திங்கள், 28 நவம்பர், 2011

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியா?- ஜான்பாண்டியன்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியா என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஒன்றியம் பெரும்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தமமுக கழக கொடியேற்று விழா நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் ஜான் பாண்டியன் சங்கரன்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது,

பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகியும் இதுவரை காவல் துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வரை சந்தித்து உண்மை நிலவரத்தை தெரிவிப்பதற்கு பலமுறை அனுமதி கேட்டும் முதல்வர் சந்திக்க அனுமதி தரவில்லை. இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல அனுமதி கேட்டும் வழங்க மறுத்து வருகிறார்கள்.

நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல. எங்களுக்கும் யாரும் எதிரிகள் இல்லை. சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியா என்பது குறித்து எங்கள் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக