வியாழன், 27 அக்டோபர், 2011

அமைச்சர் கருப்பசாமி உடலுக்கு அஞ்சலி



அமைச்சர் கருப்பசாமி உடலுக்கு அஞ்சலி
















மறைந்த அமைச்சர் கருப்பசாமி மறைவையொட்டி, அவரது உடல் இன்று அதிகாலை அவரது சொந்த கிராமமான புளியம்பட்டிக்கு 5 மணிக்கு வந்து சேர்ந்தது. கிராமத்தில் பள்ளி அருகே உள்ள விழா மேடையில் அவரது உடல் வைக்கப்பட்டது.
 


















கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என கொட்டும் மழையை பொருட்படுத்தாது அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் உதயகுமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் சண்முக நாதன், அமைச்சர் செந்தூர் பாண்டியன், அமைச்சர் ஓ.பி.எஸ்., அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டனர்.

சரியாக 3 மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது உடல் அரசு வாகனத்தில் சகல மரியாதைகளோடு ஏற்றப்பட்டு இறுதி சடங்கு மையானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி சடங்கிற்கான காரியங்கள் நடத்தப்பட்டன. அவரது மூத்த மகன் மாரிச்சாமி, இறுதி சடங்குகளை நடத்தினார்.  பாதுகாப்பு ஏற்பாடுகள் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்பி விஜேய்திரபிடாரி தலைமையில் செய்யப்பட்டன.
 
நன்றி நக்கீரன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக