வெள்ளி, 20 ஜனவரி, 2012

பரமக்குடி துப்பாக்கிச் சூடு : விசாரணைக் குழு அறிக்கை!


பரமக்குடி: பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி சம்பத் தலைமையில் தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது. இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, தனியாக விசாரணை நடத்தி பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில், ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பரமக்குடியில் மறியலில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த அல்லது கலைக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கூட்டத்தினர் கலவரம் செய்தனர் என்ற காவல்துறையினரின் வாதம் அடிப்படை இல்லாதது. காவல்துறையினரின் வாகனம் தீ வைக்கப்பட்டது என்ற கூற்று, பொது அறிவுக்கு விரோதமானது. மேலும், காவல்துறையினரின் செயலை நியாயப்படுத்துவதற்காகவே, காவல்துறையினரின் வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாக பொது விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ஜான் பாண்டியனை கைது செய்ததும், இமானுவேல் சேகரன் குருபூஜையில் அவரை கலந்துக் கொள்ள முடியாமல் தடை செய்தது தேவையற்றது மற்றும் கலவரத்தைத் தூண்டியது என்று கூறியுள்ளது. குரு பூஜைக்கு எந்த ஆயுதமும் இல்லாமல் சென்றவர்கள் மீது சுமார் 4 மணி நேரம் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாயத்திற்கு புறம்பானது என்றும் பொது விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக