ஞாயிறு, 18 டிசம்பர், 2011

முத்துராமலிங்கம் ஆபத்தானவரா?

தேவர் மீது மதுரை கிரைம் பிராஞ்சு போலிசார் தொடுத்த  வழக்கின் (எம்.சி.நிர் 20/1939) தீர்ப்பு 5.6.1940 அன்று வெளியானது. மதுரை மாவட்டக் கூடுதல் மாஜிஸ்திரேட்டான எம்.ஏ. குற்றலலிங்கம் பிள்ளை அத்தீர்ப்பில் பின்வருமாறு கூறியிருந்தார்
அவரை (ஸ்ரீ உ.முத்துராமலிங்கத் தேவரைத்) கடந்து செல்பவர்கள் ஆபத்தில்லாமல் தப்ப முடியாது. அவருக்கு விரோதமாகச் சாட்சி சாட்சி சொன்னார் அதனாலேற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்க தக்க சமயத்தில் போலீஸ் உதவி கிடையாதென்பதால் சாட்சிகள் முன்வரத் தயக்கமடைவதில் ஆச்சரியம் இல்லை. எதிர் மனுதாரர் மிகவும் ஆபத்தானவர் என்பதிலோ அல்லது ஆப்பநாட்டு, கொண்டையன் கோட்டை மறவர்களுக்குள்ளே மிகவும் அபாயகரமானவர் என்பதிலோ இருவித அபிப்ராயங்கள் இருக்க முடியாது. எதிர் மனுதாரர் கிரிமினல் குற்றங்களை வழக்கமாக செய்து வருகிறார் என்றும் சமாதான பங்கம் விளைவிக்க்க் க் ஊடிய குற்றச் செயல்களை தூண்டி வருகிறார் என்றும் உண்மையிலேயே அவர் பயங்கரமானவராகவும், ஆபத்தானவராகவும் இருப்பதால் அவரிடம் ஜாமீன் வாங்காமல் விடுவதால் சமுதாயத்துக்கு மோசம் ஏற்படுமாதலால் அவரிடம் நன்னடத்தை ஜாமீன் வாங்குவது அவசியமென முடிவு செய்கிறேன். ஆகவே இதற்கான ஆரம்ப உத்தரவை உறுதி செய்து ஒரு வருட கால நன்னடத்தை எதிர் மனுதாரர் ரூ.3000 க்கும் அதே தொகைக்கு வேறு இரண்டு நபர்களும் ஜாமீன் பத்திரம் எழுதிக் கொடுக்கும்படி உத்தரவு செய்கிறேன்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை செசன்ஸ் கோர்ட்டில் தேவர் மேல் முறையீடு செய்தார். (நிர்.சி.ஏ) 87/1940) 3.9.1940 அன்று இதனை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.பி.தாம்சன் ஐ.சி.எஸ்  அளித்த தீர்ப்பின் இறுதி பகுதி வருமாறு:
அப்பீல்தார்ரை மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் ஜாமீன் கொடுக்கும்படி உத்தரவிட்டிருப்பது முற்றிலும் நியாயமே. ரூ.3000/- க்கு அப்பீல்தாரர் ஜாமீன் பத்திரமும் அதே தொகைக்கு வேறு இரண்டு நபர்களும் ஜாமீன் கொடுக்கும்படி செய்திருப்பது அதிகமல்ல. தேவையான காலத்துக்கு தண்டனை ஜாமீன் வாங்க வேண்டுமென்று போலீசார் கேட்டிருக்கிறார்கள். இ.பி.கோ.112 வது செக்சன்படி உத்தரவிட்டுள்ள மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் ஒரு வருட கால நன்னடத்தை ஜாமீன் போதுமென கருதியிருக்கிறார். அதை மூன்று வருட காலமாக்கவில்லையே என்பது பற்றி ஆச்சரியப்படுகிறேன். அப்பீலை தள்ளுபடி செய்கிறேன்.
இந்த தீர்ப்பையும எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவர் மேல்முறையீடு செய்தார் (நிர். 1094/1940). இது தொடர்பாகத் தீர்ப்பளித்த நீதிபதி இலட்சுமணராவ், கீழ் நீதிமன்றங்களின் உத்தரவு சரிதான் என்றும் அதில் தலையிடுவதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறி 28.2.1941  அன்று இம்மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக