புதன், 18 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் படுகொலை எதிரொலி



 

பசுபதி பாண்டியன் படுகொலை

பசுபதி பாண்டியன் படுகொலை சம்பவம் எதிரொலியாக, நெல்லை மாவட்டம் வல்லத்தில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து வாலிபரை அரிவாளால் வெட்டிய கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் செவ்வாய்கிழமை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர்.

புதன்கிழமை அதிகாலை செங்கோட்டையிலிருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று வல்லம் நிறுத்தத்தில் நின்ற போது வல்லத்தை சேர்ந்த அசோக்குமார், சுரேஷ், கண்ணன், திருமலைக்குமார், சங்கர்பாபு மற்றும் சிலர் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று அந்த பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

வாலிபருக்கு வெட்டு

இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அப்பகுதியில் வை.முத்துக்குமார், சமுதாய நாட்டாண்மை மாரியப்பன், ப.முத்துக்குமார் பேசி கொண்டிருந்தனர். அப்போது அசோக்குமார் தலைமையிலான கும்பல் அங்கு சென்று முன்விரோதம் காரணமாக ப.முத்துக்குமாரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனை கண்டு ப.முத்துக்குமார் ஓடியுள்ளார். இதனை வை. முத்துக்குமார் தடுக்க சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் அசோக்குமாருடன் வந்தவர்களும் முத்துக்குமாரை அடித்து உதைத்துள்ளனர். 

இதனை கண்டித்த பலவேசம் என்பவரை அக்கும்பலை சேர்ந்தவர்கள் கழிவுநீர் வாய்க்காலில் தள்ளி மிரட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த வை.முத்துக்குமார், பலவேசம் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

வெட்டியவர் கைது

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் செங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரிகரகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்தார்.

இன்ஸ்பெக்டர் மாரிமுத்து விசாரணை நடத்தி சங்கர்பாபு (25) என்பவரை கைது செய்தார். மேலும் தப்பியோடிய அசோக்குமார் தலைமையிலான கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து வல்லம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக