வெள்ளி, 23 செப்டம்பர், 2011
நாக்கை அறுத்துக்கொண்ட பெண்ணுக்கு ஒரு நியாயம்; துப்பாக்கிச்சூட்டில் பலியானவருக்கு ஒரு நியாயமா? ஜான்பாண்டியன்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ’’ பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மதுரையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவிருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறியிருக்கிறார் பன்ருட்டி ராமச்சந்திரன். பண்ருட்டிக்கு மனநிலை சரியில்லை. அதனால்தான் அப்படி சொல்லியிருக்கிறார்.’’ என்ரு தெரிவித்தார்.
‘’ராம்விலாஸ் பஸ்வான் கட்சியில் நான் சேரவில்லை. அதுபற்றி நாங்கள் எதுவுமே பேசவில்லை’’ என்றும் தெரிவித்தார்.
’’தேர்தலில் வெற்றி பெற வேண்டி, நாக்கை அறுத்துக்கொண்ட அதிமுக பெண்ணுக்கு நிதியுதவியும், வேலையும் கொடுக்கிறார் ஜெயலலிதா. ஆனால், துப்பாக்ச்சிச்சூட்டில் இறந்தவர்களுக்கு ஒரு லட்சம்தானா?என்றும் கேள்வி எழுப்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக