புதன், 19 அக்டோபர், 2011

திரு.முத்துராமலிங்கம்(தேவர்) கைது செய்து சிறையில் வைக்கவில்லையென்றால் நான் நேரடியாக போராட தெருவில் இறங்குவேன்”....பெரியார்


இமானவேல் சேகரனைக் கொன்ற “குற்றவாளிகளை கைது செய்து சிறையில் வைக்கவில்லையென்றால் நான் நேரடியாக போராட தெருவில் இறங்குவேன்”....பெரியார்

திரு.முத்துராமலிங்கம்(தேவர்)அவர்களின் உண்மை சொரூபத்தை எனக்குக் காட்டியது 'தினகரன்' நாளிதழின் நிறுவனரும், பன்னூல் ஆசிரியருமான திரு.தினகரன் அவர்கள் எழுதிய 'முதுகுளத்தூர் கலவரம்' என்னும் நூல். சில மாதங்களுக்கு முன்பு நான் படித்த அந்தப் புத்தகம்தான் தேவரின் முகத்திரையைக் கிழித்து, அவரது சுயநலப் போக்கிற்கு எவ்வாறு அந்த இனமே ஆளாக்கப்பட்டது என்பதைத்
 தெளிவுறுத்தியது.

"முதுகுளத்தூர் கலவரத்தின் போது எத்தனை உயிர்கள் இருபுறமும் பலியாகி இருக்கின்றன? குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன? தேவரைக் கைது செய்து சிறையிலடைக்கும் வரை தொடர்ந்த கலவரம், முத்துராமலிங்கத் தேவர் கைதைத் தொடர்ந்து அடங்கிப் போனதேன்?" என்று கேள்வி எழுப்புகிறது விடுதலை நாளேடு.
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒரு தலைவர், கண்ணீர்த்துளி(தி.மு.க)த் தலைவர் ஒருவர், ஒரு காங்கிரஸ் கண்ணீர்த்துளி தலைவர் (அநேகமாக ம.போ.சி)என மூவர் தலைமையில் சமாதானக் குழு மதுரைக்குச் சென்று தேவரின் கைதைக் குறைகூறுவதை 'எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில் சாப்பிடுவது போன்ற சர்க்கஸ். சாதி வெறியர்களுக்கு ஆதரவாக ஊர்வலமாம், கடையடைப்பாம், நிதி திரட்டாம், நீதி மன்ற
 வழக்காம்' என்று எள்ளி நகையாடுகிறது 'விடுதலை' நாளிதழ், விசாரணையின் தீர்ப்பு என்ற தலைப்பில்.(12.10.1957)
ஓட்டுக்காக என்று எல்லோரும் பயந்தபோது, கொஞ்சமும் கவலைப்படாமல் தந்தை பெரியார் தான் அன்றைய முதல்வர் காமராஜருக்கு ஆதரவாக இருந்தார். தைரியமாக களத்தில் இறங்கி, கலவரத்தை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டையும் தேவர் கைதையும் முழுமையாக ஆதரித்தார். கீழத்தூவல் கலவரத்தின் போது போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்யாவிட்டால்
 இருபுறமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் அழிந்திருக்கும். ஆதிதிராவிடர்களின் குடிசைகள் எரிந்திருக்கும் என கவலை கொள்கிறார் பெரியார்.
"திரு. தேவர் அவர்களுக்கு கட்சியுமில்லை, கொள்கையுமில்லை. சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார் என்பது மட்டும் ஒரு கட்சிக்கு கொள்கைஆகிவிடுமா?" என்று கேள்வி எழுப்பும் பெரியார் ஒருவர்தான் முதுகுளத்தூர் கலவரத்தின் போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக நூலாசிரியர் தினகரன் விளக்குகிறார்.
ஆடு, மாடு திருட்டு வழக்கிலிருந்து, ஆளை மறித்துப் பணம் பிடுங்கிய கேஸ் வரைக்கும் எது எதற்கெல்லாம் அவர் பஞ்சாயத்துக்கு வந்தார்.. நிலம் பிடுங்கிய வழக்கு முதல், விசாரிக்க வந்த அரசு அலுவலர் கொலல வ்ரைக்கும் ஏற்கனவே என்னென்ன வழ்க்குகள், தீர்ப்புகள், நீதிபதிகள் திரு.முத்துராமலிங்கத்தின் நடத்தைக்கு வழங்கிய சான்றுகளும் விரவிக் கிடக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக