வெள்ளி, 23 செப்டம்பர், 2011
பரமக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து பணியில் உள்ள மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவினர் விசாரிக்க வலியுறுத்தி மனித உரிமை வழக்கறிஞர்கள் மையத்தினர் கண
பரமக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து பணியில் உள்ள மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவினர் விசாரிக்க வலியுறுத்தி மனித உரிமை வழக்கறிஞர்கள் மையத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
[வெள்ளி - 23 செப்டம்பர்-2011 - 11:56:23 காலை ]
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளான்று பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 10-பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக்குழுவை தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒருநபர் குழுவான ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத்தை திரும்பப்பெற்ற அவருக்குப்பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட தற்போது பணியில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழுவை அமைக்கக்கோரி மனிதஉரிமை வழக்கறிஞர்கள் மையத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை நினைவரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மையத்தின் செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு. பகுஜன் சமாஜ் கட்சி மாணவ தலைவர் ஆம்ஸ்ட்ராங், மைய நிர்வாகிகள் பிரசாத், சத்தியசந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக