சனி, 2 ஜூலை, 2011

போர்வெல் தண்ணீர் விற்பனை : ஐகோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ மனு








ஓட்டப்பிடாரத்தில் போர்வெல் மூலம் குடிநீர் எடுக்கும் பிரச்னையில் தன்னையும் மனுதாராக சேர்க்கக்கோரியும்,ஐகோர்ட் விதித்த தடையை விலக்கக்கோரியும் மதுரைக் கிளையில் கிருஷ்ணசாமி எம்எல்ஏ இன்று மனுத்தாக்கல் செய்தார்.



தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் ராட்சத போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்துச் சென்று அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு விற்கின்றன. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிகளில் விற்பனைக்காக தண்ணீர் எடுக்க கோவில்பட்டி ஆர்டிஓ தடை விதித்தார்.



இதுதொடர்பாக புதியம்புத்தூர் சுந்தரபாண்டியன், முனியசாமி உள்பட 3 பேர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். சுந்தரபாண்டியன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில்பட்டி ஆர்டிஓ உத்தரவிற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.



இந்நிலையில் அத்தடையை விலக்கக் கோரியும், குடிநீர் பிரச்னை தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளிலும் தன்னையும் இணைக்கக்கோரி ஓட்டபிடாரம் எம்எல்ஏவும், புதிய தமிழகம் கட்சி தலைவரு மான கிருஷ்ணசாமி ஐகோர்ட் மதுரைக்கிளையில் இன்று ஆஜராகி மனுத்தாக்கல் செய்தார்.



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓட்டபிடாரம் தொகுதி வறட்சி பகுதியாகும். நிலத் தடி நீரை நம்பியே மக்கள் உள்ளனர். தனி நபர்கள் 800 முதல் ஆயிரத்து 500 அடி ஆழத் தில் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. வணிக நோக்கத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி களில் தினமும் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் நிலவுவதால் ரூ.5 கொடுத்து ஒரு குடம் தண்ணீர் வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர்.



இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதால் ஆர்டிஓ தடை விதித்தார். ஆர்டிஓ உத்தரவிற்கு கோர்ட் தடை விதித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மழைநீர் சேகரிப்பு, குடிநீர் வடிகால் வாரியம், கடல்நீர் சுத்திகரிப்பு மூலம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வழியுள்ளது. இதை செய்யா மல் நிலத்தடி நீரை உறிஞ்சி சுற்றுச்சூழலை கெடுக்கின்றனர். மனுதாரர் சுந்தரபாண்டியன் இலவச மின் இணைப்பை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சி வியாபாரம் செய்கிறார்.



ஆர்டிஓ உத்தரவிற்கு விதித்துள்ள தடையை ஐகோர்ட் விலக்கிக் கொள்ள வேண்டும். என்னையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஓட்டப்பிடாரம் பகுதிகள் கடும் வறட்சி பகுதிகளாகும். இங்கு குடிநீரின்றி மக்கள் அவதியடைந்துள்ளனர். ஐகோர்ட் தடை விதித்தபிறகு 2 ஆயிரம் லாரிகளில் தண்ணீர் எடுத்துச் சென்றதால் குடிநீர் ஆதாரம் மேலும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



தடையை விலக்கவும், தன்னையும் சேர்க்கக்கோரி நீங்கள் மனுதாக்கல் செய்யலாம். எல்லா மனுக்களும் நாளை மறுநாள் (ஜூலை 1) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் நேரில் ஆஜராகி உங்கள் வாதத்தை தெரிவிக்கலாம் என நீதிபதி ராஜேந்திரன் கூறினார்.நிலக்கோட்டை எம்எல்ஏ ராமசாமி, புதிய தமிழகம் மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம், வக்கீல் வைகுந்த் ஆகியோர்உடனிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக