புதன், 7 டிசம்பர், 2011

76 சாதிகளின் உரிமையை பறிக்கும் உள்இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரதம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது







76 சாதிகளின் உரிமையை பறிக்கும் உள்இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.





புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோயம்பேட்டில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.





டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:





பரமக்குடி துப்பாக்கிசூட்டில் பலியான குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.





தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசின் அரசியல் சாசனத்தின்படி வழங்கப்பட்டது. இதில் எந்த மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றாலும் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.





ஆனால் கடந்த அரசு மத்திய அரசின் அனுமதியை பெறாமலேயே உள்ஒதுக்கீட்டை செய்துவிட்டது. அதுவும் குறிப்பாக 76 சாதிகள் உள்அடங்கியதில், ஒரு சாதிக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதின் காரணமாக, 76 சமூகத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே 76 சாதிகளின் உரிமையை பறிக்கும் உள் இடஒதுக்கீட்டை ரத்துசெய்யவேண்டும்.





தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுநாள், பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும். ஆதி திராவிட நலத்துறைக்கு பட்டியல்துறை என மாற்றம் செய்யவேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து வருகிற 9ந் தேதி புதிய தமிழகம் மாநில பொதுக்குழு கூடி முடிவு செய்யும்.





பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின்சார வெட்டு ஆகியவற்றால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கிடையே கசப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது குறித்தும் 9&ந் தேதி முடிவு செய்யப்படும்.





முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் மாநில அரசுகள் சுமுகமான தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். தமிழக அரசு எக்காரணத்தை கொண்டும் பேச்சுவார்த்தையைபுறக்கணிக்க கூடாது. இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக