செவ்வாய், 6 டிசம்பர், 2011

புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்



  [செவ்வாய் - 6 டிசம்பர்-2011 - 01:43:23 மாலை ]
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி; புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், கட்சியின் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பேரூந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கிருஷ்ணசாமி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் உயிரிழந்த ஆறுபேரைத் தவிர மேலும் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அத்துடன் ஆதிதிராவிட நலத்துறைக்கு பட்டியல் துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பி;க்க வேண்டும் என்று தெரிவித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் உயிரைக் காப்பாற்ற தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீhமானம் இயற்றி, நடுவண் அரசிடம் வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக