வியாழன், 27 அக்டோபர், 2011

தமிழகத்தின் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள்:ஏன்? எதற்கு? எப்படி?

தென் தமிழகத்தில் சாதி வெறி குறிப்பாக முக்குலத்தோருக்கு அதிகமாக இருப்பதன் முக்கிய காரணம் சசிகலா,காவல்துறையில் ஆதிக்கம்,மற்றும் தேவர்,மறவர்,கள்ளர் ஆகிய மூன்று பேருக்குள்ளும்(ஒருவொருக்கொருவர் பெண் எடுப்பதோ பெண் கொடுப்பதோ கிடையாது.அவர்களுக்குள் சண்டைகளும் உண்டு)ஒற்றுமையை உண்டு பண்ண,அதன் மூலம் அரசியல் சக்தி அதிகம் பெற நடக்கும் முயற்சிகள்.முக்குலத்தோரில் குறைவாக பார்க்கப்படும் கள்ளர் பிரிவை சேர்ந்த சசிகலா (மற்றும் குடும்பம்)அதன் தன்னிகரில்லா தலைவராக மாற உருவாக்கப்பட்ட பல வழிகளில் ஒன்று தான் பெரிய அளவில் குரு பூஜை,அதிகார வர்க்கம் காவல் துறைக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற செயல்கள்.
திரை துறையினரின் பங்கும் இதில் பெருமளவு உண்டு.திரைத்துறையில் பிரபலமான பலர் இந்த சாதியை சேர்ந்தவர்கள்.அதன் பலனாக சாதி வெறியூட்டும் பல படங்கள்,பாட்டுக்கள் உருவாகி வெறியை தூண்டுகின்றன.தேவர் மகன் திரை படம் ஒரு முக்கிய உதாரணம்.அதில் சிவாஜி நேதாஜியின் படையில் அதிகம் இருந்தது நம்ம பயல்கள் தான் என்று சொன்ன வசனத்தை ஒரு தெய்வ வாக்காக பிடித்து கொண்டு பலர் பேசுவதை,வாதாடுவதை பார்த்திருக்கிறேன்.
இந்திய தேசிய ராணுவம்சப்பானால் பிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களை கொண்டு அமைக்கப்பட்டது.அதில் பல முகம்மதியர்கள்,கோர்க்ஹாக்கள்,வட இந்தியர்கள் என்று அனைவரும் உண்டு.புதிதாக சேர்ந்தவர்கள் பர்மாவில் வாழ்ந்த தமிழர்கள்.அந்த காலகட்டமான 1940 -45 ஆண்டுகளில் முக்கால்வாசி தினங்கள் முத்துராமலிங்கம் சிறையில் இருந்தார்.இது போன்று பல கதைகளை உண்மை என்று நம்பி வெறியோடு அலைவது தான் வருத்தம் தரும் செய்தி.
இன்னொரு செய்தி.இம்மானுவேல் சேகரன் ராணுவத்தில் பணியாற்றி ஹவில்தாராக ஓய்வு பெற்றவர்.அதுவும் அவர் சாதியை எதிர்த்து போராடுவதற்கு,தன சாதியை ஒன்றிணைத்து போராடுவதற்கு காராணமாக இருந்திருக்கலாம்.அம்பேத்கரின் தந்தையும் ராணுவத்தில் பணியாற்றியவர்.தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வர காரணம் அது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக