சனி, 3 டிசம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் போலீஸ் அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் : ஜான்பாண்டியன் கோரிக்கை


சென்னை : தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருக்கோவிலூரில் 5 இருளர் பெண்களை பாலியல் வன்முறை செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது பாராட்டுக்குரியது. அதேபோல, பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 அப்பாவிகள் காவல்துறையினரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். எங்களின் கோரிக்கையை ஏற்று இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கும் அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பரமக்குடியில் அப்பாவிகள் இறப்பதற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்து, அவர்களை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக