’’சுதந்திர இந்தியாவில் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து முதல் கள பலியானவர் தியாகி இம்மானுவேல் சேகரனார். இவர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, செல்லூர் கிராமத்தில் 1924-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி பிறந்தார். அம்மாவீரன் 1954-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம்நாள் படுகொலைக்கு ஆளானார். அவரது மரணம் குறித்து பேரறிஞர் அண்ணா இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டுக்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கின்றார். இம்மானுவேல் ராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டுமல்ல, உலகமே புகழும் வீரனாகவே அவரை கருத வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கி கொண்ட ஒரு தியாகியை இழந்தோம்.இவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியதே என புகழாரம் சூட்டி உள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக