புதன், 19 அக்டோபர், 2011

பரமகுடி: துப்பாக்கியால் கொல்லும் (தேவர்) அரசு

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம், ஜான் பாண்டியன் என்கிறது அரசு. ஆனால், மதுரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு யார் காரணம்? திடீரென்று வேறு மாவட்டக்காரர்கள் ராமநாதபுர மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என்ற உத்தரவு வருவதற்கு எது காரணம்?

தேவர் ஜாதி உணர்வாளர்கள் அதிமுகவை தங்கள் ஜாதி கட்சியாக கருதுகிறார்களே அதுதான் காரணம்.

அந்த உணர்வுக்கு உண்மையாக நடந்திருக்கிறது அதிமுக அரசின் காவல் துறை. துப்பாக்கிச்சூட்டின் மூலம் தேவர் ஜாதி உணர்வாளர்களோடு இன்னும் நெருக்கமாகியிருக்கிறது அதிமுக அரசு.

‘தேவர் ஜாதி ஓட்டு முழுசும் நமக்கு; தேவேந்திரகுல மக்களின் ஓட்டுக்கு, தேவேந்திரகுல கட்சிகளின் கூட்டணி இருக்கு’ - இதுதான் அதிமுகவின் தேர்தல் கணக்கு.
எப்போதும் தேவேந்திரகுல  மக்கள் மீது காவல் துறை போன்ற அரசு நிறுவனங்கள் நடத்தும் வன்கொடுமைகளின்போது தேவேந்திரகுல விரோதிகளோடு, தேவேந்திரகுல துரோகிகளும் அம்பலமாகி நிற்பார்கள். இம்முறை அவர்களோடு தமிழ்த்தேசியம் பேசகிறவர்களும் இணைந்திருக்கிறார்கள்.

மூன்று உயிர்களை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற, சட்டசபையில் தீர்மானம் போட்ட தமிழக அரசு, ஏழு தமிழர்களின் உயிரை பறித்திருக்கிறது.
தூக்கு கயிறுக்கு பதில், துப்பாக்கியால் கொல்லும் அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக