வெள்ளி, 23 செப்டம்பர், 2011

முத்துராமலிங்கத்தை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு தேவர் சாதியினரில் ஒருவரும் முன்னேறியதாகத் தெரியவில்லை

முத்துராமலிங்கத்தை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு தேவர் சாதியினரில் ஒருவரும் முன்னேறியதாகத் தெரியவில்லை தமிழகத்தில் தொடர்ந்து சாதிய வன்முறை இன்றளவும் தொடர்ந்து வரக் காரணமான துவக்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் - அரசியல் காரணங்களுக்காக கட்டமைக்கப்பட்ட ஒரு பொய்த்தேவு. தமிழகத்தில் தொடர்ந்து சாதிய வன்முறை இன்றளவும் தொடர்ந்து வரக் காரணமான துவக்கம். அவர் தேவர் சாதியினருக்குமே நல்ல முன்னுதாரணம் அல்ல. தொடர்ந்து தம் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருந்தவர். சாதியத்தை தேசிய சாயத்தில் கலந்தவர். ஈ.வெ.ரா போல சமூக சீர்திருத்தாவாதியோ, ராஜகோபாலாச்சாரியார், காமராஜர் போன்ற தேசிய அரசியல் முன்னோடியோ, அண்ணாதுரை போன்ற வெகு மக்கள் தலைவரோ, ராமச்சந்திரன் போல கூத்தாடியோ(entertainer) அல்ல. தன் சாதி மக்களைச் சுற்றி அவர் அமைக்கத் துவங்கிய சுவர் இன்றளவும் விரிவடைந்தும் வலுவடைந்து கொண்டும் இருக்கிறது. முத்துராமலிங்கத்தை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு தேவர் சாதியினரில் ஒருவரும் முன்னேறியதாகத் தெரியவில்லை. மற்ற சாதியினரின் மேல் குறிப்பாக தென்பகுதி தலித்துகளின் மேல் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்த தேவர் சாதியினரின் ஆதிக்கச் சக்திகள் மு.ராமலிங்கத்தை தொடர்ந்து கல்லறையில் இருந்து எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ராமநாதபுர மாவட்டத்தில் பொதுத் தண்ணீரை திருடி விற்கிற கும்பல் இந்த சாதியைச் சேர்ந்ததுதான். அம்பேத்கர் மாதிரி தேர்ந்த அறிவாளியோ தன் சமூகத்தைச் சேர்ந்தவரை கல்வி சார்ந்த மேன்மைகளுக்கு இட்டுச் செல்பவரோ அல்ல. மு.ரா ஏற்படுத்திய தாக்கம் என்னவென்றால் தொடர்ந்து தலைமுறைகளுக்கும் அப்பால் தேவர் சாதியினரின் உடைபட்டுக் கொண்டிருக்கும் சாதிய அதிகாரத்தை வன்முறை மூலம் தற்காத்துக் கொள்ள ஒரு வரலாற்றுத் துவக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது மட்டுமே. தேவர் குருபூஜை என்பது RSS முறைகளில் ஒன்று. தமிழகத்தில் மிகப் பெரிய சமூக சீர்திருத்தம் பேசிய ஈ.வெ.ராவை நாம் அதிக பட்சம் பெரியார் என்று மட்டுமே அழைக்கிறோம். எந்தப் பெரும் தலைவருக்கும் (காந்தி உட்பட) நாம் குருபூஜை நடத்துவதில்லை. இவரை குரு என ஏற்றுக் கொள்கிற அரசியலே மிகத் தவறான போக்கின் துவக்கும். தேவர் சாதியினர் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள எந்த விதத்திலும் தம் சமூகத்தை நாகரிகக் காலத்திற்கு வழிநடத்திச் செல்கிற ஒரு தலைவர் கூட இல்லாமல் செய்ததும் இவர் பங்களிப்பே. 2011ல், Acer laptop, Ubuntu OS, Google browser, Facebook, Unicode தமிழ் எழுத்துருவில் ஒரு நில உடமைச் சமூக சூழல் இன்றளவும் நிலவிக் கொண்டிருப்பதை எழுதுவதும் முத்துராமலிங்கத்தின் பங்களிப்பே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக