செவ்வாய், 14 ஜூன், 2011

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை.சட்டமன்றத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி உரை





நீண்ட நெடுநாட்களாக தேவேந்திர குல வேளார்கள் தங்களுடைய பெயரை குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும்; அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும். பெயரையெல்லாம் ஒரே பெயராக தேவேந்திர குல வேளாளர்கள் என்று வைக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளான குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகியவற்றை ஒன்றிணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. ஏறத்தாழ முப்பது வருடங்களாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும். தேவேந்திர குல சமூகத்தின் எந்த இயக்கமானாலும், எந்த கட்சியானாலும் நடத்தும் மாநாடு மற்றும் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் முக்கிய தீர்மானமே இதுவாகத்தான் இருக்கும். குறிப்பாக புதிய தமிழகத்தின் சார்பில் பல்வேறு தருணங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக