பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த சிகிச்சையில் இருக்கும் பரமசிவம், சிவா, செந்தில்முருகன், சதுரகிரி, யேசு, லோகேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காயம் அடைந்து சிகிச்சையில் உள்ளவர்களை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,பரமக்குடியில் நடந்த சம்பவம் சிலர் தூண்டுதலின்பேரில் நடந்துள்ளது. இது குறித்து நான் சட்டசபையில் பேசுவேன்.
காயம் அடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக