செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

தூக்கு தண்டனை ரத்து :டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்







திருநெல்வேலி:தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூவரின் உயிர்காக்கப்படுவது முதல்வர் ஜெயலலிதா கையில் உள்ளது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.



புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் கூறியதாவது:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கவேண்டும் என பல்வேறு அமைப்புகளும் போராடிவருகின்றன.



இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் உள்படதமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறார். இதனால் உலக தமிழர்கள்மத்தியில் ஜெ., மீதான மரியாதை உயர்ந்திருக்கிறது.



எனவே அவருக்கு இந்த விஷயத்தில் இக்கட்டான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூவருக்குமான தூக்குதண்டனையை நிறுத்தவேண்டிய இறுதி முடிவுதமிழக முதல்வரின் கையில் உள்ளது. இதற்கு முன்பும் கேரளாவில் சி.ஏ.,பாலன் தூக்குதண்டனையும் ஆந்திராவில் இருவரதுதூக்கு தண்டனையும் ரத்தாகியிருக்கிறது. எனவே இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 161ன்படி தமிழக அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தூக்கு தண்டனை கைதிகள் விடுவிக்கப்படலாம். எனவேதமிழக அரசு அதற்கான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக