கியே என்பதில் சந்தேகம் இல்லை.



“முற்போக்குவாதிகள் என்று சொல்பவர்கள் காலகாலத்திற்கும் சாதிரீதியிலான பகையை வளர்க்க விரும்பும் பிற்போக்குவாதிகளா என்று இப்போராட்டத்தைக் குறித்து கேள்வி எழுப்புவாரா சீமான்?



கடைசியாக ஒன்று….



சிறைக்கு செல்லும் முன் பெ.தி.க அமைப்பு மேடைகளில் தன்னை பகுத்தறிவாதியாகவும், பெரியாரின் பேரனாகவும், நான் இனத்தால் திராவிடன் என்ற அடையாளத்துடனும், அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும், சாதிகள் ஒழிய வேண்டும், சமத்துவம் பெருக வேண்டும் என்றும், வசனம் பேசிக் கொண்டிருந்த சீமான் சிறையில் இருந்து வெளிவந்த பின் ஞானம் வந்து தன்னுடைய அமைப்பை அரசியல் கட்சியாக அறிவிக்கிறார். தன்னை திராவிடன் இல்லை என்கிறார். சாதிகளை வைத்துக் கொண்டு இன்னும் மாரடிக்க வேண்டுமா? அதை பேசாமல் இருந்தால் தானாக ஒழிந்துவிடுமென்கிறார். ஜாதி அரசியலுக்குள் நுழைகிறார், பெரியாரை விமர்சிக்கிறார், திராவிடத்தால் என்ன கிழித்தோம் என்கிறார்.



சீமான் ஓர் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.



பெரியார் இறுதியாக நடத்திய நிகழ்வின் பெயர்



“தமிழர் சமூதாய இழிவு ஒழிப்பு மாநாடு” 08-12-1973-ல் சென்னை பெரியார் திடலில் நடத்தியது.



தமிழர் சமூதாய இழிவில் முக்கியமான சாதியை தவீர்த்து தமிழ் தேசியம் பேசுவது என்பது தமிழர் நலன் சார்புடையவை இல்லை. சந்தர்ப்பவாதிகளின் அரசியல் ஓட்டுபொறுக்கிகள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு களமாகத்தான் இருக்க முடியும்.



அதுவும் தேவர் ஜெயந்தி அன்று ஜெவில் இருந்து கருணாநிதி வரை தமிழக அரசியல்வாதிகள் மொத்தமும் தேவருக்கு மாலைப்போடுவது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய தேவர் சாதிகளின் ஓட்டுக்களை பொறுக்க நடக்கும் போட்டியே என்பது அனுபவமுள்ளவர்கள் அறியும் செய்தியே.



இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு தான் சமுகப்போராளியான பெரியாரை விமர்சிக்க யோக்கியதை இல்லை என்கிறோம்.



1945-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் நாள் ´குடிஅரசு´ இதழில் கருப்புச்சட்டைப் படை அமைப்பு என்பதற்காக ஓர் அறிவிப்பை பெரியார் வெளியிட்டார். அப்போது கருப்புச்சட்டைப் படையின் முதல் தொண்டராக கலைஞர் தன்னைப் பதிவு செய்து கொண்டார். ஆனால் கருப்புச்சட்டை இன்று மஞ்சள் துண்டாகி போனது வேறு சங்கதியாக இருந்தாலும் அந்த கலைஞருக்கே பெரியாரை விமர்சிக்கும் தகுதி இல்லையென்கிறோம்.



இன்றைக்கு வந்த பிஸ்கோத்து எல்லாம் பெரியாரை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்று நாம் கேட்கவில்லை. பெரியாரை விமர்சிக்கலாம். ஆனால் பெரியாரின் வரலாற்றை முழுவதுமாக தெரிந்துக் கொண்டு புரட்டுத்தனம் பண்ணாமல் விமர்சனம் செய்யுங்கள் என்றுதான் கோருகிறோம்.



திராவிடத்தை மட்டும் பேசிவிட்டு செல்லவில்லை பெரியார். தமிழர்களுக்காக நடத்திய போராட்டங்களை ஒருமுறை வாசித்துவிட்டு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள்.



தங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா?

நாம் தமிழர்’ என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி 18.5.2010 அன்று மதுரையில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பரப்புரைகளும், விளம்பரங்களும், அறிக்கைகளும் அவ்வியக்கத் தோழர்களால் முனைப்புடன் பரப்பப்படுகின்றன. அவர்களோடு சேர்ந்து விளம்பரப்படுத்த அல்ல நாம் இதை எழுதுவது! பின் எதற்கு? விளம்பர அறிக்கை தாங்கி நிற்கும் சில செய்திகளைப் பற்றிய நமது கருத்துகளைத் தெரியப்படுத்த, தெளிவுபடுத்தத்தான் இதை எழுத நேர்ந்தது.




தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான். ஆனாலும், தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்தும்போதும் நாம் அமைதியாக இருந்துவிட முடியாது; இருந்துவிடக் கூடாது.



அதுவும் குறிப்பாக “அறிஞர்” குணாவின் பாதையில் ‘தமிழர் - தமிழரல்லாதவர்’; ‘திராவிடர் - திராவிடம்’ பற்றி அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற கருத்துக்களை நாம் உரிய வகையில் விளக்கவும், அப்பொய்மைகளை அம்பலப்படுத்தவுமான கடமை நமக்கு உண்டு; நமக்கு மட்டுமே உண்டு. எனவேதான் இதை நாம் எழுதலானோம்.



தமிழர்கள், திராவிடர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளை ‘நாம் தமிழர் இயக்கம்’ மேற்கொண்டிருக்கிறது. ‘நல்ல தமிழர்களை’ அவர்கள் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் தமிழர் அடையாள ஆராய்ச்சியின்படி ஈழ விடுதலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பேருதவி செய்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனைக்கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர் பிறப்பால் மலையாளி என்பதால் ‘திராவிடராகி’ விடுகிறார். நான்காவது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில், ஈடில்லாத போராட்டங்களை நடத்திய கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி ஆகியோர்கூட, அவர்கள் கண்களுக்கு ‘நல்ல தமிழர்களாக’ புலப்படவில்லை.



ஆங்கிலேயர் கால்டுவெல் கண்டுபிடித்த சொல்லான திராவிடத்தை எப்படி ஏற்க முடியும் என்ற வாதங்களையெல்லாம் முன் வைக்கிறார்கள். ‘கால்டுவெல்’ என்ற ஆங்கிலேயரின் கண்டுபிடிப்புகளையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் ‘ஆராய்ச்சி’கள் கூறினாலும், சீமான் என்ற வடமொழிப்பெயரை சூட்டிக் கொண்டுள்ளதற்காக அவரை, நாம் தமிழன் இல்லை என்று சொல்லப் போவதில்லை. அவர்களின் ஆராய்ச்சியை சீமானுக்கு நாம் பொருத்திப் பார்க்கத் தயாராக இல்லை.



ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ‘திராவிட’ என்ற சொல்லை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்காகவே கலைஞர் கருணாநிதியையோ, விஜய்காந்தையோ, ஜெயலலிதாவையோ நாம் தூக்கி சுமப்பவர்கள் அல்ல. கலைஞர்கூட ஒரு காலத்தில் அவர் சார்ந்த சமூகப் பார்வையோடு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக திராவிடர் இயக்கத்துக்கு வந்தவர்தான். இன்று அவரிடம் அந்த சமூகப் பார்வை எல்லாம் காணாமல் போய் பெரு முதலாளிகளின் வர்க்கப் பார்வைக்கு வந்துவிட்டார்.



ஜெயலலிதா எப்போதுமே தமிழினத்துக்கு எதிரிதான். இந்த சக்திகள் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, தமிழர்களுக்கான புதிய அரசியல் சக்தி ஏதேனும் தோன்றாதா என்று உண்மையாக ஏங்கும் தமிழர்கள் ஏராளம் உண்டு. விஜய்காந்த் போன்ற குழப்பவாதிகளைவிட சீமான் போன்றவர்கள் அரசியல் களத்துக்கு வரட்டுமே என்ற எண்ண ஓட்டமும் நமக்கு உண்டு. ஆனால், புதிதாக புறப்பட இருக்கிற ‘நாம் தமிழர்’ தமிழர்களை ஆரிய எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்திய பெரியாரின் பார்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, திராவிடர் எதிர்ப்பாளராக அடையாளப் படுத்துவதில் முனைப்புக் காட்டத் தொடங்கிவிட்டது.



பெரியார் முன்னிறுத்திய ‘திராவிடர்’ என்பது தமிழர்களுக்கான - தமிழர்களை பார்ப்பனிய அடிமைப் பண்பாட்டிலிருந்து மீட்டெடுக்கும் குறிச்சொல் என்ற அடிப்படை உண்மையையே திசை திருப்பி, அது ஏதோ கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் வாழும் இனங்களிடம் தமிழர்களை அடிமைப்படுத்துவதாக ஒரு சித்திரத்தை தீட்டிக் காட்ட படாதபாடுபடுகிறார்கள். இதில் அளவில்லாத மகிழ்ச்சி ஆரியத்துக்குத் தான்.



‘அப்பாடா, நாம் தமிழர் வந்துவிட்டது; இனி நமக்கு ஆபத்தில்லை’ என்று அவாள் கூட்டம், மகிழ்ச்சியில் கூத்தாடக் கூடும். தமிழருக்கு அன்றும் இன்றும் என்றும் கேடானது ஆரியம். அதற்கு அரண் அமைத்துக் கொண்டிருப்பது இந்தியம்; உண்மையில் தமிழர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒட்டு மொத்த அடிமைத்தனங்களுக்கும் எதிரான பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் வலிமையான போர்வாள் திராவிடர் - திராவிடம் என்ற லட்சியச் சொல்; ஆனால், ‘நாம் தமிழருக்கு’ அவைகள் கசக்கின்றன.



தமிழ்நாட்டைத் தவிர, பிற மொழிக்காரர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது முதல்வரானது உண்டா என்றெல்லாம் கேட்கிறார்கள். அடக்கத்துடன் நாம் நினைவூட்டுகிறோம். பக்கத்து நாடான கன்னட நாட்டில் தரம்சிங் என்ற மராட்டியர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.



‘நாம் தமிழர்’ அமைப்புத் தோழர்கள் பலரின் சட்டைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சேகுவேரா கூட அர்ஜென்டினாவில் பிறந்தவர் தான். அவர் கியுபா விடுதலைக்குப் போராடினார். அத்துடன் நிற்கவில்லை.பொலிவியா விடுதலைக்கும் போராடச் சென்றார். ‘நாம் தமிழர்’ அமைப்பின் திராவிடர் எதிர்ப்புக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்கும்போது, சேகுவேராவும் கூட கியூபாவின் அன்னியர் தானே?



இனி அவர்கள் பார்வையில் ப. சிதம்பரம், சோழவந்தான் சுப்ரமணியசாமி, புதுவை நாராயணசாமி எல்லாம் திராவிடர் அல்லாத “நல்ல தமிழர்”களாகி விடக் கூடும்.



இன்னும் விரிவாக எழுதலாம்; திராவிடர் எதிர்ப்பை அவர்கள் தொடரும்போது அதற்கான விளக்கங்களும் பதில்களும் வரத்தானே செய்யும்? அவைகளுக்கெல்லாம் இந்த விளக்கம் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே!



சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

தமிழ்த் தேசியம் என்று முழங்குபவர்களும் சரி, “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.









தமிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.



மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான், பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக் கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான், இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார். அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!



இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.



சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.



“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.



தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.



“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.



“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.



“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.



பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.



ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும் ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது.



"சீமானின் மறுபக்கம்"







சீமான் வாக்கு அரசியலுக்கு முத்துராமலிங்கத்தையும், தமிழ்த்தேசிய அரசியலுக்கு மேதகு பிரபாகரனையும் முற்போக்கு அடையாளத்துக்குத் தந்தை பெரியாரையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.



சீமானுக்கு, முத்துராமலிங்கத் தேவர், பெரியார், சேகுவாரோ, பால்தாக்கரே என எல்லோருமே தேவைப்படுகிறார்கள், அரசியலுக்காக. அப்படியானால் அவருடைய கொள்கைத்தான் என்ன? நாம் கேட்க வேண்டியுள்ளது. சீமானின் இந்தக் குழப்பமான அரசியல் சிந்தனையின் தொடர்ச்சியாகத் தான் பெரியாரும், முத்துராமலிங்கத் தேவரும் ஒத்த சிந்தனையுடையவர்கள் என்றும், இருவரும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர்கள் என்றும் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். பெரியாரின் கருத்துக்களை மறுக்கவோ, எதிர்த்துப் பேசுவதோ சீமானின் தனிப்பட்ட சனநாயக உரிமை. ஆனால், பெரியாரின் கருத்துக்களைத் திரித்துப் பேசுவதற்கு சீமானுக்கு எந்த உரிமையும் கிடையாது. நமது நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் தலைவர் என்று எவரும் கிடையாது. தான் பிறந்த சாதிக்குத்தான் ஒவ்வொருவரும் தலைவராகிறார்கள். ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் யாரும் இதுவரை தலைவராக இருந்தது கிடையாது. தன் சாதியைத் தாண்டி சிந்திப்பவன், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் தலைவனாகி விடுகிறான். அந்த வகையில், பெரியார், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குமான மகத்தான தலைவர். அப்படிப்பட்ட தமிழினப் போராளி பெரியாரைப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் தலைவராகப் பார்ப்பது சீமானின் பிழையான பார்வையைப் பட்டவர்த்தனமாக காட்டுகிறது. தனக்கோ, தனது அமைப்பிற்கோ தெளிவான சிந்தனை இல்லை என்பதைச் சீமான் வெளிப்படுத்தியுள்ளார். 'நாம் தமிழர்' இளைஞர்களுக்குச் சாதி ஒழிப்பு சிந்தனையோ, நாத்திகச் சிந்தனையோ, பார்ப்பன எதிர்ப்போ வர்க்க விடுதலையோ பயிற்றுவிக்கப்படுவதில்லை. எந்த முற்போக்கு சிந்தனையையும் பயிற்றுவிக்காமல், பொருள் முதல்வாதச் செயல்பாடுமில்லாமல் இவர்கள் எப்படிட்ட தமிழ்த்தேசியத்தைக் கட்டமைக்க போகிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

தமிழகத்திலிருந்து ஜீவசகாப்தன் [மூலம் : கீற்று இணையம்]



சீமானின் அரசியல்



இணையதளத்தில் முகநூலில் (FACE BOOK) எனது நண்பர்களுடன் நாட்டு நடப்பு குறித்து விவாதங்களில் ஈடுபடுவது என் வழக்கம். சில நாட்களுக்கு முன்னாள் முகநூலில் (FACE BOOK) நான் பார்த்த ஒரு புகைப்படம் எனக்கு மிக அரிதான ஒன்றாகவும், ஆச்சரியமான ஒன்றாகவும் இருந்தது. முத்துராமலிங்கத் தேவரை இடப்புறமாகவும், பெரியாரை வலப்புறமாகவும் கொண்டு முத்துராமலிங்கத் தேவரைப் பெரியார் வாழ்த்தியிருப்பது போலவும், அவரது சமூக தொண்டினைப் பெரியார் பாராட்டியிருப்பது போலவும் அச்சிடப்பட்டிருந்தது. இந்தச் சுவரொட்டியை வெளியிட்டிருப்பவர்கள் “நாம் தமிழர்'' அமைப்பினர். இந்த சுவரொட்டியை கண்டித்து இணையதளத்தில் பல்வேறு கருத்துக்களை நண்பர்கள் பதிவு செய்திருந்தனர்.



பெரியாரிய உணர்வாளர்கள் பலர், பெரியார் முத்துராமலிங்க தேவரை இப்படிப் பாராட்டியதாக வரலாறு இல்லை எனவும், குடி அரசு இதழிலும், பெரியாரைப் பற்றிய திறனாய்வு நூல்களிலும் இதற்கான சான்றுகள் இல்லை எனவும் வாதிட்டனர்.



பெரியாரியவாதிகளின் இந்த குற்றச்சாட்டிற்கு “நாம் தமிழர்'' அமைப்பினர் இதுவரை பதில் தரவில்லை. சரி, அந்த சுவரொட்டியில் அப்படி என்ன இருந்தது என்று பார்ப்போமா?



மூக்கையா தேவரின் சமூகப் பணிகளை பாராட்டியும், முத்துராமலிங்கத் தேவரைப் போலவே மூக்கையத் தேவரும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று பெரியார் மூக்கையாத் தேவரையும், முத்துராமலிங்கத் தேவரையும் மாறி மாறிப் பாராட்டியுள்ளார். இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமா? நடந்திருக்காதா? என்ற வரலாற்று ஆய்வுக்குள் நான் போகவிரும்பவில்லை. என்னுடைய கேள்வியெல்லாம் நம் நண்பர் சீமானுக்குத் தேவரையும், பெரியாரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்திப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? அவர் மட்டும் ஏன் இதுவரை எந்த அரசியல் ஆளுமையும் சிந்திக்காத வண்ணம் வித்தியாசமாக சிந்தித்து கொண்டிருக்கிறார்? என்று நான் சிந்திக்கும்போதுதான் அவருடைய அரசியல் பிரவேசம் எனக்கு ஞாபகத்தில் வந்தது.



முத்துராமலிங்கத் தேவரை சீமான் துதிபாடுவது இன்று, நேற்று நடக்கும் சம்பவங்கள் அல்ல. அவரது முதல் படமான "பாஞ்சாலங் குறிஞ்சி'யில் “மன்னாதி மன்னருங்க மறவர் குல மாணிக்கமுங்க, முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க'' என்று பாடல் வரிகளை அமைத்துத் தனது தேவரின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பார்.



'தம்பி' படத்தில் தமிழ் உணர்வாளரான கதாநாயகன் வீட்டில் முத்துராமலிங்க தேவரின் படம் தொடங்கவிடப்பட்டிருக்கும். அதன் அருகிலேயே பெரியார் படம் தொங்கவிடப்பட்டிருக்கும். (இதுபோன்ற‌ நகைச்சுவை காட்சிகள் அத்திரைப்படத்தில் அதிகம் இருப்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்). எனவே, சீமான் கடந்த பதினான்கு ஆண்டுகளாக முத்துராமலிங்க தேவரைத் தலைவராக வணங்கி வருகிறார். இப்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டதால் தென்மாவட்டங்களில் அதிகமுள்ள முக்குலத்தோர் வாக்கு வங்கியைப் பெறுவதற்கு, சராசரி வாக்கு வங்கி அரசியல்வாதிகளைப் போலவே, (வை.கோ.வில் தொடங்கிப் பொதுவுடைமை இயக்கத்தினர் வரை அனைவரும் தேவர் சிலைக்கு மாலை போடுகிறார்கள்) சீமானும் ஆயுத்தமாகி விட்டார். குறிப்பாக அவருடைய இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மறவர்களின் வாக்கும், ஆதரவும் சீமானுக்குத் தேவைப்படுகிறது. ஆகவே, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துத் தனது அரசியல் முகத்தை மக்களுக்கு காட்டுகிறார். (அப்படியானால் தமிழ்த் தேசிய அடையாளம்(!) என்ன ஆனது?). இவர் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய கொள்கைக்கும், முத்துராமலிங்கத் தேவருக்கும் துளி அளவும் தொடர்பு இல்லை என்பது கற்றறிந்த தமிழ் உலகத்திற்கு நன்கு தெரியும்.



“தேசியமும் தெய்வீகமும்'' தனது இரு கண்கள் என முழங்கியவர் தேவர். தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய தேசியத்தையும், தமிழர்களை “வேசி மகன்'' என்று அழைத்த இந்து மதத்தையும் போற்றி பாதுகாத்தவர். முத்துராமலிங்கத் தேவர். சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இந்து மத வெறியர் “கோலால்கரை'' (ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவர்) அழைத்துத் தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, இந்துமதப் பாசிசத்தை தமிழகத்தில் பரப்புவதற்கு உறுதுணையாக இருந்தவர். இன்னும் சொல்லப்போனால், தமிழ் சமூகமான மறவர் சமூகத்தை, பெரியாரின் இனஉணர்வுச் சிந்தனையிலிருந்தும், பகுத்தறிவு உணர்விலிருந்தும் அப்பாற்பட்டு சாதி உணர்வுக்கும், இந்திய தேசியத்திற்கும் அச்சமூகத்தைப் பலியாக்கியதில் முத்துராமலிங்கத்திற்கு முகாமையான பங்கு உண்டு.



பெரியாரின் சமூகநீதி கருத்துகளால் உந்தப்பட்டு எழுச்சி பெற்ற வன்னியர், நாடார், தலித் போன்ற சமூகங்கள் இன்று கல்வி அளவிலும், மாற்றத்தை நோக்கிச் சிந்திக்கும் முறையிலும் வியத்தகு பரிணாம வளர்ச்சியைப் பெற்று வளர்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு. ஆனால், பெரியாரின் இந்தச் சமூகநீதி அரசியலைத் தேவர் சமூகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாவண்ணம் இந்து மத அரசியலையும், இந்திய தேசிய அரசியலையும் அவர்கள் மீது திணித்து அந்த மக்களை, தமிழ்த்தேசிய அரசியலில் பின்னோக்கி இருக்கச் செய்ததில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு அதிகம். ஒருவருக்கொருவர் முரண் அரசியல் பார்வை கொண்ட பெரியாரையும், தேவரையும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்று நேர்கோட்டு பாதையில் இருவரையும் நிறுத்துகிறார் சீமான்.



அரசியலில் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணம் என்று நகைச்சுவை நடிகர் பாணியில் நம்மவர்கள் இதற்கு பதில் சொல்லலாம். ஆனால், இதற்குப் பின்னால் அரசியல் இருப்பதை நாம் உணர வேண்டும். சமீபகாலமாக, பெங்களூர் குணா அவர்களின் கருத்தாக்கப்படி, “பெரியார் ஒரு கன்னடர், அவர் உருவாக்கிய திராவிட இயக்க அரசியல் மரபுதான் தமிழ்த் தேசியத்தை எழுச்சி பெறவிடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது என்கிற கருத்தியலை உள்வாங்கிக் கொண்டார் சீமான். ஆகையால், தனது தலைவர்கள் பட்டியலில் இருந்து பெரியாரை நீக்கிவிட்டேன் என்று அறிவித்தார். அவரது “நாம் தமிழர்'' அமைப்புச் சுவரொட்டிகளில், பெரியாரோ, திராவிட இயக்க முன்னோடிகளோ இதுவரை இடம் பெற்றதில்லை. பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத்தாமல், திராவிட அரசியலை விமர்சிக்கும் சீமான், மும்பை சென்றபோது பால்தாக்கரே போன்ற இந்துத்துவ சிந்தனைவாதியை மரியாதைக்குரிய தலைவர் என்று விளித்தார்.



சீமானுக்கு, முத்துராமலிங்கத் தேவர், பெரியார், சேகுவாரோ, பால்தாக்கரே என எல்லோருமே தேவைப்படுகிறார்கள், அரசியலுக்காக. அப்படியானால் அவருடைய கொள்கைத்தான் என்ன? நாம் கேட்க வேண்டியுள்ளது. சீமானின் இந்தக் குழப்பமான அரசியல் சிந்தனையின் தொடர்ச்சியாகத் தான் பெரியாரும், முத்துராமலிங்கத் தேவரும் ஒத்த சிந்தனையுடையவர்கள் என்றும், இருவரும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர்கள் என்றும் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். பெரியாரின் கருத்துக்களை மறுக்கவோ, எதிர்த்துப் பேசுவதோ சீமானின் தனிப்பட்ட சனநாயக உரிமை. ஆனால், பெரியாரின் கருத்துக்களைத் திரித்துப் பேசுவதற்கு சீமானுக்கு எந்த உரிமையும் கிடையாது. நமது நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் தலைவர் என்று எவரும் கிடையாது. தான் பிறந்த சாதிக்குத்தான் ஒவ்வொருவரும் தலைவராகிறார்கள். ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் யாரும் இதுவரை தலைவராக இருந்தது கிடையாது. தன் சாதியைத் தாண்டி சிந்திப்பவன், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் தலைவனாகி விடுகிறான். அந்த வகையில், பெரியார், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குமான மகத்தான தலைவர். அப்படிப்பட்ட தமிழினப் போராளி பெரியாரைப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் தலைவராகப் பார்ப்பது சீமானின் பிழையான பார்வையைப் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.



ஒரு வாழ்நாள் முழுவதும் இன மேம்பாட்டிற்காக உழைத்த ஒரு தலைவரை, இந்தியத் தேசியத்திற்கும், மத அடிப்படைவாத சிந்தனைக்கும் தன் வாழ்நாள் முழுவதும் சேவகம் செய்த ஒருவருடன் ஒப்பிட்டதன் மூலம், தனக்கோ, தனது அமைப்பிற்கோ தெளிவான சிந்தனை இல்லை என்பதைச் சீமான் வெளிப்படுத்தியுள்ளார். 'நாம் தமிழர்' இளைஞர்களுக்குச் சாதி ஒழிப்பு சிந்தனையோ, நாத்திகச் சிந்தனையோ, பார்ப்பன எதிர்ப்போ வர்க்க விடுதலையோ பயிற்றுவிக்கப்படுவதில்லை. எந்த முற்போக்கு சிந்தனையையும் பயிற்றுவிக்காமல், பொருள் முதல்வாதச் செயல்பாடுமில்லாமல் இவர்கள் எப்படிட்ட தமிழ்த்தேசியத்தைக் கட்டமைக்க போகிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.



சீமான் வாக்கு அரசியலுக்கு முத்துராமலிங்கத்தையும், தமிழ்த்தேசிய அரசியலுக்கு மேதகு பிரபாகரனையும் முற்போக்கு அடையாளத்துக்குத் தந்தை பெரியாரையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஒரு சட்டசபை தேர்தலைக் கூட சந்திக்காத சீமான், பழம்பெரும் அரசியல்வாதியைப் போல் தேர்தல் நுணுக்கங்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார். எது எப்படியோ, பெரியார் படத்திற்குப் பூசை புனஸ்காரம் செய்து நானும் 'திராவிடன்' என்று சொல்லிக் கொள்ளும் புது அரசியல்வாதி நடிகர் விஜயகாந்தை போலவே, நமது சீமானும் தமிழ்த்தேசிய போராளி(!) என்று சொல்லிக்கொண்டு திரையுலகத்திலிருந்து அரசியலுக்குக் குதித்திருக்கிறார் என்றுதான் நாம் எண்ணிக் கொள்ள வேண்டும்.

அண்ணன் நாம் சாதி தமிழர். சீமான் எங்கே போகிறார்





ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும் வர வர கழுதை கெட்டு குட்டி சுவரான கதை மாதிரி தான் அண்ணனது அரசியல் வாழ்வும் சென்று கொண்டிருக்கிறது. ஈழம் சென்று எமது அருமை தலைவன் பிரபாகரனை சந்தித்து விட்டு வந்தபிறகு அண்ணன் சீமானின் பேச்சில் மூச்சில் எல்லாம் ஈழம் தான். திருமா ராமதாசு போன்ற அரசியல் சந்தர்ப்பவாதிகள் ஈழமா அல்லது தங்கள் அரசியல் வாழ்க்கையா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட சமயத்தில் அவர்களது அரசியல் வாழ்க்கையே முக்கியம் என்று ஈழத்தை பின்னுக்கு தள்ளியபோது அண்ணன் சீமான் மட்டும் ஈழம் ஈழம் என்று முழங்கி கொண்டிருந்ததை பார்த்த எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்கள் எல்லாம் அண்ணனை தமிழர்களின் அடிமை தளையை அறுக்க வந்த மீட்பனாக பார்க்க ஆரம்பித்தோம் .





அண்ணனும் நாம் தமிழர் என்ற அடிப்படையில் கூட்டத்தை கூட்ட ஆரம்பித்தார். தம்பிகளாகிய நாங்களும் திராவிடர், திராவிட நாடு கோசங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு நாம் தமிழர் என்ற முழக்கத்தோடு அண்ணனின் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்தோம். அண்ணனும் ஆரம்பத்தில் நம்ம வைகோ போல் தான் செயல்பட்டார், வைகோ திமுகவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சமயத்தில் அதை தாங்காமல் தங்களுடைய உயிரையே பலியாக கொடுத்த இளைஞர்களின் சாம்பலில் மாதிமுகவை ஆரம்பித்த போது எப்படி உணர்ச்சி பிழம்பாக இருந்தாரோ அதேபோல தான் அண்ணன் சீமானும் இருந்தார். ஈழத்தில் போராளிகள் துவக்குகளை கையில் ஏந்தி போராடி கொண்டிருந்தார்கள் என்றால் . அண்ணன் சீமான் தனது வாயையே பீரங்கியாக மாற்றி முழங்கி கொண்டிருந்தார் .



அண்ணனின் பேச்சில் அரசை ஆள்பவர்களும் கதி கலங்கி தான் கிடந்தார்கள் . நாங்களும் இதோ அண்ணன் சீமானின் பேச்சில் ஈழத்தின் விடுதலையை தமிழினத்தின் விடியலை காண போகிறோம் என்று முற்றிலுமாக நம்ப ஆரம்பித்தோம். பெண்களுடைய உள்ளாடையை விற்கும் கடைக்கு சொந்தக்காரரின் சம்பந்தியான காங்கிரசை சேர்ந்த ஈரோடு தெரு பொறுக்கி அண்ணன் சீமானை பெரியாரின் பேரனா அவர் யார் என்று எள்ளி நகையாடியபோது… கண்கள் சிவக்க, நரம்புகள் புடைக்க எங்கே அவன் என்று அந்த தெரு பொறுக்கியை கொலை வெறியோடு கையில் கிடைத்தால் கூறு போட்டுவிடும் வேகத்தில் புலிகளாய் உறுமினோம். அவ்வாறு இருக்கையில் தான் அண்ணன் சீமானின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன .





Apr 2

Anonymous

சமூக விடுதலை போராளியான பெரியாரின் பேரன் என்று தன்னை அழைத்து கொண்ட அண்ணன் சீமான் திடீரென்று ஒரு நாள் தென் தமிழகத்தை சாதி கலவரங்களால் கூறு போட்டு விட்டு மறைந்த முத்து ராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து நாமெல்லாம் தமிழர் என்றார் . தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெரியார் எந்த இந்திய வேசியத்தை தோலுரித்தாரோ அந்த வேசியத்துக்கு முத்து ராமலிங்கம் தனது வேட்டியை கழட்டி கட்டியவர். எந்த சாதி வெறியை பெரியார் ஒழித்து கட்ட விரும்பினாரோ அந்த சாதி வெறியை 1950 துகளில் முத்துராமலிங்கம் அவரை பின்பற்றியவர்களுக்கு ஊட்டி விட்டு தென் தமிழகத்தை ரத்த பூமியாக மாற்றியவன். எங்களை போன்றவர்களால் அண்ணன் செய்ததை சீரணிக்க முடியவில்லை , அதெப்படி சிங்களனின் அடக்கு முறைகளை எதிர்த்து போராடுகிறோம், ஈழ தமிழனுக்கு குரல் கொடுக்கிறோம் என்று கூறி கொண்டு, தமிழ் நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட சக தமிழர்களுக்கு எதிராக சாதீய அடக்கு முறைகளை ஏவி விட்டவனுக்கு மரியாதை செய்ய முடியும்...... இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான விடயமல்லவா. அண்ணன் இப்படி முரண்பாடுகளின் மறு உருவமாக மாற ஆரம்பித்தபோது கூட ஈழ மக்களின் விடுதலைக்கான அண்ணனின் முழக்கங்களை கேட்டு அதற்கு கட்டுப்பட்டவர்களாக அவரிடமுள்ள குறைகளை எங்களின் முதுகுக்கு பின்னால் தள்ளி விட்டு அண்ணன் சீமானின் முதுகுக்கு பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தோம். அண்ணன் சிறைக்கு சென்ற போது நாங்கள் எங்கள் தூக்கத்தை மறந்தோம்.



இப்படியாக அண்ணனுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு அண்ணன் தொடர்ந்து தன்னை சுற்றி ஏற்படுத்தி கொண்டிருக்கும் சிக்கல்களுக்கு மத்தியிலும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் அண்ணன் இன்னொரு அணுகுண்டை தூக்கி வீசினார் .... அதுதான் புரட்சி தலைவி மூலமாக ஈழத்தை வென்றெடுப்போம் என்ற புது முழக்கம் . எங்களுக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது. என்னய்யா இது புது பிரச்சினை . கொஞ்ச நாளைக்கு முன்ன தான் நாங்க ஈழ தமிழர்களின் விடி வெள்ளி என்று கொண்டாடிய திருமா திடீரென்று சோனியாவின் கால்களில் விழுந்ததை கண்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன் அண்ணன் இப்படி ஒரு பாறாங்கல்லை தலையில் தூக்கி போட்டு விட்டாரே என்று வாந்தி பேதி வராத குறை தான்.



Apr 2

Anonymous

இதே செயலலிதா ஈழத்தில் சிங்களவனின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி கொண்டிருந்த அப்பாவி தமிழ் மக்களை பார்த்து போர் என்றால் உயிர் இழப்பு இருக்க தானே செய்யும் என்று கெக்களித்தவள் அல்லவா, அந்த சினிமாகாரி ஆட்சியில் இருந்த போதும் இல்லாத போதும் எதற்கெடுத்தாலும் புலிகள் தீவிரவாதிகள் என்று முழங்கியவள் அல்லவா . எம் தலைவன் பிரபாகரனை கொன்றொழிக்க கங்கணம் கட்டி கொண்டு அலைந்த, அலைந்து கொண்டிருக்கின்ற இந்திய வேசியத்தின் முதலாளிகளான பிராமண பனியாக்களின் செல்ல பிள்ளையல்லவா ...... அவளை கொண்டா ஈழத்தை வென்றெடுக்க முடியும் என்று நம்புகிறார், என்று அண்ணன் மீதான நம்பிக்கை சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தது.

எப்படி இனியும் அண்ணனை நம்ப முடியும் , இந்திய வேசியம் மூட்டி விட்ட தீயில் கொழுந்து விட்டு எறிந்த சிங்கள இனவாதம் தமிழர்களை இரையாக்கி கொண்டிருந்த போது பெரியாரின் அரவணைப்பில் பெரியவர் செல்வாவின் தலைமையில் வளர்ந்து சிங்கள வெறிக்கு எதிராக நின்று தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய தமிழ் தேசியத்தை உடைப்பதே குறிக்கோளாக கொண்டு செயல்படும் பிராமணிய பனியா குள்ள நரி கூட்டத்தின் கைபாவையாக செயல்படும் முன்னாள் நடிகையின் அரவணைப்புக்குள் சென்று அண்ணன் சீமான் முடங்கிய பிறகு .... எந்த முகத்தை (ம்ம்ம் அவரும் இப்போது பல அரிதாரங்கள் பூசி கொண்டு அலையும் நாடக நடிகராகி விட்டாரே) வைத்து கொண்டு தமிழ் தேசியம் பேசுகிறாரோ என்று தெரியவில்லை.



சரி ஏதோ காங்கிரசை வீழ்த்த வீராப்போடு அலைகிறாரே என்று நாமும் அவரது குரலை ரசித்து கொண்டிருக்கும் வேளையில் நடிகர் விசயை போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொன்னாரே பார்க்கலாம் . கொடுமை என்னன்னா ஈழத்தில் சிங்கள பேரினவாதம் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்ற காங்கிரசின் துணையோடு முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை ஒரே நாளில் காவு வாங்கியபோது, இதே விசய் தான் டெல்லிக்கு சென்று காங்கிரசில் இணைய ராகுல் காந்தியோடு பேரம் பேசியவன் . அண்ணன் என்னடான்னா காங்கிரசு என்னும் செத்த பாம்புக்கு தமிழகத்தில் உயிர் கொடுக்க முனைந்த விசய் புகழ் பாடி கொண்டிருக்கிறார் ( ம்ம்ம்ம் விசயிடம் அடுத்த படத்துக்கு கால்சீட் வாங்க முக்குவது போல் தெரிகிறது எது எப்படியோ நல்லா இருந்தால் சரி ) . இப்ப அண்ணன் காங்கிரசை வீழ்த்த போகிறோம் என்று சொல்வதும் அத்தைக்கு மீசை முளைக்கிற கதையாக தான் ஆகி கொண்டிருக்கிறது.



Apr 2

Anonymous

காங்கிரசு தமிழகத்தில் ஏற்கனவே முடிந்து விட கூடிய கட்டத்தில் தான் இருக்கிறது . இவரு காங்கிரசு என்ற செத்த பாம்பை அடிக்க போகிறாராம். என்ன கொடுமையா இது . காக்கா உட்கார பனம்பழம் விழ போகிற கதை தான் அண்ணன் வரும் தேர்தலில் காங்கிரசை ஒழிப்பதாக சவடால் விட்டு கொண்டு அலைவதும் .



முன்பெல்லாம் ஈழ தமிழர்களுக்காக உரக்க குரல் கொடுத்த அய்யா ராமதாசு இப்போது வன்னியர்களிடையே ஈழ தமிழர்களை தேடி கொண்டு இருக்கிறார். திருமாவோ ஈழ மக்களின் வாழ்வை விட தன்னுடைய அரசியல் வாழ்க்கை முக்கியம் என்று சென்று விட்டார் . பெரியவர் நெடுமாறனோ யாராவது மேடை போட்டு அதில் அவருக்கு குந்திக்க ஒரு இருக்கை குடுத்தால் போதும் என்ற நிலைக்கு சென்று விட்டார். ஆரம்ப காலத்தில் தாய் தமிழகத்து இளைஞர்களிடையே ஈழத்து மக்களின் அவலங்களை பற்றி சிந்திக்க வைத்த அண்ணன் வைகோவோ சகோதரி கைச்செலவுக்கு காசு குடுத்து கொண்டிருந்ததால் தோட்டத்திலேயே அடக்கமாகி விட்டிருந்தார் ( சகோதரி செயலலிதா வைகோ என்ற கடாவிற்க்கு சும்மா ஒன்றும் தீனி போடவில்லை தேர்தல் திருவிழா வரும் போது பொலி போடுவதற்காக என்று இப்ப தான் புரிகிறது, எப்படியோ புரட்சி சகோதரி, அடிக்கடி கண்ணீர் விடும் கடாவை 1000 கோடி ரூபாய்க்கு விற்று போட்டதன் மூலம் விட்டதை பிடித்து விட்டார்) . ஆனால் நம்ம அண்ணன் சீமான் ஓடுற ஓட்டத்தை பார்த்தால் மேலே கூறிய எல்லாரையும் பின்னுக்கு தள்ளி விடுவார் என்றே தோன்றுகிறது.



போகிற போக்கை பார்த்தா அண்ணன் சீமானை நம்புகிறதை விட குடிகாரன் விசுக்கிகாந்தை நம்பலாம் என்று தோணுகிறது.


திங்கள், 18 ஏப்ரல், 2011

முத்துராமலிங்கம் போராளியா?.இல்லை என்கிறார் நாம் சாதி தமிழர். சீமான்

முத்துராமலிங்கம் போராளியா?












இல்லை என்கிறார் சீமான்.......










கேள்வி:*நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம்.


முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை


ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால்


உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து


இடம்பெறுகிறது.**?*










கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள்


எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான்


என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும்


கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா


வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில்


பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும்


தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன்.


முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த


பிழைதான்.










நன்றி கீற்று இணையதளம்

நாம் சாதி தமிழர். சீமானிடம் இதையா எதிர்ப்பார்த்தோம்?

முதல் முறையாக மும்பையில் சீமானை இரண்டு ஆண்டுகளுக்கு(சரியாக நினைவில்லை, மூன்று ஆண்டுகளாக கூட இருக்கலாம்) முன்பு தொலைவில் இருந்து ஒரு அரங்கில் உரையாற்றியதை கண்டேன் ,கேட்டேன்.....






“தமிழன் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டானே, வேற்று மொழியில் பெண் கொடுத்து பெண் எடுக்க தயங்காதவன், தன் தாய்மொழி பேசும் நபர்களோடு திருமண உறவு கொள்ள தயங்குகிறானே? மொழி, இன பற்றை விட சாதி பற்று தமிழனிடத்தில் என்று ஆட்கொண்டதோ அன்றே தமிழன் வீழ்ந்தான், வந்தவனெல்லாம் ஏறி மிதித்து போய்க் கொண்டே இருக்கிறான்.”





தமிழனிடம் இருக்கும் சாதிய பிரச்சினைகளை பேச, பகுத்தறிவு சிந்தனைகளை பரப்ப இப்படியொரு ஆளா? அதுவும் திரைப்படத்துறையிலிருந்தா? என்று பிரம்மித்துதான் போனேன், எனக்கு அப்பொழுது 21 வயதுதான் இருக்கும். அதிகம் புரிதல் இல்லா நேரம், பெரியார் அப்பொழுதுதான் அறிமுகமாயிருக்கிறார். பெரியாரை அப்பொழுதுதான் படிக்க தொடங்கியிருக்கிறேன்....புரட்சிகர கருத்துக்கள் சீமானின் சிந்தையில் இருந்ததா இல்லையா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால், சொற்களில் இருந்தன.





“ புரட்சி என்பது காய்ந்த சருகு போன்றது, யார் முதலில் தீக்குச்சி ஆவது என்பதுதான் இங்கே கேள்வி.”என்று அவர் சொற்களை உதிர்த்து கொண்டே போனார். அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது. அந்த தாக்கம்தான் பெரியார் என்னும் பெரும் தலைவனை எனக்குள் ஆழமாக விதைத்தது.....பெரியாரை படிக்க தொடங்கியது உலகத்தில் உள்ள விடுதலைச்சிந்தனைகளை தேடி தேடி படிக்க வைத்து, தேடலை விரிவுப்படுத்தியது......தேடல் தொடர்கிறது





இவரை மேடையில் பார்த்தபின்பு அவரின் சீமானின் தம்பி திரைப்படம் பார்க்க நேரிட்டது. படத்தில் மாதவன் தன்னுடைய குடும்பத்தில் வீட்டிலிருக்கும் காட்சி வந்தது, பெரியாரின் படம் வந்தது, பாரதிதாசன் படம் வந்தது, கூடவே முத்துராமலிங்கம் என்ற சாதி வெறியனின் படமும் அந்த திரைப்படத்தில் வந்தது...அதிர்ச்சியுற்றேன்...தோழர்களோடு இதை பகிர்ந்து கொண்ட பொழுது மிகவும் வருத்தமடைந்தடைந்தனர்..ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.





சீமானோடு அப்பொழுது தொடர்பு கொண்டு எனது தோழர் ஒருவர் கேட்டதற்கு அது பிழையாக நடந்துவிட்டது...என்று கூறியிருக்கிறார்...பேச்சுனூடாக இன்னும் சாதி வெறியை கக்கி கொண்டிருக்கும், தமிழன் என்ற உணர்வேயில்லாமல் சாதிய வெறி கொண்டு சகதமிழனை ஒடுக்கும் சாதி வெறியர்களையும் சீமான் கண்டித்ததாக தொடர்பு கொண்ட தோழர் கூறினார்....





அது தற்செயலாக நடந்தது. இனி அதை தவிர்த்து விடுகிறேன் என்று கூறியவுடன் விமர்சனங்களையும், அதன் மீதான தனது நிலைப்பாட்டையும், தவறிருந்தால் திருத்திக் கொள்ளும் மனப்பான்மையும் இவருக்கு இருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தேன்.





அதோடு மட்டுமில்லாமல் கீற்றுவில் அவரது நேர்காணலையும் படித்தேன் அதில் சாதியை குறித்து அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுருந்தார்..







கேள்வி: தமிழ் சினிமா சாதியை எப்படி கையாளுது. சாதியை எதிர்த்து வந்த படங்கள் கூட அதைத் தீவிரமா செய்யலை. சாதியை எதிர்த்து ‘வேதம் புதிது’ன்னு பாரதிராஜா ஒரு படம் எடுத்தார். அதிலயும் கடைசியில் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து போறமாதிரி தான் எடுத்திருப்பார்...





மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகளைத் தவிர வேறு யாருக்கும் சாதியைக் கடந்து மக்களை மீட்கணுங்கிற நோக்கம் கிடையாது. இங்க சாதி, மதம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அது ஒரு உணர்வு அவ்வளவுதான். கடவுள், கற்பு இதெல்லாம் எப்படிக் கற்பிதமோ சாதியும் அப்படி ஒரு கற்பிதம். ஒரு உருவகம். வேதங்கள் சொல்லுது, தர்மங்கள் சொல்லுதுன்னா அதையே நாமக் கொளுத்தணும். ஆனா சாதியை அடிச்சு நொறுக்கணுங்கிற நோக்கத்தில இங்க யாரும் எதையும் படைக்கலை. அந்த உணர்ச்சிகளையும் வைச்சு காசு சம்பாதிக்கணுங்கிற நோக்கத்தில் தான் திரைப்படங்கள் படைக்கப்படுது.





கேள்வி:நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?





கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.





கீற்று நேர்காணல் இணைப்பு





அதற்கு பிறகு அவரை சமீபத்தில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் சார்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில்தான் அவரை சந்தித்தேன். அவரை கண்டு வியந்து போனேன், கூர்ந்து கவனித்த பொழுது தன்னலமில்லா, கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர் என்றே இதுவரை நினைத்து வருகிறேன். இன்னமும் குழந்தை உள்ளத்தோடு இந்தச்சமூகத்திற்கு ஏதாவது செய்துவிட முடியாதா? என்ற ஏக்கமும் அவரிடம் என்னால் காண முடிந்தது....





ஆனால்,எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அவரின் தவறான அரசியல் நிலைப்பாடுகளை எப்படி ஆதரிக்க இயலும்......





பெரியாரின் பேரன் முத்துராமலிங்கம் என்ற சாதிவெறி பிம்பத்திற்கு சீமான் மாலை அணிவித்ததைத்தான் குறிப்பிடுகிறேன்.





ஈழத்தில் சிங்கள இனவெறி தமிழர்கள் மீது ஏவிவிட்ட அடக்குமுறைக்கு எதிராக முழங்கும் தமிழ்த்தேசியவாதிகள் தமிழகத்திலேயே சம மரியாதை இல்லாமல் சக தமிழன் சாதியின் பெயரால் மிகக்கொடுமையாக ஒடுக்கப்படும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே என்ற ஆதங்கம் எமக்கு இருந்தாலும் அதை தருணம் கருதி ஈழப்பிரச்சினையின் தற்காலத்திய முக்கியத்துவம் கருதி, குரல் கொடுக்க வேண்டிய தேவை கருதி அதைப்பற்றி விரிவாக விவாதத்திற்குள் உட்புகவில்லை...ஆனால், சாதிய ஒழிப்புதான் தமிழர்களை அணிதிரட்டும் என்பதில் மாறுபடாமல் இருந்தோம்.....





“ஈழத்தில் நடக்கும் கொடுமைக்கு தீண்டாமை கொடுமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இனியாவது உணர்வார்களா என்றால் அதுதான் நடக்கவில்லை....என்ன ஒரே வேறுபாடு..ஈழத்தில் ஒடுக்குபவன் சிங்களவன், தமிழகத்தில் தமிழன்”





ஈழக்கொடுமை கண்டாவது விழிப்புணர்வு பெற்று தமிழர்கள் சாதி வெறிக்கெதிராக வரமாட்டார்களா? என்ற ஏக்கம்தான் காரணம்..





பெரியார் திராவிடர் கழகம் “இனி என்ன செய்யப்போகிறோம்”என்ற குறுந்தகட்டை பிரதி எடுத்து மும்பையில் தமிழர்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்து வந்த வேளையில் ஒரு நபர் என்னை அணுகினார்..





“ஈழக்கொடுமையெல்லாம் சரிதான்....ஆனால், அதில் வரும் பெரியாரின் படத்தை எடுத்து விட்டு தாருங்களேன்.” என்று கூறினார். அங்கு வெளிவந்தது சாதிய திமிர் என்னும் பூனை...பெரியாரின் சாதிக்கு எதிரான கொள்கையின் வீரியம் அங்கே நினைவுக்கு வந்தது......





சாதி வெறிக்கெதிராக தமிழகத்தில் இயங்குவதற்கு பெரியார்தான் கருவி என்பதை நான் அன்று நன்கு புரிந்து கொண்டேன்...இதையே தமிழர்களோடு சமூக தளத்தில் இயங்கிய பொழுது பல நிகழ்வுகள் இதையே வலுவாக உறுதி செய்தன.





முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது சாதிக்கு ஆதரவாக இயங்குவதாகத்தான் போய் முடியும்.என்பதையும் சேர்த்தே உணர்த்தியது...





தமிழர்களாக அணிதிரட்ட கிளம்பியிருப்பதாக கூறும் பெரியாரின் பேரனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சீமான் சாதி ஒழிப்பிலிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும்...ஆனால், அதை விடுத்து பெரியாரை சாதி வெறி தேவர் பூசை கொண்டாட்டத்தில் கொண்டு போய் விட்டு விட்டு சாதியை தூக்கி பிடிக்கும் மக்களிடம், அவர்களிடம் வைக்க வேண்டிய நேர்மையான விமர்சனங்களை வைக்காமல் முத்துராமலிங்கத்திற்கு மாலை போட்டு வந்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது...





“அவர்களும் தமிழர்கள்தானே அவர்களை புறக்கணிப்பது சரியா? என்று என்னதான் சமாதானம் கூறினாலும்...” அது





“ராஜபக்சேவும், பிரபாகரனும் எனக்கு நண்பர்கள்தான்” என்று சொல்வதுபோல்தான் முடியும்..





இனத்திற்கு தலைவனாக விரும்புவன் மக்களிடம் சமரசம் செய்து கொண்டால் சமரச சாதாரண பிழைப்புவாத அரசியல்வாதிதான் ஆக முடியும், மாறாக மக்களிடம் பரப்ப வேண்டிய கொள்கைகளை பரப்புரையின் மூலமாக தம் பின்னே அணி திரள வைப்பவன்தான் நேர்மையான அரசியல்வாதியாக,இந்த இனத்திற்கான விடிவாக வர முடியும்





சீமான் செய்ய வேண்டியது தமிழர்களிடையே இருக்கும் சாதியை ஒழிப்பதற்கு களம் காண்பதுதான்..சாதி ஒழிப்பை மறந்தாலோ, சிறுது நாட்களுக்கு ஒதுக்கி வைத்தாலோ, சாதிய ஆதிக்க வாதிகளிடம் அடங்கி போனதாய்தான் முடியும்.





கால ஓட்டத்தில்



நாம் தமிழர் என்பது போலி முழக்கமாகிவிடும்...



ஏனென்றால்....சாதி ஒழியாத வரை தமிழகத்தில்





“தமிழ் தேவர், தமிழ் பறையர், தமிழ் பள்ளர், தமிழ் கோனார்,தமிழ் பிள்ளைதான் இருப்பார்களேயொழிய...”





தமிழர்களாக தமிழகத்தில் எவனும் சீமானுக்கு கிடைக்கமாட்டான்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நாம் சாதி தமிழர். சீமானின் பொருக்கி அரசியல்











இணையதளத்தில் முகநூலில் (FACE BOOK) எனது நண்பர்களுடன் நாட்டு நடப்பு குறித்து விவாதங்களில் ஈடுபடுவது என் வழக்கம். சில நாட்களுக்கு முன்னாள் முகநூலில் (FACE BOOK) நான் பார்த்த ஒரு புகைப்படம் எனக்கு மிக அரிதான ஒன்றாகவும், ஆச்சரியமான ஒன்றாகவும் இருந்தது. முத்துராமலிங்கத் தேவரை இடப்புறமாகவும், பெரியாரை வலப்புறமாகவும் கொண்டு முத்துராமலிங்கத் தேவரைப் பெரியார் வாழ்த்தியிருப்பது போலவும், அவரது சமூக தொண்டினைப் பெரியார் பாராட்டியிருப்பது போலவும் அச்சிடப்பட்டிருந்தது.


இந்தச் சுவரொட்டியை வெளியிட்டிருப்பவர்கள் "நாம் தமிழர்'' அமைப்பினர். இந்த சுவரொட்டியை கண்டித்து இணையதளத்தில் பல்வேறு கருத்துக்களை நண்பர்கள் பதிவு செய்திருந்தனர். பெரியாரிய உணர்வாளர்கள் பலர், பெரியார் முத்துராமலிங்க தேவரை இப்படிப் பாராட்டியதாக வரலாறு இல்லை எனவும், குடி அரசு இதழிலும், பெரியாரைப் பற்றிய திறனாய்வு நூல்களிலும் இதற்கான சான்றுகள் இல்லை எனவும் வாதிட்டனர்.

பெரியாரியவாதிகளின் இந்த குற்றச்சாட்டிற்கு "நாம் தமிழர்'' அமைப்பினர் இதுவரை பதில் தரவில்லை. சரி, அந்த சுவரொட்டியில் அப்படி என்ன இருந்தது என்று பார்ப்போமா? மூக்கையா தேவரின் சமூகப் பணிகளை பாராட்டியும், முத்துராமலிங்கத் தேவரைப் போலவே மூக்கையத் தேவரும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று பெரியார் மூக்கையாத் தேவரையும், முத்துராமலிங்கத் தேவரையும் மாறி மாறிப் பாராட்டியுள்ளார்.

இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமா? நடந்திருக்காதா? என்ற வரலாற்று ஆய்வுக்குள் நான் போகவிரும்பவில்லை. என்னுடைய கேள்வியெல்லாம் நம் நண்பர் சீமானுக்குத் தேவரையும், பெரியாரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்திப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? அவர் மட்டும் ஏன் இதுவரை எந்த அரசியல் ஆளுமையும் சிந்திக்காத வண்ணம் வித்தியாசமாக சிந்தித்து கொண்டிருக்கிறார்? என்று நான் சிந்திக்கும்போதுதான் அவருடைய அரசியல் பிரவேசம் எனக்கு ஞாபகத்தில் வந்தது.

முத்துராமலிங்கத் தேவரை சீமான் துதிபாடுவது இன்று, நேற்று நடக்கும் சம்பவங்கள் அல்ல. அவரது முதல் படமான "பாஞ்சாலங்குறிஞ்சி'யில் "மன்னாதி மன்னருங்க மறவர் குல மாணிக்கமுங்க, முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க'' என்று பாடல் வரிகளை அமைத்துத் தனது தேவரின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

'தம்பி' படத்தில் தமிழ் உணர்வாளரான கதாநாயகன் வீட்டில் முத்துராமலிங்க தேவரின் படம் தொடங்கவிடப்பட்டிருக்கும். அதன் அருகிலேயே பெரியார் படம் தொங்கவிடப்பட்டிருக்கும். (இதுபோன்ற‌ நகைச்சுவை காட்சிகள் அத்திரைப்படத்தில் அதிகம் இருப்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்). எனவே, சீமான் கடந்த பதினான்கு ஆண்டுகளாக முத்துராமலிங்க தேவரைத் தலைவராக வணங்கி வருகிறார்.

இப்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டதால் தென்மாவட்டங்களில் அதிகமுள்ள முக்குலத்தோர் வாக்கு வங்கியைப் பெறுவதற்கு, சராசரி வாக்கு வங்கி அரசியல்வாதிகளைப் போலவே, (வை.கோ.வில் தொடங்கிப் பொதுவுடைமை இயக்கத்தினர் வரை அனைவரும் தேவர் சிலைக்கு மாலை போடுகிறார்கள்) சீமானும் ஆயுத்தமாகி விட்டார்.

குறிப்பாக அவருடைய இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மறவர்களின் வாக்கும், ஆதரவும் சீமானுக்குத் தேவைப்படுகிறது. ஆகவே, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துத் தனது அரசியல் முகத்தை மக்களுக்கு காட்டுகிறார். (அப்படியானால் தமிழ்த் தேசிய அடையாளம்(!) என்ன ஆனது?). இவர் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய கொள்கைக்கும், முத்துராமலிங்கத் தேவருக்கும் துளி அளவும் தொடர்பு இல்லை என்பது கற்றறிந்த தமிழ் உலகத்திற்கு நன்கு தெரியும்.

"தேசியமும் தெய்வீகமும்'' தனது இரு கண்கள் என முழங்கியவர் தேவர். தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய தேசியத்தையும், தமிழர்களை "வேசி மகன்'' என்று அழைத்த இந்து மதத்தையும் போற்றி பாதுகாத்தவர் முத்துராமலிங்கத் தேவர். சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் மக்களைச் சென்று சேர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில், இந்துமத வெறியர் "கோல்வால்கரை'' (ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவர்) அழைத்துத் தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, இந்துமதப் பாசிசத்தை தமிழகத்தில் பரப்புவதற்கு உறுதுணையாக இருந்தவர்.

இன்னும் சொல்லப்போனால், தமிழ் சமூகமான மறவர் சமூகத்தை, பெரியாரின் இனஉணர்வுச் சிந்தனையிலிருந்தும், பகுத்தறிவு உணர்விலிருந்தும் அப்பாற்பட்டு சாதி உணர்வுக்கும், இந்திய தேசியத்திற்கும் அச்சமூகத்தைப் பலியாக்கியதில் முத்துராமலிங்கத்திற்கு முகாமையான பங்கு உண்டு.

பெரியாரின் சமூகநீதி கருத்துகளால் உந்தப்பட்டு எழுச்சி பெற்ற வன்னியர், நாடார், தலித் போன்ற சமூகங்கள் இன்று கல்வி அளவிலும், மாற்றத்தை நோக்கிச் சிந்திக்கும் முறையிலும் வியத்தகு பரிணாம வளர்ச்சியைப் பெற்று வளர்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு.

ஆனால், பெரியாரின் இந்தச் சமூகநீதி அரசியலைத் தேவர் சமூகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாவண்ணம் இந்து மத அரசியலையும், இந்திய தேசிய அரசியலையும் அவர்கள் மீது திணித்து அந்த மக்களை, தமிழ்த்தேசிய அரசியலில் பின்னோக்கி இருக்கச் செய்ததில் முத்துராமலிங்கத்தேவரின் பங்கு அதிகம். ஒருவருக் கொருவர் முரண் அரசியல் பார்வை கொண்ட பெரியாரையும், தேவரையும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்று நேர்கோட்டுப்பாதையில் இருவரையும் நிறுத்துகிறார் சீமான்.

அரசியலில் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணம் என்று நகைச்சுவை நடிகர் பாணியில் நம்மவர்கள் இதற்கு பதில் சொல்லலாம். ஆனால், இதற்குப் பின்னால் அரசியல் இருப்பதை நாம் உணர வேண்டும். சமீபகாலமாக, பெங்களூர் குணா அவர்களின் கருத்தாக்கப்படி, "பெரியார் ஒரு கன்னடர், அவர் உருவாக்கிய திராவிட இயக்க அரசியல் மரபுதான் தமிழ்த் தேசியத்தை எழுச்சி பெறவிடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது என்கிற கருத்தியலை உள்வாங்கிக் கொண்டார் சீமான்.

ஆகையால், தனது தலைவர்கள் பட்டியலில் இருந்து பெரியாரை நீக்கிவிட்டேன் என்று அறிவித்தார். அவரது "நாம் தமிழர்'' அமைப்புச் சுவரொட்டிகளில், பெரியாரோ, திராவிட இயக்க முன்னோடிகளோ இதுவரை இடம் பெற்றதில்லை. பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத்தாமல், திராவிட அரசியலை விமர்சிக்கும் சீமான், மும்பை சென்றபோது பால்தாக்கரே போன்ற இந்துத்துவ சிந்தனைவாதியை மரியாதைக்குரிய தலைவர் என்று விளித்தார்.

சீமானுக்கு, முத்துராமலிங்கத் தேவர், பெரியார், சேகுவாரோ, பால்தாக்கரே என எல்லோருமே தேவைப்படுகிறார்கள், அரசியலுக்காக. அப்படியானால் அவருடைய கொள்கைத்தான் என்ன? நாம் கேட்க வேண்டியுள்ளது. சீமானின் இந்தக் குழப்பமான அரசியல் சிந்தனையின் தொடர்ச்சியாகத்தான் பெரியாரும், முத்துராமலிங்கத் தேவரும் ஒத்த சிந்தனையுடையவர்கள் என்றும், இருவரும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர்கள் என்றும் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். பெரியாரின் கருத்துக்களை மறுக்கவோ, எதிர்த்துப் பேசுவதோ சீமானின் தனிப்பட்ட சனநாயக உரிமை. ஆனால், பெரியாரின் கருத்துக்களைத் திரித்துப் பேசுவதற்கு சீமானுக்கு எந்த உரிமயும் இல்லை.



தேவரின் பல கருத்துக்கள்.


1.காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்

2.கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்

3.முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.



4.இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:




1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.



இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.



"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார்.


முத்துராமலிங்கத் தேவரை ஆதரிப்பதற்கு இதுபோன்ற எந்த முற்போக்கு காரணங்களும்


இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தார். தேசியமும், தெய்வீகமும்

இரண்டு கண்கள் என்று தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்தார்.




ஆனால், தலைவர் பெரியார் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இறுதி மூச்சு

உள்ளவரை எதிர்த்தார். அதற்காகவே அவரை மிக கேவலமான வார்த்தைகளால் விமர்சனம்

செய்தார் முத்துராமலிங்கத் தேவர். தேசியத்தை ஆதரித்த காமராஜரையும் அவரின்

இடஒதுக்கீடு கொள்கைக்காக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். திராவிட

இயக்கத் தலைவர் என்ற காரணத்திற்காகவே அண்ணாத்துரையை அசிங்கமான வார்த்தைகளால்

திட்டினார் முத்துராமலிங்கத் தேவர்.





தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இருந்தார் என்பதை கூட விட்டுவிடுங்கள், ‘அதை

குறித்து விமர்சித்தால் தமிழனின் ஒற்றுமை குலைந்து விடும்’ என்று ஒரு

தமிழ்த்தேசிய காரணமாவது கூச்சமில்லாமல் கூறிக்கொள்ளலாம். ஆனால், இவர்கள்

தீவிரமாக எதிர்க்கிற, அவர் தீவிரமாக வலியுறுத்திய தேசியத்திற்காகக் கூட அவரை

விமர்சிக்க மறுக்கிறார்களே தமிழ்த்தேசியவாதிகள். இதற்கு எது காரணம்?





தத்துவத் தெளிவில்லாமல் இருப்பதைக்கூட அறியாமை என்று புரிந்து கொள்ளலாம்.

அதுகூட ஒன்றும் மாபெரும் தவறல்ல. ஆனால், தவறாகவோ, சரியாகவோ தான் தீவிரமாக

சொல்லுகிற ஒரு விஷயத்திற்குக்கூட உண்மையாக இல்லாத இந்தப் போக்கு பச்சையான

சந்தர்ப்பவாதம்.





பல தமிழ்த்தேசியவாதிகள், சில பெரியாரிஸ்டுகள், சில மார்க்சிஸ்டுகள் நேரடியாகவே

ஜாதி அடையாளத்தோடு இருக்கிறார்கள். இன்னும் சிலர் தன் ஜாதி அடையாளத்தை

மறைத்தாலும், தான் தலித் அல்ல என்பதை மறைமுகமாக அடையாளப்படுத்தி விடுகிறார்கள்.

5.திராவிட இயக்கத்திற்கு நேர் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் முத்துராமலிங்கத் தேவர். தேசியமும் தெய்வீகமும் அவருக்கு இரண்டு கண்கள் போன்றவை. அவர்தான் ஆச்சாரியாரின் புதிய கல்வித்திட்டம் என்பது போல் சட்டமன்றத்தில் சாடினார். தந்தை பெரியார், ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக மூட்டிய தீ, தந்தை பெரியாருக்கு எதிரணியில் செயல்பட்ட முத்துராமலிங்கத் தேவருக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்திருக்கிறது என்பதற்கு சாட்சியமே அவரது சட்டமன்ற உரையாகும். சீமானின் வகையறா முத்துராமலிங்கத் தேவரின் உரைக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது

6.
முத்துராமலிங்கத்தின் அரசியல் முற்றமுழுக்க வலதுசாரித்தன்மைவாய்ந்ததே. அவரது தேசியம், இந்துமதம் குறித்த நிலைப்பாடுகள் இந்துத்துவச்சக்திகளின் நிலைப்பாடுகள்தான் என்பதுபோக, முத்துராமலிங்கம் அபிராமத்தில் இந்துமகாசபையின் தலைவராகவுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமயங்களில் அவரது வன்முறைச்செயல்பாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திரும்பின. 'தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்' என்னும் அவரது கூற்று இன்றைய தமிழக இந்துத்துவச்சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்

7.கோவில் நுழைவில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?








ராஜாஜி கோஷ்டியால் கோவில் நுழைவு நடக்க இருப்பதை அறிந்திருந்த மீனாட்சி கோவில் பட்டர்கள், ராஜாஜியின் எதிரணியைச் சேர்ந்த முத்துராமலிங்கத் தேவரை அணுகி, கோவில் நுழைவை அடியாட்கள் வைத்து அடித்து, தடுத்து நிறுத்த வேண்டினார்கள். தேவரால் அதற்கு உதவ முடியவில்லை. காரணம், கோவில் நுழைவு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், அவரின் தூண்டுதலால் மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை, சிந்தாமணி திரையரங்கம் ஆகியவற்றில் சாதி ரீதியான வன்முறை நடைபெற்றிருந்ததால், அவர் எந்நேரமும் கைதாகக் கூடிய சூழ்நிலையில் இருந்தார். எனவே, தேவரால் பட்டர்கள் வேண்டுகோளின்படி அடியாட்களை அனுப்பி வைக்க முடியவில்லை. (மேற்கூறிய நூல், பக். 4748 மற்றும் ""முதுகுளத்தூர் கலவரம்'', தினகரன், யாழ்மை வெளியீடு, பக். 106).







தேவரின் எதிர்ப்பில்லாமல் கோவில் நுழைவு நடந்தது. இதுதான் முத்துராமலிங்கத் தேவரின் கோவில் நுழைவு பங்களிப்பு!







தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவைப் பெறாத, தேவரின் "பங்களிப்பு' ஏதும் இல்லாத கோவில் நுழைவு நாடகத்தைத் திரித்து சிறுத்தைகள் தீர்மானமாய்ப் போடுவது ஏன்?







முத்துராமலிங்கத் தேவர் எங்காவது தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காகப் போராடியிருக்கிறாரா?







தனது மாற்றாந்தாயின் விளைநிலங்களில் விளைச்சலைக் கொள்ளையடிக்கவும், அதைத் தடுக்க முயன்ற தாசில்தாரின் காலை வெட்டவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சோலைக்குடும்பன் போன்ற அடியாட்களை தயார் செய்து அடிமைகளாக வைத்திருந்தவர்தான், தேவர். (""சமூக உரிமைப் போராளி....'', பக். 9598 மற்றும் ""முதுகுளத்தூர் கலவரம்'', பக். 102)







தேர்தல் பிரச்சாரத்தில் ""ஓட்டு இல்லையானால் வேட்டு'' என மிரட்டியே தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கைப்பற்றிய தேவர், தான் பதவியில் இருந்தவரைக்கும் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சிக்குப் பெரும் தடையாகவே இருந்திருக்கிறார். (""முதுகுளத்தூர் கலவரம்'', பக். 54; ""சமூக உரிமைப் போராளி...'', பக். 205). சாலை வசதிகள் வந்து விட்டால், தேவர்களைக் கைது செய்ய காவல் துறை எளிதில் ஊருக்குள் வந்து விடும் என்றும் பயமுறுத்தி, அடிப்படை வசதிகளை வரவிடாமல் தடுத்து வந்தவர்தான் அவர். (""சமூக உரிமைப் போராளி....'', பக். 205 மற்றும் ஆர்.சிதம்பரபாரதியின் சட்டமன்ற உரை, 30.10.1957; ""சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு'', ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், பக். 163).



மாவீரர் சுந்த்ரலிங்கக் குடும்பனார்





தமிழ் இன விடுதலை வீரர்







உலகின் முதல் மனித வெடிகுண்டு






தற்கொடைப் படைத் தலைவர்






மாவீரர் சுந்த்ரலிங்கக் குடும்பனார் அவர்களின்






241 ஆவது பிறந்த நாள் விழா






தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில்






வீரரைப் பெற்று எடுத்த கவர்னகிரி மண்ணில்






மள்ளர் குல சொந்தங்களை உரிமையோடு அழைக்கிறது. தேவேந்திரர்மறுமலர்ச்சி பேரவைசோழமண்டலம்




 .

தேவேந்திரர் குரல்

தேவேந்திரர்களுக்கான பொதுவான தகவல் தொடர்பு தளம், தகவல்களை psrsivakumar@gmail.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பவும், அனைத்து தகவலும் வெளியிடப்படும்.




தேவேந்திரர் குரல் இணையதள நிறுவனர்.பி.எஸ்.ஆர்.




தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்தில் உதித்த வீரத்திலகம்.மாவீரர் சுந்த்ரலிங்கக் குடும்பனார்




1759 நவம்பர் 6ஆம் நாள் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வல் கோட்டையை கூலிப்படைத் தளபதி கான்சாகிப் தாக்கினான். 18 பவுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கியும் ஒரு பக்க கோட்டைசுவரில் ஒரு விரிசலை தவிர ஏதும் ஏற்படுத்த இயலவில்லை கான்சாகிப்புக்கு. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு தமது கூட்டணி படைகளில் 400க்கும் மேற்பட்டவர்களை இழந்து 1760 ஜனவரியில் சென்னை திரும்பிய கான்சாகிப், வீரத்தால் வீழ்த்த முடியாத பூலித்தேவரை துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்த திட்டமிட்டான்.



துரோகிகளுக்கா பஞ்சம்! நடுவக்குறிச்சி பாளையக்காரனை கைக்குள் போட்டுக்கொண்டான். இவர்கள் பூலித்தேவரின் வீரர்களுக்குப் பணத்தாசை காட்டித் தம் கூட்டணிக்கு இழுத்தனர். மீண்டும் துரோகிகளை நம்பி கான்சாகிப் படையினர் பூலித்தேவரைத் தாக்க வந்து நெற்கடான் செவ்வலை அடுத்திருந்த ஒரு காட்டுப் பக்கமாக கூடாரங்கள் போட்டு ஒளிந்திருந்தனர். இதை அறிந்த பூலித்தேவரின் வீரர்கள் சென்று இந்த துரோக கோழைக் கும்பலைத் தாக்கலாயினர்.



பூலித்தேவரின் முக்கிய தளபதி வெண்ணிக்காலாடி என்பவர் ஆவார். இவர் தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்துதித்த வீரத்திலகம். கான்சாகிப் ஒரு மேட்டுப்பகுதியை கோட்டையை தாக்க ஏற்றது போல உருவாக்கிக் கொண்டிருந்தான். தளபதி வெண்ணிக்காலாடி சில நூறு வீரர்களுடன் இந்த கான்சாகிப் படையை தாக்கினார். கடும் போர் நடந்தது. அப்போது மறைந்திருந்த கும்பினிக்காரன் வெண்ணிக்காலாடியின் வயிற்றில் குத்தினான். வயிறு கிழிந்து வெண்ணிக்காலாடியின் குடல் வெளியே தொங்கியது.



வெண்ணிக்காலாடி சரிந்த தன் குடலை தம் கையால் உள்ளே தள்ளி தலைப்பாகையால் அதனை இறுகக் கட்டினார். பின்னர் பல கும்பனிக்காரர்களுக்கும் கான்சாகிப்பின் வீரர்களுக்கும் வீர சுவர்க்கத்தை அருளினார். வெற்றி முழக்கத்துடன் பகைவரைப் புறங்கண்டார். மீண்டும் தோல்வியுடன் ஓடினான் கான். வயிற்றைப் பிடித்தபடி வெற்றிச்செய்தியை பூலித்தேவருக்கு கூறிய பின்னரே அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது.



பின்னாளில் தமது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெள்ளையரும் ஆர்க்காட்டு நவாபும் சேர்ந்து தீ வைத்தபோது கூட கலங்காத மாவீர பூலித்தேவர், அவ்வீரத்திருமகனின் உடலை அணைத்து குமுறிக் குமுறி கண்ணீர் சிந்தினார்.



பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி

பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே

பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி

பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…



எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை

எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா

செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்

சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…



காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்

கால் நொடியில் காற்றாய் பறந்தானே…

பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி

பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ … (பூலித்தேவன் சிந்து)



இது நடந்தது 1760 டிசம்பர் 20 இல்.



பூலித்தேவர் வெண்ணிக்காலாடிக்கு வீரக்கல் நட்டார். அவர் போரிட்டு வீரசுவர்க்கம் பெற்ற இடம் காலாடி மேடு என அழைக்கப்படுகிறது.



யார் இந்த தேவந்திரகுல வேளாளர்?




1765ம் ஆண்டு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் மாறி மாறி ஆண்டவர்களும் கடல் கடந்து மலேசியாவை இலங்கையை பர்மாவை சிங்கப்புரை இன்னும் ஏனைய பல நாடுகளையும் தமது வாளின் வலிமையால் இணையில்லா வீரத்தால் மேன்மையுள்ள இராஜதந்திரத்தால் வென்று ஆட்சி புரிந்து எல்லையில்லாப் புகழ் படைத்து சகல பழம் பெரும் சங்கத்தமிழ் இலக்கியங்களும் போற்றிப்புகழ்பாடும் சேர சோழ பாண்டிய அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர்களே! மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும் இவர்கள்17ம் நூற்றாண்டில் சில வேசி மரபினர்களால் தந்திரமாக பள்ளர் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது இவர்களின் உண்மை வரலாற்றை மறைப்பதற்கே என்பதனை வரலாற்றுலக வல்லுனர் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.



“அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்

வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்”



- என்று திவாகர நிகண்டும்.



“செருமலை வீரரும் திண்ணியோரும்

மருத நில மக்களும் மள்ளர் என்ப”



என்று பிங்கல நிகண்டும் பொருள் இயம்புகின்றன.



உழவர் என்பதற்கு தொல்காப்பியம் வேளாளர் எனப்பொருள் கூறுகின்றது.பின் நாட்களில் உழவுத்தொழிலில் இறங்கிய சில சாதிப்பிரிவினர்களும் குல உயர்வு கருதி தங்களையும் வேளாளர்களென அழைக்க முற்பட்ட பொழுது அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர் தங்களை மற்றவர்களிலிருந்து வேறுபிரித்து தாம் மேல்க்குலத்தவர் எனப்பொருள்படும்படி தம்மைத் தேவேந்திரகுல வேளாளர் என அழைத்தும் ,பிறரால்( தமிழகத்தில்)அழைக்கப்பட்டும் வருகின்றனர்.



தேவந்திரகுல வேளாளர் எனும் அரச மரபுப்பெயர் 2011 ஜனவரியிலிருந்து இலங்கைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டது.இலங்கை (யாழ்ப்பாண மாவட்டம் உட்பட)வாழ் மள்ளர் குலத்தவர் யாவரும் இப்பெயரையே இனிமேல் தங்களுக்குத் தரித்துக்கொள்ள வேண்டுமென்பது” உலக தேவந்திரகுல வேளாளர் பேரவை”யால் இம்மக்களை நோக்கி வைக்கப்பட்ட கட்டளையாகும்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

தேவேந்திர இன மக்களுக்கு மரியாதை கொடுத்தால் கூட்டணி!’’-ஜான்பாண்டியன்
























எட்டாண்டு சிறை வாசத்திற்குப் பிறகு மீண்டும் தேவேந்திர இன மக்களை ஒன்று திரட்டப் புறப்பட்டிருக்கிறார் ஜான்பாண்டியன். அவருடைய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரையில் பிப்ரவரி 27&ம் தேதி விழிப்புணர்வு மாநாடு நடந்தது.



அ.தி.மு.க.வை ஆதரிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியை தனிமைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவோடு அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம், தியாகி இமானுவேல் பேரவை, மள்ளர் இலக்கிய கழகம், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என பல்வேறு அமைப்புகளும் ஜான்பாண்டியனின் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.



மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் பேரணியை ஜான்பாண்டியனின் மனைவியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளருமான பிரிசில்லா பாண்டியன் துவக்கி வைத்தார். மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு மேடை ஏறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் ஜான்பாண்டியன்.



'அவர் போகும் இடமெல்லாம் கலவரம் வெடிக்கும்' என்று உளவுத்துறை எச்சரித்தபடியே லாடனேந்தல், மதுரை கோமதிபுரம் ஆகிய இடங்களில் பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.



மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் என அரசு ஆணை வெளியிட வேண்டும், தியாகி இமானுவேல் சேகரனுக்கு மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை வெளியீட்டை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



ஜான்பாண்டியனின் அண்ணன் வன்னிய குடும்பன் பேசும்போது, ''மதுரை இதற்கு முன்பு 'மள்ளர் மாநகர்' என்றுதான் இருந்தது. மதுரை மீனாட்சியும் மள்ளி(?)தான்...'' என்று தன் பங்குக்கு சூட்டை கிளப்பினார்.



தியாகி இமானுவேல் பேரவை தலைவர் சந்திரபோஸ் பேசும்போது, ''கோபாலபுரமும் போயஸ் கார்டனும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இங்கே அரசியல் அங்கீகாரத்திற்காக ஒன்றுகூடி இருக்கிறோம். திராவிடக் கட்சிகள் நம் வாக்குகளை திருடுகிறார்கள். தென்தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி தேவேந்திர குல மக்கள் தான். ஆகையால், ஒரு சீட்டு ரெண்டு சீட்டுக்காக நாம் போகாமல் மந்திரிசபையில் ஆதி திராவிட நலத்துறை என்றுதான் இல்லாமல் பொதுப்பணித் துறை வீட்டு வசதித் துறை போன்ற துறைகளையும் நம்முடைய சமூக எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்க வேண்டும்'' என்றார்.



இறுதியாக இரவு 11.30 மணிக்கு மைக் பிடித்த ஜான்பாண்டியன், ''உங்கள் எண்ணப்படியே கூட்டணி அமையும். ஒரு சில அரசியல் சூழ்ச்சிகளால் செய்யாத குற்றத்திற்காக எட்டு வருடம் சிறை தண்டனை அனுபவித்தேன். நம் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இங்கே இருக்கிற தமிழன் தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கான். இதைப் பத்தி கவலைப்படாம ஈழத் தமிழனைப் பத்தி சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று திருமாவை ஒரு பிடிபிடித்தபோது, ''நம்மளும் இதே மாநாட்டில் ஈழத் தமிழின ஒழிப்பைக் கண்டிச்சு தீர்மானம் நிறைவேத்திருக்கோம்ணே' என்று ஓரத்தில் ஓர் முனகல் சத்தம் கேட்டது.



தொடர்ந்து பேசிய ஜான்பாண்டியன், ''நமக்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்தால் கூட்டணி உண்டு'' என தி.மு.க.வை ஒரு அழுத்து அழுத்தி முடித்தார்.







இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-



தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஜனார்த்தனன் தலைமையிலான கமிசன் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.



தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர்கள் என்று கூறாமல் பட்டியலின மக்கள் என்று அழைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு தேவேந்திர குல மக்கள்தான் அதிக அளவில் நிலத்தினை வழங்கியுள்ளனர். எனவே விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை சூட்டுவதுடன், அவரது நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.



பட்டியலின மக்களுக்கு அனைத்து நிலை பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் தனியார் துறையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐந்தாண்டு திட்டத்தில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இதனை இந்த மாநாடு கண்டிக்கிறது.



இந்தியா-இலங்கை இடையிலான சர்வதேச எல்லைக்கோடு பிரச்சினை காரணமாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும் கச்சத்தீவினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.



சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மாத வருமானத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆய்வு கமிசனை அமைக்க வேண்டும்.



60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 ஓய்வூதியம் வழங்குவதுடன், விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.



பட்டியல் இன மக்களின் 18 சதவீத இடஒதுக்கீட்டினை இன்றைய மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.



இயற்கை வளங்களை பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். விவசாயிகளின் துன்பத்தை போக்கும் வகையில் நதிநீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும்.



மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முன்னதாக தொண்டர்களின் பேரணி நடந்தது. பேரணியை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பார்வையிட்டார்.