திங்கள், 16 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் படுகொலை - மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்




மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் வன்முறையாளர்களால் நேற்று (11.01.2012) படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் பாடுபட்டவர்களின் பசுபதி பாண்டியன் மிக முக்கியமானவர். அவரது மரணம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும்.
இப்படுகொலைக்கு காரணமான வன்முறையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். இன மோதல்களை உருவாக்கும் இதுபோன்ற போக்குகளை அனுமதிக்கக் கூடாது.
அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எமது ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
வன்முறைக்கு வன்முறை தீர்வாக அமையாது, எனவே தென் தமிழக மக்கள் உணர்ச்சி வசப்படாமல் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக