புதன், 19 அக்டோபர், 2011

பரமகுடி: துப்பாக்கியால் கொல்லும் (தேவர்) அரசு


தேவேந்திர குல

மக்களை சுட்டுப்பொசுக்குவது எந்தவகை நியாயமென்று முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு விளக்கவேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து காவல்துறையினரை கொம்பு சீவிவிடும் வகையில் பேசிவந்த முதல்வர்தான் இத்த கோரப் படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.


இத்தகைய கொலைவெறித்தாக்குதலுக்கு ஜெயலலிதா அரசு கூறியிருக்கும் விளக்கமும், அறிவித்திருக்கும் இழப்பீடடின் அளவும்

தேவேந்திர குல

மக்களை கிள்ளுக்கீரைகளாக எண்ணும் போக்கு ஆட்சி அதிகார மையங்களில் நீடித்து வருகிறது என்பைதையே காட்டுகிறது. அறிவிக்கப் பட்டிருக்கும் ஒரு நபர் விசாரனை ஆணையம், வெறும் நீலிக்கண்ணீர் என்பது எவரும் அறிந்ததே. மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர்கள் படுகொலைப்பட்டபோது அமைக்கப்பட்ட விசாரனை ஆணையம் என்ன ஆனது என்பதை மக்கள் மறந்துவிடவில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக