புதன், 25 மே, 2011

தேவேந்திரர் குரல்

தேவேந்திரர் குரல் உலக தேவேந்திரர்கள் அனைவரும் ஒன்று கூடும் ஒரு நிறைவான இணையதளம்.




தேவேந்திர குலத்தில் இருக்கிற பல்வேறு அமைப்புகளின் செய்திகளையும், கோரிக்கைகளையும், போராட்டங்களையும் உடனுக்குடன் வெளிக் கொணருகிற ஒரு இணையத்தளமாக தேவேந்திரர் குரல்  செயல்படும். இச் செய்திகளை அந்தந்த அமைப்புகளின் அனுமதியோடு வெளியிடுவது, அல்லது அவர்களே நேரடியாக தகவல் உள்ளீடு செய்வது என்ற இரு வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



பல தேவேந்திரர் அமைப்புகள் பல்வேறு தளங்களில் பல்வேறு வகையில் பல சீரிய பணிகளை இந்த மக்களுக்காக செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இந்த செயல் ஊடகங்களில் மறைக்கப்படுகிறது, அல்லது உண்மை மறைக்கப்பட்டு பொய்யான செய்திகள் வெளிவருகின்றன. அமைப்புகள் தாங்கள் நடத்தும் இதழ்களின் மூலமாக செய்திகளை வெளிக்கொண்டு வர ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ ஆகிறது. பல அமைப்புகளின் செயற்பாடுகள் வெளிவராமலே போய்விடுகின்றன. இன்னும் சொல்வதென்றால் எத்தனை அமைப்புகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கூட பல பேருக்கு தெரியாது. இப்படி எத்தனையோ தனித் தனியாக செயல்படும் சிறு அமைப்புகள், வட்டார அமைப்புகள், மாவட்ட அமைப்புகள், மாநில அமைப்புகள், தேசிய அமைப்புகள், உலக தேவேந்திர அமைப்புகளின் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரே இணையதளத்தில் அனைத்து தேவேந்திர சொந்தங்களுக்கும் தெரிய வைக்கின்ற முயற்சியை தேவேந்திரர் குரல் செய்கிறது. செய்திகள் உடனுக்குடன் வெளியாவதுடன் உலகம் முழுவதும் காண முடியும்.



இதில் தங்கள் செய்திகளை உள்ளீடு செய்ய எந்த கட்டணமும் கிடையாது. எவ்வளவு செய்திகள் வேண்டுமானாலும் உள்ளீடு செய்யலாம்.  தமிழ்நாட்டில் பல ஊர்களில் உள்ள தேவேந்திரர்களின், ஊர் சங்கங்களின் செய்திகளையும் இதில் உள்ளீடு செய்யலாம்.  தேவேந்திர சொந்தங்கள் அவர்கள் ஊரில் தேவேந்திரர்கள் சேர்ந்து கொண்டாடக்கூடிய கோயில் திருவிழா, மன்ற கொண்டாட்டங்கள், ஆண்டு விழாக்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் பல நிகழ்வுகளை இத்தளத்தில் வெளியிடலாம்.



இவ்விணையதளத்தை மேலும் பயனுள்ளதாக்க தங்களின் மேலான ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

தேவேந்திரர் குரல்


தேவேந்திரர்களுக்கான பொதுவான தகவல் தொடர்பு தளம், தகவல்களை psrsivakumar@gmail.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பவும், அனைத்து தகவலும் வெளியிடப்படும்.தேவேந்திரர் குரல் இணையதள நிறுவனர்.பி.எஸ்.ஆர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக