ஞாயிறு, 22 ஜனவரி, 2012

நடிகர் சரத்குமாரின் சுரண்டை வீட்டில் குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் கடிதம்

Sarathkumar

தென்காசி: நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் எம்எல்ஏவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி நகராட்சி தலைவர் பானுசமீமுக்கு கடந்த 18ம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில் தென்காசி எம்எல்ஏ சரத்குமாரின் சுரண்டை வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அதிர்ச்சியைடந்த பானு சமீம் கடிதத்தை எம்எல்ஏ அலுவலக மேலாளர் கருப்பையாவிடம் கொடுத்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் உள்ள சரத்குமாருக்கு தகவல் தெரிவித்தார். மிரட்டல் கடிதத்தை உடனடியாக போலீசில் ஒப்படைக்கும்படி சரத்குமார் கூறியதை அடுத்து கடிதம் தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜிடம் கொடுக்கப்பட்டு புகாரும் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு டிஎஸ்பி தென்காசி போலீசாருக்கு உத்தரவிட்டார். எனவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக